Friday 27 July 2018

குழிப்பணியாரச் சட்டியில் போண்டா
எனக்கு இந்த எண்ணெய் பண்டங்களான வடை பஜ்ஜி இதெல்லாம் சுத்தமாப் பிடிக்காது என்னும் இனத்தைச் சேர்ந்தவள் அல்ல ,
ஆனாலும் இவற்றையெல்லாம் ஒதுக்கி விடுவேன் .
காரணம் அதன் பின் வரும் வயிற்று வலி தான் . 
பிரச்னை என்றால் தீர்வும் இருக்கத்தானே வேணும் என்று யோசித்தபின் குழிப்பணியாரச் சட்டியில் போண்டா  போட்டால் எப்படி ?
தீவிரமாகச் செயலில் இறங்கினேன் 

ப்ராஜெக்ட் செம்ம  சக்ஸஸ் ..

செய்முறை இதோ:
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு          2 வேகவைத்தது
பட்டாணி                 ஒரு சின்ன கப் வேகவைத்தது
காரட் துருவல்            கொஞ்சம்
சோயா நக்கெட்           ஒரு சின்ன கப்
பச்சை மிளகாய்           காரத்திற்கேற்ப
பச்சைக் கொத்தமல்லி     கொஞ்சம்
உப்பு                      தேவைக்கேற்ப

 மற்றபடி பீன்ஸ் காலி பிளவர் யோக்ய பிளவர் என எது வேண்டுமென்றாலும் சேர்த்துக் கொள்ளுங்கள் . 
நான்   இதுவே முதல் முறை என்பதால்  காய்களின் எண்ணிக்கை மற்றும் அளவிலும்    குறைவாகவே  எடுத்துக் கொண்டேன் ,

 பிறகு பட்டாணி தவிர மற்ற எல்லாவற்றையும்  நன்கு மசித்ததுக்கொள்ளவும்.


பிறகு   பச்சைப் பட்டாணியையும் சேர்த்துக்   கைகளில் எண்ணை தடவிக்கொண்டு   உருண்டைகளாக உருட்டவும் .


பிறகு குழிப்பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்தது சூடேறியதும்  குழிகளில் மிகக் குறைந்த அளவே எண்ணெய் விட்டு இந்த உருண்டைகளைப்  போட்டு நன்கு வெந்தபின்பு  திருப்பிப் போடவும் .இரு புறமும் நன்கு வெந்தபின்பு தட்டில் போட்டு சாப்பிடலாம்.வெளிப் பகுதி நன்கு மொறு மொறுவாகவும் உள்பகுதி  சாஃப்ட் ஆகவும் இருக்கும்.
 .
 நான் சாஸ் உடன் சாப்பிட்டேன்
சட்னி கூட இதுக்கு நல்ல கூட்டாளியாக இருக்கும் .

இதில்  எண்ணெய் செலவு மிகமிகக் கம்மி .

சீக்கிரமாகவும் வெந்து விடுகிறது.

 வடை கூட இதே பாணியில் செய்யலாமா என்று தெரியவில்லை . செய்து பார்த்த பின் பதிவிடுகிறேன் .
  டிஸ்கி:
சொந்த வேலை காரணமாக பதிவுகள் எழுதவோ ,யாருக்கும் காமெண்ட் போடவே முடியவில்லை 
இனிமேல் தான் தொடரணும்.


18 comments:

 1. அட நல்லா இருக்கே...ஈசி யாவும்..

  இது கட்லெட் தங்கையோ..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி இருக்கலாம்

   Delete
 2. இந்த சமையல் நமக்கு சரிப்பட்டு வராது. வீட்டுக்காரம்மாகிட்ட சொல்லி பாக்குறேன். கிடைத்தால் நல்லது.

  நமது வலைத்தளம் : சிகரம்
  இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

  ReplyDelete
 3. நல்ல ஐடியாதான் சீக்கிரம் செய்து பார்த்து எங்க வீட்டாம்மாவிற்கு கொடுத்து ஒரு நாள் பூரிக்கட்டை அடியில் இருந்து தப்பித்து கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி
   அப்படி Effective ஆக இருந்தால் இந்த ரெசிபியின் காபி ரைட் முழுவதும் உங்களுக்கே

   Delete
 4. அடடே... புதுசா இருக்கே... பாஸ் கிட்ட சொல்லியிருக்கிறேன்.

  ReplyDelete
 5. அருமை சகோ, புதியதொரு முறை

  ReplyDelete
 6. புதுமையாக இருக்கிறது. சுவையாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். முயற்சிக்கிறேன். நன்றி.

  ReplyDelete
 7. அருணா செஞ்சுருக்கேன். லாங்க் பேக்......எனக்கு எப்படி ஐடியா வந்துச்சுனா...கட்லெட்டுக்குப் போட்டுட்டு பார்த்தா ஷாலோ ஃப்ரை பண்ணும் அளவு எண்ணை இல்லை..வாங்க மறந்த நேரம்...உடனே போய் வாங்க சோம்பேறித்தனம். நெஸஸிட்டி இஸ் த மதர் ஆஃப் இன்வென்ட்ஷன்னு சும்மாவா சொன்னாங்க ஹா ஹா ஹா ஹா ..ஸோ எண்ணையில் பொரிக்காமல் தட்டி தோசைக் கல்லில் போட்டு கொஞ்சமே கொஞ்சம் எண்ணை சுற்றி விட்டு நன்றாகக் க்ரிஸ்பாக எடுப்பதுண்டு. அப்படியே உருண்டையா குழிப்பணியாரச்சட்டியில் போட்டா என்னனு செய்து சக்ஸஸ் ஆச்சு. அப்படியே இப்படியானவை குழிப்பணியாரச் சட்டிக்கும், தோசைக்கல்லுக்கும் மாறிச்சு. பெரும்பாலும் நானும் எண்ணையை அவாய்ட் செய்வதற்கு யோசிக்கும் போது...மூளை சரியா வொர்க் பண்ணிச்சுனா உதிக்கும். ஆனா பாருங்க இப்படிச் செய்யலாம் என்பதை உங்களிடம்/ எபி திங்க பதிவுல கூடச் சொல்லக் கூட எனக்குத் தோணாம போச்சு...ஸோ நீங்களே இங்க சொன்னது ரொம்பவே நல்லது....

  சரி நீங்களும் எபி திங்க பதிவுக்கு ஸ்ரீராமுக்கு அனுப்பலாமே....(நானே ஸ்ரீராம் சார்பில் கேட்டுட்டேன் ஹிஹிஹி..)

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி

   எபி திங்க பதிவு புரியவில்லை

   Delete
 8. நல்ல ஐடியாவா இருக்கே.... குழிப்பணியாரக் கல் இங்கே இல்லை. வீட்டில் செய்து பார்க்கச் சொல்றேன்.....

  சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பகிர்வு. மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி
   சில வேலைகள் ........பதிவுப் பக்கம் வந்தால் மற்ற வேலைகள் அப்படியே நின்றுவிடும் போலிருந்தது எனவே

   Delete
 9. வித்தியாசமா இருக்கு... செய்துவிட வேண்டியது தான்... நன்றி...

  ReplyDelete
 10. சிறந்த வழிகாட்டல்

  ReplyDelete