Sunday 16 October 2016

சந்தைப் படுத்தல்


   என் லாப் டாப்பில் சில பிரச்னைகள் .
ஐ பேட் இருந்தாலும் எனக்கு லாப் டாப் மாதிரி   டைப்பு அடிக்க வரவில்லை . கட்  பேஸ்ட் சுத்தமாக வருவதில்லை .அதனால் பதிவு எதுவும் போட வில்லை .கமெண்டும் போடவில்லை .

இது என்ன புது வார்த்தை என்று நினைக்க வேண்டாம் .
ஆங்கிலத்தில் உள்ள Marketting என்ற வார்த்தையின் மொழி  பெயர்ப்பு .


மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தவிர்க்க முடியாத ஒன்று சந்தைப் படுத்தல்.
 சின்ன வயசில் மார்க்கெட்டிங் என்றால் வீடு வீடாகச் சென்று சாமான் விற்பது என்ற அளவில்தான் நான் மார்க்கெட்டிங் பற்றி புரிந்து கொண்டிருந்தேன் .


ஆனால் சமீபத்தில் டேவிட் ஓக்லியின் புத்தகம் படித்தபின் தான் அதன் பரிமாணம் ,முக்கியத்துவம் , கவனத்தில் கொள்ள வேண்டியவை எனப் பலவற்றையும் அறிந்து கொண்டேன் . .


 வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றி அடைந்ததற்கு முக்கியமான காரணம் திறமை என்று கூறினாலும் தன் திறமையை சந்தைப் படுத்தத் தெரியவில்லை என்றால் நிச்சயம் வெற்றி அடைய முடியாது .

இது குடும்ப உறவுகள்  முதல் ,சுய தொழில் , அலுவக வேலை , அரசியல் ,சினிமா ,வரை எல்ல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.


 மார்க்கெட்டிங் சரிவரப் பண்ணத்தெரியாமல் கடையின் அலமாரியை விட்டு  ஓடச் செய்யப்பட்ட பிராண்டுகள் பலப்பல.


நானும் எனது அனுபவத்தில் பார்த்திருக்கிறேன் வேலையில் ஒரு மண்ணும் தெரியாத அதி மண்டூகங்களும்   மேல் அதிகாரிகளிடம் தன்னைப் பற்றிய சுய விளம்பரத்தாலேயே  ( இதை நாம் ஜால்றா . காக்கா என்று சொல்வோம் )பதவி உயர்வு வாங்குதல் ,தான் இல்லாவிட்டால்  அந்த அலுவலகம் இயங்காது என்பது போன்ற புரூடாக்களை அள்ளி வீசி முப்பது வருடம் போல  இட மாற்றங்களைத் தவிர்த்த ஆட்களையும் நான் பார்த்திருக்கிறேன் .


அதே  மாதிரிக்   குடும்பத்திலும் உடன் பிறந்தவர்களுக்கு என்று ஒரு நயா பைசா செலவு பண்ணியிருக்க மாட்டார்கள் ஆனாலும் வாய்  ஜாலத்தால் தானே பெற்றவர்களையும் விடத் தான் ரொம்பவே செய்து விட்டதாகவே சொல்லிக்கொள்ளுவார்கள் .


 அதே போல சில தெருவோரக் கடைகள்  பெரிய விளமபரங்கள் செய்யப் படும் ஓட்டல்களை விடவும் சுவையான உணவு தருவார்கள் . இருந்தும் அவ்வளவு டர்ன் ஓவருக்கான லாபம் பெரிய ஓட்டல்களை விடவும் கம்மியாகத் தான் இருக்கும்.

வகுப்பில் கூட வாய் சவடால் விடும் மாணவனைக் கண்டால் டீச்சர்களும் சில சமயங்களில் அவர்களைப் படிப்பு சுமார் ரகம் தான் ஆனாலும் ஸ்மார்ட் என்று சொல்லி முத்திரை குத்தி விடுவார்கள்.இது எல் கே ஜி யில் இருந்து கல்லூரி வரை பொருந்தும் .வெறும் படிப்பு மட்டும் போதாதே என்று சொல்லிவிடுவார்கள் .அந்த டீச்சரை நாம் ஒரே வஞ்சனை என்று  பட்டம் கொடுப்போம் .

 என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால்  என் வேலை குடும்ப உறவுகள் படிப்பு எனப் பல  விஷயத்திலும் கூட நான் மார்க்கெட்டிங் சரிவரப் பண்ணியிருந் தேன் என்றால் இன்னும் நன்றாக வந்திருக்க முடியும் என்று தோணுகிறது .


 எனவே சுய தம்பட்டம் என்று மற்றவர்கள் கூறினாலும்    மார்க்கெட்டிங் எனும் கலையை வளர்த்துக் கொள்ள வைத்து தவறில்லை


8 comments:

 1. மார்க்கெட்டிங் பற்றி விரிவான தகவல்கள் குடும்ப விடயத்தையும் அலசியது நன்று

  ReplyDelete
 2. அதாவது அப்பட்டமாக சுய தம்பட்டம் அடித்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதானே, செஞ்சுட்டாப்போகுது. ஆனா 80 வயசுக்கப்புறம் செஞ்சு என்ன ஆகப்போகிறது என்ற ஒரு விரக்தியும் கூடவே வருகிறது. இருந்தாலும் முயற்சித்துப் பாக்கறேன். பதிவிற்கு நன்றி.

  ReplyDelete
 3. ஒரேயடியாக இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது சு.த அடித்துக் கொள்வதில் தப்பில்லை!!

  ReplyDelete
 4. இந்த ஜால்ரா அடிப்பது, காக்கா பிடிப்பது எல்லாம் எனக்கு ஒவ்வாத விஷயங்கள். இதனாலேயே பலரிடமிருந்து விலகியிருக்கிறேன். அல்லது விலக்கி வைக்கப்பட்டிருக்கிறேன். இதனாலேயே அலுவலகத்தில் பல இடர்கள்...

  ReplyDelete
 5. மார்க்கெட்டிங்க் (சந்தைப்படுத்தல்) மிக அருமையான சொல். முன்பு எல்லாம் மக்களுக்கு என்ன தேவை என்று அறிந்து அதை தயாரித்து சந்தைப்படுத்தினர் ஆனால் இன்றோ ஒரு பொருளை தாயரித்துவிட்டு அதை மக்களுக்கு மிக வேண்டிய பொருட்களாக்கி அதை மக்கள் மனதில் உணரச் செய்து வாங்க சந்தைப்படுத்துகிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. முன்பு எல்லாம் மக்களுக்கு என்ன தேவை என்று அறிந்து அதை தயாரித்து சந்தைப்படுத்தினர் ஆனால் இன்றோ ஒரு பொருளை தாயரித்துவிட்டு அதை மக்களுக்கு மிக வேண்டிய பொருட்களாக்கி அதை மக்கள் மனதில் உணரச் செய்து வாங்க சந்தைப்படுத்துகிறார்கள்// மிகவும் சரியான கருத்து மதுரை சகோ! நான் சொல்ல நினைத்தது நீங்கள் சொல்லிவிட்டீர்கள் வழி மொழிகின்றேன்.

   கீதா

   Delete
 6. உண்மைதான் சந்தைப்படுத்தல் என்பதற்குத் தனி அறிவு, திறமை வேண்டும். அது ஒரு தனி கலை! பிழைப்பதற்கு மிகவும் முக்கியம். வீட்டிலும் வேண்டும் என்று நல்லாவே சொன்னீங்க. அது இல்லாததால்தான் ஹும் சரி விடுங்க....

  ReplyDelete