நம்ம எல்லாருக்குமே இதுவரைக்கும் யாருமே செய்யாத ஒரு காரியம் செய்யணும்ன்னு ஆசை இருந்திருக்கும் . இதை நம்ம தான் கண்டு புடிச்சோம் . உலக வரலாற்றிலேயே முதல் முதலாக இங்குதான் செய்யப்பட்டது ,
செய்தவர் இவர்தான் என்கிற மாதிரி பேர் வரணும் அப்படியெல்லாம் நிச்சயமாக இருந்திருக்கும் . .
மத்தவங்க எப்படியோ தெரியாது எனக்கு நிச்சயமா இருந்திருக்கு
இது நாள் வரை அதற்கான கால நேரம் ஒத்து வரவில்லையா இல்லை கிரக நிலைகள் கோளாறா என்னவென்று தெரியவில்லை
என்னென்னவோ குட்டிக்கரணம் போட்டும் முடியவில்லை .
மனித குலம் படும் துயரங்களைக்
களைய வேண்டும் என்று ஒரு தீராத தாகம் .
எத்தனையோ ஏச்சும் பேச்சும்
மனிதர்கள் அனுபவித்தாலும் எல்லோராலும் நிச்சயமாகக்
கேட்கப் பட்டிருக்கும் ஏச்சு
"உனக்கெல்லாம் மூளையே கிடையாதா "
" வாயை
இவ்வளோ பெருசுக்கு வச்ச அந்த ஆண்டவன் உனக்கு மூளையை ஏன் வைக்க மறந்தான்
""
“பொறந்த அன்னைக்கே தெரியும்
அந்த டாக்டர் ஒழுங்கா செக் பண்ணாமல் என்கிட்டே கொடுத்துட்டா"
இப்படி சம்பந்த சம்பந்தம்
இல்லாமல் சகட்டு மேனிக்குத் திட்டுவாங்க
இது தவிர இந்த இந்த ஊரில் இருக்கறவங்களுக்கு , இந்த நாட்டில் இருக்கிறவங்களுக்கு எல்லாம் மூளையே கிடையாது . அவனுங்களே அப்படித்தான் மூளை இருந்தா அவன் ஏன் இப்படி இருக்கான் ?
அப்படீன்னு மூளையைப்
பற்றின அதாவது மூளை
இல்லை என்கிற ஒரு விஷயத்தைப் பற்றி
விலாவாரியப் பேசறாங்களே தவிர அதுக்கு
ஒரு தீர்வு இது
வரைக்கும் யாரும் கண்டு பிடிக்க
வில்லை .
அதாவது மூளை இல்லாதவங்களை
அப்படியே நடமாட
விட்டால் இது ஒரு
சமுதாயத்திற்கு நாட்டுக்கு எவ்வளவு கேடு
என்பதை யாரும் உணரவில்லை
.
இப்பக்கூட பாருங்க மாஸ்க்கை தாடி மாதிரி வச்சுக்கிட்டே பேசறவங்களைப் பாத்து "மூளை கெட்ட ஜென்மங்கள் "அப்படி எல்லாம் திட்டுறாங்களே தவிர இதுக்கு என்ன பண்ணனும் அப்படீன்னு யாருமே யோசிக்க வில்லை . கண்டு பிடிக்க முயற்சி செய்த மாதிரியும் தெரியவில்லை
.இப்படி இருந்தால் எப்படி
இந்த லாக்
டவுன் நேரத்தில் இதுக்கு நாமே
ஒரு தீர்வு கண்டு
பிடிக்கணும் என்று அதி
தீவிரமாக யோசித்தேன் .
முயன்றால் முடியாததும் உண்டோ /முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் இப்படியெல்லாம் எனக்கு நானே சொல்லிக் கொண்டு உசுப்பேத்திக்கிட்டேன் . அப்பாடா மனித குலம் மேம்பட ஒரு வழி பிறந்து விட்டது .
மூளை இல்லாதவர்கள் இனியும் கவலைப் படவேண்டாம்
இதோ இங்க பாருங்க
உங்களுக்காகவே பிரத்யேகமாக
ஆகா!
ReplyDeleteஇப்படி கொடுக்க முடிந்தால் இங்கே பலருக்கும் கொடுத்து விடலாம்! ஹாஹா...
ReplyDeleteநல்ல பகிர்வு.
பெரும்பாலான மக்கள் மூக்குக்கு கீழே தான் முககவசம் அணிகின்றனர். சமயத்திற்கேற்ற நல்ல பதிவு.சாதனை செய்து விட வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவதுதான் இயல்பு.
ReplyDeleteஹா... ஹா...
ReplyDeleteஇல்லாதோர்க்கு மூளை தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஎன் மூளை செர்வீசுக்குப் போயிருக்கு அருணா ஸோ இப்போதைக்கு இந்த மூளையை ஃபிக்ஸ் பண்ணிக்கிறேன் ஹா ஹா...பதிவு ரசித்தேன்...
ReplyDeleteமுட்டாள் - இந்த வார்த்தை அதை ஏன் கேக்கறீங்க..ஹா
அருணா இந்த் மூளை பற்றி நானும் ஒரு பதிவு போட்டேன் என் மூளை செர்வீசுக்குப் போயிருப்பது போல்...அதில் வரும் வரிகள்
//ஐயையோ! புரியவில்லை என்று மட்டும் மாந்தர்களிடையே சொல்லிவிடக் கூடாது. “உன் மூளை எங்கே போச்சு? முட்டாள்” என்று முத்திரை குத்தி விடுவார்கள்.
??????????
இப்படிக் கேள்விக் கணைகளும் கூடாது! அப்படித்தான். புரியவில்லை என்று, எப்போதோ சொன்ன அந்த வார்த்தையினால்....கேள்விகள் கேட்டதால் “அறிவு இருக்கா? மூளை கெட்ட ஜென்மம். உனக்கு மூளையே இல்லை. நோ காமன்சென்ஸ். புத்தி கெட்டவள். அறிவு வளரவே இல்லை. மூளை இருந்தாத்தானே வளரும். அறிவே இல்லாத முண்டம். முட்டாள். நீ எல்லாம் என்னத்த எழுதற? அறிவுதான் இல்லை. மெமரியாவது இருக்க வேண்டாம்? அதுவும் இல்லை. இவ எல்லாம் என்னத்தப் படிச்சுக் கிழிச்சாளோ. எம் ஏ வாம்.”//
கீதா
"கிழே கிடந்துச்சு இது உங்க மூளையா பாருங்க" என்று சமூக வலைத்தளங்களில் வலம் வருவதாக தோழி அபயா அருணா நகைச்சுவையுடன் சொல்லியிருந்தார். ஒரு வேளை அது கீதாவின் மூளையோ என்று பார்த்தால்.....அந்த மூளை சத்தியமாக கீதாவின் மூளை இல்லை என்பதையும் இங்குச் சொல்லிக் கொள்கின்றேன். ஹிஹிஹி...//
ReplyDeleteஇதுவும் அந்தப் பதிவில்தான்!!!
கீதா