Friday 22 December 2017

அமெரிக்காவில் செய்த புளியோதரையால் இந்தியாவில் கடும் பூகம்பம்


 தலைப்பு ஏதோ வெகுஜன நாளிதழ்களில் வரும் தலைப்பு  போல் இருக்கிறதா?

ஆனால் உண்மை .

நான் எப்போதுமே சொல்வேன் ,

மாமியார் மருமகள் ,கணவன் மனைவி சண்டையை ஆரம்பமாகும்  லொகேஷன்களில் மிகுந்த முக்கியத்துவம் வகிப்பது சமையலறை .

நிஜமாகவே நடந்த இந்தக் கதையைக் கேட்டால் இது 1௦௦/1௦௦ உண்மை என்று ஒத்துக்கொள்வீர்கள் .

என் நெருங்கிய தோழி ஒருவரின் தங்கை அமெரிக்க மாப்பிள்ளையைக் கலியாணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார் .

முதல் நாள் செய்த சாதம் மிஞ்சி விடவே அதை வீணாக்க மனமில்லாமல் புளியோதரை   ஆகஉருமாற்றிக்  கணவருக்குப் பரிமாறி இருக்கிறார் .


அன்று சுக்கிரன் புதன் குரு போன்ற கிரகங்கள் எங்கோ  வேறு வேலையாய்ப்  போய் விட சனி பயங்கர உக்கிரப் பார்வை பார்த்திருக்கணும் போல .

கணவருக்கும் புளியோதரைக்கும் என்ன வாய்க்கால் தகராறோ ....அது இந்த மனைவிக்குத் தெரியவில்லை .


கணவன்  இதை வைத்து அமெரிக்காவில் ஒரு குரு க்ஷேத்ரம்  செட் போட்டுவிட்டார்.

பொதுவாகப் பெண்களும் சரி ஆண்களும் சரி கல்யாணம் வரை அம்மா பேச்சைக் கேட்கமாட்டார்கள்
.ஆனால் கல்யாணம் ஆனா உடனே  ஒரு" குபீர் " பாசம் வரும் பாருங்கள் . இது என்ன மாதிரியான டிசைனோ என்று எண்ணத்தோன்றும்.

 ஒரு இருபது வருடத்திற்கும் மேலாக அம்மாவுடன் இருந்திருந்தாலும் அம்மாவுக்கு உதவியாக அடுப்பங்கரை பக்கம் எட்டிக் கூடப்  பாக்காத இவர்கள் ,கல்யாணம்  ஆனபின்னே   "எங்க  அம்மா  எங்க  அம்மா "
என்கிற அலப்பறை ஓவராக இருக்கும்.

இதே போல்  இந்தப் பெண்ணும் எங்க வீட்டிலே இப்படித்தான் என்று பாட

இந்தப் பையனோ  எங்க வீட்டிலே எல்லாம் பழசெல்லாம் சாப்பிடவே மாட்டோம் என்று சொல்ல .....


 இது இத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை  பன்னாட்டுத்  தகவல் தொழில் நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி ...  இருவருமே     இதை இந்தியாவில்இருக்கும்   தத்தம் தாய்மார்களுக்குத் தெரிவித்திருக்கிறார்கள் . (ஏனோ இந்த மேட்டர்களின் first information  ரிப்போர்ட் கள் தந்தை மார்களுக்குப் போவதில்லை ,)

பிறகென்ன இரு பெண் சம்பந்திமார்களும்  இந்த விஷயம் பற்றிக் கொதித்துக்  கொந்தளித்து   எழ .....

கிட்டத்தட்ட ஒரு பெரிய பூகம்பமே .......

ஒரு புளியோதரையால்    வாக்கு வாதங்கள்  ......பல மணி நேரங்கள்.

 ஹி    ஹி ஜியோவுக்கு நன்றி!

கடைசியில்  பெண் வீட்டில் இது வேறு   ஒன்றுமில்லை       சனிப் பெயர்ச்சியின் எபெ ஃ க்ட்  என்று  சொல்லி எண்டு கார்டு போட்டு
முடித்திருக்கிறார்கள் மேட்டரை.


அடுத்த பரபரப்பு வரை  இந்த மேட்டர் உறவினர்கள்  மற்றும்  அவலுக்கு ஏங்கும்  வெறும்  வாய்களால்  அலசப்படும் என்பதில் ஐயமில்லை .

இன்னும் புது லேப்டாப் பழக்கவரவில்லை  . ஸ்டார்ட் செய்வதிலும் கொஞ்சம் சந்தேகங்கள் உள்ளன
எனவே காமெண்ட் போடவில்லை .

18 comments:

  1. சனிப்பெயர்ச்சி இப்படி எல்லாம் விளையாடுமா ?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.
      சனிப் பெயர்ச்சி பலனில் போப் பாருங்கள் .ஏராளமான கதை கள் சொல்கிறார்கள்

      Delete

  2. உப்புமாவினால்தான் பிரச்சனை வரும் என நினத்து இருந்தேன் ஆனால் இப்ப புளியோதரையினால் கூடவா வருகிறது கலிகாலமாகிடுச்சு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.
      உப்புமாவிற்கு ஒரு காலம் வந்தால் புளியோதரைக்கு ஒரு காலம் வராதா என்ன

      Delete
  3. ஹா ஹா ஹா அ அ (அபயா அருணா ஷார்ட் ஃபார்ம்)!!!

    நானும் அடிக்கடிச் சொல்லுவது என் சர்க்கிளில்... "கிச்சனில்தான் பொலிட்டிக்ஸே ஆரம்பம்னு"....எங்க வீடு உங்க வீடுனு தொடங்கிடுச்சுனா...பத்து தலைமுறைய இழுப்பாங்க ......பஞ்சாயத்து அது இதுனு போகும் பாருங்க...

    எங்க வீட்டுலயும் இதே இந்தப் புளியோதரைக்கான புளிக்காச்சல் ஒரு காச்சு காச்சிச்சுப்பாருங்க....அது சத்தியமா உறவையே கூடவா பிரிக்கும்னு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு....நான் ரொம்ப ஓபன் மைண்டட்..யார் நல்லா செஞ்சாலும் பாராட்டி கத்துக்கவும் செய்வேன்....ஆனா நான் செஞ்ச புளிக்காச்சல் நல்லாருக்குனு தெரியாம இத்தனைக்கும் கம்பாரிஸன் கூட இல்லை....நான் செஞ்சது நல்லாருக்குனு தெரியாம ஒருத்தர் சொலல்ப் போக.....நான் அப்பாவியாக ஒன்னுமே புரியாம விழிக்க...மெதுவா புரிஞ்சுச்சு நல்லாருக்குனு சொன்னது ஒரு நபருக்கு அது ஏதோ தவறாகிட...போயே போச்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.
      பல பெண்கள் சமையலை வைத்தே சதுரங்கம் விளையாடுவது உண்டு

      Delete
  4. இதுதான் கேயோட்டிக் தியரி அருணா..!!!!!

    கீதா

    ReplyDelete
  5. வாய்விட்டுச் சிரித்தேன் வாருங்கள் வலைத்தளத்திற்கு நேரம் கிடைக்கும் போது

    ReplyDelete
  6. புளியோதரையால் பூகம்பம்! :) சின்ன விஷயம் எவ்வளவு பெரிய பிரச்சனை ஆகிவிட்டது!

    ReplyDelete
  7. நேரக்கோளாறுதான்! வாக்குவாதத்தோடு நின்றவரை சந்தோஷம்.

    ReplyDelete
  8. //அடுத்த பரபரப்பு வரை இந்த மேட்டர் உறவினர்கள் மற்றும் அவலுக்கு ஏங்கும் வெறும் வாய்களால் அலசப்படும் என்பதில் ஐயமில்லை .//
    இது வெறும் வார்த்தையில்லை. சத்தியம்.
    சம்பந்தப்பட்டவர்கள் சமாதானமானாலும், உறவினர்கள் ஓயமாட்டார்கள்.. எப்பல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்பலாம் ஊதி விட மறக்கவே மாட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.
      இதைவிடக் கொடூரமாக ஊதுவார்கள்

      Delete
  9. குடும்பம் என்றால் என்ன என்று தெரியாமல் குடும்பம் நடத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். அன்பும், அனுசரணையும் அதில் முக்கியமான மூலப்பொருட்கள் என்றெல்லாம் சொல்லிக்கொடுப்பார் யாருமில்லை. ஜியோ 4G ஏனோ இதற்குப் பயன்படுவதில்லை என்றும் கேள்வி.

    புரிதலுக்குப் பதிலாக அங்கே புளியோதரை வந்தாலும், புலாவ் வந்தாலும் பிரயோஜனம் ஏதுமில்லை. அமெரிக்காவும், இந்தியாவும் இதனை ஜல்தியாகத் தெரிந்துகொள்வது நல்லது

    ReplyDelete