இட்லி என்றாலே வட இந்தியர்கள் சாம்பாரோடு சேர்ந்த ஒரு செமி திரவ உணவு வகையாகத்தான் பார்ப்பார்கள் . வெள்ளந்தியாகச் சொல்வதென்றால் ரெண்டையும் ஒண்ணா ராவா மிக்ஸ் அடிச்சுச் சாப்பிடற ஒரு உணவு . என்பதே அவர்களின் திண்ணமான எண்ணமாக இருந்தது ஒரு 40 வருடம் முன்பு
டெல்லியில் இருக்கும்போது தென்னிந்தியர்கள். லஞ்சுக்கு மிளகாய்ப் பொடியோ அல்லது சட்னியோ தொட்டுக்கொள்ள எடுத்துக் கொண்டு போனால் என்னவோ செய்யக்க கூடாத ஒன்றை நாங்கள் செய்து விட்ட மாதிரி சொல்லப் போனால் ஜோடி மாற்றி விட்ட குற்றம் புரிந்த மாதிரித் தான் வட இந்தியர் கள் பார்ப்பார்கள் .
ஒரு நாள் மதியம் லஞ்சுக்கு இட்லி பொடி எடுத்துக் கொண்டு போய் இருந்தேன் .அது பொல பொல எனப் பொடியாக எண்ணெய் எதுவும் விடாமல் சாப்பிடும் ஒரு புது மாதிரியான பொடி . கூட அமர்ந்து சாப்பிட்ட வட இந்திய ஆபீஸ் மக்கள் இது என்ன இப்படி இருக்கு ? என்றனர் .
இது "மோர் மிளாகாப் பொடி" என்றதும் அவர்களால் இதை ஓத்துக்கொள்ளவே முடியவில்லை .
கூட இருந்த தென்னிந்தியர் ஒருவர் சாப்பிட்டு ஆஹா சூப்பர் டேஸ்ட்டு அற்புதம் என்கிறார் . என்னென்ன வைத்து செய்தீர்கள் என்றார்.
சொன்னதும் Ingredients ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமே இல்லாமல் இருக்கு என்று வட இந்தியர்கள் பொடியைப் புறந்தள்ளிவிட்டார் கள்.
என் பிரகாரம் இது இட்லி ஃ பிரண்டலி காம்பினேஷன்
எனக்கு சப்போர்ட்டாக தென்னிந்திய சக ஊழியர் ஒருவர் தமிழனின் அற்புதக் கண்டுபிடிப்பே இந்த இட்லி யும் அதை அரைக்க அவன் கண்டுபிடித்த கிரைண்டரும் தான் .
அவற்றைக் கண்டு பிடித்த அதே தமிழன் கண்டு பிடித்த delicious மோர் மிளகாய்ப்பொடியை நீ குறை சொல்வதா? பொங்கி விட்டார் என் சப்போர்ட்டர்.
வட இந்தியர்களோ பொடிக்கு உபயோகித்த பொருட்கள் காம்பினேஷன் சரியில்லை என்றனர் .
உடனே கோபம் பொத்துக் கொண்டு வந்த எனது கட்சிக்காரர் நீ” என்ன சாமான்களை வறுத்துக் கொடுத்தாயா அரைத்து கொடுத்தாயா அவங்க செஞ்ச புரோஸிஜரை நீ பார்த்தாயா இல்ல சாப்பிட்டுத்தான் பார்த்தாயா ?
எதுவுமே செய்யாமல் குறை கூறுவதா” ரேஞ்சில் குமுறிவிட்டார்
இதுவும் இட்லிக்கு ஏத்த காம்பினேஷன் தான் என்று சொன்னாலும் “பத்தாம் வாய்ப்பாட்டில் கடைசி நம்பர் சைபரில் தான் முடியணும் இட்லி என்றால் சாம்பாரில் தான் முடியணும் என்று அடித்து ஆணித்தரமாக வாதிட்ட வட இந்தியர்கள் எதிர்க் கட்சி .
இட்லியை சாம்பாருடன் சேர்த்து. என்கிற பல்லவியையே திரும்பத் திரும்ப கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி வட இந்தியர் கள் குரூப் சொல்ல
அதாவது இட்லிக்கு சாம்பார் தவிர மற்ற கொத்சு பொடி சட்னி எல்லாமே பகை வீடு என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டமாதிரி பேசினார்கள்
சாப்பாட்டை விட எங்க ரெண்டு குரூப்போட காச்சு மூச்சே கார சாரமாக இருந்தது
வாக்கு வாதம் நீடித்தும் அவர்களை கன்வின்ஸ் பண்ணவே முடியவில்லை .
நாங்க சட்னி பொடிக்கெல்லாம் சப்போர்ட் பண்றதப் பாத்துட்டு எங்களை எல்லாம் Enemies of Sambar என்று செல்லப் பேர் வேறு வைத்து விட்டார்கள்
போகட்டும் கழுதைக்குத் தெரியுமா என்கிற பழமொழியை நினைவு படுத்திக் கொண்டு அன்றைய லஞ்சை முடித்தோம்
இப்பொழுது எல்லாம் பல இடங்களுக்கும் அவர்கள் குரூப் டூரில் மற்றும் கம்பெனி L. T C யில் தென்னிந்தியா வந்து போனதால் கொஞ்சம் மாறிவிட்டார்கள் . இதை நான் திரும்பவும் 1998ல் என் கணவரின் டெல்லி ட்ரான்ஸ்பரால் ஒரு மாதம் குழந்தைகளுடன் கோடை விடுமுறை க்கு அங்கே தங்கி இருந்த போது அவர்களின் உணவுப் பழக்கங்களில் Taste களில் பெரிய மாற்றம் இருப்பதை உணர்ந்தேன்
லஞ்சு பட்டி மன்றத்தில் கார சாரமாக விவாதிக்கப் பட்ட அந்த இட்லி பொடி இதுதான் .
தேவையான பொருட்கள் :
தேங்காய் துருவல் 1 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை 3 டேபிள் ஸ்பூன்
அல்லது
வேர்க்கடலை 3 டேபிள் ஸ்பூன்
பூண்டு 10 -15 பற்கள்
மோர் மிளகாய் காரத்திற்கேற்ப
வெள்ளை எள்ளு 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் ஒரு ஸ்பூன்
மோர் மிளகாயில் உப்பு இருப்பதால் உப்பு சேர்க்க வேண்டாம் . தேவைப்பட்டால் மட்டுமே சேர்க்கவும்
இவை எல்லாவற்றையும் தனித்தனியாகக் கீழே உள்ளபடி எண்ணெய் விடாமல் சிவக்க ஆனால் தீய்ந்து விடாமல் வறுக்க வேண்டும் .
பிறகு ஆறிய பின் மிக்சியில் இட்டு அரைக்க வேண்டும் .
இதன் ஸ்பெஷல் என்னவென்றால் இதற்கு நல்லெண்ணெய் போன்ற மிக்சிங் எண்ணெய் தேவை இல்லை .
அப்படியே சாப்பிட்டால் தான் இந்தப் பொடியின் காரம் மணம் குணம் எல்லாவற்றையும் ருசிக்க முடியும் . .
இந்த சட்னியின் இன்னொரு ஸ்பெஷல் பாயிண்ட் என்னவென்றால் இதிலே தண்ணீர் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து கொட்டினால் சட்னியாக உருமாறிவிடும் ,
சாதத்தில் போட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம் .ஒரு வாரம் பத்து நாள் வரை இருக்கும். கெடாது
இப்ப சொல்லுங்க இட்லிக்கு சாம்பார் பகையானால் அதை சாப்பிட வேறே வழி உண்டல்லவா
மோர் மிளகாய் எத்தனை என்று குறிப்பிட்டிருக்கலாம். நீங்க 10னு சொன்னால், காரத்திற்கேற்ப நாங்க முடிவு செய்துக்கலாம்.
ReplyDeleteஇதில் பூண்டைக் கழற்றிவிட்டுவிட்டு செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
நெல்லை உங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவரிடம் தான் தெரிந்து கொண்டேன். அவர் அம்மியில் வைத்து பொடித்து...செம டேஸ்ட்..மத்தது கீழே கருத்தில் சொல்லியிருக்கிறேன்.
Deleteகீதா
வருகைக்கு நன்றி .காரத்திற்கேற்ப என்பது safe ஆன வார்த்தை மிளகாய் காரம் வேறு படுமில்லையா. . நான் பூண்டு போடாமல் செய்ததில்லை
ReplyDeleteநானும் அந்த வட இந்தியர்கள் போலத்தான் இட்லிக்கு சாம்பார் கோஷ்டி
ReplyDeleteஆஹா சூப்பர் அருணா. ரொம்ப நாளாச்சு செய்து. மோர்மிளகாய் இல்லாததால்..செய்யவே இல்லை..
ReplyDeleteஇந்தப் பொடி அட்டகாசமான பொடி. இதை நான் திருவனந்தபுரத்தில் ஒரு மாமியிடம் கற்றுக் கொண்டேன். ஆனால் அவர் பொட்டுக்கடலை, பூண்டு பயன்படுத்த மாட்டார். அது போல மோர் மிளகாய் வெளியில் வாங்கியதைப் பயன்படுத்தமாட்டார். வீட்டில் தயாரிப்பதுதான் அதனால் உப்பு போடாமல் தான் மோர்மிளகாய் செய்வார் என்பதால் உப்பும் சேர்த்துக் கொள்வார் பொடியில். மத்ததெல்லாம் பயன்படுத்துவார். நிலக்கடலை இல்லை என்றால் உளுத்தம் பருப்பும் கடலைப்பருப்பும் சேர்த்துச் செய்யலாம் என்றும் சொல்லி அதுவும் செய்வார். அதுவும் நன்றாக இருக்கும்.
மோர்மிளகாய்ப்பொடி என் தம்பி மனைவியின் அம்மாவும் செய்து பார்த்திருக்கிறேன் ஆனால் அவர் உ.ப, க ப போட்டுச் செய்வார். பூண்டும் போட்டு. கூடவே கறிவேப்பிலையும். நிலக்கடலை/ பொட்டுக்கடலை போட்டுச் செய்ய மாட்டார் அவர்.
மகனுக்கு மிகவும் பிடித்த பொடி பூண்டு போட்டு
கீதா
தில்லி வாலாக்கள் - ஒரு பக்கெட் சாம்பாரில் இரண்டு இட்லி சேர்த்து அடித்துப் பழகியவர்கள். அவர்களுக்கு இந்தப் பொடியெல்லாம் பிடிக்காது - ஒரு சிலரைத் தவிர! இட்லி/தோசை மிளகாய்ப் பொடிக்கு UNI Canteen-இல் வட இந்தியர்கள் வைத்த பெயர் Gun Powder! அங்கே சாப்பிட்டுப் பார்த்த சில வட இந்தியர்கள் ருசிக்குப் பழகிய பின்னர் தொடர்ந்து கேட்டு வாங்கிச் சாப்பிட்டதுண்டு. பல கை மாறி, இப்போது அந்த உணவகம் சாப்பிடும்படியான உணவகமாக இல்லை என்பது வேதனை! முன்பெல்லாம் நிறைய பேர் அங்கே உணவு உண்பதற்காகவே செல்வதுண்டு!
ReplyDeleteகுறிப்பு மிகவும் அருமை! செய்து பார்க்கிறேன். ஆனாலும் எல்லோரும் இங்கே அதைப்பற்றி பேசியும் எத்தனை மிளகாய் என்று மட்டும் சொல்லவே இல்லை!மோர் மிளகாய் நீளமானதும் இருக்கிறது. தஞ்சாவூர் குண்டு குடமிளகாயில் தான் நான் மோர் மிளகாய் செய்வேன். நீங்கள் எத்தனை மிளகாய் சேர்த்தீர்கள்?
ReplyDeleteஅருமை
ReplyDelete