கண்ணாடியில் நம் பிம்பத்தைப் பார்க்காத
நாளில்லை .
பிம்பம் நம்மை அழகாகக்
காட்டினால் சந்தோஷப்
படுகிறோம்.
அழகு குறைவாகாக் காட்டினால் ஏதாவது
ஒன்றைக் கூட்டியோ குறைத்தோ நிறத்தை
மாற்றியோ தலை
அலங்காரத்தை மாற்றியோ , டிரஸ்ஸை மாற்றியோ ஏதாவது
பண்ணி நமக்கு
சரி என்று தோன்றும் வரை
செய்கிறோம் .
ஒவ்வொருவரும்
தன்னைப் பற்றிய ஒரு வகையான
பிம்பம்
நம்மை அறியாமலே உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்
என்னைப்பொறுத்தவரை
,உடையில் ,சிகை அலங்காரம் , சிரிக்கும்
முறை பேசும் போது
உள்ள முக பாவம் இவைகளை நிலை நிறுத்திக்கொள்ள விரும்புகிறோம்,
ஆனால் நாம் நம்மைப் பற்றிக் கொண்டுள்ள
பிம்பம் என்பதும்
(அழகு மட்டுமல்ல ) மற்றவர்கள் நம்மைப் பற்றி உருவாக்கி வைத்துள்ள பிம்பத்திற்கும் நிறைய
வேறு பாடுகள் வரும்போது தான்
கண்ணாடி பொய் சொல்லுகிறதோ என்று
தோன்றும்.
கண்ணாடி
மட்டுமல்ல .
டிகிரி சர்டிபிகேட் எனப்படும் ஒரு பெரிதும் மதிக்கப்படும் A 4 சைசு தாள் கூட
பல சமயங்களில் பொய் பிம்பம்தான் காண்பிக்கிறது.
நல்ல
கல்லூரியில் படித்து நல்ல
மார்க் வாங்கியவரை விட (பொது புத்திப் படி மிகத்திறமைசாலி என்பதின் அடையாளம்
) மிகச் சாதாரணமான கல்லூரியில் படித்து சுமாரான மார்க்
வாங்கியவர்கள் (இதெல்லாம் வேலைக்காதுன்னு நாம அசட்டுத்தனமாக நினைச்சிட்டு இருக்கற
) நிறைய சம்பளத்துடன் உள்ள வேலை பார்க்கும்
போது எனக்கு
அப்படித்தான் தோன்றும் .
சில ஹோட்டல்களுக்குப் போனால் உடனே
சாப்பிட்டுப் பார்க்கணும் போல அழகான ஒரு
சைட் டிஷ்
அல்லது மெயின்
டிஷ் காட்சியில் (DISPLAY ) வைத்திருப்பார்கள் .
சாப்பிட்டுப் பார்த்தால்
நாம் எதிர்பார்த்த அளவுக்குச் சுவையாக
இருக்காது.
இன்டர்
நெட்டில் டிவியில் சில
சமையல் உப காரணங்கள் காட்டுவார்கள் , நொடியில்
முடிக்கலாம் என ஜால வார்த்தைகளுடன் அழகான பொண்ணு ஒண்ணு சிரித்த முகத்துடன் அனாயாசமாகச் செஞ்சு காட்டும் அல்லது
நமக்குப்
பார்த்துப் பழக்கப் பட்ட நல்லவர்
ரோலில் நடித்த நடிகை /நடிகர்
சொல்லுவார் நாமும்
அங்கு ஓடும் எண்ணுக்கோ
அல்லது விளம்பரத்தில் உள்ள நம்பருக்கோ உடனடியாகப்
போன் போட்டு வாங்கிடுவோம்
.
பிறகு ஒரு ஆறு மாதத்திற்கு
அப்புறம் அது
மேல்தட்டு வர்க்கம் ரேஞ்சுக்குப் போய்விடும் ( பரணுக்குத்தாங்க).
வங்கிப்
பணியாளர் தேர்வு மற்றும் ஜப்பானிய
மொழித்தேர்வு இவற்றுக்கெல்லாம் நான் கண் காணிப்பாளராகப்
போய் இருக்கிறேன் .
பல நேரங்களில் நேரில்
பார்க்கும் பரீட்சை எழுதும் முகமும் ஐடென்டிட்டி கார்டில்
உள்ள முகமும் வேறுபட்டுள்ள மாதிரியான அனுபவம்
எனக்கு உண்டு.
. அட்ரெஸ் மற்றும் பேர்
ஸ்பெல்லிங் இவை சரியாக இருக்கா
,இன்னும் வேறே மாதிரியான குறுக்கு கேள்வியெல்லாம் கேட்டு சரி பார்ப்பேன் அல்லது பாத்து ஒப்பேத்திடுவேன்
.
ஆதார் அட்டை பத்திச் சொல்லவே
வேண்டாம்.
ஒரு சிலர் வாட்ஸ் அப் ஃ பேஸ் புக் இவற்றில் அறிவுரைகளாகப் பொழிந்து தள்ளுவார்கள் ,
உடற்பயிற்சியின்
முக்கியத்துவம் பற்றியெல்லாம் பேருரைகள் போடுவார்கள்
மருத்துவக்
குறிப்பு எல்லாம் சொல்வார்கள் .
ஐயோ இவங்க
இவ்வளவு முறைப்படியான வாழ்க்கை நடத்துவப்பவர்களா என்று நம்மை எண்ண வைக்கும் படி ஒரு நாளைக்கு பல மெசேஜு அனுப்புவார்கள்
ஆனால் அதில் எதையுமே பின்
பற்றமாட்டார்கள்
டெல்லியில்
உள்ள சாந்தினி சவுக்குக்குப் போய் சாமான்கள் வாங்கினால்
"இது உடையவே உடையாது .
படியா
குவாலிட்டி ( நல்ல
சாமான் ) " என்பார்கள்
கீழே போட்டு உடைத்துக்
காண்பிப்பார்கள் .
"இஷ்ட்ராங்கு "என்று அழுத்திச் சொல்லுவார்கள்
ஒரு குண்டு ஆள்
அதுமேல உக்காந்து காமிப்பார்.
விலையோ
சென்னையை விட 60 % குறைவாக
இருக்கும்.
தலை யெல்லாம் மூளை (?) உள்ள நாமளும்
வெகுவாகக் கவரப்பட்டு வாங்கிடுவோம்
. சென்னை யில் உள்ள வீட்டுக்குக்
கொண்டு வருவதற்குள்
நசுங்கியோ உடைந்தோதான் இருக்கும்
.
பிம்பங்கள் பல சமயங்களில் நம்மை ஏமாற்றுகின்றன .