Tuesday 25 August 2020

நான் காதலித்த வார்த்தைகள்-2

சரியான புரிதல் இருந்தால் மட்டுமே காதலிக்க முடியும் ஆனால் வார்த்தைகளைக் காதலிக்க  இந்த  ரூல் ஒத்து வராது

அதுவும் என் விஷயத்தில் .

Epistolary எபிஸ்டலோரி என்கிற வார்த்தை .

 நான் படிக்கும் போது அர்த்தம் தெரியாத வார்த்தைகள் வந்தால் அதைக் கடந்து போகிற ஆள் இல்லை . அதே சமயம் உடனே அகராதியை எடுத்துப் பார்க்கும் ரகமும் இல்லை . முதலில் நானே அதன் அர்த்தத்தைக் கண்டு பிடிக்கப் பார்ப்பேன் . ஒரு துப்பறியும் நிபுணர் ரேஞ்சுக்கு .

 படிச்சு முடிச்ச அந்த வரிக்கே ரிவர்ஸ் கியர் எடுப்பேன்  பல சமயங்களில் ஒரு குத்து மதிப்பான அர்த்தம்  கண்டு பிடித்துவிடுவேன் . இந்த வார்த்தைக்கும் அப்படியே செய்யலாமேன்னு பாத்தால்

Epi sto lary என்று மூன்றாகப் பிரித்ததால்  தனித்த தனியாக எதோ புரியுது .

 Epidemic Epi centre மாதிரி  Epi sto lary . ஓகே கொஞ்சம் புரியுது

 Salary Burglary  Vocabulary மாதிரி Epi sto lary., இதுகூட ஓகே

 அட கிட்டவந்துட்டோம் போலெ ... ஆனா

ஆனா அதுகூட  சம்பந்த சம்பந்தமில்லாமல் இது என்னா நடுவாலsto” ?

 இது ஒன்னு   அவசியமேயில்லாமல் வந்து ஒட்டிக்கிட்டு ......

 அதை முன்னையும் சேக்க சேக்கமுடியாம பின்னாடியும்  சேக்கமுடியாம  டார்ச்சர் குடுக்குதே .

ஒன்னாகக்  கூட்டிப் பார்த்தால் கூட்டணி சரிவரலே.

 ம்ஹூம் குழப்பம்  தொடருது ..

சரி கிடக்கு அகராதியைப் பாத்துடுவோம்ன்னு தோல்வியை ஓத்துக்கிட்டு 

அகராதியை எடுத்துப் பார்த்தால் நெனச்சுக்கூட கூட பார்க்கலை 

இப்படி  ஒரு அர்த்தம் இருக்கும்ன்னு .

கடித வடிவிலான கதைகள் புதினங்கள் கட்டுரைகள்  இப்படியாம்.

கடித சம்பந்தமான வார்த்தையின் ஒரு பிட்டு ஒரு  க்ளூ , கூட இல்லையே குழப்பிட்டியே படவான்னு  திட்டினாலும் இந்த வார்த்தையில் ஒரு புதுமை இருப்பது போல தோணிடுச்சு புடிச்சுப் போச்சு

 ஆம்  கடித வடிவிலான இலக்கியங்கள் ஒரு காலத்தில் எல்லா மொழிகளிலும் இருந்தன .

ஆங்கிலத்தில் பல பிரசித்தி பெற்ற புதினங்கள்  ஏராளம் 

இந்திய எழுத்தாளர்களில்  பாரதப் பிரதமர் திரு நேரு அவர்கள்  இந்திராகாந்திக்கு  எழுதிய கடிதங்கள் மிகவும் பிரபலம் .

 தமிழில்  டாக்டர்  மு.வ அவர்கள்  கடித வடிவில் அன்னைக்கு தம்பிக்கு  தங்கைக்கு நண்பருக்கு என எழுதியுள்ளார்.அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் கலைஞரின் கடிதங்கள் எல்லாம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன .  அரசியல் வாதிகளின் கடிதங்கள் அவரவர் கட்சித் தொண்டர்களைப் பெரிதும் கவர்ந்தன .

முனைவர் பட்டம் வாங்க ஆய்வாளர்கள் இந்தத் தலைப்பின் பல பரிமாணங்களை எடுத்துக் கால வாரியாக ஆராய்ந்துள்ளனர் . 

ஆனால் இப்போது கடிதம் எழுதும் பழக்கம் அருகி வருகின்றது.  கால மாற்றத்தினால் பல விஷயங்கள் மறைந்து வழக்கொழிந்து   போகின்றன.

 இந்தக் கடித இலக்கியம் என்கிற ஒன்று எதிர் காலங்களில் இருக்குமா அல்லது வாட்சப் இலக்கியம் ,ட்வீட்டர் இலக்கியம்   என்கிற  புது வடிவ இலக்கியம் உருவா குமா?

அவையே முனைவர் பட்டத்திற்குத் தலைப்பாக எடுக்கப்படலாம்.


13 comments:

 1. இரண்டு வரியை எழுதிப் பார்த்தால், முதல் வகுப்பு ஞாபகம் வருகிறது...

  கையெழுத்து போடும் போது மாறாமல் இருப்பதில் பெருமகிழ்ச்சி...!

  ReplyDelete
 2. அருமையான பதிவு. கடிதம் எழுதுவதே ஒரு கலை. இப்போது அது இல்லை என்று நினைக்கிறேன். Letter to Peking என்ற பெயரில் ஒரு நாவல் உண்டு. Very touching.

  ReplyDelete
 3. கடிதம் எழுதுவது நமக்கே இல்லை என்றாகி விட்டது.

  எதிர்காலத்தில் இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் ? என்று கேட்பார்கள்.

  ReplyDelete
 4. சிறப்பான பகிர்வு. தில்லி வந்து சில வருடங்கள் வரை தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருந்தேன். இப்போது கையால் எழுதுவது வெகு அரிது.

  ReplyDelete
 5. வருகைக்கு நன்றி

  ReplyDelete
 6. கடித இலக்கியம் ஏறக்குறைய இல்லாமலேயே போய்விட்டது வேதனைதான்

  ReplyDelete
 7. நானும் ஆங்கில சொல்லாக்கம் கண்டு வியந்து நிற்பதுண்டு.
  நற்பதிவு.

  ReplyDelete
 8. நானும் ஆங்கில சொல்லாக்கம் கண்டு வியந்து நிற்பதுண்டு.
  நற்பதிவு.

  ReplyDelete