Thursday 3 August 2017

பிக் பாஸ்


 யாருக்குத்தான்   பிக் பாஸாக   இருக்கப் பிடிக்காது ?

நாமெல்லாருமே  நம்மை நாமே தகுதி இருக்கோ இல்லையோ   வாழ்க்கையின்   ஒவ்வொரு   தருணங்களில்   பிக் பாஸாகத்  தான் நினைத்திருக்கிறோம்
( டயலாக்குகள் யாராலும் எழுதிக் கொடுக்கப் படவில்லை , என்பது ஒரு  ஸ்பெஷல் plus)

பேச்சு   வராத    குழந்தை   கூட   தனக்கு   எல்லாம்   தெரியும்   போ  என்கிற தோரணையில்   செல் போனில்   விளையாடுகிறது ,  
டி .வி யில் சேனலை மாற்றுகிறது
  பேப்பரில் எழுதுகிறது .

    டீன் ஏஜ்   வந்துவிட்டால்   போறும்   இந்தக்   குழந்தைகள் பெற்றோரிடம்   உனக்கு   ஒண்ணுமே   தெரியல ... எப்படித்தான் இத்தனை வருஷம் குப்பைகொட்டினியோ என்று     பெற்றோர்களை    
அதுவும்   அவர்கள்   பெற்றோரை விட உயரமாக இருந்து விட்டால் போதும்

அவர்களைக்  குனிந்து ஒருலுக் விடும் அழகே அழகு .


நானும் இது போல என் பெற்றோர்களிடம் செய்ததுண்டு . என் பெற்றோர்களும் ரசித்திருந்திருக்கிறார்கள்.

என் மகன் களும் செய்திருக்கிறார்கள் .

என்னால்   இன்னும்   மறக்க   முடியாத   ஒரு நிகழ்வு .

என் மகன் 12 வது    முடித்து    காலேஜ்   எல்லாம்   சேர்ந்த பின் ஒரு நாள் அவனும் அவன்    பிரண்ட்ஸ்களும்    டீச்சரைப்    பார்க்கப் 
(கலாய்க்கப? )  போய்   இருந்திருக்கிறார்கள் .

ஸ்கூல்   வாச்மேன்   இதுகளைப்   பார்த்ததும் கொஞ்சம் ஒரு மாதிரி ஆகிட்டான்.
இது   ஒரு அடங்காத வெவகாரமான   குரூப்  என்பது அவன் அனுபவ 
பூர்வமாக அறிந்த உண்மை .

என்னடா    இதுங்க   ஸ்கூலை   விட்டுப்   போயிருச்சுங்களாச்சே ன்னு    நினச்சா    திரும்ப   வந்துடுச்சுங்களே ........ன்னு நெனச்சானோ என்னமோ

"தம்பி ...தம்பி ...

பழைய    பசங்கள்லாம்   உள்ள வரக்கூடாது   ஸ்கூல் ரூல்ஸ் அப்படி "

  நம்ம பையன் குரூப் சாதாரணமா என்ன ?

வடிவேலு தோரணையில் "யாரைப் பாத்திட்டு தம்பி ங்கிறே
ம்…. ம் ...
  " நாங்கல்லாம்  இப்ப  இன்ஜியரிங் காலேஜு பசங்க ...
.போன வருஷம் வரை தம்பி .
இப்ப நாங்கல்லாம் சார் ஆகிட்டோம் .
இந்தா.. டீ...டிபனெல்லலாம் சாப்பிட்டுக்கோ
.போன வருஷமெல்லாம் எத்தினியோ நாள் புராஜெக்ட் அது இதுன்னு சொல்லிட்டு லேட்டா வந்த போதெல்லாம் நம்பிட்டே .
அதுக்கோசரம் இந்த டிப்ஸு ....தெரியுதா ?சரியா ?

தோரணையாக சொல்லிவிட்டு
டீச்சர்  களைப் பாத்துட்டு வந்ததுகூட ஒரு பிக் பாஸ் எபிசோடு .

அதுவும்  மண்டபத்தில்   எழுதிக் கொடுத்த டயலாக் இல்லை .


   நிஜ   வாழ்க்கையில்    உள்ள பிக் பாஸ் எபிசோடுகள்   ஒரு தனி சுவாரஸ்யத்தோடு தான்    இருக்கின்றன .


டபாய்க்கவே முடியாத குடும்ப வேலைகள்+சம்பள வேலை+ சோம்பேறித்தனம் =பதிவுலகிற்கு விடுமுறை


15 comments:

 1. ஹஹஹ் கரீக்டுதான். என் பையன் கூட நான் ஏதாவது அவனுக்குச் சொல்லப் போக...நமக்குத்தான் பசங்க வளந்தாலும் பாப்பா மாதிரிதானே சில சமயம்....அப்படி நினைச்சு சொல்லப் போனா அவன் சொல்லுவான் அம்மா நான் இன்னும் எல் கே ஜி பாப்பா இல்ல....பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பையன்..நான் சொல்லறததான் நீ கேக்கணும் இனி...

  நான் எங்க அப்பா கிட்ட இப்பவும் அவர் லைஸன்ஸ் எடுத்துட்டியா அத எடுத்துட்டியா நு கேட்ட அப்பா நான் ஒண்ணும் ஊருல இருந்த பொண்ணு இல்ல எனக்கும் ஒரு பையன் இருக்கான்...பேசாம இருப்பா...நான் சொல்லறத கேட்டுட்டு... அப்படினு உதார் வுடுறதுதான்...ஹஹஹ்

  கீதா

  ReplyDelete
 2. டபாய்க்கவே முடியாத குடும்ப வேலைகள்+சம்பள வேலை+ சோம்பேறித்தனம் =பதிவுலகிற்கு விடுமுறை// ம்ம்ம் நாங்களும் எழுதறது இல்ல....ரொம்ப..

  இதுல எனக்கு முதலும் அப்புறம் ஒரு சுணக்கம்னு சேர்த்துக்கலாம்...ஹிஹிஹி

  கீதா

  ReplyDelete
 3. இப்படியே அவ்வப்போது தொடருங்கள்...

  ReplyDelete
 4. வாங்க பிக்பாஸ் நலமா ?
  அவ்வப்பொழுது காணாமல் போயிடுறீங்களே....
  தொடர்ந்து எழுதுங்க பாஸ்.

  ReplyDelete
 5. பிக் பாஸ்... எல்லொருமே சில சமயத்தில்...

  முடிந்த பொது பதிவுகள் எழுதுங்கள்.

  ReplyDelete
 6. நிஜங்களின் பிரதிபலிப்புதானே நிழல்!

  ReplyDelete
 7. தொடர்ந்து எழுதுங்கள் சகோதரியாரே

  ReplyDelete
 8. இடைவெளிக்குப் பின்னர் பதிவினைக் கண்டேன்.

  ReplyDelete