நானெல்லாம் ஸ்கூல்
படிக்கும்போது முக்கால் வாசி தயிர் சாதம்
, எலுமிச்சை சாதம் இட்லீ தேங்காய்
சாதம் .புளியோதரை இவ்வளவுதான்.
சில பேர் வீட்டில்
அன்றைக்கு மடியாகத்தான் சமைக்கணும் என்று இன்னும்
சிம்பிளாக சாதமும் பொடியும் தொட்டுக்க
வடுமாங்காய் அல்லது
ஏதோ ஒரு ஊறுகாய் .
பழைய சாதம் கொண்டு
வருபவர்களும் உண்டு.
ஜுரம் அல்லது வயிற்றுப் போக்கு
உள்ளவர்கள் மட்டுமே பிரெட் , ( சிரிப்பாக இல்லை ?)
பிறகு என் பையன் காலத்தில்
எல்லாம் சப்பாத்தி யுடன் சன்னா மசாலா
பன்னீர் மசாலா பனீர் பாலக்
போன்றவை முன்னுக்கு
வந்து இட்டலியைப் பின்னுக்கு த் தள்ளியது .
சில சமயம் மட்டுமே பூரி
,உருளைக் கிழங்கு.
ஹைதஹராபாத்தில்
என் மகனுக்கு ஒரு கேரளா பையன்
தோழன் .
அவன் ஒரு சாப்பாடு
கொண்டு வருவதை என் மகன்
விவரிக்கும் விதம் எனக்கு ரொம்பப்
பிடிக்கும்.
அது என்னாம்மா நடுவிலே இட்லீ அந்த இட்டலியைச் சுத்தி மொறு
மொறுன்னு தோசை என்பான் .
அதுதாங்க நம்ப ஆப்பம் .
இப்பெல்லாம் பீசா , பர்கர் சான்டவிச்சு ,பாஸ்தா இத்யாதிகள் .
ஆனால் நெட்டில் நான் பார்த்த கார்ட்டூன் காரக்டர்களை லன்ச் பாக்சில்
வைக்கும் இந்த ஐடியா என்னை வியக்க வைத்தது.
நிஜமாவே ரூம் போட்டு
யோச்சிக்க றாங்களோன்னு தோணிச்சு.
நீங்களே பாருங்களேன் .
காலம் மாறுமபொழுது காட்சிகளும் மாறுகின்றது.
ReplyDeleteகுழந்தைகளை சாப்பிட வைக்க இப்படி எல்லாம் பாடுபட வேண்டியிருக்கிறது! நமக்கு தயிர் சாதமோ எலுமிச்சை சாதமோ எதைக் கொடுத்தாலும் சாப்பிட்டு வந்திருக்கிறோம்! :)
ReplyDeleteஇந்த விஷயத்தில் நாம அப்போதெல்லாம் கேள்வியே கேட்டதில்லை, எதிர்த்துப் பேசியதில்லை. பாவம் அம்மான்னுதான் தோணும்!
ReplyDeleteஹும் பல சமயம் நினைத்ததுண்டு நாம் இந்தக் காலகட்டத்தில் பிறந்திருக்க மாட்டோமா என்று...அப்போதெல்லாம் வெறும் தயிர்சாதம் கூட்டு ஒரு அலுமினிய தூக்கு வாளியில் - வாளி என்றவுடன் என்னடா இது ஸ்கூலுக்கு எப்படி வாளியைக் கொண்டு போக முடியும்? அவ்வளவு சாப்பிட முடியுமா இல்லை ஸ்கூலுக்கேவா அப்படின்னு எல்லாம் நினைச்சுடாதீங்க எங்க ஊர்ல சின்ன அலுமினியம் தூக்குதான் தூக்குவாளி...
ReplyDeleteஇப்ப வர டிஃபன் பாக்ஸ் எல்லாமே ரொம்ப கவர்ச்சிகரமாகத்தான் இருக்கிறது. அதுக்காக ஒவ்வொரு வாரமும் வரும் புதிய புதிய டிசைன் வாங்க முடியுமா..ஆனால் அப்படி வாங்கும் அம்மாக்களும் இருக்காங்க. என் குழந்தை இந்தப் புதிய டிஃபன் பாக்ஸ் பார்த்துருக்கான் போல இதுல கொடுத்த கம்ப்ளீட் காலியாயிடும் அப்படினு வாங்கறவங்களும் இருக்காங்க..
படங்கள் ரொம்ப அழகாக இருக்கு...எப்படி எல்லாம் யோசித்துச் செய்யறாங்க