Friday 6 January 2017

பூனை மொழி அறிந்த புதுமைப் பெண் .


  

 பூனை மொழி   எங்கே   சொல்லிக்   கொடுக்கிறார்கள்   என்றெல்லாம் கேட்கவேண்டாம் .

படித்துப்   பார்த்தால்   நீங்களே    ஒத்துக் கொள்வீர்கள்    எனக்குப்  பூனை மொழி   தெரியு ம்  என்று.

 எங்க   வீட்டில்   பூனைக்கு ப்   பிரசவம்   என்று எங்கேயோ      பூனை மொழியில்  எழுதி   வைத்திருக்கிறோம்   போல . எங்க   வீட்டு   பால்கனியில்   உள்ள அலமாரியில்தான்    பூனைகள்   குட்டி போடுகின்றன.


 ஆனாலும்   அவைகள்   ஒரு ராணுவக்    கட்டுப் பாட்டுடன் தான்   இருக்கும் .

பால்கனியைத் தாண்டி இது வரை வீட்டு உள்ளே வந்ததில்லை .

நானும்   கதவுகளைச்    சாத்தியே   வைத்திருப்பேன் .

 நேற்று   நான்   வேலை  முடிந்து   வந்த   பின்   பெட் ரூமில்  நுழைந்தால்
 பூனைமியாவ் " என்றது .

பத்துக்குப் பத்து   பெட் ரூமில் 89    சதுர அடிக்குச்    சாமான்கள் உள்ளபடியால்  பூனை    எங்கிருந்து கத்துகிறது   என்று கண்டு பிடிக்க  முடியவில்லை .

எனக்கும்   பயமாக   இருந்தது.

 கதவைச்   சார்த்திவிட்டு   வந்து விட்டேன்.

என்   கணவருக்குப்   போன் பண்ணினேன் .

உடனே   அவர்   பூனை  ” எத்தனை மணிக்கு வந்தது ?”

எப்படி வந்தது ?

எதுக்காக வந்தது ?

ரூமில் என்ன வைத்திருந்தாய்?

ரூமில் பூனை என்ன பண்ணிக்கொண்டிருக்கிறது

 (சமையலா பண்ணும்? )
என்றெல்லாம்   கேள்வி   மேல்   கேள்வி   கேட்டதும்
 நான்   வெறுத்துப்   போய்
எனக்கு   ஜப்பானிய  மொழி தான் தெரியும்  பூனை
மொழியெல்லாம் தெரியாது
என்று சொல்லிவிட்டு போனைக் கட் பண்ணினேன்.

 பிறகு  கொஞ்ச நேரம் கழித்து " கேவலம்    ஒரு   பூனை   நம்   வேலைகளைக்   கெடுக்க  அனுமதிப்பதா ? "என்ற   ஒரு   தன்னம்பிக்கை   வார்த்தையால்   என்னை   நானே   உசுப்பேத்திக் கொண்டு   மீண்டும்
 அந்த ரூமிற்குப் போனேன் .

 "  மியாவ் " என்றேன் .

பூனையும்  "  மியாவ் " என்றது .

 திரும்பவும் நான்  "  மியாவ் ".

பூனையும்  "  மியாவ் "

 இப்படியே   நானும் பூனையும் . முதல் மரியாதை சிவாஜி   ராதா   மாதிரி  எசப்பாட்டு   பாடினோம்   

 நாலஞ்சு    "  மியாவ் " க்கு  அப்புறம்   எனக்கு  பயம்  வந்துடுச்சு .

 பூனை  நம்பளக்   கடிக்க வந்துடுமோன்னுட்டு .

திரும்பக்   கதவை    மூடிட்டு வந்துட்டேன்.

  அரை மணி கழிச்சு ஒரு வேலையாய் ரூமுக்குப் போனேன் ,

நான்   "  மியாவ் "

 பூனை இல்லை போல .

எசப்பாட்டு   மிஸ்ஸிங்

வேலையை முடித்த

 பின் வெளியே வந்து விட்டேன்

 ராத்திரி    ரெண்டு மணிக்கு ரூமுக்குப் போனேன் ,

 என்  "  மியாவ்மொழி கேட்டதும்    பூனையும் ."  மியாவ் "

 வேலைய    முடித்து வந்து விட்டேன் .
கதவை மறக்காமல் சாத்தி விட்டேன் ,


இப்பெல்லாம்  ரூமுக்கு நான் கதவைத் திறந்து  உள்ளே போனதும்  "  மியாவ் " என்கிறேன் .
பூனை ரூமில் இருந்தால்  "  மியாவ் " என்று பதிலளிக்கிறது.
இலை என்றால் நோ  "  மியாவ் "
 என்   பசங்க கூட    நீ என்ன   பண்றேன்னு   கேட்டா   பதில்   சொல்ல மாட்டாங்க .
ஆனால்   பூனை   எனக்கு   ரிப்ளைய்    பண்ணுகிறது   என்றால்
   எனக்குப்  பூனை மொழி   தெரிகிறது   என்று தானே அர்த்தம் .

( வேலைகள் நிறைய இருப்பதால் வார இறுதி மட்டுமே வர முடிகிறது )

 By Abaya  Aruna

 HOD – Department of  CAT Language


23 comments:

 1. பூனை மொழி .....
  அருமை நட்பே....!!!

  ReplyDelete
 2. பூனை மியாவ் என்றதா ?

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. என்ன அருணா!! நீங்க பூனைய கூப்பிட அது உங்கள கூப்பிடுது நான் சொல்லித் தரேன் பூனை மொழி!! .நீங்க நான் தான்...மி... வரலமானு கேக்கறீங்க...அது மியாவ்...மி...ஆவ்.....me ...aavO - hindi நான் தான் வா நு சொல்லுது...ஹிஹிஹி...

  பூனை எப்ப நாம் மியாவ் சொன்னாலும் அதுவும் மியாவ் தான் சொல்லும். நீங்கள் பூனையின் பல மியாவ் மாடுலேஷனை முயற்சி செய்து பாருங்கள்! இன்னும் அதன் மொழி புரியும்!...(என் பையன் cat clinic லதானே வேலை பார்த்தான்...)

  மியாவை ரொம்பவே சிரித்து சிரித்து ரசித்தேன்...நானும் இனி உங்களுடன் மியாவ் மொழியிலதான் பேசப் போறேன்...ஹிஹிஹி

  கீதா

  ReplyDelete
 5. ஏன் அருணா வாட்சப்பில் இணைக்கலையா...ப்ளீஸ் இனி இணைச்சுருங்க...எனக்கு உடனே பார்க்க வசதியா இருக்கும்....கில்லர்ஜி தான் சொன்னாரு..நீங்க பதிவு போட்டிருக்கீங்கனு....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இணைத்து விட்டேன் நன்றி

   Delete
 6. மியாவ் (பதிவை) மிமியாவ் (மிகமிக) மிய்ய்ய்ய்யயாவ் (அதிகமாய்) மியவ்(ரசித்தேன்).

  ReplyDelete
 7. மியாவ்...... நல்ல அனுபவம் உங்களுக்கு... நல்லதொரு பகிர்வு எங்களுக்கு...

  HOD-Department of CAT Language! :) haa haa....

  ReplyDelete
 8. பூனை மொழி
  அருமையான தகவல்

  ReplyDelete
 9. வருகைக்கு நன்றி

  ReplyDelete
 10. மியாவ்.....மியாவ்..... ஹையா... நானும் பூனை மொழி கத்துகிட்டேனே..)))))

  ReplyDelete
 11. மியாவ் மியாவ் பூனைக்குட்டி - என்ற பாடல் காட்சி (சவுகார் ஜானகி) நினைவுக்கு வந்தது. சுவாரஸ்யமான பதிவு.

  ReplyDelete