Sunday 20 April 2014

கர்வமும் ஒரு அழகே !


கர்வம் என்றாலே எதோ டாஸ்மாக் சமாச்சாரம் மாதிரி

நம்மை எங்கோ படு பாதாளத்தில் தள்ளிவிடும் என்றும்

எந்த சூழ்நிலையிலும் கர்வம் என்பதே கூடாது என்றும்

சங்க கால மற்றும் சமகால இலக்கியங்களிலும் கூறப்படுகின்றது

மற்றும் பாடப் புத்தகங்களில் மனப்பாடப்பகுதிக்கு இது சம்பந்தப்பட்ட

செய்யுள்கள் களை உருத்தட்டாத நம்மவர்கள் குறைவு.

ஆனால் எனக்குச் சின்ன வயசிலிருந்தே எனக்கு இதில் சுத்தமாக

உடன்பாடில்லை ,

பக்திக்கதைகளும் சரித்திரக் கதைகளும் பல  உதாரண கதா  பாத்திரங்களைக்

கொண்டு இதை விலாவரியாக விளக்குகிறது.

ஹிட்லர் முசோலினி ஆகியவர்களின் சுயசரிதையும்  போன நூற்றாண்டின்

வாழ்ந்து அழிந்த மனிதர்களின்  உதாரணமாக சின்னக் குழந்தைக்குக் கூட

போதிக்கப்பட்டது.

நானும் கூட மார்க்குக்காக மட்டுமே நெட்டுருப் போட்டேன் .

அதை எதிர்த்து நான் வாதம் செய்தால் 'திமிர் ' என்ற பட்டம்  மற்றும்

      'விதண்டா வாதம் வீண் நேரம்  'என்ற அறிவுரைகளால்

என்  வாதத்தின் பக்கம் உள்ள நியாயத்தைப் பலரும்

ஏன் உண்மையைச் சொன்னால் ஒருத்தர் கூட ஏற்றுக்கொள்ளவில்லை .

 சரி இப்பவாவது சொல்லுவோம் யாராவது ஒத்துக்கிறாங்களா பாப்போம் .

 கர்வமும் ஒரு அழகே !

கர்வத்தைப் போய்  அழகு என்று சொல்வதா என்று கோபப்பட வேண்டாம் .

கர்ணன்  படத்தில் மஞ்சள் முகம் நிறம் மாறி என்ற பாடலில் சிவாஜி தனக்கு

குழந்தை பிறக்கப் போகிறது என்று "க ர்ணன் தந்த பிள்ளை என்றால்" என்ற

வரிகளுக்கு  கர்வமாக ஒரு லுக் விடுவதை கிட்டத்தட்ட 50 வருடங்கள்

ஆகியும் இன்றும் நாம் ரசிக்கவில்லையோ ?

 கர்வமும் அழகாக இருப்பதால்தானே  நாம் ரசிக்கிறோம்

வீரபாண்டியக் கட்டபொம்மனின் கர்ஜிக்கும் கர்வ  வசனம் பற்றி  அதிகம்

சொல்லவேண்டியதே இல்லை.

இலங்கேஸ்வரன் நாடகத்தில்

ஆர்எஸ் மனோகரின் கர்வமான நடையையும்  வசனங்களையும்

ரசித்து  பல நாட்கள் அந்த நாடகத்தை வெற்றிகரமாக ஓட விட்டதும் நாம்தான்.


ஒரு பத்து வருடம் முன்  படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணனின்

கர்வமான நடிப்பை ரசித்ததும் சாட்சாத் நாம்தான்!

அட  விடுங்க அதெல்லாம் !

கர்வமா இருக்கிற வயசுப் பொண்ணுகளை ரசிக்கண்ணே

 " அவ கர்வம் கூட ஒரு தனி அழகுடா "ன்னு

  சில பேர் ஒரு குரூப்பா அலையரதில்லையா என்ன?

எல்லாருமே கர்வமா இருக்கறதை மனசுக்குள்ள ரசிச்சுகிட்டு

வெளியிலேபிடிக்காதமாதிரி  வேஷம் போடறாங்க!

இதுதான் உண்மை !

இவ்வளவு சொல்லியும் நான் சொல்றதை நீங்க நம்ப மறுக்கிறீங்களா?

எங்கே கொஞ்சம் கர்வமாக ஒரு லுக் வுட்டுகிட்டு

கண்ணாடியிலே உங்க மூஞ்சியை பாத்துட்டு

அப்புறம் சொல்லுங்க .


ஹி  ஹி   கர்வத்துக்கும் ஒரு தனி அழகு  இருக்கில்லே ?

4 comments:

  1. அட...! உண்மை - கர்வமாக ஒரு லுக்...!

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி .புரிந்தது .முழு பதிவு கீழே உள்ள பதிவில் உள்ளது .இது தவறுதலாகப் பதிவு செய்யப்பட்டது.

    ReplyDelete
  3. //நீங்கள் இவ்வளவு மெனக்கெட்டு விலாவாரியாக எழுதுவதை நாங்கள் தான் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை .காரணம் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஒரு மனச் சோர்வு புதிய எதையும் செய்து பார்க்க பயம் இவையே .முயற்சிக்கிறேன்//

    என்ற உங்கள் பின்னூட்டம் திண்டுக்கல் தனபாலன் சார் அவர்கள் பதிவில் நீங்கள் இட்டு இருந்தது. அதை பார்த்துவிட்டு இங்கே வந்தேன். அப்படி என்ன இவருக்கு வயது ஆகிவிட்டது என்று தெரிந்து கொள்ள.

    கர்வம் என்பதே ஒரு அழகு.

    BE PROUD OF SOMETHING என்பார்கள் ஆங்கிலத்தில்.

    நீங்கள் சொல்லும் உதாரணங்கள் "பெருமிதம்" என்ற குணத்துக் பொருந்தும். நான் நன்றாக படித்து நாட்டில் முதல் மாணவனாக வந்து இருக்கிறேன். இது பெருமிதப் படவேண்டிய நினைப்பு.

    கர்வம் என்பது வேறு. சொல்லப்போனால் இது ஒரு NEGATIVE EMOTION. HAROLD ROBBINS என்னும் உளவியல் நிபுணர் பெருமிதத்திற்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி விளக்கி சொல்லி இருக்கிறார்.

    நிற்க.

    அது என்ன மனச்சோர்வு.
    அந்த மனச்சோர்வு போக்கிக்கொள்ளத்தானே வலைப் பதிவு, வலை நண்பர்கள் இடும் கருத்துக்கள், நான் அயராது அவர்கள் தரும் கவிதைகளுக்கு பாடுதல் எல்லாமே.

    மனச்சோர்வு வந்தால் உடலும் சோர்வடையும்.

    ஆகவே, டோண்ட் வொர்ரி அபயா அருணா அவர்களே.
    I AM 73 YEARS YOUNG.
    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com
    www.subbuthatha.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com
    www.Sury-healthiswealth.blogspot.com
    www.movieraghas.blogspot.com
    www.pureaanmeekam.blogspot.com
    www.wallposterwallposter.blogspot.com
    www.ceebrospark.blogspot.com
    www.menakasury.blogspot.com
    plus five more blogs.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி .
    தங்கள் வயதிற்கும் அனுபவ
    மிக்க அறிவுரைக்கும் தலை வணங்குகிறேன்
    எனக்கு வயது என்னமோ எத்தனையோ வருடத்துக்கு முந்தி 16 ஆக இருந்தது பிறகு என்ன காரணமோ தெரியாது ஏறவேயில்லை.என்னைச் சுற்றி உள்ள மற்றவர்களின் வயதுதான் தங்கம் விலை மாதிரி ஏறிக்கொண்டே இருக்கிறது.
    தங்களின் உற்சாக மூட்டும் வரிகளுக்கும் வெப் சைட்டுகளுக்கும் கோடானுகோடி நன்றி .

    ReplyDelete