Monday 30 November 2015

பேரிடர்களும் பிரச்னைகளும்


   இயற்கையால்  மற்றும் மனிதனால்  வரும் பேரிடர்கள்  செய்தித் தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் காட்டும் போது , ஒவ்வொருவரும் தான் எப்படியெல்லாம் துன்பத்திற்கு ஆளானோம் என்று கூறுபவை எல்லாம் முடிந்தவரை உணர்வுகளத் தட்டி எழுப்பும் வகையில்தான் இருக்கின்றன. இது போன்ற ஒரு கால கட்டத்தை நானும் கடந்து வந்த ஞாபகம் எனக்கும் வந்தது.


 ஹைதராபாத்தில் நாங்கள் இருந்த போது எதோ ஒரு கலவரம் .அதனால் கிட்டத்தட்ட ஒரு  மாதம் வரை இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டது.அடிக்கடி கர்ஃ பியு வேறே .கடைகள் சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப் பட்டிருக்கும் 144 உத்தரவு வேறு ,எனவே எங்கும் வெளியே செல்ல முடியாது .  பயங்கர கலவரம் ஸ்கூட்டரில்  பில்லியன் ஆகக் குழந்தைகள் கூடச் செல்லக் கூடாது.
 அப்பார்ட்மெண்ட் பெரியது என்பதால் அவ்வளவாகப் பிரச்னை இல்லை ,என்றாலும்  குழந்தைகள் வேறு முறையே 5 வயது 3 மூன்று வயது  என்பதால் வெளியில் கடைக்குப் போக ஆசைப் படுவார்கள் .


கர்ஃ பியு  உத்தரவு தளர்த்தும் சமயத்தில் மறக்காமல் வெளியே என்னுடன் கூட்டிச் செல்வேன்.அது வேண்டும் இது வேண்டும் என்று அடம் பிடிக்க மாட்டார்கள் ,ஏனெனில்  கடைகளில் வரிசையில் நின்று சாமான்கள் வாங்குவதால் அவர்களுக்கே புரிந்து விட்டது.

அதைவிடப் பெரிய பிரச்சினை என்னவென்றால் பொருட்கள் எல்லாருக்கும் மளிகைக் கடைகளில் குறிப்பிட்ட அளவே தருவார்கள் . எனது இரு மகன்களுமே சப்பாத்திமட்டுமே  சாப்பிடுவார்கள் ,அரிசி சோறு  சுத்தமாக சாப்பிட மாட்டார்கள் . எவ்வளவோ முயற்சி செய்தும் எங்களால் சாப்பிட வைக்க முடியவில்லை . டாக்டர்களும்  குழந்தை எது சாப்பிடுகிறதோ அதை கொடுக்க வேண்டுமே தவிர உங்கள்  எண்ணங்களை அதன் மீது திணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள் .

அதுவும் அப்பொழுதுதான் இருவருக்கும் மஞ்சள் காமாலை வந்து சரியாகி வரும் நேரம் ,பசி இருவருக்கும் எக்கச்சக்கமாக எடுக்கும்.இப்போது போல  கோதுமை மாவு ரெடி மேடாக அப்போது கிடைக்காது .ஒரு கடையில் மட்டும் மாவாக விற்பான் ,அந்தக் கடையில் ஒரு ஆளுக்கு ஒரு கிலோ மட்டுமே.

எங்களது அப்பார்ட்மெண்ட் வாசி ஒரு வயதான தம்பதிகள் ,
அவர்கள் என் கணவரின் ஆபீசில் வேலை பார்ப்பவர் ,ரிட்டயராக ஒரு  வருடம் இருக்கும் தருவாயில்  சென்னையிலிருந்து ஹைதராபாத் மாற்றப்பட்டார் . நாங்கள் தான் வீடு பார்த்தது முதல் பல உதவிகள் செய்தோம். பிறகு அந்த அம்மாவிடம் குழந்தைகளுக்காக வெட்கத்தை விட்டு அந்த ஒரு கிலோ கோதுமை மாவைக் கேட்டு வாங்கி .....அந்த ஒரு மாதம் நாங்களோ வீட்டில் குழந்தைகளைப் பார்த்துகொண்ட பெண்மணியோ ஒரு துண்டு சப்பாத்தி கூட வாயில் போட்டதில்லை . உப்பு கம்மியாக என்று சொன்னதால் பிரச்னை இல்லை.
 பசங்களுக்கு பிடித்த வாழைப் பழம் மற்றும் சீத்தாப் பழம் கறிகாய்கள் சூப்பு சீப்பு எண்ணெய் இத்யாதிகள் ...... இவைகளை வாங்க ,அது இது என ஒரு மணி நேரத்திற்குள் ஷாப்பிங் முடித்து விட்டுப் பின்னரே மூச்சு விட முடியும்.
 இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது .

 டிஸ்கி :
 தொடர்ந்து மொழிபெயர்ப்பு வேலை இருந்ததால்  மற்றவர்களின் பிலாக்குகளையும் படிக்கவோ காமெண்ட் போடவோ முடியவில்லை .

4 comments:

  1. ம்ம் உங்கள் கஷ்டம் அதுவும் கர்ஃப்யூ புரிந்து கொள்ள முடிகின்றது...சகோதரி...எதுவுமே இளம் வயதில் அவ்வளவு பிரச்சனையாகத் தெரியாத ஒன்று வயதாகும் போது ஏதோ ஹெர்குலியன் டாஸ்க் போலத் தோன்றும்....

    இப்போதுள்ள மழை பேரிடர் என்பது இயற்கையைக் குறை சொல்ல்லுவது என்பது நமது சுயநலமே. மக்களாகிய நாமும், நம்மை ஆள்பவர்களும் செய்யும் குற்றங்கள்தான் நம்மை அல்லல் பட வைக்கின்றது. இயற்கை இன்னும் சீற வேண்டும் அப்படியாவது புத்தி உறைக்கின்றதா என்று தெரியவில்லை..

    ReplyDelete