சமையல் ரொம்ப ஈஸி
பொதுவா சமையல் என்றால் அடுப்புக்கிட்டே மறக்காம நின்னுகிட்டு வேலை பாத்தே ஆகணும் .
நின்று கொண்டு சமைக்க கால்கள் ஒத்துழையாமை இயக்கம் செய்கிறது
சில பேர் இப்ப எல்லாம் ஒபோஸ் சமையல் என்று செய்கிறார்கள் . நான் இதுவரை செய்து பார்த்த தில்லை .
ஆனால் நான் பல வருடங்களாக நேஷனல் பானசானிக் குக்கர் அதாவது1992-93 களிலிருந்து உபயோகப் படுத்திக் கொண்டு வருகிறேன் ,
முதலில் சாதம் சமைக்க மட்டும் தான் பயன்படுத்தினேன் . பிறகு பருப்பு காய் வகைகள் மசாலா வேகவைக்௧ என்று பலவற்றிற்கும் பயன் படுத்த ஆரம்பித்தேன் .
பிறகு ரவா கேசரி மற்றும் சில இனிப்புகள் செய்ய தக்காளி தொக்கு செய்ய என்று
விரிவு படுத்தினேன் .
இது தவிர வழக்கமாக இட்லி செய்யும் பாத்திரத்தில் இட்லி செய்ய அவ்வப்போது ஞாபக மறதியால் இட்லி வைக்கும் பாத்திரம் அடி பிடிக்க ஆரம்பித்த்தது.
லாக் டவுன் நேரம் உதவிக்கு ஆள் யாரும் இல்லாமல்
இந்தப் பாத்திரத்தையும் தேய்ப்பதற்குள் அப்பப்ப்பா..
போதும் போதும் என்று ஆகிவிட்டது . பிறகு இந்தக் குக்கரில் வைக்க ஆரம்பித்து விட்டேன்
.
இதே போல் பாலும் இன்டக்ஷன் ஸ்டவ்வில் தான் காய்ச்சுவேன் இருந்தாலும்
அதையும் என்னதான் மினிமம் பாயிண்டில் வைத்தாலும் சில சமயங்களில் பொங்கிவிடுகின்றது.
பிறகு டீ போடும் போதும் இதே பிரச்னை , அடுப்புக்கிட்டே வெட்டியா நின்னு
பாத்துகிட்டு இருக்க முடியலை . அப்புறம் பார்த்தேன் பால் டீ இன்னும் என்னவெல்லாம் இந்த அடுப்புக்குள் திணிக்க
முடியுமோ திணிச்சு வைச்சு வேக வச்சுட்டா அப்புறமா மிக்சிங் தாளிப்பது எல்லாமே .
vertical Horizontal single layer double layer என்று தேவைக்கேற்ப சின்ன பாத்திரம் பெரிய பாத்திரம் காம்பினேஷனில்
வைத்து சமையலை முடிக்கிறேன்
நான் இரண்டு குக்கர் வைத்துள்ளேன் .
இதில் உள்ள ஒரு பெரிய சவுகரியம் என்ன வென்றால் நாம் அடுப்பில் வைத்து விட்டு குளிக்கப் போனாலோ வீடு பெருக்கப் போனாலோ பாத்திரம் தீய்ந்து விடும் என்கிற பயம் இல்லை
இன்னும் உண்மையாக சொல்லணுமின்னாக்க .அரை மணி நேரம் யாரிடமாவது வெட்டியாகப் பேசலாம் கவலை இல்லை
போனில் வாட்சப் முக நூல் இவற்றிலும் ஒரு மணி நேரம் கூட செலவழிக்கலாம் . பயமில்லை
எந்தப் பாத்திரத்தில் சமைத்த பின் எடுத்து வைக்கப்
போகிறோமோ அதே பாத்திரத்தில் தான் சமைக்கிறோம் . எனவே பாத்திரங்கள் அவ்வளவாக விழாது
.
பிரஷர் குக்கர் என்றால் விசில் போடணும்
விசிலை வேறு மெனக்கெட்டு எண்ணிக் கொண்டு இருக்கணும் அந்தப் பிரச்னை எல்லாம் இதில் இல்லை
சமையல் ரொம்ப ஈஸி.
நீங்களும் செய்து பாருங்கள்
சூப்பர். நன்றி மா. பானசானிக் வந்த புதிதில் எல்லாம் செய்தேன். இப்போது நின்று சமைப்பது பிடித்து விட்டது.:)
ReplyDeleteபிடித்திருந்தால் மகிழ்ச்சியே
Deleteஇப்போதைய நேர சமாளி ப்புக்கு உங்க யோசனை அருமை. வதக்?
ReplyDeleteவருகைக்கு நன்றி
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநேரம் மிச்சம்ஆகும்.இலகுவாக உபயோகிக்க முடியும்.
ReplyDeleteவருகைக்கு நன்றி
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசமைக்க இவ்வளவு கஷ்டமா? எங்க வீட்டு பக்கத்து வீடா இருந்தால் உங்களுக்கும் சேர்த்தே சமைத்து கொடுத்து விடுவேன்
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteஎந்த உலகத்தில் இருக்கிறீர்கள் ? நாட்டிலே சமைக்க யோசிக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க
எங்க வீட்டுக்கு எதிரே ஒரு ஃ பேமஸ் ரெஸ்டாரண்ட் உள்ளது .இந்த லாக் டவுன் நேரத்திலும் மக்கள் பார்சல் வாங்கிச் செல்கிறார்கள் ஸ்விக்கி டெலிவரி ஆட்கள் நாள் முழுக்க இங்கே இருந்துடெலிவரி செய்கிறார்கள் இது தவிர கையேந்தி பவன் களும் அதேமாதிரி பிசி
நானும் இந்த சமைப்பான் வைத்திருந்தாலும் இதுவரை சாதம் மட்டுமே வைக்கிறோம். வேறெதுவும் முயற்சித்ததில்லை. இட்லி இதை வைத்து எங்கள் குடும்பத்துக்கு கட்டுப்படி ஆகாது!
ReplyDeleteவருகைக்கு நன்றி இதுவே இன்னும் பெரிய சைஸிலும் கிடைக்கிறது
Deleteஇதுவும் கண்டுபிடிப்புதான் வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteசூப்பர்!!!!அருணா!
ReplyDeleteநானும் இந்தக் குக்கரை வைத்து படாத பாடு படுத்திவிட்டேன். இந்த ஒரு குக்கரை மட்டும் வைத்துக் கொண்டு 20 வருடங்களுக்கு முன்பு பங்களூரில் ஓட்டியிருக்கோம்...ஹா ஹா ஹா...இப்படித்தான் டம்ளர் இட்லி லருந்து எல்லாம் உள்ளேயே வைத்து இரண்டு பேர் மூன்று பேருக்கு ஓகே...புளிக்காச்சல் கிளறுவேன் ஈசி...நிறைய சொல்லலாம்
கீதா
வருகைக்கு நன்றி
Deleteபுளிக்காய்ச்சல் கூடவா செய்து பார்க்கிறேன்
இலைவடாம் கூடச் செய்யலாம்...
ReplyDeleteகீதா
வருகைக்கு நன்றி ஓ செய்து பார்க்கிறேன்
Deleteஎங்கள் வீட்டிலும் உண்டு - எப்போதாவது சாதம் வைக்க மட்டுமே பயன்படுத்துவது வழக்கம். இப்படியும் பயன்படுத்தலாம்! :)))
ReplyDeleteநான் பேனசானிக் எலக்ட்ரிக் குக்கரை சாதம் வைக்கவும் பிஸிபேளாபாத் பொங்கல் அரிசி உப்புமா போன்றவை செய்யவும் பயன்படுத்துவேன் புலாவும் செய்வேன். டீ கூட அதில் போடலாம் என்பது ஒரு செய்தி நன்றி.
ReplyDeleteநான் பேனசானிக் எலக்ட்ரிக் குக்கரை சாதம் வைக்கவும் பிஸிபேளாபாத் பொங்கல் அரிசி உப்புமா போன்றவை செய்யவும் பயன்படுத்துவேன் புலாவும் செய்வேன். டீ கூட அதில் போடலாம் என்பது ஒரு செய்தி நன்றி.
ReplyDelete