Friday 8 April 2016

ஏன் வேற்று மொழி படிக்கவேண்டும்? நான் பிளாக் எழுத ஆரம்பித்த பொழுது என்னத்தைச் சாதிக்கப் போகிறோம் என்ற ஒரு யோசனை இருந்தது .

திரு கார்த்திக் சரவணன் அவர்கள் ஜப்பானிய மொழி படிக்க ஆரம்பித்த  போது  குறைந்த பட்சம் ஒருவரையாவது மாற்றி யோசிக்க வைத்தோமே நம் எழுத்தின் மூலம் என்ற சந்தோஷம் கிடைத்தது.
 ஒன்னு வாங்கினா இன்னொன்னு ஃ பிரீ என்கிற மாதிரி அவரின் மனைவியும் படிக்க ஆரம்பித்து விட்டார் .
 அவர் குடும்ப வேலைகள் முடிந்தபின் நினைவு செயல் எல்லாமே ஜப்பானிய மொழி தான் வேறில்லை என்னும்  அளவிற்குப் படிக்கிறார்..கிட்டத்தட்ட 12வது வகுப்பு மாணவர்கள்  லெவலுக்கு ..

அடுத்த மாதிரியாக மதுரைத் தமிழன் அவர்கள் உடனேயே ஸ்பானிஷ் மொழி சிடி வாங்கிவிட்டார்.. ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது.

 வேற்று மொழி ஏன் படிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஆயிரம் நெட்டில் சொல்லப்பட்டாலும் அவை எத்தனை பேரை உசுப்பேத்தி படிக்க வைக்கும் என்று யாருமே காரண்டி கொடுக்க முடியாது.

 ஆனால் என் இந்த பிளாக்கைப் படிக்கும் ஆதரவாளர்களில்    ( 10 கூட இல்லை . இருந்தாலும் பில்ட் அப் வேணுமில்ல?) 90%  உடனே படிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

வேற்று மொழி படிப்பதால் உள்ள மிகப் பெரிய நன்மை என்னவென்றால் தங்கள்  கணவர் / மனைவி  மகன் / மகள்  உறவினர்கள் பற்றி ... அவர்கள் எதிரிலேயே  வம்படிக்கலாம்

உதாரணமாக என் பையன் நை நை தாங்கவில்லை ஒரேயடியாக கடி .... என்ற விஷயங்கள் பற்றி ஜப்பனீசு மொழி தெரிந்த தோழிகளிடம் பயமே இல்லாமல்  மகன்  எதிரிலேயே மனம் விட்டுப்  பேசுகிறேன் நான் . ( நாம் பேசிப் பழகாவிட்டால் மறந்து விடுவோமில்லையா)


 ஒருவரின் குற்றம் குறைகளைப் பற்றி அவரது முகத்துக்கு நேரேயே  அவருக்குத் தெரியாதபடி நாம் கலாய்க்கும்   போது  கிடைக்கும் இன்பத்தை   அடாடா ....     அதெல்லாம் செய்து அனுபவித்தால் தான் புரியும் .


என் தோழிகளும் தன் மாமியார் ,மாமனார் , நாத்தனார்  கொழுந்தனார் பற்றிய வம்புகளையும் வீட்டில் உள்ளவர்களுக்குப் புரியாதபடி ஜம்மென்று  அவர்கள் எதிரிலேயே பேசுவார்கள்.

பார்க்கிறவர்கள் எதோ பாட சம்பந்தமாக விவாதிக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வார்கள் .

வருமானம் ,நமக்கும் பொழுது போகிறது என்பதை விடவும் இது மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் என்று நான் நினைக் கிறேன்


இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மூஞ்சியை வம்படிக்கிற தோரணை வைத்துக்கொண்டு பேசி ஏதாவது ஏடா கூடமானால் நானோ இந்த பிளாகோ  பொறுப்பு  ஏற்காது.

9 comments:

 1. வேற்று மொழி கற்பதில இவ்வளோ வசதி இருக்கா.?
  //ஒருவரின் குற்றம் குறைகளைப் பற்றி அவரது முகத்துக்கு நேரேயே அவருக்குத் தெரியாதபடி நாம் கலாய்க்கும் போது கிடைக்கும் இன்பத்தை அடாடா .... அதெல்லாம் செய்து அனுபவித்தால் தான் புரியும் .//
  இதை தெரிஞ்சுதான் ஸ்கூல் பையனின் மனைவியும் ஜப்பான் மொழி கத்துக்க ஆரம்ம்பிச்சிட்டாங்க போல இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா... முரளி சார்... இதுவும் ஒரு காரணம் தான்... :)

   Delete
  2. வருகைக்கு நன்றி .

   Delete
 2. நல்ல வேளை நீங்கள் ஜப்பான் மொழியை கற்றுக் கொண்டீர்கள் அதை பார்த்த ஸ்கூல் பையனும் அவரது மனைவியும் ஜப்பான் மொழியை கற்றுக் கொண்டு இருக்கிறார்கள் அது இல்லாமல் நீங்கள் குஸ்தியை கற்றுக் கொண்டிருந்தால் நினைத்தே பார்க்க முடியவில்லை ஸ்கூல் பையன் வீட்டில் என்ன நடந்து கொண்டிருக்கும் என்று

  ReplyDelete
  Replies
  1. நாரதர் வேலையைத் தொடங்கிவிட்டார் மதுரைத் தமிழர்...

   Delete
  2. வருகைக்கு நன்றி .

   Delete
  3. வருகைக்கு நன்றி .
   அடுத்தவர்கள் சண்டை போட்டால் ரசிக்கலாமே .ஏதோ நாம் பிறவி எடுத்த பயனை அடைந்த திருப்தி

   Delete
 3. நீங்கள் எழுதியதை அப்படியே ஜப்பானீஸ் மொழியில் எழுதுங்கள்.
  உங்கள் வலைக்கு வந்தேன். எப்படி எங்கே கற்றுக்கொடுப்பார்கள்,
  மாதக்கட்டணம் எத்தனை ? சீனியர் சிடிசன்ஸ் க்கு எல்லாம் ஆடித் தள்ளுபடி மாதிரி எதுனாச்சும் உண்டா?
  ஆன் லைனில் வகுப்பு இருக்கிறதா? விவரமாக எழுத படிக்க ஆவல்.
  அது இருக்கட்டும்.
  ஜப்பான் நாட்டு இசை பற்றி எழுதுங்கள்.

  உங்களுக்கும் உங்கள் குடும்பபத்தாருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  சுப்பு தாத்தா.
  www.movieraghas.blogspot.com
  www.Sury-healthiswealth.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. Sorry for delayed eply.யார் வேண்டுமானாலும் படிக்கலாம் . என்னுடன் 74 வயதான ஒருவர் நிசான் டி.சி எஸ் போன்ற கம்பெனிகளில் வேலை பார்த்தார் . வயது ஒரு தடை அல்ல.
   மேலும் வேலை வாய்ப்புகள் என்பது நாமே உருவாக்கிக் கொள்ளலாம். ஆன்லைனில் நானே 3 பேருக்கு மட்டுமே இன்டர் மீடியேட் லெவல்
   சொல்லிக் கொடுக்கிறேன் . நானும் வேலை பார்ப்பதானால் ரொம்ப கமிட் பண்ணிக் கொள்ளவில்லை . மேலும் சமையல் மற்றும் வீடு வேலைகளை அவுட் சோர்ஸ் செய்யவில்லை . நீங்கள் படிப்பதானால் சொல்லுங்கள் ,
   நீங்கள் பரீட்சை எழுதாத பட்சத்தில் அறிவு வளர்த்துக் கொள்ள மட்டுமே என்றால் நான் நிறைய லிங்க் தரு கிறேன் . நீங்களே படித்துக் கொள்ளலாம் . பண்ணவும்.உங்கள் ஜி மெயில் தெரியவில்லை

   Delete