வாட்ஸ்ஆப் என்பதன் தமிழ்ப் மொழி பெயர்ப்பு இந்நேரம்
யாராச்சும் செய்திருப்பார்களே என்னவாக இருக்கும் என்று விக்கிபீடியா
வைப் பார்த்தபோது தமிழில் " பகிரி" அல்லது "புலனம் "அல்லது" கட்செவி அஞ்சல் "
என்றும் அறியப்படுகிறது என்று சொல்லியிருக்கிறார்கள் .
டெக்கினிக்கலாகஇது சரிதான்
.சந்தேகமே இல்லை விக்கிபீடியாவை மாற்றுகிற
ஐடியால்லாம் இல்லை .
ஆனால் நாம் functional aspect ல் இதை டிஜிட்டல் திண்ணை என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன் .
ஏனென்றால் நாம் திண்ணையில் வம்பு அடிப்பது மட்டுமில்லாமல் சாப்பிடலாம் படுக்கலாம் வெட்டியா எதையாவது செய்யலாம் அது மாதிரி வாட்ஸ்ஆப் கூடவே தூங்கி வாட்ஸ்ஆப் கூடவே சாப்பிட்டு வாட்ஸ்ஆப் கூடவே குளிச்சு ன்னு சகலமும் வாட்ஸ்ஆப் கூடவே பொழுதைக் கழிக்கும் மனிதர்கள் எக்கச்சக்கம் .
அதுவும் லாக் டவுன் நேரத்தில் வீட்டில் இருக்கறவங்க கிட்டே எவ்வளவு நாழி தான் பேச முடியம் .
ரொம்பப் பேசினா சில சமயம் சண்டை வேறே வந்திடும் .
அரை மணிநேரம் பேசறதுக்குள்ளயே சண்டை வருது
கணவன் மனைவி என்றில்லை பெற்றோர் குழந்தைகள் அக்கா தங்கை அண்ணன் தம்பி பெரியவங்க சின்னவங்க என்ற பேதமில்லாமல் சகட்டு மேனிக்கு சண்டை வருகிறது . என்ன மாதிரி டாபிக்கைப் பேசினாலும் சண்டை வருகிறது.
இதிலே இன்னொரு பிரச்னை கௌரவம் சிவாஜி மாதிரி "ஆத்தை விட்டுப் போகணும்ன்னு மட்டும் தோன்றாது. எங்க போறதுன்னு தெரியலையே ' சிச்சுவேஷன்
கோச்சுக்கிட்டு வெளியேவும் போகமுடியாது .
அப்படியே போனாலும் பசிச்சா ரெஸ்டாரண்டுகளில் உட்கார்ந்து சாப்பிட முடியாது .
பார்சல் மட்டும்தான் .
பார்சலை எடுத்துக்கிட்டுஎங்கேயும் போக முடியாது மறுபடியும் வீட்டுக்குத்தான் வரணும்
டெலிகேட் பொசிஷன் .என்ன பண்றது?
எனவே நிறையப்
பேர் option வாட்ஸ்ஆப்
சரணம்.
இதேதான் அந்தக்காலத்தில்
கோச்சுக் கிட்டா திண்ணை
மட்டும்தான் ஒரே சாய்ஸ் .
ஊர்க்காரங்களோட அனுசரிச்சுப் போய்ட்டா எந்த வீட்டுத் திண்ணையின்னாலும் போய் உட்கார்ந்துக்கலாம் அப்படியும் ஒரு சாய்ஸ் வேறே உண்டு
திண்ணையிலே உட்காந்து பேசிக்கிட்டிருந்தா நேரம் போறதே தெரியாது.
சும்மா ரோட்டில் போய்கிட்டு இருக்கிற ஆளைக் கூப்பிட்டு வச்சு பேசிகிட்டு பொழுதை ஓட்டலாம் வை ஃ பை இல்லாமலே .
வாட்ஸ்ஆப்பும் அது மாதிரித்தான் .
திண்ணையிலே உட்காந்து பேசற பேச்சிலே சில சமயம் சண்டை வரும் வம்பு வரும் .வாட்ஸ்ஆப்பில் வம்புகள் வேறே லெவல் .
திண்ணை வம்புகளை விட வீரியம் மிக்கது 。வீட்டுக்குள் வியட்னாம் போரையே கொண்டு வருகிற அளவு வீரியம் கொண்ட வாட்ஸ் அப் மெசேஜுகள் ஏராளம் .
திண்ணைகளில் அந்தக்காலத்தில் மலர்ந்த காதல் பிரிந்த
காதல் என்று நிறைய உண்டு
வாட்ஸ்ஆப்பில் இதே விஷயங்கள் நிறைய அரங்கேறுகின்றன ..
திண்ணையிலே சில பேரு தேவையில்லாமல் பைசா பொறாத விஷயத்துக்கெல்லாம் ஓவரா பரவசமாகிடுவாங்க . அதே இமோஷன் வாட்ஸ்ஆப்பிலே பரவலா இருக்கு.
இன்னும் முக்கியமான விஷயம் என்னான்னாக்க
மிகப் பெரிய முன்னுரை ஒரு common factor. .
நானெல்லாம் சின்ன வயசிலே ஊருக்குப் போயிருக்கும் போதுஎங்க அம்மா மடியிலே படுத்துகிட்டு இந்த திண்ணைப் பேச்செல்லாம் கேட்டிருக்கேன் ,சிலசமயங்களில் முன்னுரை முடிவதற்கு முன்னாடியே தூங்கியிருக்கேன் , வாட்ஸ்ஆப் பில் அஞ்சு நிமஷ வீடியோலே4.30 நிமிஷம் முடிஞ்சப்புறம் தான் விஷயத்துக்கே வருவாங்க
என்ன என் மொழிபெயர்ப்பு சரிதானே
ஹா... ஹா... ஒப்பீடு பலே...!
ReplyDeleteஇந்த தீநுண்மி காலத்தில் வேறு வழியில்லை...
வருகைக்கு நன்றி
Deleteசுவாரஸ்மாய் இருந்தது திண்ணை செய்தி!
ReplyDeleteஇப்ப அந்த திண்ணையும் இல்லையே!!!
வருகைக்கு நன்றி
Delete👌🏿
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteஒப்பீடு அருமை
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteதிண்ணை பேச்சு சுவாரசியமே தனி. நல்ல பதிவு.
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteதிண்ணை - நான் மிஸ் செய்யும் விஷயங்களில் இந்தத் திண்ணையும் ஒன்று. நெய்வேலியில் திண்ணையில் படுத்து உறங்கிய நாட்கள்!
ReplyDeleteடிஜிட்டல் திண்ணை - இதுவும் நல்லாத் தான் இருக்கு! இப்போதைய டிஜிட்டல் திண்ணை பேச்சுகள் குறித்த உங்கள் ஒப்பீடு சிறப்பு.
வருகைக்கு நன்றி.காணாமல் போன விஷயங்களில் திண்ணையும் ஒன்று
Deleteடிஜிட்டல் திண்ணை வார்த்தை நன்றாயிருக்கிறது. வர்ச்சுவல் ரைடிங் போல வர்ச்சுவல் திண்ணை!
ReplyDeleteவருகைக்கு நன்றி
DeleteDelete
டிஜிட்டல் திண்ணை வாட்சப்பைச் சொல்லலாம் தான். லாக்டவுனில் என்ன செய்ய என்றாலும் நான் வாட்சப் பார்ப்பதும் மிக மிக குறைவுதான்.
ReplyDeleteதுளசிதரன்
வருகைக்கு நன்றி.வாட்சப் இல்லை என்றால் பொழுது தள்ளுவது பலருக்குக் கஷ்டம்
Deleteஅருணா செம பெயர்! கரெக்ட்டா சொல்லிருக்கீங்க ஒப்பீடும் செம. டிஜிட்டல் திண்ணை நல்லாருக்கு பெயர். கட்செவி புலனம் எலலம் விட இது நல்லாவே இருக்கு.
ReplyDeleteநிஜம்மா எங்க ஊர்த் திண்ணைய நான் ரொம்ப மிஸ் செய்கிறேன்.
கீதா
நான் கூட மிஸ் பண்ணுகிறேன்
ReplyDeleteடிஜிடல் திண்ணை - முகநூல், ப்ளாக்ஸ்பாட் போன்று எல்லாவற்றிர்க்குமே இது பொருந்துமே. விஷயத்தை ஆராயமேலே அடுத்தவங்கள்ட திண்ணைல உட்கார்ந்து காஸிப் பேசுவதுபோல, எல்லாவற்றையும் forward செய்கிறோம்.
ReplyDelete