Sunday, 13 August 2017

லாரியில் பயணிக்கும் மனிதர்களும் மாடுகளும்



திரு வெங்கட் நாகராஜ்   அவர்களின்    பதிவில்   வந்த  லாரியில் போகும் மாடுகளின்     போட்டோ   பார்த்ததும்   ரொம்ப நாளாக   எழுதணும்   என்று நினைத்துக் கொண்டிருந்த   விஷயம்   ஞாபகத்துக்கு   வந்தது .


இது போன்று    மாடுகள்   மட்டுமல்ல மனிதர்களையும்   இப்படித்தான் வேலைக்கு அழைத்துச் செல்வதையும்     நான்  பார்த்திருக்கிறேன் .

பொதுவாக  இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் எனச் சொல்லப்படும் பெரிய பெரிய கம்பெனிகளுக்கு கழிவறை சுத்தம் செய்ய , ஆபீஸ்  கூட்ட , மிச்ச  சில்லறை வேலைகள் செய்ய என்று வரும் வேலை ஆட்களை ஒரு சில ஏஜெண்டுகள் இப்படித்தான் லாரியில் நிற்கவைத்தே , அழைத்துச் செல்வார்கள்    

சில சமயங்களில்  ஒரு சிலர் எப்படியோ அட்ஜ்ஸ்  பண்ணிக்கொண்டு  உட்கார்ந்து வருவார்கள் .

அந்த லேடீசை நான் கேட்டதுண்டு .

ஏம்மா ,ரொம்ப நாழி நின்னுக்கிட்டே வந்தா  கால் வலிக்காதா ?

 “காசு  கொடுத்து பஸ்ஸில் வந்தாலும் உக்கார இடமா கிடைக்குது , என்னமோ நம்மள   வூட்டுகிட்டேருந்து  கூட்டிவந்து வூட்டாண்டையே 
வுட்றாங்களே ம்மா”

“பழகிப் போச்சு ,”

“சொம்மா ஒரு அரை   மணித்தொலைவுதாம்மா” 

என்கிற பதில்தான் முக்கால் வாசிப்பேரின் பதிலாகத்தான் இருக்கும் .

 ஆச்சரியபப்டும் வகையில் யாருமே சலிச்சுக்கறதில்லை

ஒரு சிலர் என்னம்மா பண்றது பாக்டரியில்  கூட  நிறைய ஆளுங்க பாவம் அப்படித்தானே வேலை செய்றாங்க என்னமோ நாங்க பொறந்த  நேரம் என்பார்கள் .



அதுவும்  மழை பெய்தால் அவர்களுக்கு  ஒரு பெரிய  பாலிதீன் ஷீட் கொடுப்பார்கள் .  அதைத்    திறந்த லாரியின் நாலு மூலையிலும் நிற்கும்  மற்றும் ஓரமாக நிற்கும் ஆட்கள் பிடித்துக் கொண்டு வரவேண்டும் .
எனக்கென்னவோ பார்க்கவே மனசு கஷ்டமாக இருக்கும் .

 என் வேலையிலும் டீச்சிங்செய்யும் போது நிற்கவேண்டிதான்  இருக்கும் .


தவிர பாக்டரிகளுக்கு    இன்டர்பிரட்டேஷன்  என்றால்   ஒர்க் சைட்டில் இருக்கும்போது   நீண்ட நேரம் நிற்க வேண்டி வரும்போது  கஷ்டமாகத்தான் இருக்கும் .

 இது தவிர சாமானோடு  சேர்ந்து  ட்ரக்கில்  உட்கார வைக்கப் படுவதும் கொடுமை . (படத்தில் உள்ளவர்கள் ஜாலியாக இருக்கிற மாதிரி இருந்தாலும் )


நின்று கொண்டே கடையில்  வேலை செய்யும் பெண்கள் , மார்க்கெட்டிங்  வேலை செய்பவர்கள் , துணிக்கடையில் வேலை செய்பவர்கள் , சில  ஆபீசில் நின்றுகொண்டே இருக்கும் காவலாளிகள்    இவர்களை எல்லாம் பார்த்துக் கொண்டு    என் வேலையில்   உள்ள சிரமங்களுக்கு   வருத்தப் படக்கூடாது என்று   என்னை   நானே   சமாதானம்   செய்து   கொள்வேன் .


மாடோ   மனுஷனோ    யாராக இருந்தாலும்  கெட்ட   கிரகங்களின்  கூட்டுச்சேர்க்கையோ அல்லது overstay யோ  சில நேரங்களில் படுத்தும் போல.
 ( படங்கள் கூகுளில் இருந்து சுட்டவை ) நேரே போட்டோ எடுக்க பயம்.


13 comments:

  1. //நின்று கொண்டே கடையில் வேலை செய்யும் பெண்கள் , மார்க்கெட்டிங் வேலை செய்பவர்கள் , துணிக்கடையில் வேலை செய்பவர்கள் , சில ஆபீசில் நின்றுகொண்டே இருக்கும் காவலாளிகள் இவர்களை எல்லாம் பார்த்துக் கொண்டு என் வேலையில் உள்ள சிரமங்களுக்கு வருத்தப் படக்கூடாது என்று என்னை நானே சமாதானம் செய்து கொள்வேன் //.
    உண்மைதான் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. நமக்கும் கீழே உள்ளவர் கோடி .....

      Delete
  2. இவர்களைத்தான் அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் பணத்தால் அடித்து காரியம் சாதிக்கின்ரார்கள் அவர்களுக்கும் அந்த நேரத்தில் அப்பணம் மிகப்பெரியது என்ன செய்வது தனது வாழ்வாதாரத்தை சிதைப்பதை அறியாதவர்கள் பாவம்.

    1996-ல் அபுதாபியில் நானும் இப்படித்தான் போனேன் அந்த நினைவுகள் வந்தது.
    பிற்பாடு எனது முயற்சியால் ராஜ வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ராஜ வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்

      Delete
  3. எனது வேலையும் நாள் முழுவதும் நின்று கொண்டே இருப்பதுதான்...நின்று நின்று பழகி போய்விட்டது எனக்கெல்லாம் அதிக நேரம் உட்கார்ந்து இருந்தால்தான் பிரச்சனையே

    ReplyDelete
  4. பிரச்னை யாருக்கு உங்களுக்கா மத்தவங்களுக்கா ?

    ReplyDelete
  5. கேரளத்தில் இப்படிப் பார்ப்பது வெகு குறைவு. தமிழ்நாடு, ஆந்திராவில் நிறைய பார்க்கலாம். பாவம் தான்...நானும் டீச்சர்தானே...நின்று கொண்டே தான் பாடம் நடத்த வேண்டும். ஆனால் பழகி விட்டது...நமக்கும் கீழே உள்ளவர் கோடி...எனவே நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று மகிழ்வு கொள்ள வேண்டும் தான்.

    கீதா: பாவம் இது போன்றவர்கள். ஆனால் இவர்களுக்கு இதுதானே வாழ்க்கை, சாப்பாட்டிற்கு வழி எனும் போது இவ்வளவாவது கிடைக்குதேனும் அவர்களுக்குச் சந்தோஷமாக இருக்கலாம்...வறுமை கொடிதுனு சும்மாவா ஔவைப்பாட்டி சொன்னாங்க...

    ReplyDelete
  6. நமக்கு நாமே அனைத்தும் - சமாதானம் உட்பட... அருமை...

    ReplyDelete
  7. எல்லா வேலையிலும் கஷ்டம் இருக்கிறது.
    அதற்காக வருத்தப்பட்டால் சாப்பாடு
    கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் ஆகிடும்.

    ஏர் ஓட்டும் வயலினிலே தார் ஓட்டும் காலமடா... http://ajaisunilkarjoseph.blogspot.com/2017/08/blog-post.html

    ReplyDelete
  8. ம்ம்ம்.. மனிதர்களும் நின்றபடி லாரிகளில், ட்ராக்டர்களில் பயணிப்பது கடினம் தான். வடக்கே இப்படி பயணிக்கும் சிலர் பார்த்ததுண்டு. புகைப்படங்களும் இருக்கின்றன.

    ReplyDelete