Saturday 16 April 2016

ஐந்தடிஉயரத் தன்னம்பிக்கை மலை


 
 நான் எப்பொழுதுமே எதிர்மறை எண்ணங்கள் கொண்ட மனிதர்களைத் தவிர்த்து விடுவேன் . அவர்களுடன் பேசுவேன் ஆனால் நீண்ட நாள் நட்புக்குரியவர்களாகத்  தொடர்வதில்லை .


 என் இருபதுகளில் தொடர்ந்த நட்பு . ஒரு தோழி . அவர் எனது அக்காவின் நெருங்கிய தோழியாக இருந்தார் . பிறகு என்  தோழியாக மாறிவிட்டார் .

இன்று அவரின் வளர்ந்த இரு மகள்கள் மற்றும் அவரது கணவர் உடனும் நல்ல நட்பில் உள்ளேன் .
 நானும் அவரும் கிட்டத்தட்ட 36 வருடங்களாக தோழமை கொண்டுள்ளோம் .

 நான் வேலை மற்றும் திருமணம் போன்ற காரணங்களால் வேறு மாநிலங்கள் சென்ற போதும் லெட்டர் போக்கு வரத்து கூட எங்களுக்குக் கிடையாது.

 அவர் கணவர் வேலை பார்த்த நகைக் கடை ஒன்று தான் தொடர்பு

.சென்னை தனியாக வந்தால் மட்டுமே அந்தக் கடைக்குப் போய் வருவேன்.
 பிறகு நானும் என் குடும்ப வேலைகளில்  பிஸி . அவரும் பிஸி.


2001ல் விஆர் எஸ் வாங்கிய பின் மறுபடியும் தொடர்பு கொள்ள ஆரம்பித்தோம் .அவரின் ஆபீஸ் என் வீட்டருகே உள்ளது . ஒரு கிலோ மீட்டர் தூரமே , ஆனால் சுத்தி வர   மெட்ரோ ரயில் வேலை யால் barricade  ,சிக்னல்  , ஒன்  வே அது இதுன்னு எது   எதோ பண்ணியதால்  ஆபீசில் போய்   பார்க்க வேண்டுமென்றால்  ஷேர் ஆட்டோவில் போய் சிறிது தூரம் நடக்கணும்.
இப்பொழுது ரிட்டயர் ஆகி விட்டார் .
 அவரும் எனது  சொந்த ஊரான  திருவையாறு பக்கம் .
 ஆள் உருவம் நெட்டையில் சேர்த்தி இல்லை .
ஒல்லியிலும் சேர்க்க முடியாது.
இதனால்   பிரியத்துடன் ஒட்டிக் கொண்ட முட்டி வலியைப் பற்றி கவலையே படுவதில்லை . அந்த முட்டி வலி தான்  என்னடா இது நாம  கூட இருக்கறதைப் பத்தி ஃ பீல் பண்ண மாட்டேங் ராங் களென்னு  கவலைப் படும்ன்னு எனக்குத் தோணும் .
 உட்காந்து எழுந்திருக்க சிரமம் . வேகமாக நடக்க சிரமம்.ஆனால் பார்ப்பவர்களுக்கு அது மாதிரி ஒரு பிரச்னை இருப்பதே தெரியாது,
 எல்லா வீட்டுக்கும் இருக்கிற வாசப்படி அவங்க வீட்டிலும் உண்டு . கொஞ்சமும்   அது பற்றிக் கவலைப் படுவதே இல்லை

இருபதுகளில் சினிமா மீது  அவருக்கு ஒரு அதீத காதல் . இப்பொழுதும்  கர்ம சிரத்தையாக அந்தக் காதலைத் தொடர்கிறார். எனக்கு அது அறவே கிடையாது .


அவருக்கு காஃ பி மீது அலாதி ஆசை . எனக்குக் காஃ பி வாசனை சுத்தமாக ஒத்துக் கொள்வதில்லை . என்னைப் பல வருடங்களாக காஃ பி குடிக்கும் படி வற்புறுத்துவார் என்னன்னவோ  சொல்லி செய்து பார்த்தார் . இன்று வரை என்னைக் காஃ பி சாப்பிட வைக்க முடிய வில்லை அவரால் .

 அவருக்கு ஜோசியம் ஜாதகம் இவைகளில் நம்பிக்கை அதிகம்
நான் அதற்கெல்லாம் செலவு செய்யவே மாட்டேன் .

 எங்களுக்குள் நிறைய விஷயங்கள் ஒத்துப் போவதில்லை .


 சில சமயங்களில் காலையில் என் வீட்டருகேதான் பஸ்ஸில் இறங்குவார்கள் அப்போது ஏதாவது கொடுப்பேன் . ஆபீஸ் போகும் அவசரத்தில் அதிகம் பேச முடியாதுதான் ஒரு அஞ்சு நிமிஷம் பேசினாலும் உற்சாகம் கொப்பளிக்கும்.
எதோ இன்ஸ்டண்ட் எனர்ஜி தரும் டானிக் சாப்பிட்ட ஃ பீல்  வரும்..

 இனிமேல் நான் ஃ பிரீயாக இருக்கும் பொது  இருவருமாகச் சேர்ந்து எங்காவாது சுற்றலாம் என்றிருக்கிறோம்

6 comments:

 1. செம எனர்ஜி லேடி போல!! நலல் நட்பு அபயா அருணா...உங்கள் நட்பு தொடர வாழ்த்துகள்!!

  கீதா

  ReplyDelete
 2. waநல்ல நட்புதான். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. எங்கள் அம்மா ஊரும் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி பக்கம்தான்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி

   அப்படியா? என் அப்பா பிறந்த ஊர் இளங்காடு . என் அம்மா ஊர் வானராங்குடி

   Delete
  2. எனது சொந்த ஊர் (அப்பா ஊர்) திருமழபாடி; அம்மா ஊர் மேலப் புதகிரி.

   Delete