Friday 5 August 2016

சுரண்டும் முதலாளித்துவத்தின் ஒரு பரிமாணம் .


கடந்த 15 நாட்களாக வேலைப் பளுவின் காரணமாக பதிவு எதுவும் போட முடியவில்லை .

என் இரண்டாம் மகன் இப்போது இந்தியா வந்துவிட்டதால் வீட்டு  வேலை வேறு .

சுரண்டல் என்பதை ஒரு நிலச் சுவான்தார் தன் பண்ணையில் வேலை செய்யும்

கூலி ஆட்களுக்கு வெகு குறைவாகக் கூலி  கொடுப்பது ,மற்றும்

தொழிற்சாலை முதலாளிகள் குறைவாகச் சம்பளம் கொடுப்பது மட்டுமே

என்று பொதுவாக நினைக்கப் படுகிறது .

சிறு கம்பெனிகள் சில சுரண்டல் செய்வதும்  கிட்டத்தட்ட அது மாதிரித் தான்

ஆனால் அது வெளியே தெரிவதில்லை .

 ஏனெனில் சம்பந்தப்   பட்ட ஆட்கள் இருவருமே வெள்ளையும்

சொள்ளையுமாக டிரஸ் செய்து கொண்டுள்ளதாலும்  நுனி நாக்கில் ஆங்கிலம்

பேசுவதாலுமே.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு ஆபீஸ் எனக்குப் போன் பண்ணி இந்த

டாகுமெண்ட் மொழி பெயர்த்துத் தரமுடியுமா என்கிறார்கள் . நானும் சரி

என்றேன்.ஏனெனில்  பத்து வருட அனுபவம் உள்ளதால் மெடிக்கல் தவிர

மற்றவைகளை எடுத்துச் செய்யும் தைரியம் உண்டு . இதுவரை  நக்கீரன்கள்

யாரும் வந்து பேசவில்லை .

சாதாரணமாக pdf  எtன்றால் ரேட் அதிகம் தருவார்கள் . நன்கு படிக்கத்

 தெரிந்தவர்கள் மட்டுமே அதை செய்ய முடியும் . வேர்ட் என்றால் ஒரு அளவு

அறிவு இருந்தால் போதும் .

PDF என்றால் செய்ய நிறைய நேரம் பிடிக்கும் , கண்களுக்கு சில சமயம்

அயர்ச்சி  வேறு .

முன்பு பண்ணிக் கொண்டிருந்தேன் . இப்போது கம்பெனிகளில் வேலை டீச்சிங்

இவைகளில் பிரீ லான்சிங்கு மட்டுமே .


சரி இந்த வாரம் ப்ரீ தானே என்று பண்ண ஆசையாக இருந்தது .தவிர

படித்தவைகளும் மறக்க்காமல் இருக்க ஒரு சான்சு .

ஆனால் அவர்கள் சொன்ன சம்பளம் 12% மட்டுமே .

அந்த அளவு முயற்சிக்கு அந்தப் பணம் ரொம்பக் குறைவு .

பிறகு எதோ சொல்லி 60% அளவுக்குத் தருகிறேன் என்று சொன்னார்கள் .

 மாட்டேன் என்று சொல்லிவிட்டேன் .


ஒரு முறை அது போல ஒரு பெரிய ஆட்டோமொபைல் கம்பெனி .

இன்டர்வியூவுவிற்கு    ஒரு பத்து பேர் போனோம் .அதில் பாதிப் பேருக்கு

மேலே பரிச்சயம் ஆனவர்கள்

என்னை மட்டும் செலக்ட் பண்ணிவிட்டு மார்க்கெட் ரேட்டில் 50% சம்பளம் தருகிறேன் . என்று அந்த H .R ஆள் சொன்னார் ,

வேண்டாம் என்று மறுத்தேன் .

பாருங்க மேடம் மத்த யாரையும் செலக்ட் பண்ணலே உங்களை மட்டும் தான் ....என்கிறார்.

சம்பளம் குறைவு  மாட்டேன் என்றேன் .

 பாருங்க  மேடம் மார்க்கெட் ரேட்டு பாக்காதீங்க .... உங்களுக்குப்

பெர்மனெண்ட் வேலை. அதுவும் சிட்டிக்குள்ளே .அதைப்பாருங்க .  மார்க்கெட்

ரேட்டை வச்சே நீங்க எல்லாத்தையும் பாக்கக்கூடாது , அது சரியான

 அளவுகோல்  இல்ல அது இதுன்னு அரை மணி நேரம் பேச்சு.



பொறுக்க முடியாம நான் அது எப்படி மார்க்கெட் ரேட் பாக்காம இருக்க

முடியும் .உங்க வண்டியின் மார்க்கெட் ரேட்டை விட 50% குறைச்சு நான்

வண்டிய விலைக்கு கேட்டா  நீங்க வேண்டி தருவீர்களா என்றதும்  ஆள் கப்சிப் .


சரி நீங்க வேல வேணாம் ன்னு தீர்மானிச்சுட்டீங்க . .. ம்     என்று பேச்சை முடித்துக் கொண்டார்.

பிசினஸ் என்று வந்து விட்டால்  முடிந்த வரை  exploit பண்ணப் பார்க்கிறார்கள்

6 comments:

  1. இன்று எல்லா இடங்களிலும் உள்ள நிலைப்பாடு இதுதான்.

    ReplyDelete
    Replies
    1. கவர்மெண்ட் ஆபீசில் வேலை பார்க்கும்போது இதனால் அவ்வளவாக பாதிக்கப் படவில்லை . பிரைவேட்டிற்கு வந்த பின் தான் இது புரிகிறது

      Delete
  2. ஏமாற்ற முடிந்தவரை லாபம்!

    இது மாதிரி விஷயங்களில் மார்க்கெட் ரேட் என்ன என்பது எப்படித் தெரியும்? அதே துறையில் இருப்பவர்கள் சொல்வதை வைத்தா?

    ReplyDelete
  3. நீங்கள் அரசு ஊழியரா ?அதான் தெரியவில்லை .
    பல வழிகளில் கண்டு பிடிக்கலாம்.
    ஒன்று நாம் இது வரை வாங்கிய சம்ப ளம் ,தவிர கிட்டத்தட்ட நம் அளவு அனுபவம் படிப்பு உள்ளவர்கள் வாங்கும் சம்பளம் இவைகளை வைத்துதான் .
    கிட்டத்தட்ட காய்கறி விற்பவர்கள் பக்கத்துக்கு கடைக்காரன் , எதிர்த்த கடைக்காரன் காய் விலை நிலவரம் ,பண்டிகை நாள் ( துவாதசி அன்று அகத்திக்கீரை கூட விலைக்கு விற்கலாம் , அது போல அமாவாசை வாழைக்காய் , பூ வெள்ளிக்கிழமை )எல்லாம் பார்த்து விற்பது போல

    ReplyDelete
  4. சரியாகச் சொன்னீர்கள். தனியார் கல்லூரிகளிலும் அப்படித்தான்....இன்னொன்று தெரியுமா...தனியார் பொறியியல்கல்லூரிகளில் ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு உதாரணமாக ஒரு அஸிஸ்டென்ட் விரிவுளையாருக்கு மாதம் 25000 (இதுவே மிகவும் குறைவு...) கொடுக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்....புதிதாக வேலைக்கு ஃப்ரெஷ் க்ராஜுவேட்ஸ் விண்ணப்பித்திருந்தால் ஏற்கனவே இருப்பவருக்கு வேலை கல்தா.....புதிதாக வருபவர்களுக்கு 7000, 8000 கொடுத்தால் போதும் என்பது இவர்களாகவே நிர்ணயித்துக் கொண்ட விதிப்படி...

    நம்மூரில் இதற்கான சட்டம் சரியாக இல்லை.

    அமெரிக்காவில் சாதாரணமாக ஒரு கால்நடை மருத்துவர் க்ளினிக்கில் சேர்கின்றார் என்றால் அவருக்கு என்ன சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது சட்டம் இருக்கிறது. அந்தச் சட்டத்தை மீறினால் வேலை கொடுப்பவருக்கு க்ளினி க்கை மூடும் அளவிற்கு நிலைமை ஏற்படும். ஒவ்வொரு தகுதிக்கும் இன்ன சம்பளம் இன்என்ன்து ரேட்டிலிருந்து இன்ன ரேட் வரை என்று சட்டம் இருக்கிறது. நம்மூரில் அந்தச் சட்டம் வலுவாக இல்லாததால் தான் தனியார்கள் கொழிக்கின்றார்கள் கொழுப்பெடுத்து அலைகின்றார்கள்...மட்டுமல்ல வேலைக்குச் சேர்பவர்களுக்கும் இந்த அவார்னெஸ் உங்களைப் போன்று இல்லாததால் நன்றாக ஏமாற்றப்படுகின்றார்கள்...

    கீதா

    ReplyDelete
  5. எங்கும் எதிலும் ஏமாற்றம் தர பலரும் இருக்கிறார்கள்..... :(

    ReplyDelete