Saturday 18 June 2016

கறை நல்லதுங்கிறது மாதிரி சோம்பல் நல்லது




இது என்ன   சோப்  விளம்பரம் மாதிரின்னு எரிச்சல் படாதீங்க .

இருந்தால் நல்லதுதான் .

 நல்லதா?

காமெடி கீமெடி பண்ணலியே?

நிச்சயமா இல்லே.

நான் அனுபவ பூர்வமா உணர்ந்து சொல்கிறேன்.


கடந்த ஒரு மாதமாக வேலை என்பதே இல்லை .

மூத்த மகன் வீட்டுக்கு வந்த நாளிலிருந்து வீட்டு வேலை என்பதே சுத்தமாக இல்லை .

நான் மிகவும் இன்னவேடிவ் ஆகவும்  நன்றாகவும்  சமைப்பேன் .
அதிலும் சப்பாத்தி ஸ்பெஷலிஸ்ட் என்று மற்றவர்கள் சொல்வார்கள் .


என் சாப்பாட்டு சாப்பிட்டு என் மகனுக்கு  என் மீது பாசம் அதிகரிக்கும் என்ற  நினைப்பா என்ன என்று தெரியவில்லை காய் மட்டுமே நறுக்கிக் கொடுத்தால் போதும் .நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க என்று சொல்லிவிட்டாள் என் மருமகள்..( இந்த அனுபவம் எனக்குப் புதியதில்லை என்  உறவினர்கள் சிலர்  இந்த மாதிரி சொல்லி என்னை ஓரம் கட்டியிருக்கிறார்கள் ).


  IPAD ல் எனக்கு காப்பி பேஸ்ட் வருவதில்லை , என் மகனும் ஆப்பிள் ஷோ ரூமில் கேட்டுப் பார்த்தான் நெட்டில் துழாவினாலும் எது சரிவராது என்றது. பதிவு போடலாமென்றால் மகனின் கம்பியுட்டர் தான்.
அது எப்பவும் பிசி .

எனவே நிறையப் படிக்க ஆரம்பித்தேன் .கம்பியுட்டர்  ஃ பிரீ ஆக  இருக்கும் போது எழுதுவேன்

.நிறைய ஹிண்ட்ஸ் எடுத்து வைத்தேன்
 நிறைய இடங்களுக்குப் போனோம்.


பிறகு இரண்டாம் மகன் வீட்டுக்கு வந்தால் அவன் " அம்மா உன் அவுட் டேட் ஆன சமையல் முறையை விடு நான் சொல்றத நீ செய் போதும் என்கிறான் .


சிதம்பரத்தில் மீனாக்ஷி அவ்வளவாக  வாய் திறக்கக் கூடாது என்ற சட்டப்படி  சொன்னதை மட்டுமே செய்கிறேன் .

 30 வருடத்துக்கு மேல் எனக்கு அனுபவம் உண்டு ,
உன்னை விட நான் சீனியர்
 நீ பிறந்தது முதல் இந்த அம்மா கை சமயலத்தானே  .....
இத்யாதி  டெம்பிளேட் டயலாக்குகள்   இங்கே வேலைக்கு ஆகாது என்பது தீரத் தெளிவு .


 சரி . மூளைக்கு வேலை கொடுப்போம் என்று சில  முறைகளைப் பின் பற்ற ஆரம்பித்தேன்.


  இதில் ஒன்றுதான் ஒரு படத்தை அல்லது ஒரு மேட்டடரைப் பற்றி நன்கு யோசித்து எழுதுவது .
உதாரணமாக இந்தப் படம் இப்பொழுது வாட்சப்பிலும் ஃ பேஸ் புக்கிலும் செம்மா யாகக் காலாய்ச்சுகிட்டு இருக்கு.

"கிழே கிடந்துச்சு இது உங்க மூளையா பாருங்க "


இப்படி ஒரு கேள்வி உங்க கிட்ட யாராவது கேட்ட நீங்க எப்படி எல்லாம் ரியாக்ட் பண்ணலாம்


 ( அடி செருப்பால , ,,,பிச்சுப்புடுவேன்   படவா என்கிற வன்முறை களுக்குத் தடா.)
யோசித்துப் பார்த்தேன்

நான் நினைத்தவைகள் இவை ...

 1. டேய்  அது எங்க அண்ணனோடது, அவன்தான் கல்யாணம் ஆனப்புறம் மூளையை எங்கயோ காணாடிச்சுட்டான்.... அவனக் கேளு.

 2. அட முண்டமே அது உன் மூளை தாண்டா 

3.எருமை மாடே  , நீதானே சர்வீசுக்குக் கொடுத்திருந்தே  அதுவே உனக்கு மறந்து போச்சா  விடிஞ்சுது போ


4.இதை எதுக்குக் கையிலே வச்சுகிட்டு ஊரெல்லம் அலையறே , உனக்குத்தான் மூளையே கிடையாதே நீ வச்சுப் பொழச்சிக்கோ ...
.
5.இங்க பாரு இதே மாதிரி   இன்னொரு மூளையைக் கண்டு புடிச்சிட்டு ஒரு மூளை வாங்கினா இன்னொரு மூளை இலவசம்ன்னு சொல்லி விப்பியா ....


 6. உங்க மூளையக் கடாசிட்டு இந்த மூளைய மண்டைல பொருத்திகிட்டா எப்படியாப்பட்ட மனைவியையும் சமாளிக்கலாம் , லைப்  லாங் கியாரண்டின்னு சொன்னா...... ஒரு வருஷத்துக்குள்ள பில் கேட்ஸ் உனக்கு ஏழை ......


 இன்னும் ஏகத்துக்கு ஐடியா வந்து குவிஞ்சுது .....

ட்ரை பண்ணிப் பாருங்க .
அப்புறம் நீங்களே ஒத்துக்குவீங்க கறை நல்லதுங்கிறது  மாதிரி சோம்பல் நல்லதுன்னு





7 comments:

  1. "இப்போதைய உலகில் வாழ இதெல்லாம் வேஸ்ட்டுங்க... அதுதான் யாரோ தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டாங்க.. நான்லாம் எப்பவோ தூக்கிப் போட்டுட்டேன்.. உங்களுக்கு வேணும்னா வச்சுக்குங்க" என்று சொல்வேன்!

    :)))

    ReplyDelete
  2. ஹலோ இன்னும் எத்தனை நாள்தான் சப்பாத்தி குயினாக இருக்கிறது. பேசாம பாஸ்தா, ராவ்யோலி பண்ணக் கற்றுக் கொண்டு அதன் பின் மீண்டும் குயினாக வலம் வாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி . பதிலாகத் தனிப் பதிவு போட்டுள்ளேன் .

      Delete
  3. நேரம் பயனுள்ளதாக இருந்தது நன்றி அம்மா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி மேடம் சும்மா பொழுது போக்கிற்காக எழுதும் பதிவுகள்.

      Delete
  4. ஹாஹா... சும்மா இருக்கச் சொன்னதுக்காக இப்படியா! :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி . பதிலாகத் தனிப் பதிவு போட எண்ணம்

      Delete