டேஸ்ட்டான
ஒரு சைட்
டிஷ்
ரொம்பவே ஈஸியானதும் கூட .
தேவையான பொருட்கள்
பலாக்கொட்டை 20
மஞ்சள்
தூள் ஒரு
சிட்டிகை
பச்சை மிளகாய் /காஞ்ச சிவப்பு மிளகாய்
விரும்பும்
காரத்திற்கு ஏற்ப
எலுமிச்சம்பழம் 1
துருவிய தேங்காய் இரண்டு மேஜைக் கரண்டி
பச்சை குட மிளகாய்
1 வேறு
கலர் இருந்தாலும் பரவாயில்லை .
உப்பு தேவையான
அளவு .
தாளிக்க :
கடுகு ஒரு
டீஸ்பூன்
உளுத்தம்
பருப்பு ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் வாசனைக்கேற்ப
பொடியாக நறுக்கிய
வெங்காயம் ஒரு
மேஜைக்கரண்டி
எண்ணெய் ஒரு
டீஸ்பூன்
கறிவேப்பிலை
பத்து இலைகள்.
செய்முறை:
பலாக்கொட்டையை குக்கரில்
உப்பு
மஞ்சள்
தூள் போட்டு
வேகவைக்கவும்
.
நன்கு ஆறிய
பின் பலாக்கொட்டையின் பிரவுன்
கலர் தோல்
போகும்படி
உரித்துக்கொண்டு மிக்சியில் பொடித்தால் பூ
மாதிரி பொல
பொல என வரும்..
அதைத் தனியாக ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
அடுப்பில்
வாணலியை
வைத்து
சிறிது எண்ணெய்
விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலையைத் தாளிக்க வேண்டும் .
காஞ்ச/பச்சை மிளகாயையும் நறுக்கிய
வெங்காயத்தையும்
வதக்கிப் பெருங்காயம் போட்டு லேசாக
கிளறவும் .
துருவிய தேங்காய் போட்டு வதக்கவும்
.
பொடித்த பலாக்கொட்டையையும்
சேர்த்து வதக்கவும் .
ஆறிய பின் எலுமிச்சம்பழச் சாறையும்
சேர்க்கவும் .
குடை மிளகாயைத் தனியாக பச்சைக்
கலர் மாறாத மாதிரி
வதக்கி
மேலே அலங்காரமாக வைக்கவும்.
சமையல்
ஞானம் பூஜ்யம் என்று சொல்பவர்கள்
கூடச் செய்யலாம் .
சொதப்பவே
முடியாது
அருணா இதனை எங்கள் ஊரில் பொடித்தூவல் என்று சொல்லுவதுண்டு. நினைவு படுத்திட்டீங்க. பலாக்கொட்டை சேர்த்து வைச்சு பண்ணிட வேண்டியதுதான். எங்க பாட்டிகள் வெங்காயம் சேர்க்க மாட்டாங்க. நான் சேர்ப்பேன்...அப்புறம் இதுக்குத் தேங்காய் எண்ணெய்தான் யூஸ் பண்ணுவாங்க..
ReplyDeleteஅப்பல்லாம் மிக்ஸி கிடையாதுல அதனால் உரல்ல போட்டு தட்டி பொடி பண்ணுவாங்க. பொடி பண்ண ரைம் இல்லைன்னா சும்மா தட்டி சின்ன சின்ன துண்டா இருந்தாலும் ஒகேனு செஞ்சுருவாங்க..எப்ப வாச்சும் பெரிய பலாப்பழம் 2 வந்துச்சுனா கொட்டை சேர்த்து செய்வாங்க...பெரிய கூட்டுக் குடும்பம் ஸோ கட்டுப்படியாவாதுனு கொஞ்சமா இருந்தா கூட்டுல போட்டுவிட்டுருவாங்க இல்லைனா சாம்பார்ல...
கீதா
என்பதிவு உங்களைப் பழைய நினைவுகளுடன் relate பண்ணவைத்துவிட்டது . சந்தோஷம்தான் . பழைய நினைவுகளை அசை போடுவது சுகமே
Deleteஎங்கள்(பிறந்த வீட்டில்) வீட்டில் பலா கொட்டைகளை வேக வைத்து ஒன்றிரெண்டாக நசுக்கி, பின்னர் இலுப்ப சட்டியில் கடுகு மட்டும் தாளித்து ரோஸ்டாக காரக்கறி செய்வார்கள். இப்போதெல்லாம் எங்கள் வீட்டில் பலா பழம் சாப்பிடும் ஒரே ஜீவன் நான் மட்டும்தான். எப்பவாவது நாலே நாலு பலா சுளைகள் வாங்கி சாப்பிடும் பொழுது எப்படி பொடிமாஸ் செய்வது? பழமுதிர் சோலையில் பலா கொட்டைகள் விற்கிறார்கள் என்று நினைக்கிறேன். வாங்கி ட்ரை பண்ணலாம். Seems interesting.
ReplyDeleteவருகைக்கு நன்றி .
Deleteஎனக்கும் திரும்ப ஒருக்கா செய்யணுமென்று தான் ஆசை . கிடைக்கவே இல்லை . டி. நகர் கறிகாய் மார்க்கெட்டில் கிடைக்குமா தேடித் பார்க்கணும்
சொதப்பாமல் செய்து பார்க்கிறோம்...(!)
ReplyDeleteவருகைக்கு நன்றி
Delete. செய்து பாருங்கள்
வீட்டில் செய்யச் சொல்லணும்....
ReplyDeleteவருகைக்கு நன்றி
Delete. செய்து பாருங்கள் .ரூல்ஸை அப்படியே ஃ பாலோ செய்யாட்டியும் டேஸ்ட்
வந்துடும். கவலை வேண்டாம்
நல்ல ரெசிப்பி. செய்து பார்க்க வேண்டும்!
ReplyDeleteஇனிமேல் உங்களுக்கு டெல்லியில் எங்கே பலாக்கொட்டை கிடைக்கப் போகிறது. . கிடைத்தாலும் காலையில் செய்வது ஆண்களுக்குக் கஷ்டம்
Deleteமுதல் நாளே வேகவைத்து விட்டு மிக்சிங் அடுத்த நாள் செய்யுங்கள் . துருவுவது சிரமம் என்றால் தேங்காய் ஒதுக்கிவிடலாம்
பலாக்கொட்டையை குழம்பு வைப்பார் பாஸ். எனக்குப் பிடிக்காது. இதைச் செய்து பார்க்கச் சொல்லவேண்டும்.
ReplyDeleteAll the best. செய்து பாருங்கள்
Deleteசுலபமான, அருமையான குறிப்பு!
ReplyDeleteபலாக் கொட்டையை கபேஜுடனும் உருளையுடனும் சேர்த்து மிளகூட்டல் செய்வார் என் மனைவி அடுத்த முறை பலாக் கொட்டை கிடைக்கும் போதுபொடிமாஸ் செய்து பார்க்க வேண்டும்
ReplyDelete