Thursday 3 June 2021

லாக் டவுனில் மக்கள் மனநிலை

 

 என்ன  எப்படி இருக்கீங்க ?  எப்படி பொழுது போகுதா ?

என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?

என்று போனில் யார்  கேட்டாலும்  வரும் பதில் கிட்டத்தட்ட

என்னமோ போய்கிட்டு இருக்கு  ஒண்ணும்    சொல்லறதுக்கு   இல்லை.

 சலிப்பான பதில் தான் வருது 

லாக் டவுன் ஆரம்பித்து ஒரு வருடம் ஆனபடியால்   வெளியே எங்கும் செல்ல முடிய வில்லை ,பண வசதி இல்லாதவர்களுக்கு  அன்றாடம் வாழ்க்கை நடத்துவதே பெரும் பாடாக இருக்கிறதுவேலை செய்ய மனம் இருக்கிறது .அவர்களுக்கு வேலை கொடுக்க கம்பெனிகள் தயாராக   இருந்தும் அவர்களால் எந்த பிஸினஸும் ஆரம்பிக்க முடியவில்லை . மைண்டு  வேலை செய்ய மாட்டேங்குது

  பண வசதி இருப்பவர்களுக்கு கடைக்கு  எங்கும் சென்று பிடித்த பொருட்கள் வாங்க முடியவில்லை .  ஆசைப் பட்ட தின்பண்டங்கள் வாங்கிச் சாப்பிடமுடியவில்லை  . நண்பர்கள் உறவினர்களை சந்திக்க முடிய வில்லை.ஒரே மாதிரியான வாழ்க்கையிலிருந்து ஒரு மாற்றத்திற்காக ஊர் சுத்த , சினிமா போக கடற்கரைப் பக்கம் போக எதுவும் முடியவில்லை

இப்பொழுதெல்லாம் கிட்டத்தட்ட ஒரு பழகி விட்ட  மன நிலைக்கு வந்து விட்டாலும் ஒரு எரிச்சல் நிறைய பேரிடம் பார்க்க முடிகிறது .

சின்ன வயசுப் பசங்க ஆன்லயன் கிளாசு எல்லாம் போரடிச்சுப்  போச்சு . எப்படா நேர ஸ்கூலிலோ இல்லை  காலேஜில  படிப்போமோ என்கிற மனநிலையில் தான் இருக்கின்றனர்

போன் வந்தாலும் எரிச்சலாக  இருக்கு . போன் வராவிட்டாலும் எரிச்சலாக இருக்கு  

டி   வி  நிகழ்ச்சிகள்  நியூஸ் எல்லாமே போரடிக்குது .

மனம் எதிலுமே ஒன்றாத நிலைமை . குழந்தைகளும்  இதற்கு விதிவிலக்கு இல்லை

சுருங்கச் சொன்னால் 


5 comments:

  1. உண்மை குழப்பமான வாழ்க்கை நிலையே...

    ReplyDelete
  2. டிட்டோ!

    வேலைக்குச் சென்றே ஆக வேண்டியவர்களின் பாடு இன்னும் சோகம்...லாக்டவுனில் வண்டி இல்லாமை, இ பாஸ், வெளியில் சென்று வருவதால் தொற்றின் பயம் என்று எல்லாமே இப்போ ஒரு குழப்பமான நிலைதான்..

    கீதா

    ReplyDelete
  3. குழப்பமான சூழல் தான். என்றைக்கு மாறும் இந்த நிலை என்ற எண்ணத்துடனேயே தான் இருந்து கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  4. படிப்பு என்பது புத்தகங்களில் இல்லை. அது பள்ளி கல்லூரிகளில், பலரைச் சந்திப்பதில் பழகுவதில் இருக்கிறது. இது எதுவுமே இல்லாமல் மானிட்டரைப் பார்த்துக்கொண்டு 1 1/2 வருடங்கள் ஓடிவிட்டன. இந்த கொரோனா தலைமுறை எப்படி இருக்கும், இதன் இம்பாக்ட் அவங்க வாழ்க்கையில் எப்படி இருக்கும் என்று புரிந்துகொள்ள முடியவில்லை.

    ReplyDelete
  5. இங்கே அந்த மாதிரி லாக் டவுன் இல்லை என்றாலும் கடந்த ஒன்னரை வருடமாக வீட்டிற்கு யாரையும் கூப்பிடவில்லை யார் வீட்டிற்கும் செல்லவும் இல்லை கடந்த வாரத்தில் இருந்துதான் பழையபடி ஆரம்பித்து நண்பர்களை சந்திக்க ஆரம்பித்து இருக்கிறோம். ஆனால் என்ன முதல் சந்திப்புக்கு ஏற்பாடு பண்னிய போது நான் வேலைக்கு செல்லும்படி யாகிவிட்டது. ஹும்ம்ம்ம்

    ReplyDelete