டெபுடேஷன்
காமெடிகள்
நான் வடக்கே வேலை செய்த போது லீவு டெபுடேஷன்
போன்றவற்றைப் பார்க்கும் செக்ஷனில் வேலை
செய்த போது
நிறையாக காமெடி நிகழ்வுகள் நடக்கும்.
சில பிராஞ்சுகள்
ஒரு ஆபீசர் ஒரு கிளார்க்கு
ஒரு பியூன் ஒரு கூட்டும்
ஆள்
இவர்கள்
மட்டுமே இருப்பார்கள் . அவர்களுக்குள் ஒரு "நல்ல புரிதல் "
இருக்கும்
.
அதனால்
லீவு என்பது
எண்ட்ரீ ஆகாமலேயே லீவு எடுத்துக் கொள்வார்கள்.
அவை எல்லாமே கிராமப் புற
பிராஞ்சாக இருப்பதால் அவர்கள் போய்வர
எடுத்துக்
கொள்ளும் சிரமம் இவற்றை எல்லாம்
கணக்கில் சேர்த்துக் கொண்டு
நகரத்தில்
இருப்பவர்கள் யாரும் அதை பெரிசாக
எடுத்துக் கொள்வதில்லை .
நாங்களும் கம்பிளையண்டு என்று வந்தால் தவிர
கண்டுகொள்வதில்லை .
ஏனெனில் மாற்று ஆள் கிடைப்பது கஷ்டம் .
நிறைய நாள் லீவு
என்றால் மட்டுமே எங்களுக்கு சாங்க்ஷன்
செய்யக் கோரி
லீவு லெட்டர்
வரும் ,
நாங்கள் வேறு ஒரு
ஆளை டெபுடேஷனில் அனுப்பி வைப்போம் .;
டெபுடேஷன் போன ஆள் இங்கே வந்து
வத்தி வெச்சப்புறம் நிறைய
விஷயங்கள் தெரிய
வரும் ..
அது மாதிரிப் போன
ஒரு ஆள் சொன்ன விஷயம்
.செம காமெடி .
அந்த ஊரில் ஒரு ஆறு
இருந்தது ,அந்த ஆற்றைக் கடந்து
தான்
வங்கிக் கிளைக்குப் போகணும் .
மழை பெய்தால் அங்கு
போக முடியாது. இந்த டெபுடேஷனில் போன
ஆள்
பிராஞ்சு இருந்த இடத்தில் அதாவது ஆத்துக்கு அந்தப்
பக்கம் மாட்டிகிட்டான்.
ஹோட்டல்
எல்லாம் கிடையாது அந்த ஊரில் .
எனவே ஒரு வீட்டில் தங்கி இருந்தார்
.
இரவு நல்ல மழை
மேனஜர்வீடு ஆற்றுக்கு இந்தப்
பக்கம் .....
அவரின் குழந்தைகள் நகருக்கு
அருகாமையில் உள்ள பள்ளியில் படித்துக்
கொண்டிருந்ததால் மேனேஜர் ஆற்றின் மறு கரைப்பக்கம்
(அதாவது வங்கிக்கு எதிர்க் கரைப்பக்கம் )வீடு எடுத்துக் கொண்டார்
.
அவர் கொஞ்சம்
வவுச்சர் கொஞ்சப் பணத்தை வைத்துக்
கொண்டு
வீட்டிலேயே சில பணம்
கொடுக்கல் வாங்கல் இவைகளைப் பண்ணி
இருக்கிறார்.
ஒரு வாரம் மழை விடவில்லை
.
உதவி செய்ய என்று புதுசாய்
போனவர் அந்த ஊர் மக்களிடம்
ஒரு வீட்டில்
படுத்துக்கொண்டு ஏதோ ஓசி
சாப்பாடு சாப்பிட்டு ( மழையால்
நகர்ப் பக்கம்
வரமுடியாததால் காய்
கறிகள் கிடையாது ) அவ்வளவாக டி
வி வசதி
இல்லாத ஊர்
அது .பேப்பர் வருவதும் முடியாது.
வேலையும் இல்லாமல் பொழுதே போகவில்லையாம் . டாய்லெட்
போன்ற
இன்ன பிற சிரமங்களும்
கூட
ஆனால் வெளியே இருந்த மானேஜர்
மட்டும் வெள்ளிக்கிழமை அனுப்ப
வேண்டிய ஸ்டேட்மெண்டுகளை
தானே எழுதி
தவறாமல் அனுப்பி விடுவார் .
கடைசியில் டெபுடேஷன் அனுப்பியதற்கே
அர்த்தமில்லாமல் போய் விட்டது
திரும்பி வந்த பின் அந்த
கிளார்க் செம
கடுப்பில் .
ஹாஹாஹா நல்ல அனுபவம்தான் நானும் இப்படித்தான் ராஜீவ்காந்தி இறந்தபோது ஒரு கிராமத்தில் மாட்டிக்கொண்டேன்.
ReplyDeleteவருகைக்கு நன்றி . ராஜிவ் காந்தி இறந்தபோது நாங்கள் ஹைதராபாத் வாசிகள் ஆனாலும் சென்னையில் வந்து மாட்டிக் கொண்டோம் ,
Deleteகிராமத்துக் கிளைகளில் இப்படி பல விஷயங்கள் நடக்கும்..... :)
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteராஜீவ் காண்டபிஹி இறந்தபோது ஆபீசுக்கு அருகிலேயே வீடு. பாதிப்பு தெரியவில்லை. இலங்கை விஷயத்துக்காக திமுக அரசை கலைத்தார்களே அப்போது வெளியூரில் வேலை. செமையாய் மாட்டிக் கொண்டேன்!
ReplyDeleteமன்னிக்கவும் ராஜீவ் காந்தி என்று படிக்கவும்! வர்டில் ஆட்டோ ஆப்ஷன் சதி செய்து விட்டது!
Deleteஹஹஹ்ஹ.....நல்ல அனுபவம்தான். எனக்கும் இது போன்ற அனுபவம் உண்டு ஆனால் தொழில் ரீதியில் அல்ல தனிப்பட்ட முறையில்...
ReplyDeleteகீதா: எங்கள் ஊரில் புயல் மழை பெய்தால் எங்கள் ஊரைச் சுற்றி ஓடும் ஆறும், வாய்க்கால்களும், நீர் பெருகி உடைப்பெடுத்துக் கொண்டு எங்கள் கிராமத்தை மெயின் ரோட்டிலிருந்துப் பிரித்து தனித் தீவாக்கிவிடும். அப்போது ஒரு முறை இப்படித்தான் நாங்கள் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது வெள்ளம் வந்து கன்னியாகுமரிக்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டவர்கள், பேருந்தில் - அப்பொது ரெயில் எல்லாம் இல்லை - எங்கள் ஊரின் மெயின் ரோட்டைத் தாண்டிச் செல்ல முடியாமல் பெரியா ஆற்றின் பாலம் பக்கம் மாட்டிக் கொள்ள எங்கள் வீட்டிலிருந்து நாங்கள் நடந்து சென்று அவர்களை எல்லாம் எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து சப்பாத்தியும், தாலும் செய்து கொடுத்து அவர்கள் அதைச் சாப்பிடக் கஷ்டப்பட்டு உண்ட விதத்தைப் பார்த்து வியந்து... எல்லாம் நினைவுக்கு வந்தது.