Friday 4 June 2021

வியட்நாமிஸ் ரைஸ் ரோல்

 

 நான் படித்த காலத் திலிருந்தே எனக்கு என்னமோ கீழை நாட்டு சரித்திரம் பற்றி தெரிந்து கொள்ள ஆசை . ஏனெனில் நாம் பள்ளி சிலபஸ் என்பது ஆங்கிலேயர்களால் தயாரிக்கப் பட்டது . அதாவது நாம் உலக சரித்திரத்தில் என்ன படிக்க வேண்டும் என்பது அவர்களால் தீர்ர்மானிக்கப் பட்டது . ஏழாண்டுப் போர் நெப்போலியன் பற்றி எல்லாம் படிக்கும் போது என்னடா வியட்னாம் ஜப்பான் மலேஷியா இங்கே எல்லாம் ஒண்ணுமே சண்டை போடாமல் அமைதிப் புறாவாவா இருந்தாங்களா என்ன ? . ஐரோப்பா அமெரிக்கா இங்கே மட்டும் தான் ஓயாம சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்களா சண்டை எதுவுமே  நடக்கலையா

தென்  கிழக்கு ஆசியா முழுக்க ஒரே அமைதியாஇருந்துச்சா  என்ன அப்படீன்னு நினைப்பேன் .

டீச்சர்  கிட்டே இல்லாட்டி வீட்டிலே கேட்டா என்ன சொல்லுவாங்க ,  பரீட்சைக்கு என்ன இருக்கோ அதை முதலில் படி. அப்பறம் அந்த வெட்டிக் கதை எல்லாம் பாக்கலாம் அப்படீம்பாங்க .

சரி பசங்களோட சேந்து இந்த விஷயம் பத்தி பேசுனா " ஏய் வாயை மூடிக்கிட்டு  கம்முனு கிட . அப்புறம் அந்த டீச்சர் அது பாட்டுக்கு போர்ஷனை ஜாஸ்தி ஆக்கி  உட்டுடுச்சுன்னாக்க வம்பு " அப்படீன்னாங்க

அப்புறம் வளர்ந்தப்புறம் அந்த ஆசை  எல்லாம் ஒரு ஓரம் கட்டி வச்சிருந்தேன் .

வேலைக்கு வந்த பின் சரித்திர ஆசை  எல்லாம் எங்கோ  போய்விட்டது . சமையல் ஆசை சாப்பாட்டு  ஆசை வந்து விட்டது

பிறகு ஜப்பானிய மொழி படித்த போது  அவர்கள் சமையல் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது .

மேலும் அவர்கள்  இங்கு  வரும் போது  எல்லாம்  ஜப்பானிய  உணவகங்களில்   அல்லது கொரியன்  உணவகங்களில் சாப்பிடுவார்கள் .

SEOUL STORE SRIPERUMBUDUR  ல்  கொரியன்  ஜப்பானிய தானியங்கள் மற்றும் சில உணவு வகைகள் வாங்குவார்கள் . பார்த்திருக்கிறேன் . வியட்னாம் உணவு  வகைகளும் பார்த்து இருக்கிறேன் . அதில் எனக்குப் பிடித்தது வியட்நாமிஸ்  ரைஸ் ரோல் .

 செய்வது ரொம்பவே ஈஸி . ரைஸ் ரோல் நட்ஸ் அண்ட் ஸ்பைசசில்

(Nuts and Spices ) கிடைக்கிறது

அந்த அரிசி ரோலை ஒரே ஒரு செகண்டு  மட்டுமே  மிதமான சூடு உள்ள வெந்நீரில் நனைத்து விட்டு அதன் உள்ளே நாம் எதை வேணுமானாலும் 

ஸ்டப் செய்து  விடணும் .

பிறகு சுருட்டி ரோல் மாதிரி பண்ணி விடணும் .

ஜோலி ஆச்சு அவ்வளவே .

 மேலே இருப்பது நான் செய்தது .நான் செய்தது. கொஞ்சம் முன்னே பின்னே தான் இருக்கும்


 நிஜ அதாவது ஒரிஜினல் இருட்டுக்கடை அல்வா மாதிரி ஒரிஜினல் வியட்நாமிஸ்  ரைஸ் ரோல்  கீழே உள்ளது .

வியட்நாமில் செய்யப் பட்டது . அதாகப் பட்டது கூகிளில் இருந்து சுட்டது



9 comments:

  1. பார்க்க, நான் செய்யும் கேரட் சேர்ந்த உப்புமா கொழுக்கட்டை மாதிரி இருக்கு என்றால் யாருக்குக் கோபம் வருதோ இல்லையோ வியட்நாமீஸுக்கு கோபம் வந்துவிடப்போகிறது.

    தெரியாத உணவு. பார்க்க அழகா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஹலோ நான் சொல்ல நினைத்ததை எனக்கு முன்னால் வந்து சொல்லீடீங்களே நெல்லைதமிழரே

      Delete
    2. வருகைக்கு நன்றி . நீங்க சொல்றது ரொம்பவே கரெக்ட் . இதெல்லாம் சும்மா ஒரு ஜாலிக்குப் பண்றதுதான்

      Delete
  2. அதாகப் பட்டது கூகிளில் இருந்து சுட்டது 😂👌👍

    ReplyDelete
  3. கொழுக்கட்டை மாதிரி தான் இருக்கு! சுவைத்துப் பார்க்க வேண்டும்! :) சென்னைக்கு ஒரு ட்ரிப் அடிக்கலாம்னா எங்க! :(

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி . இந்த ஈ பாஸ் கொரோனா கால கட்டத்தில் இதுக்காகவெல்லாம் சென்னை வர வேண்டிய அவசியம் இல்லை ஆன் லயனில் நிறைய பிராண்டுகளில் கிடைக்கிறது .Vietnamese Rice roll sheet என்று தேடுங்கள் . இதில் போட்டோவை காபி பேஸ்ட் பண்ணாத தெரியவில்லை எனக்கு

    ReplyDelete