எல்லோரும் மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது ,
மாற்றம் ஒன்றே நிரந்தரம் ,
.மாறாதது என்று கூவிக்கொண்டு இருக்கையில்
நான் இப்போது பழையனவற்றைப் புகுத்தவே இந்தப் பதிவு எழுதுகிறேன்.
இதைப் பழையனவற்றுக்கான ஒரு "மான் கி பாத் "பதிவு என்று கூடச் சொல்லலாம்.
நான் பள்ளிக்கூடம் படிக்கும் போது எல்லா பத்திரிகைகள் ரேடியோ
போன்றவற்றில் குக்கரில் சாதம் வடிப்பது தான் நல்லது .
சத்தெல்லாம் கஞ்சியில் போய் விடுகிறது ,
நாமெல்லாம் வெறும் சக்கையை மட்டும் தான் சாப்பிடுகிறோம் ,
எரி பொருள் மிச்சம் ,
சமையல் நேரம் பாதியாகக் குறையும்
என்று ஓவராக சவுண்டு கொடுக்க,
நான் சத்தே இல்லாத சாதம் சாப்பிடுவதால் தான் ஒல்லியாக இருப்பதாக வீட்டில் ஓயாத பிரசங்கமே பண்ணினேன் .
நம் வாழ்க்கை முறையை மாத்தணும் என்றெல்லாம் டயலாக் அடித்தேன் .
கிட்டத்தட்ட நான் எங்கள் வீட்டில் உள்ளிருப்புப்
போராட்டம் நடத்திக் குக்கரை வாங்க வைத்தேன் .
யாருக்குமே அந்த சமையல் பிடிக்கவில்லை என்னையும் சேர்த்துத் தான் .
.ஆனாலும் உடம்புக்கு நல்ல விஷயமெல்லாம் அப்படித்தான் ருசியில்லாம இருக்கும் என்று பொழிப்புரை பதவுரை எல்லாம் சொன்னேன் .
பிறகு என் அம்மாவிற்கு வயிற்றில் தாங்க முடியாத வலி வர மண் பானையில் சாதம் மட்டும் சமைக்க ஆரம்பித்தோம் .
வலி கொஞ்சம் குறைந்ததது .
அப்போது கூட குக்கர் சாதம் தான் காரணம் என்று யாருக்கும் தோன்றவில்லை .
ஆனாலும் என் அக்காவுக்குக் கல்யாணம் பேச வருபவர்கள் மண் பானையில் சமைத்தால் நம்மளை மதிக்க மாட்டார்கள் என்று சிலர் சொல்ல மறுபடியும் " குக்கர்" ராணி மாதிரி வந்து அடுப்பிலே ஏறி உக்காந்துக்கிச்சு.
எனக்கும் வயிற்றில் ஒரு சங்கடம் இருந்து கொண்டே இருந்தது . ஆனால் சின்ன வயது என்பதால் அதன் தாக்கம் தாங்கிக் கொள்ளும் படி இருந்தது .
நான் எப்பொழுதுமே மிகவும் குறைவாகத்தான் சாப்பிடுவேன் எனவே வயிறு வலிக்கான காரணம் அதுதான் என்றும்
பிறகு என் தாய் இறந்த பின் அம்மா மாதிரியே எனக்கும் வலி என்று முடிவு கட்டிவிட்டு வலி வரும்போது சோடா சாப்பிடுவேன் .
பிறகு எலக்ட்ரிக் அரிசி குக்கர் சாதம் சாப்பிட்ட பின்னும் வலி குறையவில்லை .ஆனாலும் தாங்குகிற வலிதான்.
தாங்க முடியாத வயிற்று வலி என்பது கிட்டத்தட்ட எல்லா நாட்களுமே 2003ம் வருடத்திலிருந்து வந்தது .
பல டாக்டர்கள் ஆயுர் வேதம் அல்லோபதி எல்லாமே .....
பெரிய டாக்டர்கள் ....
பல ஸ்கென்கள்....
லிவர் மட்டும் கொஞ்சம் ஆம் கொஞ்சமே பெரிதாக உள்ளது ..
மாத்திரைகள் .....
மற்றபடி எல்லாமே நார்மல் .....
எந்த மருந்துக்கும் பலனில்லை .
சாப்பிட்ட வுடன் ஒரு அரை மணி முதல் சில நாட்களில் இரண்டரை மணி நேரம் வரை கூட நீடிக்கும் .எந்த வேலையையும் செய்ய முடியாது.
பாடம் நடத்த புத்தகம் தூக்குவது கூட முடியாது .
எனவே அந்த கிளாஸுக்கான பாடத்தை ஜெராக்ஸ் எடுத்துக் கொள்வேன்.
ஒரு நாள் நான் என் தோழியுடன் தமிழ் நாடு டூரிஸமில்
கோயில்களுக்குப் போன போது இந்த மாதிரி சாப்பிட்டதும் வலி வந்தது .
கூட இருந்த ஒருவர் நீங்க கஞ்சி வடிச்சு சாப்பிடுங்க என்று சொன்னார் .
ஆனால் சாதம் வடிப்பது என்பது வடித்தட்டு வைத்தும் லேசில் சரி வர செட் ஆகலை .
பிறகு கறிகாய் வடிகட்டி கொண்டு வடித்து இப்போது செட் ஆகி சாதம் வடிக்க வந்துவிட்டது .
கிட்டத்தட்ட ஒரு மாதமாக வடித்த சாதம்தான் .
ஒரே நாளில் குறையவில்லை .
படிப்படியாகத்தான் குறைந்தது.
அவ்வளவாக வயிற்று வலி வருவதில்லை .
பழைய சமையல் முறை மறுபடியும் வருவேன் என்று வீர வசனம் பேசிக்கொண்டு வந்து விட்டது.
நானும் நிறைய பேரிடம் குக்கர் சாதம் இல்லாமல் வடித்த சாதமே ரெகமண்டு பண்ணுகிறேன்.
டிஸ்கி : வயிற்றில் பிரச்னை இருப்பவர்கள் முடிந்தவரை வடித்த சாதம் சாப்பிடுவதை வாழ்க்கை முறையாக மாற்றவும் .









