Friday, 7 February 2014

JOB SATISFACTION

உடல் நிலை மறுபடியும் பாதிக்கப் பட்டதால் இடையில் ஒரு தடங்கல் .

JOB SATISFACTION என்ற ஒரு டாபிக் பல்லாண்டுக் காலமாக பலராலும் பலவிதமான ஆய்வுக்கட்டுரைகள் ,கட்டுரைகள்  மற்றும் டி,வி யிலும் பலராலும் விஸ்தாரமாகவும் விவரமாகவும் விவாதிக்கப் பட்டிருந்தாலும் நான் என்ன புதுசா எழுதிக்கிழிக்கப் போகிறேன் என்ற நினைப்பை தூக்கி தூரமாக வைத்துவிட்டு இந்தப் பதிவைப் படிக்கவும்.


எங்களது அபார்ட்மெண்டின் கௌவுரமாகவும்   official   ஆகவும் சொன்னால் செக்யுரிட்டி
 உண்மையாகச்சொன்னால்  ஒரு சிலருக்கு  வீட்டு வேலைக்காரி வெங்காயம் பூண்டு உரித்துக் கொடுக்கும்  வேலைக்காரி கம் மோட்டார் ஆன் பண்ணுபவள் கம்  etc   etc
அப்பப்போ உக்காந்தபடியே தூங்கும் கலையில் அவளை மிஞ்ச ஆள் கிடையாது.,அப்படியாகப்பட்ட ஒரு கணவனும் அவன் மனைவியும் தான் எங்களது வாச்மேன் .
அவள் வேலைகளில் மிக முக்கியம் என்று மற்றவர்களால் நினைக்கப் படுவதும் அவள் மிக மிகப் பெருமையுடனும் செய்யும் வேலை அபார்ட்மெண்டின்நுழைவாயிலில் கார் போன்றவைகளை நிறுத்தவிடாமல்
பார்த்துக்கொள்வது, மற்றும்  காரை யார் வெளியில் எடுக்கும் போதும் வண்டி போக்கு வரத்தைப் பாத்து சொல்வது.

இந்த  வேலைகளில் நம்பளை மாதிரி ஆளுங்களுக்கு செம எரிச்சல் வரும்

ஏன்னா எவனுமே எத்தனை தரம் சொன்னாலும்  கேட்கவே மாட்டான்.

எங்கள் ஏரியா கடைகள் மிகுந்தது .
பக்கத்தில் ரெண்டு வங்கிகள்  .சூப்பர் மார்கெட்  மற்றும் ஓட்டல் சரவணா பவன் வேறு .......நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம்.
இவளும் ஒழக்குக்கு  புடவை ஜாக்கெட் மாட்டிவிட்ட சைசில் இருப்பாள் ,

ஆனால் குரல் மட்டும் .......  பதினெட்டுப் பட்டிக்கும் ஈஸியாக் கேக்கும் லவுட் ஸ்பீக்கர் இல்லாமலேயே ...

காரில் வருபவர்கள்  இவளின் பேச்சை கௌரவம் கருதிக்  கேட்கவே
   மாட்டார்கள்

.டிரக்  டெம்போக் காரர்கள் இவளை ஒரு கேலிப் பொருளாகத் தான் நினைப் பார்கள்
.இருந்து ம்  ஒரு சில பயந்த ஜென்மங்கள் வண்டியை இவள் சொல்லி தள்ளி நிறுத்திவிட்டால் இவளுக்குப்  பெருமை தாங்காது.

 போகிறவர் வருகிறவர் பக்கத்து பில்டிங் வாச்மேன் எல்லாரிடமும் தம்பட்டம் அடித்துக்கொள்வாள் .

அபார்ட்மெண்டில் இருந்து வெளியே யாரும் காரை எடுக்கும் போது
ஆவ்......ஆவ் ....
ரயிட்லெ ........ரயிட்லெ ......
.கொஞ்சம் லெப்டு   ..........
தோ....தோ .... சைக்கிள் தம்பி  அய்யா கார் எடுக்குறார்  
அப்பால நவுரு .......போன்ற செட் டயலாக்குகளை  ஒரு டிராபிக் போலீஸ்  தோரணையிலே தான் சொல்லுவாள் .

அரசாங்கம் கொடுத்த 300 சதுர அடி அபார்ட்மெண்டினை ஒரு மகனுக்கு .... மற்றொரு எதோ அனாமத்தாகக் கிடைத்த ஒரு அபார்ட்மெண்டினை  மற்றொரு மகனுக்குக் கொடுத்துவிட்டு அவளும் கணவனும் இங்கே தான் ஜாகை,குளியல் உணவு எல்லாம்.

சில நாள்தான் மகனிடமிருந்து உணவு வரும் .வராத நாட்களில் பக்கத்திலிருக்கும் டீக்கடை வஸ்துக்கள் .

தினமும் காலை நாலு மணிக்கு எழுந்து பால் பாக்கெட் வாங்கி வந்து வீடு வீடாக விநியோகம் செய்யும் வேலை..
அதனால் காலைத்தூக்கம் என்பது  முடியாத ஒன்று .

இரவிலும் லேட்டாக வருபவர்களுக்கு கதவு திறக்கணும் .
எனவே அடிக்கடி தூக்கம் கெடும்

மகன்கள் வேறு அப்பப்போ காசு கேட்டுத் தொந்தரவு பண்ணுவார்கள் .

கந்து வட்டிக்காரன் வேறு   recovery கென்று  வந்து தொல்லை கொடுப்பான் .

இது அத்தனைக்கும்  சிகரம் வைத்தாற்  போல் கணவன் இரவு பகல் என்ற வித்தியாசமின்றி எப்பொழுதுமே தமிழ் நாட்டு அரசின் வருமானத்திற்கு வழிவகுக்கும் எண்ணம் கொண்டவன் .
தண்ணி அடித்துவிட்டு ஒரு பெரிய கலாட்டா பண்ணிவிட்டு நெடுஞ்சாண்  கிடையாக கிடத்துவதும் இவள் தலை எழுத்து..
இருந்தும் அந்த டிராஃபிக்  போலீஸ் வேலையை enjoy  பண்ணித்தான் செய்கிறாள்

11 comments:

  1. மிகவும் சிரமமான வேலை தான்... அதிக பொறுமை வேண்டும்...

    ReplyDelete
  2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-5.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. எனக்குத் தெரியப்படுத்தியதற்கு நன்றி.

      Delete
  3. அந்த பெண் படும்பாடுகள் நமக்குதான் மிக கஷ்டமாக தோன்றுகிறது. ஆனால் அதை தினசரி செய்யும் அவளுக்கு அது பழகி போயிருக்கும்

    ReplyDelete

  4. உடல்நிலையை கவனித்து கொள்ளவும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி .புதுசாக சார்ட் போட்டிருக்கிறேன் ( for health)

      Delete
  5. எந்த வேலையையும் மகிழ்வாய் எடுத்துக்கொள்ளும் அருமையான மன நிலை அவளுக்கு... அதுதானே வாழ்க்கைக்கு முக்கிய தேவை...

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாகச் சொன்னீர்கள்

      Delete
  6. கண்டிப்பாக அந்தப் பெண் போற்றர்குரியவர்தான்! எத்தனை பேர் தங்களது வேலையை எல்லா வித வசதியிருந்தும் சந்தோஷத்தோடு செய்கின்றாட்கள்!

    நல்லதொரு பகிர்வு!

    ReplyDelete
  7. மிகச்சரி. நானும் சமுக அந்தஸ்து மற்றும்
    நல்ல சம்பளத்துடன் கூடிய வேளையில் இருந்தபோது கொஞ்சம் அழுகாச்சி ரோல் பண்ணியிருக்கிறேன் .

    ReplyDelete