Saturday, 1 May 2021

மே தினம்

 

மே தினம் என்பது  வசந்த கால ஆரம்ப நாள் என்பதால் கொண்டாடப் பட்டது

பிறகு   1889,  ம் வருடத்திலிருந்து இது  தொழிலாளர்களின் நாளாக விடுமுறையாக   அனுசரிக்கப் படுகிறது.

முன்பெல்லாம் மே தினம் கோலாகலமாகக்  கொண்டாடப்பட்ட  மாதிரி இப்பொழுது எல்லாம் அவ்வளவு விமரிசையாகக் கொண்டாடுகிறார்களா அல்லது நான் தான் கவனிக்க வில்லையோ தெரிய வில்லை .

மக்கள் எல்லோரும் பேஸ் புக் வாட்ஸாப் என்று  வேறு விதத்தில் பிசியாகி விட்டபடியால்  என்று தான் நினைக்கிறேன் .

நான் வங்கியில் வேலை பார்த்த போது யூனியன்கள் எல்லாம் பலம் பொருந்தியவைகளாக  இருந்தன .

நாங்கள் எல்லாம் பணத்திற்குக் கஷ்டப்படாமல் இருக்க யூனியன்கள் ஒரு காரணம் .

 மேலும் ATM சேவைகள் இல்லாமலும்  மெஷினில்   பாஸ் புக் என்டிரி  போன்றவை இல்லாமலும் வேளை பளு இருந்தாலும்  அன்றாட  வேலைகளில் சில பிரச்னைகள் என்று வந்தால் யூனியனிடம் சொன்னால் ஒரு தீர்வு கிடைக்கும் , தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்க வழி வகைகள் செய்து தந்தார்கள் . மேனேஜ்மேண்ட்  தரப்பிலும் தொழிலாளர் தரப்பிலும் ஒரு  90% இணக்கத்துடன் இருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும் ,

 இட மாற்றல் , பதவி உயர்வு போன்றவற்றிலும்  உதவியாகவே இருந்தனர் .

 

தை  நான் சும்மா ஒரு பேச்சுக்காகச் சொல்லவில்லை

வாடிக்கையாளர் சேவை இரண்டு மணிக்கு முடித்தபின் வேலை பார்த்த வாக்கிலேயே   சினிமா நாட்டு நடப்பு உள்ளூர் அரசியல்‌ உலக விஷயங்கள்  எல்லாம் ஒரு ரவுண்டு வந்திடுவோம் . வேலை  வெட்டிப் பேச்சுன்னு இருந்தாலும் அடுத்தவங்களை கேலி பேச ஒரு சான்ஸ் கிடச்சா அதையும் விட்டுக்கொடுத்திட மாட்டோம் .

 இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வங்கிகள் நாட்டுடைமை லாக்கப் படாத காலத்தில் பணியில் சேர்ந்த  ஒரு வயதான சக  ஊழியர்  எங்களைப் பார்த்துப் பொருமுவார். ,

“அந்தக் காலத்திலேயே நாங்க ஏதாவது பக்கத்திலே இருக்கிறவன் கிட்டப் பேசினாலே உள்ளே  இருந்து மானேஜர் எங்களை பார்த்து வேலை பாக்க  வந்தியா இல்ல வெட்டிப் பேச்சுப் பேச வந்தியா  இன்னொருக்கா நீ வேலை நேரத்தில பேசறதை பார்த்தேன் வேலையை விட்டு  எடுத்து டுவேன் அப்படீம்பாரு” என்பார்

.   எதிர்த்துக் கேள்வி கேட்ட ஒரு ஊழியரை எடுத்திட்டு அவரு சொந்தக்காரனைக் கொண்டாந்து வேலைக்கு வச்ச சம்பவங்களும் நடந்திருக்காம்

 சம்பளமும் எல்லோருக்கும் ஒரே  மாதிரி கிடையாதாம்   . சம்பளம் என்ன என்று நிர்ணயிப்பதில் எந்த வித விதி முறைகளும்   கிடையாது

யூனியன்களுக்கு எங்கள் நன்றிகள் .  தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துக்கள்

8 comments:

  1. இன்றைய காலத்தில் மேதினம் என்பது தொழிலாளர்கள் உழைக்கவும் அப்படி உழைப்பவர்களுக்கு மற்றவர்கள் வாழ்த்து சொல்லும் தினமாக மாறிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நீங்கள் சொல்வது சரியே

      Delete
  2. அரசு ஊழியர்களை பொறுத்தவரையில் மே தினம் என்றால் விடுமுறை தினம்!

    ReplyDelete
  3. கேரளத்தில் இப்போதும் மே தினம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சென்ற வருடமும் இவ்வருடமும் பாண்டமிக் லாக்டவுன் என்பதால் ஆர்பாட்டம் இல்லை.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி கேரளா விலும் மேற்கு வங்கத்திலும் கம்யூனிசம் உயிர்ப்போடு இருக்கிறது

      Delete
  4. கேரளத்தில் நான் இருந்த வரை இந்த மே தினம் அன்று ஒவ்வொரு தெரு முக்கிலும் கொடிகள் பறக்கவிடப்பட்டு மைக் போட்டு பேசி, உழைப்பாளர்கள் பாட்டு எல்லாம் போட்டு அலற விட்டு கூடவே வெள்ளத்தில் மிதப்பவர்களும் உண்டு. இது 25 வருடம் முன்பு வரையானது.

    ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல யூனியனினால் பல நன்மைகள் விளைந்ததுண்டுதான்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தமிழ்நாட்டிலும் முன்பு அப்படித்தான் இருந்தது இப்பொழுது அந்த அளவு இல்லை போல

      Delete