Monday 11 December 2017

கடவுளாகி விட்டஅதிர்ஷ்டப் பூனை



மனேகி நெக்கோ என்பது ஜப்பானிய அதிர்ஷ்டத்தை
வரவழைக்கும் பூனை பொம்மை ஆகும்

என்னிடம்  எனது மாணவர்கள் அளித்த  இரண்டு பொம்மைகள் உள்ளன.

ஒரு நாள் கடையில் இந்தப் பூனை விற்பனைக்கு இருப்பதைப் பார்த்த நான் ஒரு இரன்டு பொம்மைகள் வாங்கி வந்தேன் .

ஒன்றை  என் மகன் போலவே நினைத்துக் கொண்டிருக்கும்
என் மகனின் ஃ பிரண்டுக்குக்  கொடுத்தேன் .



அவனும் அதை  வாங்கிக் கொண்டுபோய் ஆபீசில் வைக்க அங்கே இருந்த ஒரு பஞ்சாபிப் பெண்மணி அந்தப் பூனை மேல் பக்தி ஆகி அதற்குப் பூ  ஊதுவத்தி முதலியவை ஏற்றிவைக்கப் பட்டு தினமும் பலராலும்(சின்ன ஆபீஸென்றாலும் ) வழிபடப் பட்டு வந்ததாம்.


 திடீரென ஒரு நாள் அந்தப் பஞ்சாபிப் பெண்மணிக்கு ஜுரம் வந்து டாக்டரிடம் போனால் அவர் அந்த ஜுரத்திற்கு "டெங்கு "என்று பெயரிட்டு நிலவேம்புக் கஷாயம் கொடுத்தது  மற்ற சிகிச்சையும் அளித்திருக்கிறார்.


உடனே அந்தப் பெண்மணி  மெர்சலாகி இந்த "டெங்கு "விற்கு பூனைதான் முழுக்கக்   காரணம் என்று நினைத்து நொந்து விட்டாளாம்.

பூனை கூட டூ  விடவேண்டியது என்றே தீர்மானித்து விட்டாளாம்.

 ஒரு வாரம் ஆபீஸ் போகாமல் முடங்கி விட்ட வாழ்க்கை .

மறுபடியும்      ஆபீஸ் போனால் ஒரு இன்ப அதிர்ச்சி .

கிடைப்பதே  கடினம் என்று நினைத்திருந்த   நோயிடாவிற்கான  டிரான்ஸ்பர் ஆர்டர்  கையில் .


ட்ரான்ஸ்பர்  கிடைக்க முக்கிய காரணமே இந்தப் பூனையால் தான் என்கிற  "தெளிவு " வந்து பூனை மீதிருந்த கோபம் போய்  பக்தி  Returns .

"டெங்கு "விற்கும் பூனைக்கும் என்ன சம்பந்தம் , கொசு வால் தானே  டெங்கு  ?
என்று மனது சமாதானமாகி  பூனைக்கு மறுபடியும்  பூ, ஊதுவத்தி ,இப்பொழுது  additional ஆக பக்தர்களுக்குப்  பிரசாதம்  வேறு வழங்கப் படுகிறது..

.
மனேகி நெக்கோ கஷ்டம் கொடுக்கலாம் ,ஆனால் கைவிட்டு விடாது என்கிற பன்ச் டயலாக் ஆபீசில்  வைரலாக ......

 இப்பொழுது ஆன்சைட் வேண்டுபவர்கள் ,ட்ரான்ஸ்பர்  வேண்டுபவர்கள் எல்லாம் பூனை இடம்தான்  வேண்டுகிறார்களாம் .

கடையில் அட்டை டப்பாவிற்குள் இருந்த பூனை தானும் கடவுளாக ஆவோம் என்று நினைத்துக் கூட்டப்ப பார்த்திருக்காது.

 குருவும் சுக்கிரனும் சேர்ந்து லுக்  விடுகிறார்கள் போலே .

8 comments:

  1. எனக்கு ஒரு பூனை அனுப்பி வையுங்களேன்.

    ReplyDelete
  2. காக்கை உட்கார பனம்பழம்!

    ReplyDelete
  3. ஹா ஹா ஹா...பூனை பொம்மைக்கு அடிச்ச லாட்டரி பம்பர்!! வந்த வாழ்வு. இப்படிக் கொஞ்ச நாள் முன்பு தொப்பைத் தாத்தா அதான் லாஃபிங்க் புத்தா இப்ப அதைப் பத்தி அவ்வளவா பேச்சே இல்லை....ஃஃபெங்க் ஷுயி...னு வேற...இப்ப பொம்மைப் பூனை...

    கீதா

    ReplyDelete
  4. எல்லாவற்றிற்கும் காரணம் மனதுதான்.

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி

    ReplyDelete