Sunday, 7 January 2018

பழையன கழிதலும் மறுபடியும் அதே பழையன புகுதலும


  எல்லோரும்  மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது ,

மாற்றம்   ஒன்றே நிரந்தரம் ,

.மாறாதது என்று கூவிக்கொண்டு இருக்கையில்

 நான் இப்போது பழையனவற்றைப்   புகுத்தவே  இந்தப் பதிவு   எழுதுகிறேன்.

 இதைப்  பழையனவற்றுக்கான ஒரு  "மான் கி பாத் "பதிவு என்று கூடச் சொல்லலாம்.

 நான் பள்ளிக்கூடம் படிக்கும் போது எல்லா பத்திரிகைகள்   ரேடியோ

 போன்றவற்றில் குக்கரில் சாதம் வடிப்பது தான் நல்லது .

 சத்தெல்லாம் கஞ்சியில் போய் விடுகிறது ,

 நாமெல்லாம் வெறும் சக்கையை மட்டும் தான் சாப்பிடுகிறோம் ,

 எரி பொருள் மிச்சம் ,

சமையல் நேரம் பாதியாகக் குறையும்

என்று ஓவராக சவுண்டு கொடுக்க,

 நான் சத்தே இல்லாத சாதம் சாப்பிடுவதால் தான் ஒல்லியாக இருப்பதாக வீட்டில் ஓயாத  பிரசங்கமே பண்ணினேன் .

 நம் வாழ்க்கை முறையை மாத்தணும் என்றெல்லாம் டயலாக்  அடித்தேன் .

கிட்டத்தட்ட  நான் எங்கள் வீட்டில்  உள்ளிருப்புப்
 போராட்டம் நடத்திக்  குக்கரை வாங்க வைத்தேன் .

யாருக்குமே அந்த சமையல் பிடிக்கவில்லை என்னையும் சேர்த்துத் தான் .

.ஆனாலும் உடம்புக்கு நல்ல விஷயமெல்லாம்   அப்படித்தான் ருசியில்லாம இருக்கும் என்று பொழிப்புரை பதவுரை எல்லாம் சொன்னேன் .

பிறகு என் அம்மாவிற்கு வயிற்றில்  தாங்க  முடியாத வலி வர  மண் பானையில் சாதம் மட்டும் சமைக்க ஆரம்பித்தோம்  .

 வலி கொஞ்சம் குறைந்ததது .

அப்போது கூட குக்கர் சாதம் தான் காரணம் என்று யாருக்கும்  தோன்றவில்லை .

ஆனாலும் என் அக்காவுக்குக்  கல்யாணம் பேச வருபவர்கள் மண் பானையில் சமைத்தால் நம்மளை மதிக்க மாட்டார்கள் என்று சிலர் சொல்ல மறுபடியும் " குக்கர்" ராணி மாதிரி வந்து அடுப்பிலே  ஏறி உக்காந்துக்கிச்சு.


எனக்கும் வயிற்றில் ஒரு சங்கடம் இருந்து கொண்டே இருந்தது . ஆனால் சின்ன வயது என்பதால் அதன் தாக்கம் தாங்கிக் கொள்ளும் படி இருந்தது .

நான் எப்பொழுதுமே  மிகவும்  குறைவாகத்தான் சாப்பிடுவேன்  எனவே வயிறு வலிக்கான காரணம் அதுதான் என்றும்
பிறகு என் தாய் இறந்த பின் அம்மா மாதிரியே எனக்கும் வலி என்று முடிவு கட்டிவிட்டு   வலி வரும்போது சோடா சாப்பிடுவேன் .

 பிறகு  எலக்ட்ரிக்  அரிசி குக்கர் சாதம் சாப்பிட்ட பின்னும் வலி குறையவில்லை .ஆனாலும் தாங்குகிற வலிதான்.

தாங்க முடியாத வயிற்று வலி என்பது கிட்டத்தட்ட எல்லா நாட்களுமே 2003ம்  வருடத்திலிருந்து வந்தது .

பல டாக்டர்கள்  ஆயுர் வேதம் அல்லோபதி எல்லாமே .....
பெரிய டாக்டர்கள் ....
பல ஸ்கென்கள்....

லிவர் மட்டும் கொஞ்சம்  ஆம் கொஞ்சமே பெரிதாக உள்ளது ..
மாத்திரைகள் .....

மற்றபடி எல்லாமே நார்மல் .....

எந்த மருந்துக்கும்  பலனில்லை .

சாப்பிட்ட வுடன் ஒரு அரை மணி முதல்  சில நாட்களில் இரண்டரை மணி நேரம் வரை கூட  நீடிக்கும் .எந்த வேலையையும் செய்ய முடியாது.

பாடம் நடத்த புத்தகம் தூக்குவது கூட முடியாது  .

எனவே அந்த கிளாஸுக்கான பாடத்தை ஜெராக்ஸ்  எடுத்துக் கொள்வேன்.

ஒரு நாள்  நான் என் தோழியுடன் தமிழ் நாடு டூரிஸமில்  
கோயில்களுக்குப் போன போது இந்த மாதிரி சாப்பிட்டதும் வலி வந்தது .

 கூட இருந்த  ஒருவர்  நீங்க கஞ்சி வடிச்சு சாப்பிடுங்க என்று சொன்னார் .

ஆனால் சாதம் வடிப்பது என்பது வடித்தட்டு  வைத்தும் லேசில் சரி வர செட் ஆகலை .
பிறகு கறிகாய் வடிகட்டி கொண்டு வடித்து  இப்போது செட்   ஆகி சாதம்  வடிக்க வந்துவிட்டது .

கிட்டத்தட்ட  ஒரு மாதமாக வடித்த சாதம்தான் .

ஒரே நாளில் குறையவில்லை .

படிப்படியாகத்தான்  குறைந்தது.

 அவ்வளவாக வயிற்று வலி வருவதில்லை .

 பழைய  சமையல் முறை மறுபடியும் வருவேன் என்று வீர வசனம் பேசிக்கொண்டு வந்து விட்டது.
நானும் நிறைய பேரிடம்  குக்கர் சாதம் இல்லாமல் வடித்த சாதமே ரெகமண்டு  பண்ணுகிறேன்.



டிஸ்கி :  வயிற்றில்  பிரச்னை இருப்பவர்கள் முடிந்தவரை வடித்த சாதம் சாப்பிடுவதை வாழ்க்கை முறையாக மாற்றவும் .

17 comments:

  1. //மண் பானையில் சாதம் வடித்தால் கௌரவக்குறைவு//

    சமூகம் எவ்வளவு இழிவாக சிந்திக்கிறது... இன்று ஸ்டார் ஹோட்டல்களில் இதுதான் ஃபேஷன்.

    ReplyDelete
    Replies
    1. மண் பானை சமையல் மட்டுமல்ல கையில் தங்க வளையல் போடாதது கூடத்தான். நான் விசேஷங்கள் தவிர தங்க வளையல் போடுவதில்லை

      Delete

    2. கண்ணாடி வளையல் மட்டுமே

      Delete
  2. இனிமேல் உடம்பு வணங்காது, இட்லிக்கு குக்கர், பால் காய குக்கர், சோற்றுக்கு குக்கர் குக்கர் இல்லாத வீடு நிக்காது குக்கர் வாங்கி தராத கணவர்மார்களை வாசலில் நிற்க வைத்து விடுவார்கள். சமீபமாக ”ஜெயித்தது நிஜமல்ல குக்கர்தானே”

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.எனக்கும் சாதம் வடிப்பது செட் ஆக டயம் எடுத்தது

      Delete
  3. நாங்கள் பிரஷர் குக்கரை பயன்படுத்துவது சாம்பாருக்கு பருப்பு வேக வைக்க மட்டுமே... சாதம் எல்லாம் வடித்துதான் சாப்பிடுகிறோம்.. வடித்த சாதம் சாப்பிட்டு பழகிவிட்டால் குக்கர் சாதம் பிடிக்கவே பிடிக்காது..... விருந்தினர் வரும் போது மட்டும் வெரைட்டி சாதம் பண்ன எலக்ட் ரிக் குக்கர் பயன்படுத்துகிறோம்...


    ஆமாம் சாதம் வடிப்பது மிகவும் எளிது ஆனால் நீங்கள் அதை வடிப்பது கடினம் என்பது போல எழுதி இருக்கிறீர்கள் அது உண்மைதானா?

    ReplyDelete
    Replies
    1. நான் கிட்டத்தட்ட ௨௦ வருடங்களுக்கு மேல் எலக்ட்ரிக் குக்கரில்தான் ,சாதம் ,குழம்பு ,பருப்பு ,கூட்டு வேக வைப்பது எல்லாமே . ( பிரஷர் குக்கர் காஸ்கெட் போகும் , விசிலடிக்கும் , அது எத்தனை விசில் என்று கணக்கு
      வைத்துக் கொள்ளவேண்டும் . ஆனால் எலக்ட்ரிக் அடுப்பில் வைத்து விட்டால் போதும் நாம் எதுவுமே செய்யத் தேவை இல்லை . மிச்ச வேலைகளில் கவனம் செலுத்தலாம். அப்படியே பழகிய எனக்கு டக்கென்று மாறுவது சிரமமாகத்தான் இருக்கிறது

      Delete
  4. எனக்கும் குக்கர் சாதம் கொஞ்சம் கூட பிடிக்காது..எல்லோர் வீட்டிலும் மாறினால் மகிழ்ச்சியே.

    ReplyDelete
    Replies
    1. பிரஷர் குக்கர் சாதம் எனக்கும் பிடிக்காது . ஆனால் எலக்ட்ரிக் குக்கர் சாதம் பிடிக்கும் , வடித்த சாதத்தை விடவும் ருசியாக இருப்பதாக என் நினைப்பு

      Delete
  5. நல்ல யோசனை. நல்ல விஷயமும் கூட, அந்நாளில் வடித்த கஞ்சியை மோர், உப்புப் போட்டு குடித்து விடுவோம். சமயங்களில் டபராவில் கரித் தன்னால் போட்டு அயன் செய்கையில் காஞ்சி தெளித்து உபயோகப்படுத்தி இருக்கிறேன்!

    ஆனால் ஒரு விஷயம்.. எல்லா மருத்துவமும் எல்லோருக்கும் பொதுவல்ல! மைக்ரேன் விஷயத்தில் என் அனுபவ உண்மை இது!

    ReplyDelete
    Replies
    1. ஆம் நீங்கள் சொல்வது சரியே . எல்லா மருத்துவமும் எல்லாருக்கும் பொருந்தாது

      Delete
  6. என் வீட்டிலும் முன்பெல்லாம் இப்படி கஞ்சி வடித்து தான் சாதம். இப்போது பலரும் மாறி விட்டார்கள். மண் பானை சமையல் நல்லது.

    மான் கி பாத் - மன் கி பாத்!

    ReplyDelete
  7. மண் பானை சமையல் நல்லதுதான் , ஆனால் அதன் பிறகு பானையைச் சுத்தம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும்

    ReplyDelete
  8. मन की बात தான் . டைப் செய்யும் போது கவனிக்க வில்லை

    ReplyDelete
  9. எங்க வீட்டுல எப்பவுமே வடிச்ச சாதம் தான் ரெட் ரைஸ் நாலும் சரி...சாப்பாகு புழுங்கரிசினாலும் சரி..வெள்ளை அரிசினா புழுங்கலரிசிதான் யூஸ் பண்ணறேன்...பொதுவா ரெட் ரைஸ் தான் கேரளா ரைஸ்தான் கலந்த சாதம், பொங்கல்னாத்தான் வெள்ளை...அப்புறம் தினை சாமை எல்லாம் ரொம்ப வருஷமா..இப்பத்தான் ரெட் ரைஸ் தினை சாமை, வரகு நு புக் புக்கா எழுதறாங்க...அப்படி எழுதி விலையையும் ஏத்திவிட்டுட்டாங்க புண்ணியவான்கள்..ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
  10. கேரளா சிகப்பு அரிசியையும் கூட வடித்துதான்
    சாப்பிடுகிறீர்களா ? நிச்சயமாகப் பொறுமையின் சிகரம் தான் நீங்கள் .

    ReplyDelete
  11. செட்டிநாட்டில் வடித்த கஞ்சியை சமையலுக்கும் பயன்படுத்தியுள்ளார்கள். அவசர யுகத்தில் சாதம் வடித்தல் ஒரு அருகிவிட்ட பழக்கமாகிவிட்டது. பிரஷர் குக்கர் போய் ரைஸ் குக்கர் வந்துவிட்டது. காலத்துக்கேற்ற மாற்றங்கள் இன்றியமையாதது. போலும்..நன்றி.

    ReplyDelete