சில ட்ரான்ஸ்லேஷன்
வேலைகள் வந்து விட்ட படியால்
பிளாக் பக்கம் அவ்வளவாக
வர முடியவில்லை .
ஆபீஸ் காமெடிகளில்
சில மறக்க முடியாதவர்கள் /மறக்க
முடியாதவைகளும் நிறைய உண்டு .
லீவு அப்பிளிக்கேஷன் கொடுக்கும்போது
அதில் காமெடியான ஒரு coloumn காரணம்
.(Reason ).
அதை அந்த
சீட் இன்
சார்ஜாக இருந்து
என்ஜாய்
பண்ணியவர்கள் மட்டுமே
உணர முடியும்
.
ஒரு RURAL BRANCH கிளார்க்
பையன்
அடிக்கடி
எங்கள்
ஆபீஸிற்கு
வருவான்
.
காரணம் அவன்
ஹைததாபாத்திலிருந்து தினமும்
30-40 கீமீ
சென்று
வருவதால் அந்த பிராஞ்சு தபால்கள்
நாங்கள்
அனுப்ப
வேண்டியது
என்று
எல்லாமே அவன்
மூலம் தான் .
அவன்
என்னிடம்
இங்கிலீஷில்
தான் TALK பண்ணுவான்
.
நானும்
அவனிடம் தெலுங்கில் தான்" மாட்டலாடு"வேன்.
அவனது இங்கிலீஷ் படு
சுத்தம்.
பாவம் அவன்
படித்த
கிராமத்தில்
இங்கிலீஷ் பேசுவது
என்பது
மற்றவர்களால் கிண்டலடிக்கப்
படும் ஒரு
விஷயம் .
தவிர தெய்வம்
என்பது என் டி ஆர்
என்கிற மனித உருவில் நடமாடுவதாக நம்புவார்களாம்.
பாட சம்பத்தப்
பட்ட வரிகளை விட என் டி
ஆரின் டயலாக்குகள் அப்படியே மனப்பாடம்
நான் அவனிடம் தெலுங்கு பேசிப் பழக அவன் என்
மூலம் இங்கிலீஷ் அறிவை வளர்த்துக் கொள்ள .....
இப்படியே
போனது
ஒரு முறை
அவசரமாக வந்து "மேடம்
, நீங்க என் லீவு
லெட்டரை
இன்னைக்கே சாங்க்ஷன் பண்ணுங்க
என்றதோடு
மட்டுமல்லாமல்
அவனே தனக்கு பதிலாக
ஒரு
கிளார்க்கையும்
தயார்
பண்ணி
வைத்து
விட்டான்.
பல பேர் பல
காரணங்கள் சொன்னாலும் மறக்க முடியாத ஒரு
காரணம்
ஒன்று
அவன் எழுதியிருந்தான்.
Marriage of my
KNEES என்று.
லீவு கேட்ட கிளார்க்கும் லீவு
சாங்க்ஷன் பண்ணும் கிளார்க்கும் வேறு
வேறு யூனியன் .
நான் ஒழிந்து போகுது சாங்க்ஷன்
பண்ணலாம் என்றால் என்
கீழ்
வேலை
பார்த்த கிளார்க்” கிடைத்த அவலை
மெல்லாமல் விடுவேனா”
என்று சொல்லிவிட்டு
"நாளைக்கு வேற
ஒருத்தன் Marriage of my eyes , my ears , my hands என்று
வருவான் என்று சொல்லிவிட்டு
வேலை மெனக்கெட்டு
“Employees conduct Rules “ “
Manual “எல்லாம்
Refer பண்ணி conduct ரூல்ஸ் படி
( As per Chapter / Section
எல்லாம் எழுதி
) இதெல்லாத்துக்கும்
லீவு கிடையாயது என்று
திருப்பி அனுப்பி
நோட்டு
போட்டுவிட்டான்
.
அவனுக்குப்
பாவம் எதனால்
திருப்பி
அனுப்பினார்கள்
என்று
புரிய வைக்கவே
ரொம்ப
நாழியாச்சு
.
ஆனாலும் ORAL
SANCTION பண்ணி போப்பா
என்று
சொல்லிவிட்டோம் .
.
பிறகு கொஞ்ச
நாள்
கழித்து
ஸ்டேட்
பாங்கில்
வேலை
கிடைத்துப்
போய்விட்டான்.
இப்படி பாவம் பல இளைஞர்கள் நாங்கள் கல்லூரியில் படிக்கும் காலத்திலும் உண்டு. இத்தனைக்கும் அவனும் கல்லூரியில் நாங்கள் படித்த அதே வருடம் தான். ஒரு முறை அவன் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேச விழைவான். அப்படி ஒரு முறை அவன் பேசிய போது, நேற்று நான் சினிமா பார்க்கச் சென்றேன். தியேட்டருக்கும் வெளியில் கூட்டம் என்று சொல்ல நினைத்ததை.....Yesterday I went theatre..No tickets....people were outstanding. என்று சொன்னதும் ஒரு பக்கம் எனக்குச் சிரிப்பு வந்தாலும், பாவம் அவன் மனதில் தாழ்வுமனப்பான்மை வந்துவிடக் கூடாது என்று அவனது முயற்சியைப் பாராட்டிவிட்டுத் திருத்தினோம்...
ReplyDeleteஅனுபவம் புதுமை.
ReplyDeleteநல்ல ரசனையான பதிவு. ரசித்தேன். தொடர்ந்து எழுதவும். எனக்கும் கிருஷ்ணர் என்றால் என்.டி.ஆரு காருதான் நினைவுக்கு வருகிறார்.
ReplyDeleteஹாஹா.... இப்படி தில்லியில் நிறைய பேர் உண்டு! ஆங்கிலம் அவர்களிடம் மாட்டிக்கொண்டு படும் பாடு!
ReplyDeleteசுவையான அனுபவம். ரசித்தேன்.
ஹா..... ஹா.... ஹா.... காமெடி இங்கிலீஷில் காரணம் சொல்லி எழுதப்பட்ட லீவு அப்ளிகேஷன்ககள் பற்றிய ஜோக் நினைவுக்கு வருகிறது.
ReplyDelete