Tuesday 10 June 2014

காரமான கடுகு சைஸு பதிவு


குடும்ப வேலைகள் ஜாஸ்தி ஆனபடியால் பிளாக் பக்கம் வரமுடியவில்லை .

எனவே ஒரு குட்டியூண்டு ஆனால் க்யூட்டான ஒரு பதிவு.

 நேற்று வழக்கம் போல் ஹி..... ஹி .... பிசியாக இருந்தபோது ஒரு போன்

வந்தது. பிரமோஷனல் அழைப்பு.

மேடம் .... நாங்கள் எங்கள் நிறுவனத்தின் ஆண்டு நிறைவைக் கொண்டாடும்

விதமாக மக்களிடையே சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு  குறிப்பாக  Future savings

(எதிர்கால சேமிப்பு ) ஏற்படுத்தும் வகையில்     .......

நான் அந்தப் பெண்ணைத் தொடரவிடாமல் Future savings  பற்றியா என்றேன் .

அந்தப் பெண் மிக உற்சாகம் அடைந்து  ஆமா மேடம்  ஆமா மேடம்  என்றாள்.

சரி  எனக்கு ஒரு உதவி செய்வாயா என்றேன் .

என்ன உதவி தேவை சொல்லுங்க எது வேணாலும் செய்வோம் என்றாள்.

ஒண்ணுமில்லே  மேட்டர்  ரொம்ப சிம்பிள்  எனக்கு Future income க்கு வழி செய்து

கொடுத்தால்  நான் என்Future savings   சை உங்களிடம் போடுகிறேன் என்றேன் .

பதிலே பேசாமல் போனை வைத்து விட்டாள்.

 நாம எப்பூடி ?

16 comments:

  1. மதுரைத்தமிழன் மாதிரி நீங்க எடக்கு மடக்காக எல்லாம் பேசக் கூடாது.

    ReplyDelete
    Replies
    1. எடக்கு மடக்கு பேச்சுக்கு மதுரைத் தமிழன் சகல உரிமையை வாங்கிவிட்டாரா என்ன ?

      Delete
  2. ஹாஹாஹா செம பதில் சகோதரி! சூப்பர்! மிகவும் ரசித்து சிர்த்தோம்!

    ReplyDelete
  3. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தஞ்சை மண் கடுகு கொஞ்சம் கூடவே காரமாக இருக்கும். ஹி.....ஹி

      Delete
  4. ஆஹா, நீங்கள் கழுவூற மீன்ல நழுவுர மீனாக இருப்பிங்க போல!!.

    ReplyDelete
    Replies
    1. கமெண்டு ரொம்பவே அசைவமாக இருக்கு.
      எடுக்க எடுக்க பிடி குடுக்காமல் வழுக்கும் வெந்த சேப்பங்கிழங்கு இது சைவம் .
      இதெப்படி?

      Delete
  5. இது நோஸ் கட் என்பதைவிட டோஸ் கட் மாதிரியிருக்கே...
    சகோதரி, சும்மா இருந்தீங்கன்னா மட்டும் ஜஸ்ட் க்ளிக்
    www.killergee.blogspot.com

    ReplyDelete
  6. Aga aruputham nagai suvai aha iruthalum sinthikum padivu. vaalthukal.

    ReplyDelete