Tuesday 6 August 2013

                                                           செம ஹாப்பி !
செம ஹாப்பி கான காரணத்தை கேட்டா  உங்களுக்கு ரொம்பவே அல்பமாக தோணும் .ஆனா பல நாள் முயற்சிக்குப்பின் எனக்கும்  தமிழில் மற்றவர்களை  மாதிரி ரொம்பவே வேகமாகவே டைப் பண்ணவே வந்துவிட்டதே !; இதற்கு நான் முதலில் நன்றி சொல்லவேண்டியது திண்டுக்கல் தனபாலன்  அவர்களுக்குத்தான் .
ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் ப்ளாக் ஆரம்பித்து விட்டேனே தவிர 
முதல் ப்ளாக் டைப்  பண்ண 3 மணி நேரம் ஆச்சு !இரவு உணவை 
லேட்டாக த்தான் தயாரித்தேன்.இனியும் ஒரு ஒரு ப்ளாக் கிற்கும் 3 மணி நேரம் என்றால் உஸ் ! அப்பாடா  தலையை சுத்துதே !
.இதற்கு முன் நான் உபயோகித்துக்  கொண்டிருந்த தமிழ் சாப்ட்வேரில்  அடிக்கடி ஷிப்ட் key உபயோகிக்க  வேண்டி  இருக்கும் . நான் ஒன்றும் டைப்பிங்கில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இல்லை .குட்ஸ் வண்டி ஸ்பீட் தான் .ஆனால் இந்த  ப்ளாக் இல் உள்ள sofrware ரொம்பவே  என்னை மாதிரி நத்தை ஸ்பீட்கேசுகளுக்கு செம டைப்பிங் friendly ஆக இருக்கிறது .
தொழில் நுட்ப வளர்ச்சிக்கு கோடி x கோடி வணக்கம் .
 ஆக tool கிடைச்சாச்சு இனிமே ஸ்பீடு எடுக்கவேண்டியதுதான் பாக்கி .

எழுதுவதற்குதான்  ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கே !
குடியிருப்பது ஒரு சிறிய   ஃ பிளாட்  ஆக இருந்தாலும் காலையில் எழுந்து வாசலில் கோலம் போடும் பழக்கம் உண்டு.
"ஒரு சிலர்  ஏன் இதிலெல்லாம் டயம் வேஸ்ட் பண்ணுகிறாய்" என்பார்கள்  ..
"உங்களுக்கென்ன  தெரியும் இந்த கோலம் வீட்டிற்குள் எதிர் மறைசக்திகள் தீய சக்திகள் வராமல் தடுக்கும் "என்பேன்.

"ஏன்   எதிர் மறைசக்திகள் தீய சக்திகள் எல்லாம் வாசல் வழியாகத்தான் வருமா என்ன ஜன்னல்  பால்கனி வழியாக வராதா என்ன ?  " 
"ஒரு கோலத்திற்கு அவ்வளவு பவர் இருந்தால் ஒரு ஒரு நாட்டிலும் கோலத்தையே நாட்டின் எல்லையின்  பார்டராக வைத்திருக்கலாமே ?"
இது போன்ற கிண்டல்கள் எவ்வளவு வந்தபோதும் நான் கோலம் போடுவதை விடவில்லை .
இது மூட நம்பிக்கை சார்ந்த விஷயமானாலும் குறைந்த பட்சம் வாசல் வழியாக வரும் தீய சக்திகளுக்கு  மட்டுமாவது  நோ என்ட்ரி போர்டு போல இருக்கட்டுமே !
எனக்கும் காலையின் மென்மையான காற்றை அனுபவிக்கும் சுகம் கிடைக்கட்டுமே !
தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை யும் பின்பற்றிய மாதிரியும் ஆச்சு!
என்ன நான் சொல்வது சரிதானே !


No comments:

Post a Comment