Sunday 13 November 2016

புதியதல்லவே ஓசி என்பது




 ஓசியிலே     எதையாவது   வாங்கிச்   சாப்பிட்டா    இல்லாட்டி

யார்கிட்டேயாவது     கேட்டா      நாம      என்னவோ     செய்யக் கூடாததை

 செஞ்ச    மாதிரி.      நம்பள  ஒரு  மாதிரியாத்தான்

 உலகம்     பாக்குது     


ஆனா    அதே   சினிமாவுல  பாட்டா    வந்தா    எத்தினி   வருஷம்   ஆனாலும்

அது   எல்லாம்     சூப்பர்          சாங்  லிஸ்டுல  இருக்குது .

காக்கா காக்கா மை கொண்டா
காடை குருவி மலர் கொண்டா 
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக்கிளியே    பழம் கொண்டா

நல்லா   கவனிச்சிப்   பாத்தீங்கன்னாக்க     ஒன்னு   கூட   நாம கையிலே 

வச்சுக்காம     எல்லாமே ஓசியிலே !

அதுவும்   ஒருத்தர்   கிட்டே   வாங்கினா   அவங்க    கோச்சுப்பாங்கன்னு

பல  பேர்  கிட்ட ஓசி !

எத்தனையோ     வருஷத்துக்கு    முந்தி    வந்த   பாட்டு    இது .

இன்னமும்    அப்பப்ப    நேயர்    விருப்பமா    ஒளி   மற்றும்
ஒலி  பரப்பப்படுது.


 நூறு   ரூபாய்    நோட்டுக்குத்     தட்டுப்பாடு    வந்த   இந்த   நேரத்தில் 

என்னுள் இருந்த கவிதை உணர்வு (portic sense) முழித்துக்கொண்டு 

 இயற்றிய  (இயற்றிய ?   கட்  பேஸ்ட் செய்த? ) பாடல் இதோ 




காக்கா காக்கா      நூறு ரூபாய்  கொண்டா
காடைகுருவி    அம்பது ரூபாய்  கொண்டா 
பசுவே பசுவே   இருவது ரூபாய் கொண்டா
பச்சைக்கிளியே   பத்து ரூபாய் கொண்டா

என்று பாடினேன்

பறவை மிருகம் இதுக்கெல்லாம்        திருட   மட்டுந்தான்    தெரியும்   போல !

எதுவும்   சல்லிக்   காசு   தரலை .

 ஓசி அடிக்கறதுக்காக கிட்ட    இருக்கற       ஜீவ ராசிகள்    மட்டுமில்லே 

   தூரத்தில்   இருக்கிற    நிலாவைக்கூட          நம்ப  விட்டு   வைக்கவில்லை .

 நிலா   நிலா ஒடி வா
நில்லாமல்   ஒடி வா
மலை   மீது    ஏறி வா
மல்லிகைப் பூ   கொண்டு வா .


தரையிலே       இருக்கிற      மல்லிகைப்      பூவைப்     பறிக்க க்கூட  

சோம்பேறித்தனப்     பட்டுக்கிட்டு       வானத்திலே

இருக்கிற       நிலவைக்      கூப்பிடுறோம்.

வேடிக்கையாக      இன்னொரு     பாட்டு      ( பழமொழி ?)    கூட    உண்டு .


“அப்பாசாமிக்குக்      கல்யாணம்
அவரவர்     வீட்டிலே    சாப்பாடு
கொட்டு     முழக்குக்       கோயிலிலே
வெத்தலை    பாக்கு    கடையிலே
சுண்ணாம்பு     சூளையிலே”


 மொத்தத்தில்     நம்ப        ரத்தத்திலேயே   ஓசி     வாங்கிற


 மாதிரி     டிசைன்    இருக்கு    போலெ !

14 comments:

  1. ஹாஹாஹா நல்லாவே யோசிச்சு எழுதி இருக்கீங்க.... வீட்ல ரூம்ல உட்கார்ந்து யோசிப்பீங்களோ....

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி. ஆமா இப்ப சுத்தமா எந்த வேலையும் இல்லே வகுப்புகள் அடுத்த மாதம் தான் ,

    ReplyDelete
  3. உங்களுக்குள் இருக்கும் ஒரு கவிதை உணர்வு ஒரு பதிவாக வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வெட்டியாக இருப்பதினால் ....... இந்த வேலை

      Delete
  4. உண்மைதான் சகோதரியாரே
    அருமை

    ReplyDelete
  5. ஆமாம் நீங்க வங்கி வாசலில் பணத்தை மாற்ற நின்ற போது எழுதிய பதிவா இது?

    ReplyDelete
    Replies
    1. என் வீட்டிற்கு அடுத்த வீடு பேங்க் ,அதனால் முதல் நாள் ௧௫ நிமிடங்களில் வாங்கி விட்டேன் .௯.௩௦ க்குப் போய் ௯.௪௫ க்கு வந்து விட்டேன். அடுத்த நாள் ௨௦ நிமிடம்தான் ஆனது. என்னுள்ளே உள்ள கவிதை க்கு
      க்யூ ........தேவையில்லை

      Delete
    2. எண்கள் தமிழில் வந்து விட்டன.௯.௩௦= 9.30 ௯.௪௫ =9.45 ௨௦ =20

      Delete
  6. ஹா.... ஹா.... ஹா... வித்தியாசமான சிந்தனை!

    ReplyDelete
    Replies
    1. வெட்டியாக இருப்பதினால் ....... இந்த வேலை

      Delete
  7. ஓசி....செம்ம கலாட்டா...

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி

    ReplyDelete
  9. ஹஹஹஹஹ் ஓசில உங்களோட பதிவையும் படிச்சுட்டோம்!!!

    ReplyDelete