Tuesday 5 January 2016

திடீர் பள்ளி விடுமுறைகளும் ஆரம்ப வகுப்பு மாணவர்களின் அவலமும்



 டிவியில் கடந்த இரண்டு நாட்களாக வெடிகுண்டு மிரட்டலால் பள்ளிகள் சில  ஊர்களில் மாணவர்கள்  பள்ளிக்கு வந்த பின் விடுமுறை விட்டன .

 இது டிவியில் மாணவர்கள் பைகளை மாட்டிக்கொண்டு வீடு திரும்பும் காட்சியைக்  காட்டி ஏதோ ரியலிஸ்டிக்காகக் காண்பிப்பது போன்ற தோற்றத்தைக் காண்பிக்கிறார்கள் .


 ஆனால் உண்மையில் இது வெறும் செய்தி மட்டுமே அல்ல . இதன் பின்னே உள்ள ஆரம்ப வகுப்பு மாணவர்களின் பிரச்னை மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவலை  பற்றி  ஊடகங்கள் பார்க்கத் தவறுகின்றன .

பெரிய மாணவர்கள் என்றால் அவ்வளவு பிரச்னை இல்லை , ஒன்றாவது இரண்டாவது படிக்கும் மாணவர்கள் குறிப்பாக அவர்களின் இரு பெற்றோர்களும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் அவர்கள் படும் பாடு  சொல்லி முடியாது. அவர்கள் எப்படி வீட்டுக்குப் போவார்கள் ?


சில சமயங்களில் தந்தை ஸ்கூலில் விட்டுவிட்டு எங்கோ தூரத்தில் இருக்கும் ஆபீசிற்குப் போவார் . தாயும் தூர உள்ள இடத்தில் வேலைக்குச் செல்கிறார் என்றால் அந்தக் குழந்தைகள் எப்படி வீட்டுக்குத் திரும்பிப் போவார்கள் ?

 பணம் கையில் கொடுத்தால்அந்தக் குழந்தைகள் கேட்டுப் போகும் சந்தர்ப்பங்கள் நிறைய என்பதால் பெற்றோர்களும் பணம் தந்து விட்டுப் போகமாட்டார்கள் .
 எனவே திரும்ப ஆட்டோவில் (தைரியமாக வருவதாக இருந்தால் ) வருவது என்பது முடியாத காரியம் .

 பெரிய  கலாட்டா நடக்கும் சில சமயங்களில் பஸ் கூட ஓடாது .

 எப்படியோ ஒரு வழியாக வீட்டுக்கு  வந்தாலும் அவர்களிடம் வீட்டு சாவி இருக்காது .டாய்லேட் போக என்ன செய்வார்கள் ?

இது போன்ற சமயங்களில் பள்ளி நிர்வாகம் கொஞ்சம் இது போன்ற குழந்தைகளின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு மாலையில் பெற்றோர்கள் வரும் வரை அல்லது அவர்கள் வழக்கமாக வரும் வாகனங்கள்  (ஆட்டோ  ,பிரைவேட் வேன் போன்றவை )வரும் வரை அவர்களை பள்ளியிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்.

6 comments:

  1. பெரும்பாலும் அப்படித்தான் செய்கிறார்கள். இன்றுகூட நான் பார்வையிட வட சென்னை பள்ளி ஒன்றில் புரளி காரணமாக அனைவரயும் அனுப்பப்பட்டு விட்டனர். ஆசிரியர்கள் மட்டும் இருந்தனர். பெற்றோர் வராத மாணவர்கள் அங்கேயே இருந்தனர். வழக்கமான நேரத்திற்கு பெற்றோர் வந்ததும் அனுப்பி வைக்கப் பட்டனர்.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .
    அந்தப் பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி சொல்லவேண்டும் .
    என் மகன்கள் சிறுவர்களாக இருந்தபோது ( பெரியவன் 4வது சின்னவன் இரண்டாவது )நான் மறைமலை நகரில் வேலையில் இருந்தேன் .என் கணவர் வேலை டெல்லியில் .
    திடுமென்று பஸ்கள் நிறுத்தப் பட்டன . எல்லோரும் வீட்டுக்குக் கிளம்புங்க என்று சொல்லிவிட்டார்கள் . பசங்கள் ஆட்டோக்கள் வழியில் நிறுத்தப் பட்டன .பிறகு எப்பிடியோ அந்த ஆட்டோக்காரர் வேறு உடை அணிந்து வந்து பசங்களைக் கூடி வந்து வீட்டில் விட்டுவிட்டார் .எனக்கு விஷயம் தெரிந்து மறைமலை நகரிலிருந்து மொஃ பசல் பஸ் பிடித்து தேனாம்பேட் வந்து ஸ்கூலைப் பார்த்தால் ஸ்கூல் பூட்டியிருந்தது . ஆட்டோக்களும் வழிமறிக்கப்பட்டமையால் நிறையப் பெற்றோர்கள் கவலையுடன் இருந்தனர்.என் பசங்களை வாச்மேன் நன்கு அறிவார் எனவே அவர் உங்க பசங்க வழக்கமான வண்டியில்தான் போனாங்க என்றதும் தான் எனக்கு உயிரே வந்தது . அன்று பஸ் ஆட்டோ ஏதும் இல்லாமல் தேனாம் பேட்டில் இருந்து மேற்கு மாம்பலம் வரை நடந்தே வந்தேன்

    ReplyDelete
  3. நல்ல பாயின்ட். இப்போதெல்லாம் பள்ளிகள் கொஞ்சம் கவனத்துடன் தான் இருப்பதாகத் தெரிகின்றது.

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

    ReplyDelete
  5. சிறந்த கருத்து சகோதரியாரே

    ReplyDelete
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

    ReplyDelete