தேவயானி மேட்டர் பத்தி எல்லாரும் ஏதேதோ பல வித கோணங்களில் பல விதமாக எழுதி வருகிறார்கள் .
நான் அதைப் பார்க்கும் கோணமே வேறு.
ஒவ்வொருவருக்கு ஒரு திறமை உண்டு .
எனக்கு என்ன திறமை இருக்கோ இல்லையோ இந்த மனிதர்களை மேனேஜ் பண்ணும் திறமை என்பது அவ்வளவாக சொல்லப்போனால் சுத்தமாகவே கிடையாது.
மனிதர்கள் என்றால் வீட்டில் உள்ளவர்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.
நாம் இன்று ஒரு வேலை சொன்னால் அதை செய்து தர குறைந்தது ஒரு மாசமாவது ஆகும் அவ்வளவு திறமை !
அவர்களுக்கா எனக்கா என்று தீர்மானிப்பது உங்கள் சாய்ஸ் .
நாம் ஒரு வேலை சொன்னால் நமக்கு அது தொடர்பான (எதிர் வேலை ) ஓரு வேலை நமக்கு சொல்வார்கள் .
உதரணமாக போய் காய் கறி வாங்கி வரச்சொன்னால் அதை ஒரு பேப்பரில் எழுதிக்கொடு என்பார்கள் .
மடிச்சு வெச்ச துணியை எடுத்து உள்ளே வை என்றால் அதை வைக்க ஒரு பை கொடு என்பார்கள்
. நமக்கோ எரிச்சல் 300 டிகிரியையும் எகிறும் .
அதே போல் பாத்திரம் தேக்க ஒரு ஆள் இது வரை எனக்கு செட் ஆகவில்லை .
அவர்கள் பாத்திரம் தேய்க்கும் விதம் பிடிப்பதில்லை .
சிங்கை( SINK )கோயில் தெப்பக்குளம் ஆக கன்வெர்ட் பண்ணி அதிலேயே தேய்த்த பாத்திரங்களை தெப்பமாக்கி ,அந்த அழுக்குத் தண்ணியிலேயே முக்கி முக்கி பாத்திரங்களை கழுவும் பாணி எனக்குப் பிடிப்பதில்லை .
இப்படி செய் என்று திருத்திச் சொன்னாலும் நான் அந்தண்டெ இந்தண்டெ பாக்கும் போது திரும்ப தன் சொந்த பாணியிலேயே செய்வார்கள் .
அது போல வீடு துடைக்க என்று வைத்தால் அரை பக்கெட் தண்ணியில் ஒரே ஒரு முறை அந்த மாப்பை முக்கி வீடு முழுக்க துடைக்கும் ஸ்டையில் எனக்கு ஒத்து வருவதில்லை .
எனக்கும் சும்மா தினம் தினம் ருல்ஸ்களை ஒப்பிக்க பிடிப்பதில்லை .
எனவே நானே எல்லா வேலைகளையும் செய்துவிடுவேன்.
உடம்புக்கு எக்சர்சைஸ் என்று நினைத்துக்கொண்டு!
எல்லாரும் என்னை ஒரே ஒரு வேலைக்காரரை மானேஜ் பண்ண முடியாத நீ என்ன படிச்சு என்ன புண்ணியம் .... இத்யாதி இத்யாதி . எல்லாம் சொல்வார்கள் .
ஆனால் வீட்டோடு ஆள் வைத்தால் செட் ஆகிறது. ( ஏனெனில் நானே பாதி வேலைக்கு மேல் செய்து விடுவேன் . பொறுமை 0% ).
எனக்குத்தான் திறமை இல்லையோன்னு இத்தனை நாள் நினைத்து வருத்தப் பட்டுக்கொன்டிருந்தேன் .
நானாவது பரவாயில்லை சாதாரண பிரஜை . தேவயானி ஒரு diplomat !
தேவயானி மாதிரியான ஒரு டிப்லாமேட்டால் கூட ஒரு வேலை ஆளை மானேஜ் பண்ணுவது கஷ்டம் போலே!
எப்படியாகப்பட்ட உண்மை !
இனிமேல் என்னை யாருமே குறை சொல்லக்கூடாதாக்கும்
உங்களைப் பற்றி நீங்களேவா.வாழ்த்துக்கள் தோழி
ReplyDelete"//உதரணமாக போய் காய் கறி வாங்கி வரச்சொன்னால் அதை ஒரு பேப்பரில் எழுதிக்கொடு என்பார்கள்//" - அவர்களாக ஏதாவது வாங்கி வந்தால், இதைப்போய் யாராவது வாங்குவார்களான்னு நீங்க திருப்பி கேப்பிங்க, அதனால தான் முஜாக்கிரதையா பேப்பர்ல எழுதிக்கொடுங்கன்னு கேட்டிருக்காங்க.
ReplyDeleteஎனக்கு இந்த அனுபவம் இருக்கு, அதனாலதான் என் மனைவியிடம், "தாயே, நீயே என்ன வாங்கணும்னு எழுதிக்கொடுத்திடுன்னு" சொல்லுவேன்.
இக்காலத்தில் வேலை ஆளை வேலை வாங்குவது கடினம்தான்
ReplyDelete