"இன்னின்ன
காரியங்களை இந்த இந்த காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று
இருக்கிற காலக்கெடு நமது
எதிரியா ?"
என்கிற தலைப்பில் இன்று
ஒரு ஜப்பனீஸ்
TED x பேச்சு
இன்று கேட்டேன் .
அவரின் இந்தத் தலைப்பு பற்றி
நான் அவ்வளவு சிந்தனை எல்லாம் செய்ததாக எனக்குத் தெரிந்து இல்லை .
அப்பப்பா இந்த
புராஜெக்ட் முடிக்கிற வரை நான் வேறே
வேலை எதையும் நெனச்சுக் கூட
பாக்க முடியாதுன்னு தினம் அங்கலாய்க்கிறோம் .
கிட்டத்தட்ட காலக்கெடு என்கிற வார்த்தையையே நாம்
ஒரு எதிரி என்கிற கண்ணோட்டத்தோடு பார்ப்பது என்னவோ மறுக்க
முடியாத உண்மை .
அந்த ஜப்பானியப் பேச்சாளர் "பெரிய காலக்கெடு
.( deadline ) அதற்குள் ஏகப்
பட்ட மினி காலக்கெடுக்கள் . எனவே மனிதனாய்ப்
பிறந்தவர்களுக்கு தினமும் ஒரு காலக்கெடு.
என்னடா
மனுஷ வாழ்க்கை படா பேஜாராக் கீதே " ன்னு
அங்கலாய்ச்சுகிட்டு இருந்தப்ப ....
பெரிய
குறிக்கோள் எல்லாம் எதுவும்
இல்லாமல் ஓடும்
ஒரு பூனையைப் பார்த்தாராம்
.
ஆஹா ! இந்தப் பூனைக்கு மனுஷன் மாதிரி காலக்கெடு எதுவும்
இல்லையே . எவ்வளவு ஜாலின்னு நினைச்சாராம்
.
ஆனா நல்லா மூளையைக் கசக்கி யோசிச்சப்பறம் தான்
தெரிஞ்சது
காலக்கெடு
நம்பளை ஊக்கு விக்க ஒரு
உந்து கோலா இருக்கு .
முதலில்
அந்த காலக்கெடுவுக்குள் வேலையை முடிக்க கஷ்டமாகத்தான்
இருக்கும் ஆனால் அதை
நாம் ஒரு எதிரி மாதிரி
நினைக்காமல் ஒரு நண்பனாக நினைத்தால்
நாமே எல்லாவற்றையும் காலக்கெடுவுக்குள் முடித்து விடுவோம் . நாளடைவில் அதற்கு நாம் பழகி
விடுவோம் என்கிற மாபெரும் உண்மை புரியும் . நீங்களும் புரிஞ்சுக்கணும் என்று
முடிக்கிறார்.
நானும்
என் வாழக்கையில் எப்படி
இருந்திருக்கிறேன் என்று நினைத்துப் பார்த்தேன் .
அவரின் பேச்சு என்னை ரொம்பவே motivate பண்ணியது.
நானும் 2017 ஜூலைக்கு முன்னாடி வாழ்க்கையை வாஷிங்கு மெஷினில் போட்டு அலசர வேலையெல்லாம் பண்ணக்கூடாது
.
இனிமே எப்படி இருக்கனும்ன்னு ஒரு காலக்கெடு லிஸ்ட் போட்டேன் .
சின்னது தான்。
பெரிய லிஸ்ட்டுக்கும் நமக்கும் ஒத்து வரவே வராது
மூணே மூணு விஷயம்
ஒண்ணு தேவை இல்லாம இந்த ஆகஸ்ட் மாசம் முதல் சாமான் வாங்கக்கூடாது
.
முள்ளங்கி தினம் சாப்பிடணும்.
வீட்டில் 10 % குப்பை ஆகஸ்ட் முடிவுக்குள் குறைக்கணும்
இந்த ஆகஸ்ட் மாசத்திலிருந்து
தேவை இல்லாமல் கடைப் பக்கம் போகக்கூடாது
.என்ற தீர்மானத்தை ஜூலை
26 எடுத்தேன் .
( போனால் கை சும்மா இல்லாமல் ஏதாவது சாமான்களை வாங்குகிறது . )மனதுக்கும் கைக்கும் நடக்கும் பேச்சு வார்த்தையில் மனம்
தோற்றுவிடுகிறது .கைதான்
ஜெயிக்கிறது . நான் என் கையைச்
சொன்னேன் .
ஒண்ணாந்தேதியிலிருந்து தானே வெளியில்
போகக் கூடாது எனவே 30 ம்
தேதியே செடிக்கு
மண் கொஞ்சம் (ஒரு மூட்டை ) வாங்கினேன்
.
அது
ஒரு ராஜ கம்பீரத்தோடு பால்கனியின் மூலையில்
வீற்றிருக்கிறது .
அதைத் தவிர இந்த
11
நாட்களாக வீட்டிலிருந்து 150 -200 மீட்டருக்கு மிகாமல் தான் சுற்றிக்
கொண்டிருக்கிறேன் . கறிகாய்கள் ,கீழே உள்ள கடையில்
மாளிகைப் பொருட்கள் தவிர வேறு எதுவும்
வாங்கவில்லை .
ஆன் லயனிலும் எதுவும்
வாங்கத்தெரியாது .வேண்டுமென்றே அந்தக் கலையை இது வரை கற்கவில்லை
.
...
மற்றபடி
வீட்டில் சேர்ந்துவிட்ட
புத்தகங்கள் மற்ற பொருட்கள் இவற்றில்
தூக்கிப்
போடஎன்று நிர்ணயித்த 10 % இலக்கு ஹி...ஹி ..
ரொம்பத் தூரத்தில் இருக்கு
. அதான் இன்னும் 20 நாள் இருக்கே !
கிட்னி ஸ்டோனுக்கோசரம்
முள்ளங்கி வாங்கி வைத்திருக்கிறேன் . ஏனோ
சாப்பிடுவதில்லை . அதை நாளை
முதல் செய்யணும் .
காலக்கெடு எனக்கு (உப்பா ,சர்க்கரையா மாதிரி ) நண்பராகுமா பகைவராகுமா பொறுத்திருந்துதான்
பார்க்கணும்
இதெல்லாம் சும்மா ஜுஜுபி... ஹா...ஹா...
ReplyDeleteஆரம்பத்தில் ஒழுங்காக ஓடும். அப்புறம் தான் மக்கர் பண்ணும்
Deleteபகைவர் நண்பரானால் நல்லதுதான், நண்பர் பகைவரானால் கஷ்டம்தான்.
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteநமக்கு நாமே போட்டுக் கொண்ட வளையங்கள். சுகமா சுமையா என்பது போகப் போகத்தான் தெரியும்.
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteபெரும்பாலும் திட்டம் மட்டுமே போடுகிறோம் செயல்படுத்துவது மிகவும் குறைவு.
ReplyDeleteஇதுவரை எத்தனையோ தரம் திட்டம் போட்டேன் . வெற்றி என்பது 30%சதவீதம் தான்
Deleteகாலக்கெடு எல்லாம் ஆபீஸ் சமாச்சாரத்துக்குத்தான்...நமக்கு நாம் போட்டுக் கொள்வதை விட என்ன செய்யணுமோ அதைச் செஞ்சோம்னா ஆட்டோமேட்டிக்கா முடிச்சிரும்.... அனுபவ உண்மை என் வரையில்....
ReplyDeleteகீதா
கரெக்ட் சிந்திக்க வைத்து விட்டீர்கள்
Deleteகாலக்கெடு சோம்பேறித்தனம் இல்லாமல் வைக்க உதவும். உங்களது மூன்று தீர்மானங்களும் நல்ல விஷயம். தீர்மானங்களை அளவாக, கொஞ்சம் கொஞ்சமாக செயல் படுத்த ஆரம்பிப்பது நல்லதுதான். நடைப்பயிற்சி தொடங்கவேண்டும் என்றபோது ஆர்வக்கோளாறில் ஒரேயடியாக ரொம்ப தூரம் நடக்கத் தொடங்கி ஒரே மாதத்தில் மங்களம் பாடி விட்டேன்!
ReplyDeleteநானும் அதற்கான வாட்ச் கூட வாங்கினேன் . சில நாட்கள் பத்தாயிரம் ஸ்டெப்பு நடந்தேன் ,இப்போது எவ்வளவு நேரம் தூங்குகிறேன் என்பதற்கு மட்டுமே சில நாட்கள் கையில் கட்டிக்கொள்கிறேன்
Delete