Friday, 17 June 2016

ரயில் பயணங்களில்




 ரயில் பயணம் என்பது எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து செய்து வருகிறேன் .

காரணம் என் அப்பா ரயில்வேயில் வேலை பார்த்தார்.

அப்போதெல்லாம்   விருத்தச்சலத்திலிருந்து சொந்த ஊரான தஞ்சைக்கு அருகே உள்ள திருக்காட்டுப் பள்ளிக்குச்  செல்லவேண்டுமானால்    திருச்சி
   சென்று   ரயில் மாறி  பூதலூர்      செல்ல வேண்டும் .
 டிரையினில் போவது என்றால் ஒரு பித்தளை கூஜா வில் தண்ணீர் ,கொறிக்க தின்பண்டங்கள் எங்க அம்மா படிக்க தமிழ் வார இதழ்கள் .


டிரையினில் ஊர் போகிறோம் என்றால் ஒரு இரண்டு நாள் முன்பே மனசில் ஏகப்பட்ட சந்தோஷம்இருக்கும் .

டிரையின் கூவு முன்பே நான் கூவி டிரையின் கிளம்பினால் நான் கூவியதை டிரைவர் கேட்டு அதனால் தான் வண்டியை ஸ்டார்ட் செய்கிறார் என்றெல்லாம் பில்டப் கொடுத்திருக்கிறேன் .
( அந்த வயதில் அப்படித்தான் நம்பினேன் ).

பெரியவர்கள்ப க்கத்தில் உட்காந்திருப்பவர்களுடன் ஏகத்துக்கும் அளவளாவி அவர்கள் குடும்ப விவகாரம் நம் குடும்ப விவகாரம்
இவைகளை ச் சொல்லிகொண்டு தான் பயணம் போகும் .

பிறகு கோவைக்கு என் சித்தப்பா வீட்டுக்குப் போகும் போது      எங்க அப்பா ஸ்வெட்டர் போட்டு விட்டு ஒரு "டவல் "லை தலையில் கட்டிவிடுவார். மற்றபடி தண்ணீர் தின்பண்டங்கள் வழக்கப்படி .


  திருச்சி  வந்த பின் அடிக்கடி ரயில் பயணங்களில் நானும் அம்புலி மாமா அந்தக் காலத்தில் அதுதான் காமிக்ஸ்கள் அவ்வளவு இல்லை .

எங்க அப்பா இங்கிலீஷ் பேப்பர் .

அம்மா தமிழ் வார இதழ்கள்

. பக்கத்தில் உள்ளவர்கள் ஆண்களாக இருந்தால் அரசியல் நாட்டு நடப்பு பிரிட்டிஷ் காரன் காலத்தில் எப்படி எல்லாம் ஒரு சிஸ்டமேடிக் ஆக இருந்தது இப்போ நிலவரம் சுத்தமாக சரியில்லை என்ற தினுசில் தான் பேச்சு போகும்


.பெண்களாக இருந்தால் சமையல் கைவேலை இவைகள் பற்றிப் பேசுவார்கள்,


 கொஞ்சம் வளர்ந்த பிறகு சென்னை  டெல்லி பம்பாய் போன்ற நீண்ட தூரம் பயணங்களின் போது நாங்களும் கொஞ்சம் வளர்ந்த படியால் சீட்டுக் கட்டு செஸ் போர்டு இவைகள்கூ ட வந்து ஒட்டிக் கொண்டன

.குழந்தைகள்  ட்ரையினுக்குள்ளேயே ஓடி விளையாடுவார்கள் .
]
  காலையில் ஆபீஸ் வேளைகளில் பெண்கள் வண்டி என்றால் ஸ்லோகங்கள் பாண்டிச்சேரி அன்னையின் மலர் போல பாடல்களையும் பாடிக்கொண்டு செல்வார்கள் .

அரக்கோணம் பக்கம் ரயிலில் செல்லும்போது ஜெயா இஞ்சினீரிங்க் கல்லூரி மாணவர்கள்  (லேடீஸ் காரெஜுக்கு அடுத்த வண்டியில் ) தாளம் விசில் இவைகளுடன் .சினிமாப் பாடல்கள் பாடிக்கொண்டே  செல்வார்கள் .

.
 பம்பாயில் சனிக்கிழமைகளில் நானும் என் கணவரும் ஊர் சுற்றிவிட்டு வி. டி ஸ்டேஷனில் ஏறும்போது (இரவு ஒன்பது ,ஒன்பதரைக்கெல்லாம் ) ஒரு குருப்பில் ஒருவர் ஒடி ரெண்டு சைடு சீட்டும் பிடித்து சீட்டு செஸ் விளையாட இடம் பிடிப்பார்


 ஆனால் இப்போது செல் ஃ போன் அதுவும் ஸ்மார்ட் ஃ போன் வந்தாலும் வந்தது


சீட்டு செஸ் போர்டு வார இதழ்கள் இவையெல்லாம் காணாமல் போன வர்கள் பட்டியலில் சேர்க்கலாம் போல ஆகிவிட்டது நிலைமை .


எல்லாமே  ஸ்மார்ட்  போனுக்குள் அடக்கம் .

குழந்தைகளும் இதற்கு அடிமை ஆகிவிட்டனர். ஸ்மார்ட் ஃ போன்  கொடுத்தால் உச்ச ஸ்தாயியில்  அழுகிற குழந்தை  கூட அழுகையை நிறுத்துகிறது.


 ஸ்மார்ட்  போன்கள்  ரொம்பத்தான் ரயில் பயணங்களை மாற்றிவிட்டது..






A

Thursday, 16 June 2016

வரலாறு திரும்புகிறது


என் சின்ன மகன் வீட்டிற்கு வந்திருக்கிறோம்.
நேற்றுத் தான்  வந்தோம்.

அவனும் அவன் கூட வேலை பார்ப்பவரும் ஒரு வீடு எடுத்துத் தங்கி இருக்கிறார்கள்
 நேற்று மட்டும் லீவு போட்டான் .
 நேற்று இருவரும் சேர்ந்து சமைத்தோம் .
 அவ்வப்போது அம்மா உனக்கு இதெல்லாம் தெரியாது என்று சொல்லும் போதும் இப்படிச் செய்யாதே அப்படிச் செய்யாதே என்று திருத்தம் சொல்லும் போது கோபம் வரவில்லை .   .மாறாக சிரிப்புதான்  வந்தது .
வீட்டில் எங்களுடன் இருக்கும் போது சொல்வான் என்னம்மா முப்பது வருடமாக சமைக்கிறாய் ஒரு அஞ்சே நிமிஷத்தில் சமையலை முடிக்கும் வழி கண்டு புடிக்கத் தெரியலே நீயெல்லாம் என்னாத்தப்  படிச்சு என்ன புண்ணியம்  என்று ரொம்பவே கலாய்ப் பான்.மேனேஜ்மேண்ட் கான்செப்ட் சரியில்லை என்பான் .
 நானும் என் அம்மாவை இது மாதிரி வயதில் கலாய்த்திருக்கிறேன்.
எல்லாத்தையும் ஒரு பாத்திரத்தில  போட்டு அடுப்பில
வெச்சா அது  பாட்டுக்க  வெந்துடுது ".நாம அதுக்குன்னு தனியா EFFORT எதுவும் எடுக்கலியே  இதுக்குப் போய் அலட்டிக்கலாமா " ( அப்போது அந்தப் பாட்டு ரஜனி பாடுவது ரொம்பப் பிரபலம் ) "என்னம்மா பொல்லாத சமையல் "என்று பாடி  வேறு கலாய்ப்பேன் .


இன்று அவன் ஆபீஸ் போய்விட்டான் .

அடுப்பு ஆன் பண்ணவது புரியவில்லை ..

ஃ போன்  பண்ணிக் கேட்டேன் .

 இரண்டு மணிக்கொரு தரம் வாட்ஸ் அப்பில் மெசெஜு அனுப்புகிறான் ..ஒன்னும் பிரச்னை இல்லையேன்னு .

இரண்டு குழந்தைகளும் சிறுவர்களாக இருந்தபோது  வேலைக்காரர்கள் அல்லது பெரியவர்கள் இல்லாதபோதும்   கொஞ்சம் வளர்ந்த பின் சனிக்கிழமைகளிலும்   (எங்களுக்கு அரை நாள் வேலை மட்டுமே)அவர்கள் வீட்டில் தனியாக இருப்பார்கள்.
பக்கத்து வீட்டில் எதிர்த்த வீட்டில் எல்லாம் சொல்லி விட்டு ஆபீஸ் போயிருக்கிறோம்.. அவர்களும் படு  சூட்டிகை .
 யாருக்கும் கதவையே திறக்க மாட்டார்கள் .
வீட்டை விட்டும் வெளியே வரமாட்டார்கள்.
   . கணவருக்கு ஆபீஸ் மூணு கிலோ மீட்டர் தான் .
எனக்குத்தான் எட்டு கிலோ மீட்டர் .
மதியம் வீட்டுக்கு என் கணவர் வருவார் . 
நாங்கள் அடிக்கடி வீட்டிற்கு ஃ போன் பண்ணுவோம்.
அதையே இப்போது அவன் பண்ணுகிறான் .
 நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொள்கிறேன்.
 இதுதான் சரித்திரம் திரும்புகிறது என்பதோ ?

Thursday, 9 June 2016

கனடா விஜயம்


 சென்ற மாதம்  13 ம் தேதி அன்று  மாண்ட்ரியலில் என் மருமகளுடன் வசிக்கும் எனது மகன் வீட்டிற்கு நானும் என் கணவரும் வந்தோம் . இரண்டு வாரங்கள் வார விடுமுறையில் ஊர் சுற்றினோம் . பிறகு ஊருக்கு  உள்ளேயே  பல கடைகள்  இடங்கள் போனோம் .  மாண்ட் ராயல் எனப்படும் ஒரு  சிறிய மலை ஒன்றிற்கு  நாங்கள் சென்றோம் .

 அதன் முன்னால் உள்ள ஒரு பெரிய சிலை இது . மக்கள் இந்த ஏரியாவைச் சுற்றியும் நடக்கிறார்கள் .


மலை மேலே எல்லோரும் ஏறிப் போகலாம் என்று என் மகன் சொன்னான் .  மாட்டேன் என்று நான்சொ ல்லிவிட்டேன் . அவனுக்கு மலை ஏறுவதில் ஆசை  உண்டு . இந்தியாவில் இருந்த போதே பல மலைகளில் ஏறிய அனுபவம் உண்டு . ஹைதராபாத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவன் mountaineering கிளப் மூலம் மலையேறுவது 
  பற்றிய ஃ போட்டோக்கள்  ஹிந்து பத்திரிகையில் வந்தது . ஆனால் அவன் கங்கோத்ரியிலிருந்து  கிளம்பி களந்திகால்  என்ற  இடத்திற்குச்  சென்ற போது அவன் திரும்பி வரும்  வரை  இரவுகளில்  நான் தூக்கம் வராமல் தவித்தது எனக்குத் தான் தெரியும் .


மலையைச் சுற்றிஇருந்த நடை பாதையில்  நான், என் மருமகள்  என் மகன் மற்றும்   கணவர் கூட  நடந்த போது எதோ ஏ. சி  .ரூமில் நடப்பது போல இருந்தது. 
சுற்றிவர  உயரமான மரங்களும் சில பறவைகளும் சூழ நடை பாதையே ரொம்ப ரம்மியமாக ........

உடலில் அசதி இல்லை .
ஆனால் கால் வலிக்க ஆரம்பித்து விட்டது.
கோடை நாள் என்றாலும் வெயிலே தெரியவே இல்லை .
வெப்ப நிலை  .11 டிகிரி முதல் 17 க்குள் தான் இருக்கிறது . நான் டெல்லி ஹைதராபாத் போன்ற இடங்களில்  வசித்திருந்தாலும் இந்தக் குளிர் கொஞ்சம் ஓவராகவே இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது .இங்கு உள்ள வானிலை மையம்  வெப்ப நிலையைத் தவறாகச்  (அதாவது  4 அல்லது 5 டிகிரி வெப்பநிலையைக் 11-17 என்று கூடுதலாக ) சொல்வது போல உள்ளது . .சொல்லப் போனால் குளிர் காலத்தையே இங்கு இருக்கும் மக்கள் எல்லாரும் தப்பிதமாக கோடை என்று சொல்வதாக என் நினைத்துக் கொண்டிருந்தேன்.
 .
ஆனால் நான் சொல்வதை  யார் ஒத்துக் கொள்வார்கள் என்றெல்லாம் மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருந்தேன்.

நிஜத்தில் வானிலை மையத்தில் அவர்கள் உண்மை வெப்ப நிலை ,மற்றும் நாம் உணரக் கூடும் வெப்ப நிலை என்று தனித் தனியே அறிவிக்கிறார்கள்.

மலையின்முழு நடைபாதையையும் நாங்கள் நடக்கவில்லை .

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடந்து விட்ட படியால்" மெக் ஹில் "பல்கலைக்கழகம் அருகே உள்ள இடத்துக்கருகே  நாங்கள் முடித்துக் கொண்டோம் . 

ஆனால் பலரும் வேக வேகமாக ஓடுகிறார்கள் ,
சிலர் சைக்கிளில் வேகமாகப் போகிறார்கள் 
அதே பாதையில் ஸ்கேட்டிங் போகிறவர்களும் உண்டு.
நடப்பவர்களில் வயதானவர்களும் அநேகம்  என்பதே என்னை  மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது . 
இதில் நான் கவனித்த ஒன்று என்னவென்றால் யாருமே கஷ்டப் பட்டுக் கொண்டு ஓடவில்லை நடக்கவில்லை .
  ஒரு சந்தோஷத்துடனேயே செய்கிறார்கள் . சென்னை நடைவாசிகளிடம் இந்த சந்தோஷம் மிஸ்ஸிங்கு

இதற்கு நானும் விதி விலக்கல்ல .
என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறேன் . நடப்பதையே ஒரு தீராத வேலை என்பது போல் தான் செய்தேன் . நடக்கும் போதே வீட்டில் அடுத்து செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றியும் ,மற்ற உப்புப் போறாத விஷயங்கள் என ,யோசனையில் முழுகி எழுந்தாலும் தீர்க்க முடியாத சமாச்சாரம்  பற்றிய  கவலையுடனுமே செய்தேன் இனி சென்னை சென்றதும் நடக்கும் போது இந்த வெட்டிக் கவலைகளையெல்லாம் விட்டொழித்து விட்டு நடையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று தீர்மானித்துள்ளேன் .

மழைக்காலத்தில் இந்த மலையைச் சுற்றிய பாதை இப்படித் தான் இருக்குமாம் . ஐஸ்  ஸ்கேட்டிங் போகிற இடமாக இது மாறிவிடுமாம்   .

  • மலை மீது ஏறிச் சென்று பார்த்தால்தான் மலையின் முழு அழகும் தெரியும் என்கிறார்கள் எல்லோரும்..கால் வலி பயத்தினால் போகவில்லை 




Saturday, 4 June 2016

ஃ பர்ஸ்ட் சாய்ஸ் லாஸ்ட் ரிசார்ட




இந்த  இரண்டு  வார்த்தைகள்  எனக்கு  மிகவும் பிடித்த வார்த்தைகள்.
ஏனெனில்நன்கு கூர்ந்து கவனித்தீர்களானால்  
இந்த  இரண்டு வார்த்தைகளில் எந்த வார்த்தை யின் GUIDANCE  படிச்  செல்கிறோமோ  அல்லது  இந்த இரண்டில்  நாம்  எதற்கு  முக்கியத்துவம் கொடுக்கிறோம்  என்பதைப்  பொறுத்துத்தான்
 நமது வாழ்க்கை வெற்றிகரமாக
அமைவதும் மற்றும் நாடுகளின் முன்னேற்றம்  அமைவதும் .
   நாடுகளுக்கிடையே யான  சண்டைகள்   ஆரம்பிக்கக் காரண மும்  பல நாடுகள்  தோல்வி  அடைவதும்  அது  அவர்களின் ஃ பர்ஸ்ட் சாய்ஸ் என்பதாலா  அல்லது  லாஸ்ட் ரிசார்ட் என்பதாலா ,என்பதைப்  பொறுத்தே .
 நெப்போலியன்  போனபார்ட்  எப்பொழுதும் ஃ பர்ஸ்ட் சாய்ஸ்  எது  என்பதில் தெளிவாக  இருந்து  போரிட்ட தருணங்களில் வெற்றியே   பெற்றார்  என்பது  எனது சொந்த நினைப்பு . (எண்ணம் ) .
 நான்   சிறு வயதில்   படித்த போதிலிருந்தே   எனக்கு  இந்த  வார்த்தை  மீது  ஒரு ஈர்ப்பு .
தீவிர சிந்தனை செய்தேன் . அந்தப் பாடத்தில் அவர் வாட்டர்லூ போரில் தோற்ற போதுஃ பர்ஸ்ட் சாய்ஸ்  என்கிற கான்செப்ட் படி போரிடவில்லையோ என்ற எண்ணம் எனக்கு இருந்தது .இங்கிலாந்தைத் தோற்கடிக்க இதை விட்டாக்கா வேறே வழியில்லேன்னு போட்ட சண்டை அது.


ஆனால் நான் சொன்னால் யார் ஏற்றுக்கொள்வார்கள் என்று யாரிடமும் சொல்லவில்லை . (இப்பயும் யாரும் கேக்கமாட்டாங்க  அது வேறே விஷயம் )


 பிறகு வாழ்க்கையில் பல வித அனுபவங்கள் பாடங்கள் எல்லாம் கற்ற பின் நாம  ஒரு காரியத்தை வெற்றிகரமாக முடிக்கணுமின்னாக்க  நல்ல யோசிச்சு எது ஃ பர்ஸ்ட் சாய்ஸ் அப்படீங்கரதிலே ஒரு தெளிவு  ...தெளிவு என்றால் மேம்போக்கான தெளிவு இல்லை . தீரத் தெளிவு இருக்கணும் .அப்படி இருந்து செய்கிற காரியங்களுக்கு வெற்றி 99% உறுதி .


வேறே வழியே இல்ல என்று நீங்கள் ஆரம்பித்த காரியங்கள் எல்லாமே தோல்வி ஆகாது என்றாலும் வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் கொஞ்சம் கம்மி .
 பிரிட்டிஷ்  அரசு நம் நாட்டை விட்டுப் போனது முதல் நமது 2016 தேர்தல்  வரை  நன்கு உற்று நோக்கிப் பாருங்கள் புரியும்

உங்களது சொந்த  வாழ்க்கையில் நீங்கள் இதுதான் என் முதல் சாய்ஸ்  என்று தெரிந்தெடுத்த படிகள் அதில் நீங்கள் அடைந்த வெற்றி 
வேறே வழி இல்லாமால் தேர்ந்தெடுத்த விவகாரங்களில்  அவ்வளவு மகிழ்ச்சி இல்லாமல் இருப்பது எல்லாம் புரியும் .

நிறையப் பேரிடம்இது பற்றிக் கேட்டேன்  சர்வே ஷீட் எல்லாம் கொடுக்கவில்லை .
சும்மா காஷுவலாக விசாரித்த போது 35 மற்றும்  40 வயதுக்கு மேற்பட்டவர்கள்  ஆமாம் என்று  ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் ,   எனது மாணவர்களிடம் கேட்டபோது இல்லை ஃ பர்ஸ்ட் சாய்ஸ் பல சமயங்களில்  காலை வாரிடுச்சு, மேடம் ஆனா  வேறே வழியே இல்லன்னு ஆரம்பிச்ச  புராஜெக்ட் பயங்கர சக்சஸ் என்றார்கள் .

உங்கள் அனுபவம் எப்படி  ?

Friday, 3 June 2016

சீனாவில் ஆர்கிடேக்சருக்கு சுக்கிர திசை . கூடவே குரு பார்வையும் போலே .

 .
என்  மகனின்போஸ்ட்  கிராஜுவேஷன்  பட்டமளிப்பு விழாவிற்காகக்
 கனடா  வந்துள்ள நான் அந்த விழாவில் கலந்து கொண்டேன்.

அதில்  நான்  கவனித்த  ஒன்று  கிராஜுவேஷன்  லெவலில்  மட்டும்  சீன தேசத்தைச்  சேர்ந்தவர்கள்  ஒரு ஆறு ,ஏழு பேர் டிஸ்டிங்ஷன்வாங்கினார்கள்
(அந்தப் பிரிவில் பட்டம் வாங்கியவர்கள் 39 பேர் ) .

வேறு  எந்தப் பிரிவிலும்  எந்த ஒரு  குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவர்களும் இப்படி  அதிக அளவில் தனிப் பட்ட முறையில் வாங்கவில்லை .

இது  எதனால் என்று என் மகனிடம் கேட்டேன்.

இதை  நானே கவனித்ததில்லை.உன்  கண்ணுக்கு  மட்டும்  எப்படித் தெரிஞ்சது எதிர்க் கேள்வி வந்தது 
சரி இவன்கிட்டே பேசிப் பிரயோஜனமில்லே .
கூகிள் மாமாவை அணுகினேன்.
அட சீனர்கள் லண்டனிலும் கட்டிடக் கலை சம்பந்தமான படிப்பு படிப்பதில் ஆர்வம்  காட்டி வருகிறார் களாம். சமீபத்தில் சீன மாணாக்கர்களின் எண்ணிக்கை  இரட்டிப் பாக உயர்ந்திருக்கிறதாம்.

எனக்கு சீனர்களின்  நாகரீகம் கலாச்சாரம்  இவைகளில் ஒரு அலாதிப் பிரியம் உண்டு .
நான் சுத்த சைவம் என்றாலும் கூட அவர்கள் சாப்பிடும் பாம்பு  பூச்சி வகையறாக்கள்  சேர்க்கப் பட்ட சமையல்  குறிப்புகள்  பிடிக்கும் .
வாட்சப்பில் எனது நெருங்கிய உறவினர்களுக்கு அதன் சமையல் குறிப்புகளை அனுப்பிக் கடுப்பேத்துவதில்  சுகமோ சுகம்.

தவிர என் ஜப்பானியத் தோழி சொல்வாள்.
நாம் ஒரு உபகரணம் அல்லது மெஷின் அல்லது பொருளை இப்படிச்  செய்யலாமா என்று மனதளவில் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அதே மாடலில் அவர்கள் செய்து மார்கெட்டில் விற்றுக் கொண்டிருப்பார்கள் என்பாள்.
மதுரைத் தமிழில் சொன்னால் நாம  மல்லாக்கப் படுத்துக் கிட்டு விட்டத்தைப் பாத்துகிட்டிருக்கும்போது நம்ம விட்டத்துக்கு மேலேயே   கட்டடம் கட்டிடுவானுவ..

தவிர எந்த டெக்னாலஜியையும் எப்படியோ காப்பி அடிச்சு கொறஞ்ச விலையிலே சாமானுகளப் பண்ணுவதி ல்  அவங்கள அடிச்சுக்க முடியாது.

சரி ஆனது ஆகட்டும் என்று ஒரு சீன மாணவரிடம் இது பற்றிக் கேட்டேன்.அவர் சொன்னது ஒரு நாடு முன்னேறனும் என்றால் முதலில் ஊரும் நாடும் அழகான கற்பனைத்திறன் கொண்ட வாழ வசதியான  கட்டிடங்கள்   கொண்டவையாக இருக்கணும் அதனால் தான் என்றார்.
ஆஹா !என்ன ஒரு தேசிய சிந்தனை.




Tuesday, 17 May 2016

கியோமசாவின் அதிர்ஷ்டக் கிணறு

திரு சுப்புத் தாத்தா அவர்கள் ஜப்பானிய நாட்டின் சமயம் பற்றி எழுதுமாறு கேட்டதின் படி இதை எழு துகிறேன்.

அதற்கு முன் சமயம் ஆன்மிகம் இவற்றுடன் எனது ஈடுபாடு பற்றி சொல்லிவிடுகிறேன்

 சிறு வயதிலிருந்து இவைதான் கடவுள்கள் என்று எனக்குக் காண்பிக்கப் பட்ட தெய்வங்களை மட்டுமே நான் கும்பிட்டு வந்தேன் .

இங்கிருந்து வடக்கே போன பின் பளிங்குக் கற்களில் பள பள என இருந்த கடவுள்களைப் பார்த்தபின் அவைகளைக் கடவுளாக நினைக்க ,பக்தி வரக் கொஞ்சம் நாள் பிடித்தது என்னவோ மறுக்க முடியாத உண்மை 


 . தெற்கே வந்தபின் அதே மாதிரித்தான்.

 ஆபீசில் கூட வேலை பார்த்த மற்றவர்களால் சீக்கிய மதம் புத்த மதம் ஜைன மதம் போன்ற இவைகளிலும் கொஞ்சம் தெரிந்து கொண்டேன்.

 பிறகு மற்ற ஆசிய மொழியில் ஈடு பாடுவந்தபின் குவான் இன் தெய்வம் பற்றிக் கேள்விப் பட்டேன். ரெய்கி கொஞ்சம் படித்தேன்.


 ஆனால் தியானம் இன்னும் கை கூடவில்லை . (தியானத்தில் பிரஷர் குக்கர் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது .


 எனவே யோகாவும் .... ம்ம் ... அதே தான். ) ;

 நடைப் பயிற்சி மட்டுமே 80% சக்சஸ் .

 குவான் இன் தேவியின் படத்தைக் காப்பி செய்து சிலருக்குக் கொடுத்தேன் அவர்கள் தனக்கு நல்ல விஷயங்கள் பல நடந்ததாகச் சொன்னார்கள் .

இப்பொழுதும் ஃ பேஸ் புக்கில் நிச்சிரென் புத்த மதம் என்கிற குழுமத்தில் உள்ளேன் "நம் ம்யொஹொரெங்கே கியோ " என்கிற மந்திரத்தை தனக்காக வேண்டி பிரார்த்திப்பவர்களுக்கு நானும் எழு தி ஒரு பத்து தடவை சொல்லுவேன்

. நிறையப் பேர் பிரார்த்தனைக்கு நன்றி என்று கூறுவார்கள் . எங்கோ முகம் தெரியாத ஒருவருக்குக் கஷ்டத்திற்கு நம்மால் முடிந்தது என்று செய்கிறேன்


.மற்ற படி தீவிர பக்தி என்றால் இல்லை .
 நான் வாக் போகும் போதேபிரார்த்தனையை முடித்துவிடுவேன்

சரி விஷயத்துக்கு வருவோம் .

 ஷிண்டோ ( ஜப்பானில் ஒரு மதம் ) மதத்தில் கியோ மசா கிணறு ஒன்று உள்ளது .அந்தக் கிணறு   தோக்கியோவில் மெய்ஜி ஜிங்கு என்ற இடத்தில் உள்ள கோயிலில் உள்ளது .

இது மிகவும் சக்தி வாய்ந்த கிணறாகக்  கருதப் படுகிறது. நிறைய நேர் மறை சக்தியினைத் தன் உள்ளே கொண்டுள்ள iஇடமாகக் கருதப் படுகிறது  (power spot  having abundant positive energy )


இந்தக் கிணற்றின் உள்ளே இருந்து வருடம் முழுக்க சுத்த மான நீர் கொப்புளித்து வருகிறது.இந்த நீரின் வெப்ப நிலையானது கிட்டத்தட்ட 15 டிகிரி ( கொஞ்சம் முன்னே பின்னே போகும் )அளவில் உள்ளது .ஒரு நிமிடத்திற்கு 60 லிட்டர் அளவு கொப்புளித்து வருவதாகக் கூறுகிறார்கள் .


 இந்தக் கிணற்றின் ஃ போட்டோவை எடுத்து நமது செல் ஃ போனில் ஸ்கிரீனில் வைத்துக் கொண்டால்அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம் .சொல்கிறார்கள் .
 இது பற்றி என்னுடன் பணி புரிந்த ஜப்பானிய நாட்டுத் தோழி அறிமுகம் செய்து வைத்தாள்.


கோயிலுக்கு வருபவர்கள் இந்தக் கிணற்றின் முன் நின்று ஃ போட்டோ எடுக்கக் க்யூவில் நிற்கிறார்கள் ஆனால் நான் இன்னும் வைத்துக் கொள்ளவில்லை . காரணம் நான் டௌன் லோடு செய்து அதை மெயின் ஸ்கிரீனில் வைத்துக் கொள்ளும் நகாசு வேலை செய்ய வராது என்று நினைப் பதினால் தான்

. தவிர மற்ற எல்லா தெய்வங்களின் படம் ஸ்லோகம் இவற்றை விட நான் இந்த க்யோமசா  கிணற்றின்  ஃ போட்டோ பற்றி எழுதக் காரணம் ஒன்று மற்றவர்களுக்கு அதிர்ஷ்டம் வந்தால் சந்தோஷம் ,

தவிர இதை செல் ஃ போனில் மேல் ஸ்கிரீனில் வைத்துக் கொள்வது செயற்கு எளிதென்பதால். 

Sunday, 1 May 2016

தமிழ் எழுத்துக்களில் நியுமராலஜி இல்லையா ?



 பொதுவாக டி .வி  பார்ப்பதில் அவ்வளவு இஷ்டம் இருப்பதில்லை .

  காமெடி சானல்கள்  மட்டுமே  பார்ப்பேன் . 

சில சமயம் தெலுகு இந்தி இவற்றில் உள்ள ஜோசியம் , 
எண் கணிதம், பரிகாரம்   
போன்றவற்றையும் பார்ப்பேன் .

  என்னதான் சொல்லுகிறார்கள்  என்று பார்ப்பதற்காக .
அதில் நம்பிக்கை இல்லை .

நியுமராலஜி என்பது எனக்குத் தெரிந்த  வரை எல்லா மாநிலங்களிலும் 

ஒருவரின் பெயரை இங்கிலீஷில் எழுதி அந்த ஆங்கில எழுத்துக்களுக்கு

  ஒரு மதிப்பு  கொடுக்கிறார்கள்  .

பின் அவற்றின் கூட்டுத் தொகையைக் குறித்துக் கொள்கிறார்கள்.

. பிறகு அவரின் பிறந்த தேதி மாதம் வருடம் 

இவைகளைக் கூட்டி  வரும்  எண்ணும் பேரின் எண்ணும் 

ஒத்துப் போகிறதா என்று பார்க்கிறார்கள்.

 ஜப்பானியர்களும் தங்களது பிறந்த தேதியை  

( ஜப்பானியர்களின் வருடங்கள் அந்த அரசர் அரியணை ஏறும் நாளிலிருந்து கணக்கிடப் படும் . அவர்  இறக்கும் வரை அந்த அரசர் பெயரின் காலமாகக் கருதப்பட்டு 1,2 என்று கணக்கிடப் படும் ) 

ஆங்கில வருடத்திற்கு மாற்றுகிறார்கள் .

 அதன் பிறகு அப்படியே கூட்டப் பட்டு  

அதைப் பத்துக்குள்  நம்மளை மாதிரி சுருக்கி 

அதுக்கு அவர்கள் பலன் சொல்கிறார்கள் . 

(நீ இப்படித்தான் யார் பேச்சும் கேக்க மாட்டே , அதாகப் பட்டது சுய சிந்தனையில் தான் எதையும் செய்வாய் என்பதன் பொருள் .... )

  கிட்டத்தட்ட நம்ம ஊர் நுயுமராலஜிஸ்ட்கள்  சொல்ற

அதே வார்த்தைகள் !

அதே தொனி!

 ஆனா அவங்க அதோட நிறுத்திக் கிட்டாங்க.
 பேர் பக்கம் போய்  வெளாட்டு வெச்சுக்கல .

 சீனர்கள் லோ  ஷு கிரிட்( lo  shu  grid )என்ற சார்ட் உபயோகிக்கிறார்கள் .
இங்கேயும் பேர் மாத்தற  விவகாரம் கிடையாது .

  1 லிருந்து 9 வரை உள்ள எண்களை நிலம் நீர் உலோகம் மரம் நெருப்பு என்ற ஐந்து விஷயங்களுக்குள்  ( 5 elements ) அடக்கி விடுகிறார்கள்.
(0வுக்கு மதிப்பு கிடையாது போல ). 
உதாரணமாக ;எண்கள் 2&5  நிலம்
7&6 உலோகம்
இது மாதிரி . 
இந்த ஐந்தும் ஒரு மனிதனின் பிறந்த எண்ணில் கிட்டத்தட்ட 
சமமாக ( balanced )இருந்தால் நல்லதாம் . 

சிலருக்கு நிலம் aspect  பலமாக இருந்தால் என்ன பலன் ,
நீர் aspect பலமாக இருந்தால் என்ன பலன்  
என்றெல்லாம் சொல்கிறார்கள் .

தவிரவும் வழக்கமான 1 முதல் 9 வரையிலான எண்களுக்குரிய  பலன்களும் உண்டு .

 நாம தான் நம்ம பேரை  இங்கிலீஷில் கன்வெர்ட் பண்ணி  ......... அப்புறம் மாச்சிங்    பேர் மாத்தற  விவகாரமெல்லாம் 


என்னோட சந்தேகமெல்லாம் ஏன் பேரை எல்லாரும் இந்தியாவில் 
இங்கிலீஷில் கன்வெர்ட் பண்ணி அதுக்கு வேல்யு  பார்க்கிறார்கள்  என்பதுதான்.

 தமிழ் இந்தி தெலுங்கு போன்ற மொழியில் உள்ள எழுத்துக்களுக்கு வேல்யு   கிடையாதா ?
இல்ல தமிழ் தெலுங்கு இந்தி யில்  யாருமே பேர் எழுத மாட்டாங்களா ?
 அல்லது 247 எழுத்துக் களுக்கும் மதிப்பு எண் கொடுப்பது சிரமமா?

 புரியவில்லை .

யாராவது ஹிந்தி பெங்காலி போன்ற இந்திய மொழி எழுத்துக்களுக்கு எண் 

மதிப்பு( Numerical value ) கொடுத்து நியூமராலஜி சொல்கிறார்களா ?

தெரிந்தால் சொல்லவும் .

இல்லாவிட்டால் இந்தியாவிலேயே முதன் முறையாக
 தமிழ் நியுமரலாஜி என்று ஆரம்பித்து patent வாங்கி விடலாமே !