Saturday 30 March 2019

ஸ்மார்ட் பிளாக் உலகம் தாராள மயமாக்கப்பட்டதாலும்  தொழில் நுட்பம்     வெகு வேகமாக முன்னேறி வருவதாலும் இப்ப ஏகப்பட்ட சமாச்சாரங்கள் ஸ்மார்ட்  ஆகி விட்டன .
ஸ்மார்ட் போன்கள்
 நிறையப்பேரிடம் ஸ்மார்ட் போன்கள் .
தமிழிலோ அல்லது   இங்கிலீஷிலோ   நாலு வார்த்தை   சேர்ந்தா மாதிரி   எழுதத்       தெரியாதவர்களெல்லாம் கூட
தங்கள் எண்ணங்களை smilie மூலம் அல்லது பல ஃ பார்வேர்ட்  message  மூலம் எளிதில் வெளிப் படுத்தி  விட முடிகிறது .

 ஸ்மார்ட் போனைக் கொண்டு
ஏகப் பட்ட விஷயங்கள் செய்ய முடிவது எல்லோரும் அறிந்ததுதான் . அது தவிர ஏசி ஆன்  பண்ண முடிகிறது.
இன்ஃ பிரா  ரெட் சம்பந்தமுள்ள அனைத்து உபகரணங்களையும் 
ஸ்மார்ட் போனைக் கொண்டு  இயக்க முடிகிறது .

 ஸ்மார்ட் வாட்ச் 

இப்பொழுது வாக்கிங்  வருபவர்களின் பல பேர் கையில் ...
அவ்வப் போது பேச  வேறு செய்கிறது 
ஓடு...ஓடு ... என்கிறது.
நட.... நட என்கிறது.
இருந்தாலும்  ஒரு சிலர் மட்டுமே  அது  கத்திய  பின்பு  வேகமாக  நடக்கிறார்கள்
நிறையப் பேர் கண்டு  கொள்வதில்லை .,வழக்கம் போல்

ஸ்மார்ட் டி.வி 

இப்பொழுது   மெல்ல  மெல்ல இந்தியாவில் பிரபலமாகிக் கொண்டு வருகிறது .
ஸ்மார்ட் டி  வி இல்லாதவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படும்  அபாயம் கூட வரலாம் .
சாதி இரண் டொழிய வேறில்லை சாற்றுங்கால்
ஸ்மார்ட் டி வி உள்ளோர் பெரியோர்
இல்லாதோர்  இழிகுலத்தோர்        நிலைமை வரலாம்.
ஸ்மார்ட் தண்ணி பாட்டில்
ஸ்மார்ட் தண்ணி பாட்டில் கூட இருக்கிறது
நமக்குத் தேவைப்படும்  நீர் அளவு தெரிந்து அது நம் உடலுக்குத் தண்ணீர் தேவைப்படும் போது நமக்கு நினைவூட்டும்  
.
 ஸ்மார்ட் பல்புகள் .

 இதில் காமெரா பொருத்தப் பட்டுள்ளது . இதில் பல ஆபத்துக்கள் உள்ள போதும் உபயோகம் பெருகி வருகிறது 

ஸ்மார்ட் குக்கர்

 , இது பற்றி நானும் மெம்பராக  இருக்கும்  வாட்சப் குரூப்பில் ஒரு பெண்மணி மிகவும் சிலாகித்துச் சொன்ன பல உபயோகங்களால் ஒரு இரண்டு பேர் புது அரிசி குக்கர் வாங்கி விட்டனர் .

இனி  வரும் காலங்களில்  வரதட்சிணை ஐட்டங்களில்  கூடிய விரைவில் முதலிடத்தைப்     பிடிப்பதற்கான    வாய்ப்பு   அதிகம் உள்ள   காட்ஜெட்  என்று நினைக்கிறேன் .
.
 இப்படி சகலமும் ஸ்மார்ட் ஆகிவிட்ட நிலையில் ரோட்டில் ஜனங்களை பார்க்கும்போது நிறையப்  பேர்  ஸ்மார்ட் ஆகிவிட்டது போன்ற 
ஒரு ஃ பீலிங்கு . 
நாம மட்டும் ஏன் பின்தங்கிய வகுப்பில்   ?
இதனால் மிகவும்  உணர்ச்சி வசப்பட்டு ஆப்பம் செய்துவிட்டு இது "ஸ்மார்ட் இட்லி " என்று பேர் வைத்து விட்டேன் . ஏனெனில் நடுவில் இட்லி மாதிரியும்  சுற்றிவர தோசையாகவும் இருப்பதால்....
ஏதோ என்னால் முடிந்த smartness 

அப்படியானால் ஏன் ஸ்மார்ட் பிளாக் இல்லை ?
யோசித்தேன் 
நாம் எண்ணங்களை அப்படியே டைப் செய்யும் ஒரு செயலி இருப்பதாக சொல்கிறார்கள் .
 அதை  பிளாக்கிற்கு யாரும் பயன்படுத்துபவர்கள்  இருக்கின்றார்களா என்று தெரியவில்லை .
 ஆனால்  பதிவர்களில் சிலர்  , உதாரணமாக திரு திண்டுக்கல் தனபாலன் , திரு தமிழ் வாசி பிரகாஷ் போன்றோர் ஹை டெக்  பதிவர்கள் .
இன்னும் பலர் கூட இருக்கலாம் .
  வேறு யாரவது "ஸ்மார்ட் பிளாக்" வைத்துள்ளார்களா என்று தெரியவில்லை .
பதிவர்  யாராவது தனது பிளாக்கை "ஸ்மார்ட் பிளாக் " ஆக மாற்றி வைத்திருந்தால் தெரியப்படுத்தவும்
 அது சரி  நீ ஏன் உன் பிளாக்கை ஸ்மார்ட் ஆக்க வில்லை என்று கேட்கிறீர்களா ?
 நானே சூப்பர்  ஸ்மார்ட்டாக இருக்கும் போது .........
 ( காசா பணமா…. யாரும் சொல்வதில்லை என்பதால் நானே
 சொல்லிக் கொண்டேன்  ஹி.....ஹி ....உண்மையில் அந்த அளவுக்கெல்லாம் எனக்கு )........)

24 comments:

 1. ஹா... ஹா...

  மக்கள் தான் ஸ்மார்ட் என்று மாற வேண்டுமே தவிர, மற்றதெல்லாம் ம்ஹீம்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி
   மக்கள் அல்லது உலகமே மாறும் என்று எதிர்பார்க்க முடியாது

   Delete
 2. ஸூப்பர் ஸ்மார்ட் ஆனதை சொல்லவே இல்லை....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி
   தலைப்புச் செய்தி கூடவா இது வரை தெரியாமல் இருக்கிறீர்கள்

   Delete
 3. பெண்களுக்கு ஸ்மார்ட்டான ஐட்டங்கள் கிடைக்கின்றன...ஆனால ஸ்மார்ட்டான மாப்பிள்ளை கிடைத்தாலும் கல்யாணம் ஆன பின் ஸ்மார்ட்டான கணவன் மட்டும் கிடைப்பதில்லை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி
   குழப்பி இருக்கிறீர்கள் , புரியவில்லை
   நீங்கள் சொல்வதிலிருந்து பெண்கள் க.மு க,பி எப்போதுமே ஸ்மார்ட் என்று

   க.மு கல்யாணத்திற்கு முன்
   க,பி கல்யாணத்திற்குப் பின்

   Delete
 4. சரி அப்படியே அஅ ஸ்மார்ட் மூளை இருக்கானு பார்த்து சொல்லுங்க!! மீக்குதான்..ஹிஹிஹி...ஸ்மார்ட் ப்ளாக் ஆக்கணும்னா ஸ்மார்ட் மூளை வேனும்ல!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி
   என்ன இப்படிச் சொல்லிட்டேங்க கீதா மேடம் , உங்க மூளை மாதிரியான (சூப்பர் மூளை மாதிரியான manufacture பண்ணிய) மூளை அமேசானில் விற்பனைக்கு உள்ளது ,
   ஆனால் என்ன அதை எல்லோராலும் access பண்ண முடியவில்லை

   Delete
 5. நாம் எண்ணங்களை அப்படியே டைப் செய்யும் ஒரு செயலி இருப்பதாக சொல்கிறார்கள் .//

  ஹா ஹா ஹா அதுக்குத்தான் ஸ்மார்ட் மூளை வேணும்னேன்...

  சூப்பார் ஸ்மார்ட் பதிவு அ அ

  கீதா

  ReplyDelete
 6. ஸ்மார்ட் இட்லி பெயரை பேட்டன்ட் பதிஞ்சு வைங்க ஏதாவது ரெஸ்டாரன்ட் லபக்கிடப் போறாங்க...!!

  கீதா

  ReplyDelete
 7. ஸ்மார்ட் இட்லி! உலக இட்லி தின ஸ்பெஷலா?!!

  ஸ்மார்ட் குக்கர், ஸ்மார்ட் பல்பு எல்லாம் கேள்விப்படாதவை. ங்கள் வீட்டில் ஸ்மார்ட்போனும் ஸ்மார்ட் டிவியும் மட்டும் இருக்கிறது! ஜோதியில் கலக்கத் தொடங்கியிருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி
   ஸ்மார்ட் குக்கர் சென்னையிலும் கிடைக்கிறது

   Delete
 8. ஸ்மார்ட் பதிவு சகோதரியாரே

  ReplyDelete
 9. ஸ்மார்ட் பதிவு!

  ஸ்மார்ட் குக்கர் புதிது. இப்போதெல்லாம் பல விஷயங்கள் இப்படி கிடைக்க ஆரம்பித்து விட்டன.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி
   ஸ்மார்ட் குக்கர் சென்னையிலும் கிடைக்கிறது

   Delete
 10. ஸ்மார்ட் பதிவு

  ReplyDelete
 11. வருகைக்கு நன்றி

  ReplyDelete
 12. இவ்வளவு ஸ்மார்ட் சாமான்களா!!!
  எனக்கு தெரிஞ்சது எல்லாம் ஸ்மார்ட் போன் , ஸ்மார்ட் வாட்ச் தான்

  ReplyDelete
 13. இந்த பதிவு உண்மையிலேயே ஸ்மார்ட் பதிவுதான் !!!

  ReplyDelete
 14. சூப்பர் சுமார்ட் பதிவுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 15. நலமாக இருக்கிறீர்களா?

  ReplyDelete