இது
எனது மூளையில் உருவான சொந்தத் தயாரிப்பு.
தேவையான
பொருட்கள்
:
பீர்க்கங்காய் மீடியம்
சைஸ் 1
உருளைக்கிழங்கு மீடியம்
சைஸ் 2
கார்ன்
ஃ ப்ளோர் 2 டேபிள் ஸ்பூன்
பச்சை
மிளகாய் 1-2 காரத்திற்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் 4 டேபிள்
ஸ்பூன்
செய்முறை
முதலில்
பீர்க்கங்காயை நன்கு கழுவிவிட்டு
மிக லேசாக வதக்கிவிட்டு
(ஈரம்
,நீர்த்தன்மை போக )
மிக்சியில் போட்டு
பச்சை மிளகாயுடன்மைய அரைக்கவும் .
பிறகு
உருளைக்கிழங்கு களை வேகவைத்து நன்கு
மசிக்கவும் .
உப்பு சேர்த்து பீர்க்கங்காய் கலவையுடன் பிசைந்து கொள்ளவும்.
கொஞ்சம் நீர்க்க இருந்தால் கொஞ்சம் கார்ன் ஃ ப்ளோர் சேர்த்துப் பிசையவும் .
பிறகு ஒரு பெரிய வெங்காயம் ஒன்றை எடுத்துத் தோல் உரித்தபின்
பாதியாக வெட்டியபின் இது போன்ற கப்புகளாக பார்த்துப் பிரித்து எடுக்கவும்.
(ஓரமாக முதலில் விரல் நகத்தால் பிரித்தால் இதே போன்று எடுக்கலாம் .
அடுத்து
எண்ணெய் தடவிய ஒரு பாத்திரத்தில்
இந்த கப்புகளை ஆவியில் வேக வைக்கவும்.(
முன்பே சூடு பண்ணிய இட்லிப்
பாத்திரத்தில் பத்து நிமிடங்களுக்கு மட்டும்
)
பிறகு
ஆறிய பின் ஒரு
பானில் அல்லது மேலே உள்ளவாறு தோசைக்கல்லில்
எண்ணெய் விட்டு வதக்கவும் .
நான்
கிரில் பானில் வதக்கினேன் .
கோடு
கோடாக வரும் என்பதற்காக . பேக்கிங் ஓவன் இருந்தால் பேக் கூட செய்யலாம் . என்னுடையது இப்போது என் கைவசம் இல்லை
டேஸ்ட்
என்றால் டேஸ்ட்
அவ்வளவு டேஸ்ட் .
சாம்பார்
சாதம் ,தயிர் சாதம் , தக்காளி
சாதம் ,எலுமிச்சை சாதம் முதல் சப்பாத்தி
வரை எல்லாத்துக்கும் சைடு டிஷ் என்று
சொல்வதை விட பிக் பாஸ்
என்றே சொல்லலாம் .
சூப்பர் அருணா! இதுவரை வெங்காயத்தை உரித்து ஸ்டஃப் பண்ணிச் செய்ததில்லை. உருகளைகிழங்கு தக்காளி, குடைமிளகாய், புடலங்காய், பாகற்காய் இப்படி...எதில் எல்லாம் செய்ய முடியுமோ செய்திருக்கேன்... இதைக் குறித்துக் கொண்டேன்...நல்ல ஐடியா...மிக்க நன்றி
ReplyDeleteகீதா
வருகைக்கு நன்றி
Deleteஅட....சூப்பரா இருக்கே.....
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteஇதுக்கு பேரு பிக்பாஸா ?
ReplyDeleteஇது பிக் பாஸ் இல்லென்னாக்க வேறே எது பிக் பாஸ் ?
Deleteஉங்கள் மூளையில் உருவான சொந்தத் தயாரிப்பு மிக அருமை! எனக்கு பீர்க்கங்காய் மிகவும் பிடிக்கும். பீர்க்கங்காயுடன் உருளைக்கிழங்கு புதிய காம்பினேஷன். பிரெட்டில் வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. செய்து பார்க்கிறேன் விரைவில்.
ReplyDeleteநல்ல டிஷ்,
ReplyDeleteநல்ல ரெசிபி/
ReplyDeleteஅட நல்லா இருக்கே ஐடியா.
ReplyDeleteசாப்பிடத் தோணுதே.