பேர் பார்த்தால் எதோ அசைவ உணவு மாதிரி தெரிகிறதே, தேனீ எல்லாம் பிடித்துக் கொண்டு வரணும் என்றெல்லாம் நினைக்க வேண்டாம் , பார்ப்பதற்கு தேனீ மாதிரி இருக்கும் அவ்வளவே . இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நாம் கத்திரிக்காய் பொறுக்கும் போது இது மாதிரியான கத்திரிக்காய்களாகப் பொறுக்கவேண்டும் .
நறுக்கும் போதும் கொஞ்சம்
கவனத்துடன் பிளந்த மாதிரியாகக்
கட் பண்ணனும் .
சரி இப்போது எப்படிச் செய்வது
என்று பார்ப்போம்.
முதலில் மசாலா நமக்குப்
பிடித்த மாதிரி எப்படி வேண்டுமானாலும்
செய்து கொள்ளலாம் . தக்காளி
போடாமல் பிரவுன் கலரிலும்
போடலாம்.
எனக்குத் தக்காளி போட்டால் பிடிக்கும்
என்பதால் வெங்காயம் தக்காளி பூண்டு
இஞ்சி இவை
நான்கையும் நன்றாக கட்
பண்ணி அதை மிக்சியில்
அரைத்து வாணலியில்
எண்ணெய் விட்டு ஒரு அரை
மணி நேரம் ஓரங்களில்
எண்ணெய் கக்கும் வரை
வதக்கி வைத்துக்கொள்ளுவேன் . இது
சுமார் ஒரு வாரம்
வரை பிரிட்ஜில் வைத்து
தேவைப் பட்ட போது
உபயோகித்துக் கொள்வேன் .
அதைத் தவிர கலர்
காம்பினேஷன் நன்றாக எடுப்பாக
இருக்கும் எனவே நான்
இந்த மசாலாவைத் தேர்ந்தெடுத்தேன்..
கத்திரிக்காயை
முழுவதும் நறுக்காமல் கீறிக்கொள்ளவேண்டும் . கீறிய
இடங்களில் இந்த மசாலாவை கீழே
உள்ள படத்தில் காட்டிய
படி நிரப்ப வேண்டும்
பிறகு இதை வாணலியில்
வைத்து வதக்கும் போதும்
போட்டு பொங்கல் மாதிரி
கிண்டிக் கொண்டு இருந்தால்
தேனீ ஷேப் கிடைக்காது
கெட்டியான கொத்சு மாதிரி
இருக்கும் . அதாவது தேனீ பறந்து
விடும்.
நான் இந்த
மசாலா நிரப்பிய கத்திரிக்காயை ஒரு
அகலமான பாத்திரத்தில் இட்டு.
பானசானிக் குக்கரில் மூடி
போடாமல் வேக வைப்பேன்.
.
அவ்வளவாகத் திருப்பிப் போட மாட்டேன்
. பிறகு கடைசியாக வாணலியில்
லேசாக எண்ணெய் விட்டு
மிக மிக லேசாக ஒரு
பிரட்டு பிரட்டி எடுத்தால்
தேனீ க் கத்திரிக்காய்
ரெடி.
பொடி அடைத்த கரேமதுவிற்குப் பதிலாக, மசாலாவை அடைத்த கத்தரி. கத்தரிக்காயைப் பிளக்கும் விதமும் வித்தியாசமாகவும் அழகாகவும் உள்ளது. பூண்டு இஞ்சியைக் கழற்றிவிட்டுவிட்டு, சிறிது மாறுதலோடு மசாலா செய்துபார்க்கிறேன். ஆனால் அழகாக இருக்கிறது
ReplyDeleteவருகைக்கு நன்றி, இது எல்லாம் அதே same ingrdients .ஷேப் மட்டும் வேறே , பாக்க வித்தியாசமாக இருக்கும் .அவ்வளவே
Deleteநன்றாக இருக்கிறது. முயற்சி செய்யத் தூண்டும் படங்கள்.
ReplyDeleteவருகைக்கு நன்றி,
Deleteசூப்பராக இருக்கு அருணா. நல்லா இருக்கு. பார்க்கவே அழகா இருக்கு. வெரி க்ரியேட்டிவ்!
ReplyDelete.நான் இந்தக் கத்தரிக்காய் விரும்பி வாங்குவதுண்டு. அல்லது இதே கலரில் இதே போல மழு மழுன்னு கொஞ்சம் சின்னதா குண்டா இருக்குமே அது வாங்குவது.
இப்படி வெட்டி வெஜிட்டபிள் அரேன்மென்ட்டுக்கு செய்தது நினைவு வருது. இடையில் சிவப்பு மிளகாய் தூள் தேய்த்து மெதுவாக வளைத்து இரு நுனிகளையும் சேர்த்து குச்சி செருகி நடுவில் வெங்காயம் இதழாகப் பிரித்து அல்லது தக்காளி முழுவதும் கட் செய்யாமல் இதழ் போல வெட்டி என்று..
இதன் நடுவில் ஆந்திரா மசாலா ஸ்டஃப் செய்தாலும் செம டேஸ்டியா இருக்கும். இதே போல பாகற்காய்லயும் நல்லாருக்கும்..பிஞ்சா இருந்தா அப்படியே செய்யலாம் இல்லைனா இடைவெளி வழியே விதை எடுத்துட்டு செஞ்சா நல்லா வரும்.
வெங்காயம் தக்காளியை பச்சையாக அரைத்து வதற்க்குவதற்குப் பதில் கொஞ்சம் எண்ணை விட்டு வதக்கி விட்டு அரைத்து அப்புறம் கொஞ்சமா எண்ணையில் மெதுவாக வதக்கினால் அத்தனை எண்ணை இழுக்காம வருதுனு நான் அப்படிச் செய்வதுண்டு.
கீதா
வருகைக்கு நன்றி,
Deleteவெங்காயம் தக்காளியை பச்சையாக அரைத்து வதற்க்குவதற்குப் பதில் கொஞ்சம் எண்ணை விட்டு வதக்கி விட்டு அரைத்து அப்புறம் கொஞ்சமா எண்ணையில் மெதுவாக வதக்கினால் அத்தனை எண்ணை இழுக்காம வருதுனு நான் அப்படிச் செய்வதுண்டு.
நீங்க சொன்ன மாதிரி செய்து பார்க்கிறேன்
எடை குறையவும் சர்க்கரை கட்டுப்படுத்தவும் கத்தரிக்காய் அவசியம் நிறைய சாப்பிட வேண்டும். சாதாரணமாகவே சுவையான காயாக இருப்பதால் கத்தரிக்காய் is on top of my daily food list. வெண்டைக்காய் போல கத்தரிக்காய் அலோபதி மருந்துகளுடன் ஒத்துழையாமை இயக்கம் தொடங்குவதில்லை. அதனால் கத்தரிக்காயோடு நான் என்றைக்குமே பழம்.
ReplyDeleteஇது போல் தரமான செய்முறைகள் இன்னும் சுவை.
வருகைக்கு நன்றி,
Deleteஎனக்கும் கத்திரிக்காய் ரொம்பப் பிடிக்கும் . மாட்டு எல்லாம் சோர்வாக இருந்தால் சொத்தைக் கத்திரிக்காய் எல்லாம் அதுக்குக் குடுப்பாங்களாம் .instant energy கொடுக்குமாம்
மாடு என்று படிக்கவும் மாட்டு இல்லை
Deleteஎடை குறையவும் சர்க்கரை கட்டுப்படுத்தவும் கத்தரிக்காய் அவசியம் நிறைய சாப்பிட வேண்டும். சாதாரணமாகவே சுவையான காயாக இருப்பதால் கத்தரிக்காய் is on top of my daily food list. வெண்டைக்காய் போல கத்தரிக்காய் அலோபதி மருந்துகளுடன் ஒத்துழையாமை இயக்கம் தொடங்குவதில்லை. அதனால் கத்தரிக்காயோடு நான் என்றைக்குமே பழம்.
ReplyDeleteஇது போல் தரமான செய்முறைகள் இன்னும் சுவை.
அருமை
ReplyDeleteநன்றி சகோதரி
சிறப்பான செய்முறை. படங்களும் அழகாக இருக்கிறது. செய்து பார்க்கத் தோன்றுகிறது.
ReplyDeleteதலைப்பைப் படிக்கும்போது நான் தேனீ என்று உயிரினத்தை நினைக்கவில்லை. ஊரை நினைத்தேன்!
ReplyDeleteஎன்றுமே கத்தரிக்காயின் ரசிகன் நான். அதுவும் இதுமாதிரி எல்லாம் வித்தியாசமாகச் செய்தால் சாப்பிட ஆசை வருகிறது.
ReplyDelete