சின்ன வயதில் நான் ஸ்கூலுக்கு ஒழுங்காகப் போகவில்லை ,
வீட்டிலேயே படித்துக் கொள்வேன் அந்த ஸ்கூல் வாத்தியார் வந்து சொல்லிக்கொடுத்தார் . ரொம்ப தூரம் நடக்கணும் என்பதும் ஒரு காரணம் .
தவிர அது ஒரு சின்ன ஸ்கூல் என்பதால் வீட்டிலேயே அம்மா சொல்லிக் கொடுத்தார்கள் .
என் அம்மா தமிழ் இலக்கியம் படித்திருந்ததால் என்னைப்படிக்க வைத்துவிட்டுத் தான் தமிழ் நல்வழி புறநானூறு கம்பராமாயணப் பாடல்கள் போன்றவற்றை மனப்படமாகச் சொல்வார்கள் .
நான் அப்போது அம்மா தப்பில்லாமல் சொல்கிறார்களா என்று பார்க்கணும் . அப்படியே எனக்கும் நாளடைவில் சில தமிழ்ப்பாடல்கள் மனப்பாடம் ஆனது .
இது தவிர எங்க அம்மாவிற்கு நல்ல ஞாபக சக்தி .சரித்திரம் பூகோளம் ஆங்கில மீடியத்தில் படித்ததால் சில நாடக டயலாக்கள் எல்லாம் அத்துப்படி .
எப்படி என்றால் எங்க அம்மா மனப்பழக்கம் தான் என்பார்கள் . குடும்பத்தில் பிரச்னைகள் . இருந்தாலும் என் அப்பாவின் சப்போர்ட் இருந்தது படிக்க .
அது ஒன்றை வைத்தே படித்துக் கொண்டிருப்பார்கள்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் –
இதை அடிக்கடி சொல்வார்கள் .
அந்த வயதில் என் ஒரே ஐடியல் ஹீரோ அம்மா தான் .
இறந்து 35 வருடம் ஆனாலும் என் உறவினர் ஒருவர்" பாட்டி பத்து நிமிஷம் பேசறதுக்குள்ள 15 தமிழ்ப் பாட்டை மேற்கோள் காமிப்பாங்க "என்பார்கள் .
இதை நானும் ஒரு படிக்கும் முறையாக ஏற்றுக்கொண்டேன்
இந்த மனப் பழக்கம் நாம் பழகிக் கொண்டுவிட்டால்
ஞாபகம் வைத்துக் கொள்வதே எளிதாகி விடும் .
அதாவது.ஞாபகம் வைத்துக் கொள்ள ஏதோ ஒரு mnemonic
(குறியீடு )வைத்துக் கொள்வது முக்கியம் . .அது ஜென்மத்துக்கும் மறக்காது .
உதாரணமாக எவரெஸ்ட் மலையின் உயரம் என்னவென்றால் 8848என்று எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும் எப்படி என்றால் எட்டு எட்டா நாலு எட்டு வச்சா எவரெஸ்ட் போயிட முடியும் .
இது போன்று என் தனிப் பட்ட குறியீடு வைத்துக் கொண்டு தான் நான் Banking
பாடங்களில் வரும் Sections மற்றும்
Negotiable instruments act எண்களை ஞாபகம் வைத்துக் கொள்வேன்.
இது போலவே கஸ்டமர் பெயர் எந்த நம்பர் பக்கத்தில் அவர்கள் அக்கவுண்டு வரும் என்பதெல்லாம் ஞாபகம் வைத்துக் கொள்வேன்.
இதே முறையைத் தான் ஜப்பானிய படம் போன்ற எழுத்துக்களை ஞாபகம் வைத்துக் கொள்ள உபயோகிக்கிறேன் .
சில குறியீடுகள் சுவாரசியமாக இருக்கும் .சில என் மாணவர்களுக்கும் பிடிக்கும்
ஜப்பானிய மொழி படிக்க ஆரம்பிக்கும் போது கிட்டத்தட்ட ஒரே மாதிரியான
சப்தம் உள்ள ஆனால் அர்த்தம் மாறுபடும் வார்த்தைகள் குழப்பமாக இருக்கும்.
. அவற்றை புரிந்துகொள்ள (வேறு படுத்த )சில mnemonic குறியீடு வைத்துக் கொள்வேன் .
யாரும் சண்டைக்கு வரவேண்டாம் என்ற முன்னுரையுடன் என் mnemonic குறியீடுகளைச் சொல்கிறேன் .
இவை ஞாபகம் வைத்துக்கொள்ள மட்டுமே .
உதாரணமாக "ஓதோ" என்றால் "சப்தம்" . "ஒத்தோ" என்றால் "கணவன் "
ஆரம்பத்தில் த் என்ற அழுத்தம் "சப்தம் "என்கிற வார்த்தைக்கு வருமா
அல்லது
"கணவன் "என்கிற வார்த்தைக்கு வருமா.... ரொம்ப குழப்பமாக இருந்திச்சு.
குழப்பம் தீர நான் ஒரு mnemonic குறியீடு வைத்தேன்
சப்தம் என்றால் சாதாரணமாக இருக்கும் அவ்வளவே . ஆனால் ஓவரா சவுண்டு குடுத்தா அதுதான் கணவன் .
(அழுத்தம் கொடுத்து . அதாவது .த் என்ற அழுத்தம் என்று புரிந்து கொள்ளவேண்டும் )
எனது இந்த mnemonic பல மகளிரிடம் வரவேற்பு பெற்றது . பசங்களும் கொஞ்சம் damaging ஆக இருந்தாலும் பரவாயில்லை ஞாபகம் வச்சுக்க வசதியாக
இருக்கு என்ற எண்ணமே பரவலாக இருக்கு . இது போலப் பெண்களை வைத்தும் சில காமெடி நிமோனிக்ஸ் வைத்து ஞாபகம் வைத்துக் கொள்வேன் .
妬இது பொறாமை என்பதற்கான எழுத்து . அதாவது 女 石 என்ற இரண்டு எழுத்துக்களின் கூட்டு ஆகும்
நான் இதற்கு வைத்துள்ள mnemonic என்னவென்றால் பொறாமை இருந்தால் பொண்ணு கல்லாகிடுவா
இடது பக்கம் உள்ள எழுத்து பெண்ணைக் குறிக்கும் வலது பக்கம் உள்ளது கல்லைக் குறிக்கும்
இதை ஞாபகம் வைத்துக் கொள்ளும் போது அந்த எழுத்து வரிசையில் தான் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண் டும் இது முக்கியம் .
நமக்குப் பெண்கள் மேல் ஆத்திரம் என்று சொல்லிக்கொண்டு கல் மாதிரி பெண்கள் மனசு ,கல்லும் பெண்ணும் சேர்ந்தால் பொறாமை என்று சொன்னோமானால் நாம் தப்பாக எழுத வாய்ப்புண்டு .
அதாவது அதே வரிசையில் வரணும்
இதே போல விளையாட்டாகப் படித்தால் கஷ்டமான படிப்புக்களும் ஈசியாக இருக்கும் .
செய்ய வேண்டியது அவ்வையார் சொன்ன மாதிரி மனப்பழக்கம்
மனதில் எழுதி வைத்து விட்டால் வேறே யாரும் அழிக்க முடியாது
மனம் என்பது ஒரு எல்லையற்ற ஜி பி கொண்ட சக்தி வாய்ந்த கணினி
brilliant
ReplyDeleteஏதாவது ஒன்றோடு சம்பந்தப்படுத்தி வைத்துக் கொண்டால் என்றுமே மறக்காது
ReplyDeleteவருகைக்கு நன்றி நீங்கள் சொல்வது சரி
Deleteநல்ல பதிவு. நானும் ஆசிரியன் என்பதால் நான் கையாண்ட உத்திகளில் இப்படிக் குறியீடு வைத்து அல்லது ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்திப் பார்த்து என்பதைச் சொல்வதும் உண்டு.
ReplyDeleteதுளசிதரன்
வருகைக்கு நன்றி Mind Mapping நல்ல effective ஆக உள்ளது.
Deleteசூப்பர் அருணா. ஆமாம் நான் என் நினைவுத் திறனை அதிகரிக்க இப்படிச் செய்வதுண்டு. அதாவது தொடர்பு படுத்திப் படிப்பது. என் மகனுக்கும் அப்படித்தான் சொல்லிக் கொடுத்ததும்.
ReplyDeleteநல்ல பதிவு.
கீதா
வருகைக்கு நன்றி,correlating works well
Deleteஉண்மை
ReplyDeleteஉண்மை
வருகைக்கு நன்றி
Deleteகாலையிலேயே அலைபேசி வழி படித்தேன்.
ReplyDeleteகுறியீடுகள் வைத்துக் கொள்வது நல்ல விஷயம். மனதில் நிற்க இப்படியான வழிகளை வைத்துக் கொண்டு படித்தால் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்.
வருகைக்கு நன்றி
Deleteஞாபகம் வைத்துக்கொள்ள நல்ல வழி. நான் போன் நம்பர்களை இப்படித்தான் ஞாபகப் படுத்திக் கொள்வேன் அதாவது ஏர்டெல் நம்பர் என்றால் ஒரு எண்ணில் தொடங்கும் வோடபோன் என்றால் ஒரு விதமாக தொடங்கும், அந்த தொடக்க தொடக்க நம்பர் அதற்கு அடுத்து வரும் நம்பர்களை எனக்கு தெரிந்தவர்களுடைய பிறந்த நாள் பிறந்த வருடம் அப்படி ஞாபகம் வைத்துக் கொள்வேன்.
ReplyDeleteவருகைக்கு நன்றி
ReplyDeleteவருகைக்கு நன்றிசூப்பர் ஐடியா
ReplyDeleteNice sensei
ReplyDelete