ஜாதகம் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது ,
ஆர்வம் உண்டு . இவ்விடம் ஜோதிடம் பார்க்கக் கற்றுத்தரப்படும் போன்ற அறிவிப்புக்களால் ஈர்க்கப்பட்டாலும் சரி ........பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.
பொதுவாக கால சர்ப்ப தோஷம் என்று ஒன்று இருப்பதாகச் சொல்வார்கள் .
எனக்குத் தெரிந்த ஒருவர் தனக்கு ஜாதகம் பார்க்கும் பொது என்னையும் கூட்டிச் சென்றார் .
அவருக்கு சர்ப்ப தோஷம் இருப்பதாகவும் அவர் வீட்டில் ஒரு முறை நல்ல பாம்பு ஒன்றை யாரோ அடித்து விட்டதாகவும் அந்த தோஷம் அவருக்கு இருப்பதால் சில காரியத் தடை இருப்பதாகவும் சொன்னார்.
ஆர்வம் உண்டு . இவ்விடம் ஜோதிடம் பார்க்கக் கற்றுத்தரப்படும் போன்ற அறிவிப்புக்களால் ஈர்க்கப்பட்டாலும் சரி ........பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.
பொதுவாக கால சர்ப்ப தோஷம் என்று ஒன்று இருப்பதாகச் சொல்வார்கள் .
எனக்குத் தெரிந்த ஒருவர் தனக்கு ஜாதகம் பார்க்கும் பொது என்னையும் கூட்டிச் சென்றார் .
அவருக்கு சர்ப்ப தோஷம் இருப்பதாகவும் அவர் வீட்டில் ஒரு முறை நல்ல பாம்பு ஒன்றை யாரோ அடித்து விட்டதாகவும் அந்த தோஷம் அவருக்கு இருப்பதால் சில காரியத் தடை இருப்பதாகவும் சொன்னார்.
இதே போல் என் தாய் மாமா வீட்டிலும் நல்ல பாம்பை அடித்தால் அவர்கள் வீட்டில் ஒரு மரண நிகழ்வு நடக்கும்
அதன் பின்னணியில் ஒரு நிஜ நிகழ்வு ஒன்று உண்டு
என் பாட்டி என் மாமா சின்னக் குழந்தையாக இருக்கும் போது அவர் தூங்கிக் கொண்டிருந்த தூளி மீது பாம்பொன்று சுற்றி இருந்ததாகவும் பிறகு என் பாட்டி
அந்தப் பாம்பிடம் "நாகராஜா நாகராஜா என் மகனை நீ ஒன்றும் செய்து விடாதே உன் பெயரை எங்கள் வம்சத்தில் இனி வைப்போம்"
என்று சொன்னபின் பாம்பு முன்று முறை தரையில் அடித்துவிட்டு ஒன்றும் செய்யாமல் பொய் விட்டதாம் ,
இரண்டு தலை முறை ஆனா பின்பும் நாக என்ற பெயருடன் அந்த குடும்பத்தில் ஒருவர் பெயர் வைத்துள்ளதைக் காணலாம் .
சில வருடங்கள் கழித்து என் தாத்தா காலை செய்தித் தாள் படித்துக் கொண்டிருக்கும் பொது கால் தொடையில் ஏறி அமர்ந்து இருந்ததாம் .
என் தாத்தா ஒன்றுமே செய்யவில்லயம் பக்கத்தில் இருந்தவர்கள் யாரையாவது கூப்பிடலாமா என்ற போது " வேண்டாம் "என்று ஜாடை காட்டி விட்டு "கம் "என்று இருந்தாராம் .பிறகு அந்தப் பாம்பு சரசர என் எங்கே சென்றது என்றே தெரியாதாம்
அதே போல் என் அப்பா ஒரு முறை வீட்டுக்கு வந்த நல்ல பாம்பு ஒன்றை அடித்து இருக்கிறார்,
ஆனால் அது சாகவில்லை எப்படியோ தப்பி ஒடி விட்டது .
பிறகு ஒரு இரண்டு நாள் கழித்து மறுபடியும் வந்து வீட்டையே சுற்றி வந்திருக்கிறது, அந்த சமயம் என் அப்பா நைட் டுட்டி .என் அம்மாவும் வேலைக் காரப் பெண்ணும் மட்டும் இருந்திருக்கிறார்கள் . ஒரு வீட்டுக்கும் மற்றொரு வீட்டுக்கும் இடையே ரொம்ப தூரம் . எப்படியோ ரோடில் போற ஆளிடம் சேதி சொல்லி அரிக்கன் விளக்கு வைத்து தேடினால் மறுபடியும் பாம்பு எஸ்கேப் .
தொடர்ந்து ஒரு வாரம் எங்க அப்பாவையே தேடி வந்து பிறகு ஒரு வழியாக ஒரு நாள் இரவு முழுவதும் ஆட்கள் வீட்டைச் சுற்றி பாம்புக்காக வெயிட் பண்ணி அதை அடித்துக் கொன்றிருக்கிறார்கள் .
அதனால் என்ன தெரிகிறது என்றால் பாம்பு உனக்குக் கெடுதல் பண்ணமாட்டேன் என்று சொன்னால் அந்த சத்தியத் தை மீறுவதில்லை .
.ஆனால் அதற்குத் துன்பம் விளைவித்தால் அவர்களை ஒரு கை பார்த்து விட்டுத்தான் மறு வேலை போல!
நாமும் மற்ற ஜீவ ராசிகளைக் கொள்ளாமல் இல்லை .
நான் கூட வெஜிடேரியன் என்று பேரே தவிர "உயிர் வதை " செய்கிறேன். கரப்பான் பூச்சி எறும்பு பூரான் சில வண்டுகள் கூடக் கொன்றிருக்கிறேன் .
என்ன ஒரு வித்தியாசம் என்றால் கொல் வேனே தவிர அவைகளைத் தின்பதில்லை
கொன்றால் பாவம் தின்றால் தீரும் என்ற ஒரு நீதிப் படி அசைவ உணவு
சாப்பிடுவதும் தப்பில்லை . சரி மேட்டரை டச் பண்ணனுமே
பாம்பை கொன்றால் தப்பு அது ஜாதகத்தில் reflect ஆகிறது .
அது மாதிரி நாம் கொன்ற மற்ற உயிரினங்களின் பாவம் ஏன் reflect ஆவதில்லை ?
பாம்புக்கு மட்டும் ஏன் ஒரு ஸ்பெஷல் preference?
மற்ற ஜீவராசிகளெல்லாம் என்ன இளிச்சவாய் ஜென்மங்களா?
அதுங்க ளைக் கொன்ன தோஷம் கிடையாதா?
No comments:
Post a Comment