படிப்பின் முக்கியத்துவத்தையும் அதற்கு சரிசமமாக நேரம் பணம் ஒழுக்கம் இவற்றின் முக்கியத்துவத்தையும் உணர்த்திய என் பெற்றோருக்கு எனது முதல் பிளாக் சமர்ப்பணம் .
சிறிய வயதில் நன்கு படித்த பெற்றோ களாயிருப்பினும் ஸ்கூலில்
சேர்த்தார்களே தவிர தினமும் ஸ் கூலுக்கு அனுப்பவில்லை . வீட்டில் அம்மா தமிழ் வித்வான் மற்றும் ஆங்கிலமும் நன்றா கப் படிததவர் என்பதால் பிரபலமான ஷேக்ஸ் பியர் கதைகளும் ஆங்கில கவிதைகளும் தமிழில் திருக்குறள் கம்பராமாயணம் சிலப்பதிகாரம் ஆத்திச்சூடி போன்றவற்றை யும் சொல்லிக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல் என்னை சொல்லவும் வைப்பார் ..அப்பா காலையில் 6 மணிக்கெல்லாம் எழுப்பி கையில் ஒரு பாட புத்தகத்தை கொடுத்து வாய் விட்டுப் படி என்று படாத பாடு படுத்துவார்,
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று பாடும் அளவுக்கெல்லாம்
ஸ்கூலில் போய் பரிட்சை எழுதிய ஞாபகம் இல்லை ,
ஆனால் அந்தக்காலத்தில் ( சுமார் 50 வருடங்களுக்கு முன் என் அப்பா அந்த சிறிய ஊருக்குப் பெரிய வேலையில் இருந்ததாலும் எப்படி யோ பாஸ் போட்டு 9 வயதில் 6வது படித்தேன் .( 6வது முதல் பெரிய ஊரான திருச்சி வந்து விட்டதால் அப்பாவின் "செல்வாக்கு " என்கிற பருப்பு வேகாது .)
என் பெரிய அக்காவுக்கு பரிட்சை என்றால் வேப்பங்காய் என்று சொல்வதை விட வேப்ப மரம் என்று சொல்லுமளவுக்கு வெறுப்பு . பரிட்சை யைக்கண்டு புடிச்சவனை தேடிக்கண்டு புடிச்சு ஒதைக்கணும் அவனை குத்தி கொலை பண்ண ணும் என்று ரண கள டயாலாக் அடிக்கடி அடிப்பதுண்டு.
பரிட்சை என்றால் கிலோவா லிட்டரா என்று தெரியாத எனக்கு எதுவும் புரிபடவில்லை. எனக்கும் என் அக்காவுக்கும் 8 வயது வித்தியாசம் என்பதால் அக்காவின் இந்த தீவிரவாத அறிக்கைகளால் அந்த 8 வயதில் ரொம்பவே
அரண்டு போனதென்னவோ நிஜம் ..
பயத்தி ல் ஒரு நாள் என் அம்மா விடம் " ஏம்மா இந்த படிப்பு பரிட்சை இதுக்கெல்லாம் பின்னாடி இவ்வள்வு கஷ்ட ம இருக்கா "என்று கேட்ட போது
என் அம்மா ச்சே ச்சே படிப்பாலே எவ்வளவோ கஷ்டத்தை மறக்கலாம் என்றும் மணமாகி 6 ஆண்டுகள் கழித்து தான் பெற்ற தனது முதல் மகன் 16 நாளில் இறந்த துக்கத்தை மறக்க தமிழ் வித்வான் படிப்பு படிக்க ஆரம்பித்ததாகவும் இதோ பாரு கம்பராமாயண பாட்டெல்லாம் மனப்பாடம்
பண்ண கவலை எல்லாம் போச்சு என்று சொன்னதை மனதின் ஒரு மூலையில் எங்கோ ஸ்டோர் பண்ணி வைத்தேன் ,
ஆனாலும் மேலே M .A படிப்பு வரை பரிட்சை என்றால் பயமில்லை ,அதே சமயம் வெறுப்பும் இல்லை .பிறகு வ.ங்கி வேலைக்கு வந்து அக்கவுண்டன்சி
ரொம்பவே இஷ்டப்பட்டு படித்தேன் .
காலப்போக்கில் தாயும் இறக்க , இரண்டு மகன்கள் பிறந்த பின் ஆஸ்துமா நோய் வந்து asthma has no reason no reason என்பது போல் கிட்டத்தட்ட எல்லா நாளுமே இரவுகளில் ஆஸ்பத்திரி விஜயம் . இந்த டயம் டேபிள் ஒரு ஒருவருட காலம் ஓட உடல் தெம்பு மனத்தெம்பு எல்லாம் இரண்டு வருடம் முன்பு இரண்டு all time low க்குப் போன ஷேர் மார்கெட் மாதிரி down ஆச்சு.
என்ன பண்ணுவது என்றே புரியாமல் விழித்துக்கொண்டிருந்த போது
மண்டையில் ஒரு 1000 வாட் பல்பு எந்த ச்விட்சும் போடாமல் ப்ளாஷ் !!1
25 வருடம் முன்பு அம்மா சொன்னதை மெமரியில் இருந்து retrieve
பண்ணியது என் குழந்தை கள் செய்த புண்ணியம் கல்யாணத்திற்கு முன்பு பாதியில் விட்ட CAIIB பரிட்சையை 6 வருடம் கழித்து எழுதி பாஸ் பண்ணினேன் , ஆஸ்துமா நோய் மெல்ல மெல்ல குறை.ந்தது .
அப்பொழுதுதான் புரிந்தது படிப்பிற்கும் பரிட்சைக்கும் நோய் தீர்க்கும் வல்லமை உண்டு என்பது .
இதே போல் 12 வருடம் முன்பு வங்கி வேலையிலிருந்து குடும்ப சூழ்நிலையின் கட்டாயத்தால் விருப்ப ஓய்வு பெற்ற போதும் திசை காட்டியாக இருந்தது எனது அம்மாவின் சொற்களே !
பிறகு வேற்று நாட்டு மொழி பயின்று இன்றும் என்னை ஏதோ சிறு சிறு வேலைகளில் ஏடுபடுத்திக்கொள்வதற்கும் ஒரு சிலர்க்கு inspirational person ஆக இருப்பதற்கும் காரணமான என் பெற்றோர்களுக்கு இந்த பிளாக் சமர்ப்பணம் .

ரசித்தேன்.
ReplyDelete