Wednesday 25 December 2013

த்சுன்தொக்கு


 தலைப்பைப் பார்த்தவுடன்  ஏதோ  வெளிநாட்டு  உணவின் பெயர் என்று  நினைக்க வேண்டாம்.

விவரமாகச் சொல்கிறேன்.

நாமெல்லாம்  ஏகப்பட்ட புத்தகங்கள் வாங்குவோம் ,
ஆனால் வாங்கிய புத்தகங்கள் அத்தனையையும்  படிக்கிறோமா என்றால் பொய் சொல்லமால்  பதில் சொன்னால் இல்லை என்றே தான் சொல்லவேண்டும்.

அதைத்தான் ஜப்பானிய மொழியில்  TSUNDOKU ' "த்சுன்தொக்கு"  'என்று சொல்வார்கள்.

 வாங்கிய புத்தகங்களைப் படிக்காமல் அப்படியே கிடப்பில் போடுவது என்ற அர்த்தம்..

ஏன்  இந்த வார்த்தையை  உபயோகிக்கிறேன் என்று  தெரியுமோ ?

படித்துக்கொண்டே வந்தால் காரணம் புரியும்

வேறு எந்த மொழியிலாவது  மனிதனது இந்தப் பழக்கத்தை ஒரே வார்த்தையில் சொல்லமுடியும் என்றால் சொல்லுங்கள்

. நினைவில் இருத்திக் கொள்கிறேன்.,எதனால் புத்தகங்களை வாங்கிக் குவிக்கிறோம் என்று பாத்தால் மேலோட்டமாகச்சொன்னால் படிக்க ஆர்வம் .
இதில் 50% உண்மை இல்லாமல் இல்லை .

ஆர்வக்கோளாறின் காரணமாகவும் நிறைய வாங்குகிறோம்

.சீன மொழி கற்பது எப்படி என்று  நான் ஒரு புத்தகம் வாங்கி இரண்டு வருடம் ஆகிறது .
 இது வரை ஒரே ஒரு சீன வார்த்தையாவது கற்ற பாடில்லை.

 ஒரு குறிப்பிட்ட புத்தகம் வாங்கி அதைக் கற்று அதன் படி நின்று நாம் நமது வாழ்க்கையே புரட்டிப் போட்டு நாம்  உலகின் டாப் 10   ஆளில் ஒருவராக வரப்போகிறோம் என்ற  நினைப்பில் வாங்குகிறோம் .

புத்தகத்தில் புதுப் புத்தக வாசனை இருக்கும் வரை ரெண்டு நாள் படிப்போம் ,பிறகு அது கட்டிலுக்குக் கீழே போய் பிறகு இன்னும் எங்கோ தொட்டுவிட இயலாத அளவு எங்கெங்கோ போகும்.

பிறகு வீட்டைசுத்தம் பண்ணும் போது ஒரு நாள் கண்டேடுப்போம்.


அதைத் தவிர வேறே யாராவது பேசும்போதோ நெட்டிலோ இதை அவசியம் படிச்சே ஆகணும் என்று உசுப்பி விட்டால் மறுகணமே வாங்கி விடுவோம்

.அந்தக் காலத்திலாவது வாசலை விட்டு இறங்கி கடைக்குப் போய் வாங்கணும் .
இப்போ உக்காந்த இடத்திலேயே ஆர்டர் பண்ணினாப் போதும் .

 என்னைக்காவது ஒரு நாள் படிக்க என்ற  ரகம்  கூட உண்டு
அந்த என்னிக்காவது அப்படிங்கிற நாள்   இன்று ரொக்கம்  நாளை  கடன்  மாதிரி என்னிக்கு  வருமோ தெரியாது.

 நம்மளைப் பத்தின இமேஜு   கூடணும்ன்னு வாங்கிற சில பேர் இல்லாமல் இல்லை.
ஒருவரின் வீட்டில் உள்ள புத்தகத்திற்கும் அந்த வீட்டில் உள்ளவர்களின் அறிவுக்கும் நேர் விகிதம்  என்ற எண்ணம் நம் எல்லாரிடமும் நீக்கமற  நிறைந்துள்ளது. (அது  தப்பா சரியா என்ற விவாதம் வந்தால்  என் மார்க்கு அகல பாதாளத்துக்குப் போய் விடும் என்பதால் சேஃப்  ஆக  நான் அந்த டாபிக்குப் போகலை) ஹி..........ஹி


 வீட்டு வேலையை  டபாய்க்க ......... ( இது கல்யாணம் ஆகாத பெண்களும் , கல்யாணம் ஆனா ஆண்களும் செய்வது)
இது மாதிரி ஆயிரம் காரணங்களால் புத்தகம் வாங்கிக் குவிக்கிறோம்.

புத்தகங்கள் ஏன் வாங்குகிறோம் என்பதற்கு சுவாரசியமாக ஆயிரம் காரணம் இருக்கிற மாதிரி வாங்கின புத்தகத்தை ஏன் படிப்பதில்லை என்பதற்கும் ஆயிரம் சுவாரசியமான காரணமிருக்கு .

 எனக்கு எங்கே நேரமிருக்கு என்பதுதான் டாப்பில் இருக்கும் காரணமாக இருக்கும் .

 இதுவும் ரொம்ப சென்சிட்டிவ் ஏரியா.

 நான்  கப்சிப்  .
ஜாஸ்தி பேசலை .

 புத்தகம் வாங்கும் போது அதுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதை வாங்கி வீட்டில் வைத்தவுடன் குறைகிறது.
காதலி மனைவி ஆனபின் மவுசு குறையுமே  அது மாதிரி .

 ஓட்டலுக்குப் போனா குடுத்த காசுக்கு ஏன் வீணாக்கனுமின்னு வயித்தை
ஓவர் லோடு பண்ணற நாம புத்தகத்துக்கு செலவு பண்ணிய காசின் மகிமையை புரிஞ்சுக்க  வில்லை.

அந்தக் காலத்தில் ஒரு படிப்பு படிச்சு ஒரு வேலையில் உக்காந்தா அதே வேலையில் கடைசி வரை சுகமாகப் பொழுதை   ஓட்டிடலாம்.
அதனாலே  மத்த புத்தகம் படிக்க நேரம் இருந்திச்சு

இப்ப அப்படியில்லே

 நாளுக்கு நாள் இம்புருவ் ஆயிட்டே இருக்கு .

நம்மளை நாம  அப்டேட் பண்ணிக்கலைன்னாக்க ஆபீசை விட்டுத் துரத்த அதன் எதிரொலியாக வீட்டை விட்டு  என சீரியலாக  இ ஃ பெக்ட்  இருக்கும்.

தவிர டி.வியின் ஆதிக்கம் ஆன் லைன்  பேப்பர் புத்தகம் கூட ஒரு காரணம் .
சரி
இப்ப புத்தகக் கண்காட்சி வருது .
 புத்தகம் வாங்காமயா இருப்போம் .
எப்படி  "த்சுன்தொக்கு" பழக்கத்தில் இருந்து விடுபடுவது ?

 புஸ்தகத்தை முதலில் நம்ம கண்லே படற மாதிரி வச்சு மறக்காம ஒரு நாளைக்கு ரெண்டு பக்கமாவது படிக்க முயற்சி பண்ணுவோம்.

இத்தனை நாளைக்குள்ளே இத்தனை பக்கமாவது படிக்கணும்ன்னு ஒரு திட்டம் போடணும்.

 நாம படிச்சதை யாராவது மாட்டினாங்கன்னா  விடவே கூடாது .
நாம படிச்ச டாபிக்கிலேருந்து  கொஞ்சத்தை  பீலா வுடணும்.

அப்படீன்னு நான் பிளான் பண்ணியிருக்கேன் .

மாட்டிய முதல் பலி ஆடு என்  பதிவைப்  படிப்பவர்களாகிய நீங்கள்தான் .ஏனெனில்  நான் படித்த இந்த வார்த்தை  மறக்காமல்  இருக்கவே  இந்தப் பதிவு..

  இது எப்படி?

7 comments:

 1. சிறுவயதில் எனது படிக்கும் ஆர்வத்திற்கு ஏற்ற போல அவர்களால் புத்தகங்கள் வாங்கி போட முடியாது அப்படி படிப்பேன் பள்ளி புத்தகங்களை அல்ல நிறைய லைப்ரேரிகளில் நான் மெம்பர்..


  இப்போது அப்படியே நிலமைமாறிவிட்டது படிப்பது என்பது ஆன்லைனில் உள்ளவைகளை மட்டுமே அதைபடிக்கவே நேரமில்லை. எல்லோரும் எப்படி புத்தகம் வாங்கி அப்படியே செஷ்ல்பில் வைப்பார்களோ அது மாதிரிதான் ஆன்லைனில் நான் படிப்பவை படிக்க வேண்டியவைகளை புக்மார்க் செய்து வைத்து கொள்வேன். அந்த புக்மார்க்கை டாப்பில் இருந்து பாட்டம் வரை பார்க்க வேண்டுமானல் குறைந்தது 5 நிமிடங்களுக்கு மேல் ஆகும் அவ்வளவு நீளம் ஆகும்

  ReplyDelete
  Replies
  1. சின்ன வயசிலேருந்தே படிக்கிறதுன்னா ம்ம் ...... கிரேட்

   Delete
 2. ஹிஹி... நான் கூட இன்னும் படிக்காத புத்தகங்கள் நிறைய இருக்கின்றன... படிக்கணும்....

  ReplyDelete
  Replies
  1. ம்.... படிக்க ஆரம்பிச்சா சரி

   Delete
 3. ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து பக்கங்களாவது படிக்க வேண்டும் என்று நினைவை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  புத்தகம் பற்றி அருமையான பதிவு நண்பரே
  ரசித்துப் படித்தேன் நன்றி

  ReplyDelete
 4. ஆசை என்னவோ படிக்கனுமின்னு தான். கை வரமாட்டேங்குது

  ReplyDelete