Sunday 19 June 2016

கனடாவில் கோடைத் திருவிழா



வருடத்தில் கிட்டத்தட்ட பத்து பதினோரு மாதங்கள் ஸ்வெட்டர் போன்ற மேலுடை இல்லாமல் வாழ்வது ரொம்பவே சிரமமான  விஷயம் என்பதால்
கொஞ்சம்  வெயில் வர ஆரம்பித்தவுடன் பல வித கார்நிவல்கள் கொண்டாட்டங்கள் என்று அசத்துகிறார்கள்
எல்லாவற்றுக்கும் என்னால் போக நேரமில்லை
தவிர கும்பல் இருக்கும் இடங்கள் குறிப்பாக சிகரெட் வாசனை சுத்தமாக ஒத்துக் கொள்வதில்லை என்ற காரணத்தால் பலவற்றை ஒதுக்கி விட்டேன் .

என் மகன் வசிக்கும் ஷெர்புரூக் ஏரியா அருகே ,சொல்லப் போனால் அடுத்த தெருவிலேயே ஒரு கொண்டாட்டம் நடந்தது.
 நுழை வாயிலில் இருந்த உருவ பொம்மை .



அங்கே இருந்த கடைகள்.







திரு விழா என்று சொன்னால் சனி ஞாயிறில் தி நகரில் இருக்கும் கூட்டத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லைதான் . ஆனாலும்  இந்த விழா இங்கு நடை பெறுவதால் இந்த வழியில் வரும் பஸ் சர்வீஸ் நிறுத்தப் பட்டு அடுத்த ரோடு வழியாக பஸ் போகிறது.


குழந்தைகளையும் சில பள்ளிகள் கூடி வந்தனபத்து குழந்தைகளுக்கு இரண்டு டீச்சர் என்னும் வகையில் பொறுப்புடன் கூட்டி வந்தனர்.
குழந்தைகளும் ரொம்பவே சொன்ன பேச்சு கேட்டு நடந்தது ஆச்சரியமாக இருந்தது. யாரும் காணாமல் போக ஒரு கயிறு போன்ற பட்டையைக் கையில் கொடுத்து விட்டனர் .அதைக் குழந்தைகள் பிடித்துக் கொண்டு ரோடு கிராஸ் பண்ணுகிறார்கள் .




தவிரவும் ரோடின் நடு வழியில் தற்காலிகமாக பௌண்டன் உருவாக்கி அதில் குழந்தைகள் குளிக்கிறார்கள் விளையாடுகிறார்கள் .


 முதியவர்களும் தனியே வந்து இந்த விழாவைப் பார்வையிட வருகிறார்கள் .அவர்களுக்கும் இது ஒரு பொழுது போக்காக இருக்கிறது.



ஆங்காங்கே அர்பன்  பாரஸ்ட் என்னும் பெயரில் இது மாதிரி பிளாஸ்டிக் டெம்பரரி மரங்கள் செய்து அதன் கீழ் உட்கார்ந்து வெயிலை என்ஜாய் பண்ணுகிறார்கள்.







8 comments:

  1. ஜாலியாகத்தான் இருக்கும் போல ஒரு நாளைக்கு உசிலம்பட்டி போகும் பொழுது அப்படியே போய் வரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.
      என்னைப் பொருத்தவரை கிராமத்துச் சந்தைகளில் மனம் விட்டுப் பேசும் பேச்சு ,அடுத்தவனைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படாமல் கத்தும் கத்தல் இவைகளில் ......இருக்கும் உயிர்ப்பும் துடிப்பும் சத்தமே போடாமல் அடுத்தவனுக்கு நான் இப்படிச் செஞ்சா அவன் என்ன நெனைப்பானோ என்ற மாதிரியான பயம் .........இவற்றில் இல்லை .
      போனேன் ,பார்த்தேன்,இதுவும் ஒரு விதம் என்று ரசித்தேன் எழுதுகிறேன்,

      Delete
    2. வருகைக்கு நன்றி . ஹ ஹா ஹா
      மேற்கூறிய இடம் டி.கல்லுப்பட்டி போகும் வழியில் உள்ளது

      Delete
  2. ரசித்தவைகளைப் பதிவாக்குவதில் ஒரு லாபம். எங்களைப் போன்றவர்களும் இந்த இடங்கள் பற்றி அறியலாம்!

    ReplyDelete
  3. அப்படியே பக்கதில் இருக்கும் எங்க நாட்டிற்கு ஒரு நடை வந்துட வேண்டியதுதானே

    ReplyDelete
    Replies
    1. அழைப்புக்கு நன்றி.
      நான் ஒரு நடையில் வரமாட்டேன் . எல்லாமே ஜம்ப் தான் .
      அடுத்த இலக்கு அமெரிக்காதான்

      Delete
  4. புகைப்படங்கள் அழகாக இருக்கின்றன.உங்கள் பதிவின் வழி இப்படி வெளியூர்களைப் பற்றிப் புதியதாய் தெரிந்து கொண்டேன்.

    கீதா: இது போன்ற கார்னிவல்கள் அங்கு பிராபல்யம். அங்கு குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் பொது இடங்களில் முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். அமெரிக்காவிலும் இவை நடக்கும். பூண்டு அறுவடை காலத்தில் பூண்டு ஃபெஸ்டிவல் என்றும் இப்படி ஒவ்வொரு சீசனிலும் நடக்கும். கொண்டாட்டங்கள் அவ்வப்போது நடந்து கொண்டே இருக்கும். நான் சென்ற கார்னிவெல்கள் எல்லாம் நம்மூர் மாதிரிதான் சத்தங்கள் எல்லாம் இருந்தது. என்ன கொஞ்சம் ஒழுங்குமுறையுடன். அங்கும் நம்மூரில் திருவிழாக்களில் உடலில் பல சாயம் பூசிக் கொண்டு ஆடிக் கொண்டு நடப்பதைப் போல அங்கும் இருக்கிறது. என்ன இடத்திற்கு இடம், மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். நம்மூர் கிராமம் அழகு என்றால் அது ஒரு வகை அழகு.

    ReplyDelete