Sunday 9 March 2014

விடுமுறைக்குப் பின் ......

 கடந்த 5 வாரங்களாக வேலைக்குப் போக ஆரம்பித்ததால் பிளாக் பக்கம் வரவில்லை . காலை 7.45க்குக் கிளம்பினால் திரும்பி வர 8 மணி ஆகிறது என்பதால் நெட்டில் மெயில் மட்டும் செக் பண்ணிவிட்டு படுத்துவிடுவேன் .
ஆபிசில் தான் 9 மணி நேரம் கம்பியூட்டர் கூட பேசிக் கொண்டிருப்பதால் வீட்டுக்கு வந்தபின் கம்பியூட்டரில்  ஏன்திரும்பவும் என்று பிளாக் எழுதவில்லை .
நேற்று வெளி வேலை இருந்ததால் பாரி முனை சென்றேன் . சரி திரும்ப வரும்போது ஆட்டோ வில் வரலாம் என்றால் பழைய கதை தான்.அதே போல மீட்டர் கணக்கு வராது என்கிறார்கள் ஒரு வழியாக ஒரு ஆட்டோ டிரைவர் மீட்டர் போட்டார் .ஆனால் அந்த ஆட்டோ மீட்டர் மிக விநோதமாக 00:7t:7t
என்று காட்டியது . இதில் எதோ உள் கூத்து இருக்கு என்று புரிந்தது.ஒரு பத்துஆட்டோ வாவது பேரம் பேசினேன் . யாருமே மீட்டர் பற்றி கண்டுகொள்ளவே இல்லை .
நமக்கேன் வம்பு என்று பேசாமல் பஸ்ஸில் வந்து விட்டேன் .கிட்டத்தட்ட
ஒரு மாதமாக சென்னைக்குள் எங்குமே போகவில்லை .ஆபிஸ் விட்டால் வீடு வீட்டை விட்டால் ஆபிஸ் .
ஆபீஸிற்கும் போய்க்கொண்டு தினம் தினம் அல்லது வாரத்திற்கு ஒரு மூன்று
பதிவாவது போடும் பதிவர்களின் திறமை கண்டு நான் வியக்கிறேன்.
எனக்குத்தான் நேர நிர்வாகம் தெரியவில்லையோ?
ஆனால் நான் சமையல் செய்வதால் நமக்கு நேரமில்லை என்று என்னை நானே சமாதனப்படுத்திக் கொள்கிறேன்.0
சென்ற வாரம் வயநாடு பக்கம் சொந்த வேலையாக சென்றிருந்தேன்.முது மலைக் காடு பக்கம் சென்றிருந்தேன். அழகோ அழகு காட்சிகள் .காமிராவின் உள்ளே சில காட்சிகளை சுயநலமாக திருடிக்கொண்டு வந்தேன் ,.
 --  --------என்ன மாதிரி இருந்தாலும் குரங்கு மட்டும் எப்படியோ அழகாகத்தான் இருக்கிறது ரகசியம் என்னவோ தெரியவில்லை.
மீண்டும் அடுத்த வாரம் சந்திக்கிறேன் .

13 comments:

  1. முடியும் போது பகிர்த்து கொள்ளவும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி .மறுபடியும் வேலைக்குப் போனதால் நன்றி தெரிவிக்க இவ்வளவு நாள் ஆனது.

      Delete
  2. வேலைக்கும் சென்று வீட்டையும் கவனித்து பதிவும் எழுதவேண்டும் என்றால் கஷ்டமே... விடுமுறை நாட்களில் எழுதுங்கள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி .மறுபடியும் வேலைக்குப் போனதால் நன்றி தெரிவிக்க இவ்வளவு நாள் ஆனது.

      Delete
  3. வணக்கம் சகோதரி
    நேரம் கிடைக்கும் போது தங்கள் படைப்புகளைத் தாருங்கள். ஆட்டோ காரர்களிடம் பேரம் பேசி விட்டு எதுக்கு வம்பு என்று பேருந்தில் வந்து விட்டேன் எதார்த்தமான வரிகள் சகோதரி. பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  4. ///ஆபிசில் தான் 9 மணி நேரம் கம்பியூட்டர் கூட பேசிக் கொண்டிருப்பதால் வீட்டுக்கு வந்தபின் கம்பியூட்டரில் ஏன்திரும்பவும் என்று பிளாக் எழுதவில்லை .//

    ஆபிஸில் உங்களை மாதிரி ஆட்கள்தான் மாங்கு மாங்கு என்று வேலை செய்கிறார்கள். ஆனால் பலர் அங்குஇருந்துதான் பதிவுலகத்திற்கு வருகிறார்கள் & எழுதுகிறார்கள் ஆபிஸில் இருந்து என் தளத்திற்கு வருபவர்களே மிக அதிகம் ஆபீஸ் விடுமுறை என்றால் வருகையும் குறைந்துவிடும்......

    ReplyDelete
    Replies
    1. தலைவா, இந்த கருத்து உங்களுக்கும் தானே???

      Delete
    2. நன்றி .மறுபடியும் வேலைக்குப் போனதால் நன்றி தெரிவிக்க இவ்வளவு நாள் ஆனது.

      Delete
  5. என்ன மாதிரி இருந்தாலும் குரங்கு மட்டும் எப்படியோ அழகாகத்தான் இருக்கிறது ரகசியம் என்னவோ தெரியவில்லை.///

    நமது சொந்தங்கள் எப்போதும் நமது கண்ணுக்கு அழகாகவே இருக்கிறார்கள்

    ReplyDelete
  6. வாய்ப்பு கிடைக்கும்பொழுது எழுதுங்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி .மறுபடியும் வேலைக்குப் போனதால் நன்றி தெரிவிக்க இவ்வளவு நாள் ஆனது.

      Delete
  7. இந்த நேரப் பிரச்சனை உங்களுக்கு மட்டும் இல்லை, நிறைய பேருக்கு இருக்கிறது. முடிந்த பொழுது எழுதுங்கள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி .மறுபடியும் வேலைக்குப் போனதால் நன்றி தெரிவிக்க இவ்வளவு நாள் ஆனது.

      Delete