இன்று உலக போட்டோ தினம் .
எல்லாருமே பல போட்டோ களைப் பற்றி எழுதினாலும்
என் மனதிலிருந்து அழிக்க முடியாத நான் எடுத்த போட்டோ இது .
இது பற்றி ஏற்கனவே பதிவு எழுதி இருக்கிறேன் .
இருப்பினும் திரும்ப எழுதுகிறேன் .
. இந்தப் புல்லுக்குத் தான் எப்படியாவது வளர வேண்டும் என்ற விடாமுயற்சியால் மட்டுமே அவ்வளவு பெரிய ஸ்பாஞ்சு தடையாக இருந்தாலும் அதையும் மீறி வளர்ந்து உள்ளது.
அந்தப் புல்லால் பக்கத்தில் உள்ள செடிகளிடம் மனிதன் மாதிரி தன் குறையைச் சொல்லி அழ முடியுமா ?
அல்லது மனிதர்கள் மாதிரி கோயில் குளம் என்று போய் வர முடியுமா ?
பரிகார பூஜை எதுவும் செய்ய முடியுமா ?
எங்கேயாவது லஞ்சம் எதுவும் கொடுக்க முடியுமா ?
இல்லை வளருவதற்க்கென்று ஏதாவது டானிக் தானாகவே எக்ஸ்ட்ரா எடுத்துக்கொள்ள முடியுமா ?
முயற்சி முயற்சி முயற்சி இதைத்தவிர வேறு எதுவுமே இல்லை .
எப்போவெல்லாம் எனக்கு மனசு விரக்தியாக ஆகிறதோ அப்பல்லாம் நான் இந்த போட்டோ வைத்தான் எனக்கு இன்சுபயரிங் ஆக எடுத்துக் கொள்வேன் .
நம்பிக்கை தரும் புகைப்படம்.....
ReplyDeleteஅழகான புகைப்படம். கருத்தும்....
ReplyDeleteபாத்ரூமில் சிறிய கடுகு போன்ற ஓட்டைகளில் இல்லைனா பாறை இடுக்குகளில் ஒன்றுமே இருக்காது இருக்கும் ஒரு துளி மண் நீர் சூரிய ஒளியே இருக்காது இருந்தாலும் அதிலும் எப்போதேனும் விழுந்திருக்கும் கடுகு இல்லைனா வெந்தயம்...இல்லைனா பாறைகளில் ஏதேனும் ஒரு விதை முட்டி மோதி முளைத்திருக்கும். அப்போது நீங்கள் இங்கு சொல்லியிருப்பது போல் நினைத்துக் கொள்வேன் என் மகனுக்கு அடிக்கடிச் சொன்ன உதாரணமும் இதுதான் அவன் கஷ்டப்பட்டபோதெல்லாம்....நல்ல கருத்து...
கீதா
Nice pic and post
ReplyDeleteGood msg
ReplyDeleteI like the photo and the message as well.
ReplyDeleteநல்லதொரு கருத்து அதற்கும் மனிதனைப்போல் உயிர் இருக்கிறது என்பது உண்மையே...
ReplyDeleteஇருத்தாலும் படிக்கும்போது புல்லரித்தது.
புத்துணர்வு படமும், வரிகளும் மிக மிக சிறப்பு ....
ReplyDeleteஅருமை அருணா அக்கா..
அருமை. வழியா இல்லை பூமியில்....
ReplyDeleteஒவ்வொருவருக்கும் ஏதோவொரு அடிப்படையில் நம்பிக்கை இருக்கும். அவ்வகையில் உங்களுடையது பாராட்டத்தக்கது.
ReplyDeleteமிக அருமை! அசத்தலான புகைப்படம் அதை விட அருமை!!
ReplyDeleteஅருமை, அருமை
ReplyDeleteSuper mam easy observe motivation message and photo very nice
ReplyDelete