Wednesday 13 July 2016

கேட்டு வாங்காத சொந்தக் கதைதிரு ஸ்ரீராம்  அவர்களின் கேட்டு வாங்கிப் போட்ட கதை மாதிரி எனக்கும் ஒரு நிகழ்வு நடந்தது.
 2006 ம் வருடம் நடந்தது. என்னுடன் சேர்ந்து ஜப்பானிய மொழி படிக்கும் தோழி ஒருத்தி என்னுடன் சேர்ந்து படித்தால் சீக்கிரம் மனதில் பதிகிறது அது இது என்று ஐஸ் வைத்து என் வீட்டுக்கு வந்து என்னுடன் படிப்பாள்

ஒரு காரியம் என்று தீவிரமாக எடுத்தால் அதில் ரொம்ப கவனம் செலுத்துவேன் 
,அதனால்   ஈர்க்கப் பட்டு அவள் நான் எப்படிப் படிக்கிறேன் என்று நோட்டம் போட வந்தாள் போல .

முதலில் எனக்குப் புரியவில்லை .

 தன் தந்தை ஒரு குடிகாரர் என்றும்
தாய் ரொம்பக் கஷ்டப் பட்டு வளர்த்த விதம் எல்லாம் சொல்லியிருந்தாள்.

கல்யாணம் ஆகி  ஒரு  குழந்தை இருந்ததால் என்னளவு அவளால் அவ்வளவு தூரம் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்பாள்

ஆனால் எனக்கும் குழந்தைகள் இருந்த போது நானும் கஷ்டப் பட்டேன் . எல்லோருக்கும் இது பொதுப் பிரச்னை என்பேன் .

 நான் படிக்கும் போது கஷ்டமானவைகளை முதலில் காலையில் 4 மணிக்கே  எழுந்து விடுவதால் அவற்றை 100% எனக்கு நம்பிக்கை வரும் வரை  தினமும் ரிவைஸ்  செய்வேன் சொல்லிப் பார்ப்பேன் .

ஒரு நாள் வழக்கம் போல என் வீட்டுக்கு வந்தவள்  மாலையில் கிளம்பிப் போனாள்.

அவள் வந்த நேரம் ஒரு தெரிந்த கொத்தனார் வேறு ஒரு உதவிஆளுடன்  வந்து வேலை பார்த்தார்.
 பிறகு என்  வீட்டு வேலை முடித்து விட்டு நன்கு உறங்கி மறுநாள்   காலை எழுந்தால்   என்  புத்தகத்தைக் காணோம் .

 அதில் தான் நிறைய நோட்ஸ்   EXPLANATION  எல்லாம் எழுதி வைத்திருந்தேன்.

.அது  இலக்கணப் புத்தகம் .

வீடு  முழுக்கத் தேடினேன் . கிடைக்கவில்லை .

பரீக்ஷைக்கு   இன்னும் 15   நாள்   மட்டுமே   இருக்கறப்ப   இந்தக்   கூத்து


 என் தோழிக்குப்  போன் செய்து சொன்னேன் ,

அப்படியா?  ஐயோ  பாவம்  நீங்க  எவ்வளவு  கஷ்டப்பட்டு  நோட்ஸ் எல்லாம் எழுதி வெச்சிருந்தீங்க .... பரவாயில்ல விடுங்க .
உங்க ளுக்கு  இருக்கிற அறிவுக்கு நீங்க  அது இல்லாமையே பாஸ் பண்ணிடுவீங்க

அதை விட்டுட்டு  மத்ததை  படிங்க  என்றாள்  கூலாக .

 அதெப்படி விடமுடியும் என்றேன் .

அப்ப அந்தக் கொத்தனாரைக்   கேட்டுப் பாருங்க  மேடம் என்றாள்.

உன்னிடம்  தவறுதலாக  வந்து விட்டதா பார் என்றேன் .

100% சான்ஸே இல்லை என்றும்       தாய்  மீதெல்லாம் சத்தியம் பண்ணினாள் .

வீட்டிற்கு வேறு யாரும் வரவில்ல்லை  தவிர அந்தக் கொத்தனார்  இதை  எடுத்து  விலைக்கு  விற்றால்( 400 கிராம்)  Rs 4  மட்டுமே தேறும்
அந்த அளவு சிறிய  புத்தகம் . அதை அவர்கள்  மெனக்கெட்டு திருட மாட்டார்கள் .

 அப்புறம்   அடுத்த நாள்   நான் போன்   பண்ணி   "அந்தக் கொத்தனாரு   ரொம்பக் கோவப்பட்டுக்கிட்டு நான்   திருடலம்மா .

அது   இதுனு  பேசிட்டு   ஏதோ முட்டையை வச்சு   மந்திரம்  பண்ணினாத் தெரியும் மா
அப்படி  நான்  எடுத்திருந்த என்  புள்ளைங்களுக்கு கெடுதல்.
 வர  ஞாயிற்றுக் கிழமை பண்ணி யாரு எடுத்துட்டான்னு சுத்தமா சொல்லிடும் சாமி அப்படீன்னான் "..
 நான்  செய்யலாமான்னு  இருக்கேன் என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டேன் .

 ம்   ………..அவ்வளவெல்லாம் போகாதீங்க மேடம்   என்று ஒரு ஐந்து நிமிடம் கழித்துப் போன் பண்ணினாள் .

பிறகு   அரை மணி   நேரம் பொறுத்து  அவளே அந்தப் புத்தகம்   தன்   பையில் ஏதோ ஒரு   ஓரத்தில்  சுருண்டு  கொண்டு   இருந்ததாம் ,
 அன்னைக்கே கொண்டு தருவதாகச் சொன்னாள்.


 நானும் நீயும்  என்வீ டு வரை நடக்க வேண்டாம்.

,குழந்தையை   வேறு அம்மாவிடம் விட்டு விட்டு வருகிறாய் ,

 நானே பஸ்  ஸ்டாண்ட் வந்து வாங்கிக்கறேன் ,

 எனக்கும் அந்தப் பக்கம் கொஞ்சம் வேலை இருக்கு என்று சொல்லிவிட்டு
அந்த  லேடிய   வீட்டுக்குள்ள  அனுமதிக்கவே பயந்தேன்.

 புத்தகத்தை வாங்கிக் கொண்டேன் ,அதன் பிறகு பேசினேன்
.வீட்டுக்கு அழைக்க வில்லை .

 இப்போது   சுத்தமாகத்  தொடர்பு எல்லைக்கு வெளியில்”9 comments:

 1. காரியவாதிகளை காததூரம் நிறுத்தணும்

  ReplyDelete
 2. "காரியவாதி"யாக இருக்கலாம் தப்பில்லை .
  "காலை வாரி" வாதியாக இருந்தால்தான் .....

  ReplyDelete
 3. பயங்கர ஆளா இருக்காங்களே.....

  ReplyDelete
 4. இது ஒரு limited circle ஆக இருந்தாலும் உதவி செய்பவர்களும் உண்டு.காலை வாரி விடுபவர்களுக்கும் உண்டு.

  ReplyDelete
 5. சகோ ம்ம் இப்படித்தான் நாம் கஷ்டப்பட்டுப் படித்து எழுதிவைத்தவற்றைத் திருடிக் கொண்டு செல்வதற்கென்றே போகும் நபர்கள் நம்மைச் சுற்றிச் சுற்றி வருவார்கள். இதில் என்னவென்றால் அவர்கள் நாம் உழைப்பதைப் போல உழைக்கமாட்டார்கள். ஓசியில் என்ன கிடைக்கும் என்பதில் குறியாக இருப்பார்கள். நான் ஆசிரியர் அல்லவா அதனால் எல்லாவற்றையும் எனது பேகில் மட்டுமே வைத்துக் கொள்வேன். வெளியில் எடுத்தாலும் மறக்காமல் வைத்துக் கொண்டுவிடுவேன். நாம் கற்றுக் கொள்ளூபவற்றைப் பிறருடன் பகிர்ந்து கொளல் நல்லதுதான் ஆனால் இப்படிப்பட்டச் செயல் மிகவும் கீழ்த்தரமான ஒன்று..அதுவும் பெரியவராக இருந்து கொண்டு.

  கீதா: அருணா, இன்னொரு வகை உண்டு நம் புத்தகத்தை வாங்கிக் கொண்டு சென்று விடுவார்கள் ஆனால் திரும்பத் தராத வகை உண்டு. அதுவும் மிகவும் விலை உயர்ந்த புத்தகங்கள்.நாம் கஷ்டப்பட்டு வாங்கியிருப்போம்..அது மட்டுமல்ல மகன் கஷ்டப்பட்டு எடுத்து வைத்திருக்கும் நோட்ஸ்.... எடுத்துக் கொண்டு செலல் தவறில்லை ஆனால் மீண்டும் தராமல் போவது...என் மகனுக்கும் அப்படி அவன் கஷ்டப்பட்டு எடுத்துவைத்த நோட்ஸ் புத்தகங்கள் எல்லாம் கொடுத்து மீண்டும் வராமல் போயிருக்கிறது....கஷ்டம்தான்.

  உங்கள் டெக்னிக் சூப்பர்.

  ReplyDelete
 6. இதே முட்டை பயமுறுத்தலை வைத்து நான் இரண்டு தங்க வளையல்களை மீட்டேன்! அதை முன்பே எங்கள் பிளாக் அலுவலக அனுபவங்கள் பகுதியில் எழுதி இருந்தேன்!

  //திரு ஸ்ரீராம் அவர்களின்//

  என்னைக் குறிப்பிட்டிருப்பதற்கு நன்றி. ஆனால் 'ஸ்ரீராமின்' என்று சொன்னாலே போதும்! 'அவர்கள்' எல்லாம் வேண்டாம்!

  :))

  ReplyDelete
 7. ஆஹா உங்க ஐடியா மிக நல்ல ஐடியாகவா இருக்கிறது இ

  ReplyDelete
 8. Nice story. We cannot share what we don't have. We cannot lift somebody up unless we are in a higher position. The best thing to do is be very secretive about our strategies until we succeed . Once we taste success we can share our secrets to every body. Till then I guess we have to ly low

  ReplyDelete
 9. Nice story. We cannot share what we don't have. We cannot lift somebody up unless we are in a higher position. The best thing to do is be very secretive about our strategies until we succeed . Once we taste success we can share our secrets to every body. Till then I guess we have to ly low

  ReplyDelete