Friday, 8 April 2016

கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை

  இந்தி கற்றுக் கொள்வது அவசியமா இல்லையா என்பது பற்றி இன்னும் நிறையப் பேர் விவாதிக்கின்றார்கள் .


 என்னைக் கேட்டால் "கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை ." என்பேன் .
 நான் கற்க ஆரம்பித்த பொது என் வயது 7. என் அப்பாவிற்கு ஹிந்தி ஓரளவு படிக்கத் தெரியும் .ரயில்வேயில் வேலையில் இருந்தார் .ஆனால் வேலை பார்த்தது எல்லாமே தமிழ் நாட்டில் தான் . ஹிந்தி பேசத் தெரியாது . பேசினாலும் புரியாது.


 தனக்கு ஆண் பிள்ளைகள் இல்லை என்பதால் மற்ற உறவினர்கள் எங்கள் வீட்டை லேடிஸ் ஹாஸ்டல் அது இது என்று கேலி பேசியதால் எங்களை அவர்களை விடவும் கல்வியில் சிறக்க வைக்க வேண்டும் என்கிற ஒரு ஆர்வத்தில் என்பதை விட ஒரு வ கொலைவெறியில் எங்களை நன்கு படிக்க வைத்தார்.
என் அக்காக்கள் ஹிந்தி படித்ததால் நானும் படிக்க ஆசைப் பட்டேன் .அப்பொழு ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் மிகத் தீவிரமாக இருந்த நேரமும் கூட .

எனக்கு ஹிந்திப் பாடல்கள் மீது ஒரு சொல்லொணாக் காதல் .

என் சகோதரிகளை விடவும் ஹிந்தி குறைந்த அளவே படித்திருந்தாலும் அவர்களை விட நன்றாக ஹிந்தியில்  பேசும் திறமை எனக்கு உண்டு. (உபயம் ,ஹிந்திப் பாடல்கள் )

 இது எனக்கு வட இந்தியாவில் வேலை பார்த்த போது ரொம்பவே உதவியாக இருந்தது.ஒரு 12 வருடம் வேறு வேறு இடங்களில் வேலை பார்த்த போதும் கஸ்டமர்களிடம் பேசும்போதும் சாமான்கள் வாங்கும் போதும் எனக்குப் பிரச்னை வந்ததில்லை .

 சமீபத்தில் ஷீரடி ,அஜந்தா எல்லோரா போன்ற இடங்கள் சென்ற போதும் எனக்கு பிரச்னை என்பது துளியும் கிடையாது .

 அது மட்டுமல்ல எனக்குத் தெலுங்கும் ஆந்திராவில் இருந்த காரணத்தினால் வரும் . அங்கு இருந்தபோது கொஞ்சம் படிக்கக் கூட முடியும் . இப்போது நன்கு பேசுவேன் . ஆனால் படிக்க வரவில்லை .


 மேலும் எந்த மொழியும் கற்க  வேண்டும் என்று தோன்றினால் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர ஆராய்ச்சி பண்ணும் வேலை நான் செய்வதில்லை.

 நான் 40 வயதிற்குப் பின் பேங்க்  வேலையை விட்டு வேறே எதுவும் செய்யத்  தெரியாமல் ஜப்பானிய மொழி படிக்க ஆரம்பித்த போது  என்னை யாரும் ஊக்கப் படுத் தாதது  மட்டுமல்ல ,

இது எதுக்கு இந்த வயசிலே போயும் போயும்......  அந்த ஊர்க்காரன் பாஷையை ...... இங்கே யாரு பேசப் போறாங்க .
சப்ப மூக்கு பாஷைப் படிச்ச நம்ம மூக்கும் சப்பை ஆயிடும் ......என்ற காமெண்ட்கள்  தான்.


 ஆனால் நான் கிளாஸ் எடுத்த போதுதான்  விஷயம் தெரிந்த பெற்றோர்கள் செய்யும் உத்தியைக் கண்டேன்.


 அவர்கள்  தன் குழந்தைகளை 4வது படிக்கும் போதே ஒரு வெளி நாட்டு மொழியைக் கற்க வைக்கிறார்கள் .
  ( ஜப்பனீசு, பிரெஞ்சு  அல்லது ஜெர்மன் )
அதனால் அவர்கள் 9 வது வரும் முன் அந்த மொழியில் ஒரு குறிப்பிட்ட லெவல் வரை  படித்து விட்டுப்  பிறகு தன் 10வது 12 வது பாடங்களில் முழு கவனம் செலுத்துகிறார்கள் .  எனது 10 வருட அனுபவத்தில் குறைந்தது 10  குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்..
 மேலும் சிறு குழந்தைகள்  15 வயது தாண்டியவர்களை விடவும் சீக்கிரம் கிரகித்துக் கொள்கிறார்கள் .வெட்டியாக இந்த மொழி இங்கிலீஷ் மாதிரி இல்லை அது இது என்றெல்லாம் நினைப் பதில்லை . (இந்த comparing  syndrome எனக்கும் இருந்தது , )
 விளையாட்டாக நான் கற்க ஆரம்பித்தது இன்று எனக்குஇந்த வயதிலும் பெரிய கம்பெனிகளிலிருந்து வேலைக்கான அழைப்புகள் , வேலை ,வருமானம் , தன்னம்பிக்கை ,பொழுதுபோக்கு ,நிறைய நண்பர்கள் ,வெட்டி நினைப்புகளிளிருந்து விடுதலை, என பல வித நன்மைகளைத் தந்துள்ளது.

ஒரு முறை ஏர் ஹோஸ்டஸ் ஒருவர் நான் ஜப்பானிய மொழிப் புத்தகம் படித்ததைப் பார்த்து விட்டு எனக்கு நிறைய சாக்லேட் ,மற்றும் ஏகப் பட்ட ஸ்நாக்ஸ் பாக்கெட்கள் கொடுத்தார்.

யாராவது என்னைப் பார்த்து அட ஜப்பானிய  மொழி தெரியுமான்னு கேட்டு என்னைப் பாத்து ஒரு ஆச்சரிய லுக் விடும்போது  ஒரு சின்ன கர்வம் உள்ளுக்குள் வருவதை என்னால் உணர முடிகிறது.
( காசா பணமா இல்ல அடுத்தவங்களுக்குத்தான்  இதால நஷ்டமா என்ன , பரவாயில்லை என்று உள்ளுக்குள் என்னை  நானே என்கரேஜ்  பண்ணிக் கொள்வேன் )


 என்னைப் பார்த்து இன்ஸ்பயர் ஆகி நிறையப் பேர் படிக்கின்றனர்.
அதில் முக்கியமான ஒருவர் என மாணவனின் தாத்தா .  3 வருடம் முன்பு அவர் வயது 65க்கும் மேலே..

 என்  மாணவன் ஒருவன்  student  exchange programme  ல் ஜப்பான் சென்றதும் அவனது தாத்தாவிற்கும் ஆசை வந்து பேரனிடம் அடிப்படை களைக் கற்றபின்  நெட் மூலம் தானே படித்து மூன்று லெவல்கள் முடித்துள்ளார்.

 எனவே எதைக் கற்றாலும் என்றாவது ஒரு நாள் நிச்சயம் கை கொடுக்கும்.
ஒரு மன தைரியத்தைக் கொடுக்கும்.
It is  Never Late .

Saturday, 19 March 2016

காரியத்தில் கவனம் வைக்கும் மதுரை மக்கள்



சென்ற வாரம் மதுரைக்குப் போயிருந்தேன் . அங்கங்கே "தமிழ் நாடு முழுவதும் வால் போஸ்டர் ஓட்ட அணுகவும் "என்று கீழே செல் போன் நம்பர் கொடுத்திருந்தார்கள் .
 இங்கே பிளாக்கிலும் வாட்ஸப்பிலும் மற்ற சமுக வலை தளங்களிலும்  நாலு காசுக்குப் பிரயோசனமில்லாமல் வால் போஸ்டர்களைப் பற்றி கிண்டல் அடித்துக் கொண்டிருக்கும் போது மதுரை மனிதர்கள் அதைத் தனது வருமானத்துக்கான வழியாக யோசிக்கும் அறிவை எண்ணி வியந்தேன் .
 மதுரைமக்கள்...... ம்ஹும் ...சான்சே இல்லை .காரியத்தில் கவனமான பேர்வழிகள்தான்.

Wednesday, 9 March 2016

மகளிர் தின சிறப்பு பதிவர்



அலுவலக வேலை மற்றும் வீட்டு வேலை காரணமாக பிளாக் பக்கம்வரவோ அல்லது மற்றவர்களின் பிளாக்கைப் படித்துவிட்டு காமெண்ட்போடவோ நேரம் இல்லை .மேலும் நெட்டில் உட்கார்ந்தால் மற்றவேலைகள் கெடுவதால் நெட் பக்கம் வருவதைத் தவிர்த்து வந்தேன் .
 இன்று மகளிர் தினம் .
மகளிர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

மகளிர் தினமான இன்று நான் வேலை பார்க்கும் இடத்துக்கும் மிகஅருகாமையில் வசிக்கும் ஒரு பெண் பதிவர் பற்றி எழுதுவது மிகவும்பொருத்தமாக இருக்கும் என்பதால் இன்று அவர் பற்றிய பதிவு.

நிறையப் பேருக்கு மிகவும் பரிச்சயமானவர்.அவருடன் நான் போனில் தான்இதுவரை பேசியுள்ளேன் . நேரில் பார்த்தது கிடையாது.

 போனிலேயே அவரின் பேச்சில் ஒரு தன்னம்பிக்கை இழையோடும் .
குழப்பமற்ற தெளிவான சிந்தனையால் மட்டுவே வரக்கூடிய லாஜிக்கான பேச்சு.. டீச்சர் வேலைக்குச் சென்றிருந்தால் இந்நேரம் "நல்லாசிரியர் விருது "வாங்கி இருப்பார். நஷ்டம் அந்த விருதுக்குத்தான்.

பல தடவை நிறைய நேரம் பேசியிருக்கிறேன் .இருவரும் சந்திக்கஎண்ணியும் இருவருமே அவரவர் வேலையில் பிசியாக இருந்ததால்சந்திக்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

ஒரு வழியாக வியாழக் கிழமை என்று நினைக்கிறேன் .சந்தித்தோம்..
குரலில் தெரிந்த கம்பீரத்தால் அவரை ஒரு ஐந்தரை அடி உயரமான வாட்டசாட்டமான கிட்டத்தட்ட கிரண்  பேடி  மாதிரியான ஒரு மனுஷி போல ஒருஉருவம் தான் என் மனதில் அவரைப் பற்றி வரைந்து வைத்திருந்தேன்.

என் வேலை பகுதி நேர வேலை என்பதால் 12.30 அளவில் முடிந்துவிடும்.அன்று மாலை காலேஜு வேலை இல்லை என்பதால் அவர்கள் வீட்டுக்குவருவதாக முதல் நாளே பிளான் போட்டுவிட்டோம் .என்னை என்அலுவலகத்திலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்துச்செல்வதாகக் கூறியிருந்தார். .நான் தலைக்கு மெஹந்தி போடுவதால் என்அடையாளத்தை அவரிடம் கூற அவர் மஞ்சள் நிற லெக்கிங்க்சுபோட்டுவருவதாகவும் தனது வண்டி நம்பரையும் சொல்லிவைத்திருந்தார்.

 நான் போன் பண்ணியதும் சொன்னபடியே வந்தார் . எனக்கு அவரைப்பார்த்ததும் ஒரே ஷாக் .
 திருக்குறள் போல இருந்தார் . நான் நினைத்துக் கொண்டிருந்தஉயரத்திற்கும் ஓர் ஒன்றரை அடியாவது குறைந்த உயரம்.நிஜமாகவேஅவர் திருக்குறள் தான் . ரெண்டே வரியில் நிறைய பொருள் பொதிந்தகுறள் போல அந்த ஒரு ஐந்தடி உயர உருவத்தில் ஒரு செல் நரம்புஇரத்தக்குழாய் விடாமல் தன்னம்பிக்கை .ஐந்தடி உயரத்தில் 500 கிலோதன்னம்பிக்கை .


 நிஜமாகவே ஒரு இனிமையான மனுஷி.

நம்பவில்லை என்றால் அவரின் இரத்தத்தைச் சோதித்துப் பார்த்தால் தெரியும் .
கிட்டத்தட்ட 15 வருடங்களாக சர்க்கரை வியாதி இருக்கிறதாம்.

கவாஸ்கர் சுரீந்தர் அமர்நாத் இவர்களெல்லாம் முதல் டெஸ்ட்மேச்சிலேயே சதம் அடித்தார்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் . 
ஆனால் இவர் முதல் டெஸ்டிலே 400 ஆம் .
ஒரே ஒரு வித்தியாசம் அவர்கள் கிரிக்கெட்டில் இவர் சர்க்கரை அளவில் .

 அவர்தான் நமது பெருமைக்குரிய பதிவர் கீதா.
அவரையே மகளிர் தின சிறப்பு பதிவர் ஆகத் தேர்வு செய்துள்ளேன்,
அவர் நீடுழி  வாழ வாழ்த்துகிறேன்.

Tuesday, 8 March 2016

மகளிர் தின சிறப்பு பதிவர்



அலுவலக வேலை மற்றும் வீட்டு வேலை காரணமாக பிளாக் பக்கம் வரவோ அல்லது மற்றவர்களின் பிளாக்கைப் படித்துவிட்டு காமெண்ட் போடவோ நேரம் இல்லை .மேலும் நெட்டில் உட்கார்ந்தால் மற்ற வேலைகள் கெடுவதால் நெட் பக்கம் வருவதைத் தவிர்த்து வந்தேன் .
 இன்று மகளிர் தினம் .
மகளிர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

மகளிர் தினமான இன்று நான் வேலை பார்க்கும் இடத்துக்கும் மிக அருகாமையில் வசிக்கும் ஒரு பெண் பதிவர் பற்றி எழுதுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால் இன்று அவர் பற்றிய பதிவு.

நிறையப் பேருக்கு மிகவும் பரிச்சயமானவர்.அவருடன் நான் போனில் தான் இதுவரை பேசியுள்ளேன் . நேரில் பார்த்தது கிடையாது.

 போனிலேயே அவரின் பேச்சில் ஒரு தன்னம்பிக்கை இழையோடும் .
குழப்பமற்ற தெளிவான சிந்தனையால் மட்டுவே வரக்கூடிய லாஜிக்கான பேச்சு.. டீச்சர் வேலைக்குச் சென்றிருந்தால் இந்நேரம் "நல்லாசிரியர் விருது "வாங்கி இருப்பார். நஷ்டம் அந்த விருதுக்குத்தான்.

பல தடவை நிறைய நேரம் பேசியிருக்கிறேன் .இருவரும் சந்திக்க எண்ணியும் இருவருமே அவரவர் வேலையில் பிசியாக இருந்ததால் சந்திக்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

ஒரு வழியாக வியாழக் கிழமை என்று நினைக்கிறேன் .சந்தித்தோம்..
குரலில் தெரிந்த கம்பீரத்தால் அவரை ஒரு ஐந்தரை அடி உயரமான வாட்ட சாட்டமான கிட்டத்தட்ட கிரண்  பேடி  மாதிரியான ஒரு மனுஷி போல ஒரு உருவம் தான் என் மனதில் அவரைப் பற்றி வரைந்து வைத்திருந்தேன்.

என் வேலை பகுதி நேர வேலை என்பதால் 12.30 அளவில் முடிந்துவிடும் .அன்று மாலை காலேஜு வேலை இல்லை என்பதால் அவர்கள் வீட்டுக்கு வருவதாக முதல் நாளே பிளான் போட்டுவிட்டோம் .என்னை என் அலுவலகத்திலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தார். .நான் தலைக்கு மெஹந்தி போடுவதால் என் அடையாளத்தை அவரிடம் கூற அவர் மஞ்சள் நிற லெக்கிங்க்சுபோட்டு வருவதாகவும் தனது வண்டி நம்பரையும் சொல்லிவைத்திருந்தார்.

 நான் போன் பண்ணியதும் சொன்னபடியே வந்தார் . எனக்கு அவரைப் பார்த்ததும் ஒரே ஷாக் .
 திருக்குறள் போல இருந்தார் . நான் நினைத்துக் கொண்டிருந்த உயரத்திற்கும் ஓர் ஒன்றரை அடியாவது குறைந்த உயரம்.நிஜமாகவே அவர் திருக்குறள் தான் . ரெண்டே வரியில் நிறைய பொருள் பொதிந்த குறள் போல அந்த ஒரு ஐந்தடி உயர உருவத்தில் ஒரு செல் நரம்பு இரத்தக்குழாய் விடாமல் தன்னம்பிக்கை .ஐந்தடி உயரத்தில் 500 கிலோ தன்னம்பிக்கை .


 நிஜமாகவே ஒரு இனிமையான மனுஷி.

நம்பவில்லை என்றால் அவரின் இரத்தத்தைச் சோதித்துப் பார்த்தால்  தெரியும் .
கிட்டத்தட்ட 15 வருடங்களாக சர்க்கரை வியாதி இருக்கிறதாம்.

கவாஸ்கர் சுரீந்தர் அமர்நாத் இவர்களெல்லாம் முதல் டெஸ்ட் மேச்சிலேயே சதம் அடித்தார்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் . 
ஆனால் இவர் முதல் டெஸ்டிலே 400 ஆம் .
ஒரே ஒரு வித்தியாசம் அவர்கள் கிரிக்கெட்டில் இவர் சர்க்கரை அளவில் .

 அவர்தான் நமது பெருமைக்குரிய பதிவர் கீதா.
அவரையே மகளிர் தின சிறப்பு பதிவர் ஆகத் தேர்வு செய்துள்ளேன்,
அவர் நீடுழி  வாழ வாழ்த்துகிறேன்.


Sunday, 17 January 2016

பயணம்-தொடர் பதிவு

 பயணம் என்றால்  எல்லோரும் மனிதர்கள் செய்த பயணம் பற்றியே எழுதுவதால் நான் கொஞ்சம் வித்தியாசமாக   1967 முதல் என்னுடன் பயணம் செய்த என்  பென்சில்  பாக்ஸ் மற்றும் 1976 முதல் பயணம் தொடங்கி  இன்று வரை என்  கூட  இடையறாது விடை பெறாது பயணம் செய்த உண்டியல் பற்றியும் தான் நான் எழுதப் போகிறேன் .
 இது என்ன பெரிய ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா?
 மனிதர்கள் என்றால் ஏதாவது ஆபத்து வந்தால் மூளையை உபயோகித்து  உசிரைக் காப்பாத்திக்கலாம். வாயில்லாப் பொருட்கள் இவை .
 நிறைய ஊர் நிறைய வீடு சின்னக் குழந்தைகள் கை படும் இடம்வீட்டோடு இருந்த வேலையாட்கள் அடிக்கடி எனக்கு நடந்த  ஆஸ்பத்திரி அட்மிஷன்கள்  இவையே வேண்டும் என்று அடம்பிடிக்கும் குழந்தைகள் இவை எல்லாவற்றையும் தாண்டி . என்னுடன் கூடவே பயணம்செய்த....... இது சாமானிய விஷயமல்லவே.

 குழந்தைகளிடமும் இந்த விஷயத்தைப் பக்குவமாகப்  புரியவைத்ததாலும்    நான் செண்டிமெண்ட் என்ற ஸ்டிக்கர் ஓட்டியதால் குழந்தைகளும் மதிப்புக் கொடுத்தனர்.
 இதில் முதலில் என்ட்ரி ஆனது என் பென்சில்  பாக்ஸ்.
  நான் ஒன்பதாவது படிக்கும் பொது வாங்கியது . அது முதல் 11வது  படிக்கும் வரை வகுப்பில் முதல் ராங்கு வாங்கினேன் . பிறகு கல்லூரியிலும் நன்கு படித்தேன் ,என் அதிருஷ்டம் 1976 ல் எமர்ஜென்சி இருந்ததால் எனக்கு செகரட்டேரியட்டில்  வேலை.
அதன் பின் எந்தப்  பரீட்சை எழுதினாலும் பரிட்சையில் ஃ பெயில் ஆனதில்லை . 
இண்டர்வியூவில் செலக்ட் ஆவதில்லை . பிறகு வங்கியில் நேரடி ஆபீசராகத் தேர்வு ஆனேன் .
 பிறகு CAIIB   பரீட்சை எழுதியபோதும் நான் படித்த லட்சணத்திற்கு 
 (  நீண்ட நேர அலுவலக வேலை மற்றும் பார்ட் 2 எழுதும்போது குழந்தைகள் பிறந்து    விட்டனர்           .) என்னைப் பாஸ் செய்ய வைத்ததே இந்த பென்சில் தான் என்ற நினைப்பு எனக்கு .
 எத்தனை எத்தனை  காலேஜின் எக்ஸாம் ஹால்கள் . 
 திருச்சி சாவித்ரி வித்யாசாலையின் எத்தனையோ   கிளாஸ் ரூம் கள் ,
திருச்சி  சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியின் எத்தனயோ கிளாஸ் ரூம் கள் ,செயின்ட் ஜோச ஃ ப் கல்லுரி   Laali     ஹால்  என்று லயோலாவின் betram  ஹால்
 அக்கவுண்டு டெஸ்ட் எழுதிய காலேஜு .   சென்னையில், மும்பையில் டெல்லியில் ஹைதராபாத்தில்   CAIIB   பரீட்சை எழுதிய காலேஜு  மற்றும் ஸ்கூல்கள் ....
 பிறகு நான் ஜப்பானிய மொழிப் பரீட்சை எழுதிய மீனாக்ஷி காலேஜு பச்சையப்பா காலேஜு velammal  ஸ்கூல்.
 இதைத் தவிர   என் முதல் மகன்  5 வது  வரை சில சமயங்கள்பரிட்சையின் போது . 
ஒரு பத்து வயது ஆனதும்  என் முதல் மகனுக்கு இதில் நம்பிக்கை போய்விட்டது. 
 என் இரண்டாவது மகன்  அதன் பின்  எடுத்துச் சென்றான். 10வது   12வது  மற்றும்  பல  பரீட்சை நடந்த ஸ்கூல்கள் என...  பென்சில் பாக்ஸ் சுற்றிப் பார்த்த ஸ்கூல்கள் .... ஏராளம் .
1968ல் இருந்து இவ்வளவு பரீட்சை ஹால் பார்த்தது உலகத்திலேயே இந்த ஒரு பென்சில் பாக்ஸ் மட்டுமே என்று நான் நினைக்கிறேன்.
இவ்வளவு   நீண்ட  பயணம் செய்தும்    இன்னும் சீரிளமைத் திறம் குன்றாது இருக்கும்  அழகைக்   காணக் கண் கோடி வேண்டும். இன்னும் அதைப் பொத்திப் பொத்தித்தான் பீரோவில் வைத்திருக்கிறேன் .    


   
 இந்த மண் உண்டியல்  எந்த வருடம் வாங்கினேன் என்று  ஞாபகமில்லை.
  1976 MA  பரீட்சை  முடிக்கும் முன்பே வேலை   கிடைத்தது       1976ல் சென்னை  வந்த     போது கூடவே எடுத்து  வந்தேன்  , ஹாஸ்டலில்  ஒரு மூன்று  முறை ரூம்  மாற்றி  அதன் பிறகு கோவை மும்பை டெல்லி  ( டெல்லியில்  இருமுறை வீடு மாறினோம் ) பின் திருமணம் ஆனபின் மறு படியும்    மும்பை   ( இருமுறை வீடு மாற்றம் )  ஹைதராபாத் (மூன்று முறை வீடு மாற்றம்) சென்னை  ( 6 முறை வீடு  மாற்றம்) என  என் கூடவே   பயணம் செய்து. இப்போது இங்கே உள்ளது. 

.ஒரு மண் உண்டியலை  உடைக்காமல் இத்தனை ஆண்டுகள் அதுவும் என் குழந்தைகள் கையில்கிடைக்காமல்  பாது காத்து  இவ்வளவு ஊர்  தாண்டி வருவது என்பது சாதாரண   விஷயமல்ல .
போட்டோ அப்லோடு செய்ய எவ்வளோவோ முயன்றும் முடியவில்லை . ஐ பேடில் இருந்து  முயற்சி செய்தேன் . ம்ஹூம் ...
அடுத்த முறை யாரிடமாவது கற்றுக் கொள்ள வேண்டும் .

Friday, 15 January 2016

பொங்கல் வாழ்த்துக்கள்

நண்பர்கள் அனைவருக்கும்,  மற்றும்
அவர்களது  குடும்பத்தினர்  அனைவருக்கும் –

எனது உள்ளம் நிறைந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
pongal festival க்கான பட முடிவு

Tuesday, 5 January 2016

திடீர் பள்ளி விடுமுறைகளும் ஆரம்ப வகுப்பு மாணவர்களின் அவலமும்



 டிவியில் கடந்த இரண்டு நாட்களாக வெடிகுண்டு மிரட்டலால் பள்ளிகள் சில  ஊர்களில் மாணவர்கள்  பள்ளிக்கு வந்த பின் விடுமுறை விட்டன .

 இது டிவியில் மாணவர்கள் பைகளை மாட்டிக்கொண்டு வீடு திரும்பும் காட்சியைக்  காட்டி ஏதோ ரியலிஸ்டிக்காகக் காண்பிப்பது போன்ற தோற்றத்தைக் காண்பிக்கிறார்கள் .


 ஆனால் உண்மையில் இது வெறும் செய்தி மட்டுமே அல்ல . இதன் பின்னே உள்ள ஆரம்ப வகுப்பு மாணவர்களின் பிரச்னை மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவலை  பற்றி  ஊடகங்கள் பார்க்கத் தவறுகின்றன .

பெரிய மாணவர்கள் என்றால் அவ்வளவு பிரச்னை இல்லை , ஒன்றாவது இரண்டாவது படிக்கும் மாணவர்கள் குறிப்பாக அவர்களின் இரு பெற்றோர்களும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் அவர்கள் படும் பாடு  சொல்லி முடியாது. அவர்கள் எப்படி வீட்டுக்குப் போவார்கள் ?


சில சமயங்களில் தந்தை ஸ்கூலில் விட்டுவிட்டு எங்கோ தூரத்தில் இருக்கும் ஆபீசிற்குப் போவார் . தாயும் தூர உள்ள இடத்தில் வேலைக்குச் செல்கிறார் என்றால் அந்தக் குழந்தைகள் எப்படி வீட்டுக்குத் திரும்பிப் போவார்கள் ?

 பணம் கையில் கொடுத்தால்அந்தக் குழந்தைகள் கேட்டுப் போகும் சந்தர்ப்பங்கள் நிறைய என்பதால் பெற்றோர்களும் பணம் தந்து விட்டுப் போகமாட்டார்கள் .
 எனவே திரும்ப ஆட்டோவில் (தைரியமாக வருவதாக இருந்தால் ) வருவது என்பது முடியாத காரியம் .

 பெரிய  கலாட்டா நடக்கும் சில சமயங்களில் பஸ் கூட ஓடாது .

 எப்படியோ ஒரு வழியாக வீட்டுக்கு  வந்தாலும் அவர்களிடம் வீட்டு சாவி இருக்காது .டாய்லேட் போக என்ன செய்வார்கள் ?

இது போன்ற சமயங்களில் பள்ளி நிர்வாகம் கொஞ்சம் இது போன்ற குழந்தைகளின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு மாலையில் பெற்றோர்கள் வரும் வரை அல்லது அவர்கள் வழக்கமாக வரும் வாகனங்கள்  (ஆட்டோ  ,பிரைவேட் வேன் போன்றவை )வரும் வரை அவர்களை பள்ளியிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்.

Sunday, 3 January 2016

குழந்தைகளும் அழகிய கேள்விகளும்


 குழந்தைகளே அழகு ,அதுவும் அவர்கள்  படு சாமர்த்தியமாகக் கேட்கும் கேள்விகள்  இருக்கிறதே அது ரொம்பவே அழகு .
 நான் வாக்கிங் போகும்  பார்க் நடுவே குழந்தைகள் விளையாடுவார்கள் , அம்மாக்கள் பொதுவாக வாக்கிங் போவார்கள் .
 ஒரு குழந்தை  யு கேஜிஅல்லது ஒன்றாவது படிக்கும்
 அது பாட்டுக்கு விளையாடிக் கொண்டே இருந்தது. .அந்தக் குழந்தையை அதன் அம்மா வா வா நாழியாகிறது பனி வேறு பெய்ய ஆரம்பித்து விடும் . உடம்புக்கு ஆகாது சளி பிடிக்கும் .
 அப்ப பனி பெஞ்சா ஸ்கூல் லீவு விடுவாங்களா ?

  மழைக்கு வெய்யிலுக்கு மட்டும் தான் லீவு விடுவாங்க .பனிக்கெல்லாம் லீவு விடமாட்டாங்க   என்றாள் அம்மா.
 ரமணன் அங்கிள் டிவிலே பனி ரொம்பப் பெய்யும்ன்னு  சொன்னாக்க தான் லீவு விடுவாங்களா? -இதுகுழந்தை
 பக்கத்தில் இருந்தவர்கள் எல்லோருமே சிரித்துவிட்டோம் .
எப்ப ஸ்கூல் லீவு விடணும்ன்னு தீர்மானிக்கிற அடிஷனல் வேலையை குழந்தைகள் ரமணனுக்கு எந்த கவர்மெண்ட் ஆர்டரும் இல்லாமல் வழங்கிய  மாதிரியாகத் தோணியது . குழந்தைகளின் உலகத்தில்  G .O  தேவை இல்லை போலும்

2016 எலெக்ஷனில் ரமணன் வேட்பாளராக நின்று ஸ்கூல் போகும் குழந்தைகளுக்கு மட்டுமே அந்தத் தொகுதியில் வாக்குரிமை  என்று வைத்தால் நிச்சயம் வெற்றி அவருக்குக்கே !

Friday, 1 January 2016

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .

 அனைவருக்கும் மனம் கனிந்த புத்தாண்டு நல்  வாழ்த்துக்கள் .

Tuesday, 29 December 2015

தனி ஒரு பெண்ணிற்குகேபிள் கனெக்ஷன் இல்லையேல் .....திருமணத்தை நிச்சயிக்கும் கேபிள் கனெக்ஷன்




 தமிழர்களின் வாழ்வோடு இணைந்த  விஷயங்களில் முக்கியமானவை சினிமாவும்   டிவி யும் என்பதற்கு பட்டி மன்றம் தேவையே இல்லை .
 எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தாலும் சமீபத்தில் நடந்த ஒரு சுவாரசியமான உரையாடலைக் கேட்டால் நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள் .
 நான் எனது இரண்டாவது மகனுக்கு வெகு தீவிரமாகப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறேன் .
நான் சொல்லும் பெண்கள் அவனுக்குப் பிடிப்பதில்லை ,மேலும் அவன் நல்ல உயரம் வேறு . எனவே சாய்ஸ் கொஞ்சம் கம்மிதான் .
 ஒரு பெண் போட்டோ பார்த்தேன் , எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது .
நல்ல உயரம் ,நல்ல காலேஜில் படித்திருந்தாள்.. வேலையிலும் இருந்தாள். பிறகு போன் நம்பர் மாட்ரிமோனி ஆபிசிலிருந்து வாங்கி போன் செய்தேன்.

 இதற்கு முன் என் குடும்பத்தைப் பற்றிய ஒரு முன்னுரை இருந்தால்;தான் உங்களுக்கு விவரம் புரியும்..
 பசங்க ஹைதராபாத்தில் இருந்த பொதுவாக  டிவி பற்றி அவ்வளவு ஆர்வம் கிடையாது . அடிக்கடி வெளியில் கூட்டிப் போய் விளையாட விடுவோம். கிரிக்கெட் ஃ புட் பால் இரண்டு மட்டுமே தெரியும் .
இராமாயணம் சீரியல் கிருஷ்ணா சீரியல் மட்டும் தான் பார்ப்பார்கள் .
 நான் டிவி அறவே பார்ப்பது கிடையாது ,  சரியோ தவறோ குழந்தைகளின் கண் பார்வை கெடும் என்ற எண்ணம் எனக்கு . என்னைப் பார்த்தே குழந்தைகளும் டிவியில் ஆர்வம் இல்லாமல் இருந்தார்கள் .
 எனக்கு ஆஸ்த்மா தொந்திரவு ஹைதராபாத் வந்தபின் வந்ததால் தியேட்டர் களுக்கும் அழைத்துப் போனது கிடையாது.
 பிறகு தமிழ் நாட்டுக்கு வந்த பின் கேபிள் டிவி பற்றி தெரிந்து கொண்டு
 கேபிள் கனெக்ஷன் போடு போடு என்றதால் போட்டேன் . அப்போது நான் அரக்கோணம் அருகே உள்ள பிராஞ்சில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன் .  வீட்டுக்கு வர எட்டு மணி ஆகிவிடும் .பிறகுதான் சமையல்  படிப்பு தவிர  பசங்களை யும் கவனிக்கணும் ,  பொதுவாக நான்  வருமுன் ஹோம் ஒர்க் முடித்துவிடுவார்கள்  பாடம் நான் வந்த பின் என் கண்காணிப்பில் .

நன்றாகப் படித்துக் கொண்டிருந்த பசங்க கேபிள் கனெக்ஷன்  வந்தபின் படிக்கவில்லை . மார்க்குகள் குறைந்தது  பெரியவன் நாலாவது சின்னவன் இரண்டாவது . பிறகு நான்  டிப்லாமாட்டிக்காக  பசங்களைத் திட்டவில்லை கேபிள் கனெக்ஷன்  காரனைத் திட்டிக்கொடிருந்தேன் . பிறகு அவர்களாகவே அடுத்த நாள் அம்மா கேபிள் கனெக்ஷன்  வேண்டாம் கோடை விடுமுறையில் மட்டும் போட்டுக்கொள்ளலாம் என்று சொல்லியதும் 2005 வரை எங்கள் வீட்டில் கேபிள் கனெக்ஷன்  கிடையாது.  கோடை விடுமுறையில் ஒரு இரண்டு மாதம் மட்டுமே
  மற்ற நாட்களில் பொதிகை மட்டுமே வரும் . இதனால் எங்கள் வீட்டுக்கு வரும் உறவினர்கள் எல்லோருக்கும்  செம  எரிச்சல் சீரியல் பாக்கமுடியாது ஒரு மாச் பாக்கமுடியாது இதெல்லாம் ஒரு வீடா என்று சகட்டுமேனிக்கு ....அதுவும் என்னைத்தான் திட்டுவார்கள் . நான் மசியவில்லை
 பசங்க சின்ன வசாயிருக்கும் போது என் கணவர் தான் சினிமாவிற்குக் கூடிப் போவார்
. பசங்களுக்கு இன்று வரை அது ஒரு பெரிய குறையாகத் தெரியவில்லை .
இப்போது இருவருமே நன்கு படித்து நல்ல வேலையில் .

இது நான் எப்பவோ மறந்து விட்ட விஷயம் .
 மறுபடி பெண் பார்த்த விஷயத்திற்கு வருவோம்
  பெண்ணின் அப்பாவிடம் போனில் பேசினேன் ,  பெண்ணின் படிப்பு வேலை அவளது தந்தையின் வேலை ஊர் , ( திருச்சி என்பதால் நானும் படித்த இடம் எனவே ரொம்ப வாஞ்சையோடு பேசினேன் ) என் கணவர் மூத்த மகன் பற்றியெல்லாம் பேசியபின் என் உறவினர்கள் பற்றி கேட்டார் . சொன்னேன்


 சொன்னதும்   உன் வீட்டிலே  எவன் பொண்ணு கொடுப்பான் என்கிற தொனியில்"  ஒ!ஓ ! அவங்களா நீங்க ?வீட்டுலே ஒரு கேபிள் கனெக்ஷன் கூட இல்லாம இருக்குமே அவங்களா .... புரியுது புரியுது   " என்றதும் எனக்கு ஒரே ஷாக் !
 நான்  சின்ன வயசில் வங்கியில் நேரடியாக ஆபீசர் வேலைக்குச் சென்றதும் இப்போதும் அதற்கு துளியும் சம்பந்தமில்லாத வேலையில் இருப்பது பற்றி எல்லோராலும் பெருமையாக மட்டுமே பேசப்பட்ட என்னைப் பற்றிய
அந்த மனிதரின் மதிப்பீடு நிஜமாகவே  எனக்கு ஷாக் அடித்த மாதிரி தான் இருந்தது .
ஒரு மனிதரை அவர் வீட்டில் இருக்கும் கேபிள் கனெக்ஷனை ஒரு அளவு கோலாக  வைத்து மதிப்பிடும் மனிதனின் மடமையை நினைத்து ஒரு நிமிடம் எனக்குக் கோபம் வந்தது என்னவோ உண்மைதான் .
பிறகு சுதாகரித்துக் கொண்டு
 " நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் .  ஒத்துக் கொள்கிறேன் .இப்போது எங்கள் வீட்டில் கேபிள் கனெக்ஷன் உள்ளது . ஆனால் நான் என் மகனுக்குப் பெண் பார்க்கும்போது எந்த  பெண்ணின் தந்தையும் உங்க பையன் மாசம் எவ்வளவு கிரிக்கெட் மாச் ஃ புட்பால் மாச் பாக்கிரான்னோ நானும் உங்க பொண்ணு மாசம் எவ்வளவு சீரியல் அல்லது சினிமா பாக்கும்ன்னோ  கேட்டதில்லை.
 என்றதும் வைத்துவிட்டார் போனை .
 ஒரு பொறுப்பான பெண்ணின் தந்தை வரும் மணமகன்  படிப்பு எப்படி வேலை எப்படி தண்ணி அடிப்பானா சிகரெட் பிடிப்பானா வேறு கெட்ட  குணங்கள் உண்டா என்று பார்ப்பதை விட்டு விட்டு கேபிள் கனெக்ஷன் பற்றி கேட்டால் .......... நாடு போகும் பாதை    ?

Thursday, 17 December 2015

சென்னை வெள்ளம்



 சென்னை வெள்ளம்
 பற்றி எல்லோருமே எழுதி விட்டார்கள்
ஒரு வாரமாக இருட்டில் வாழ்ந்து கொண்டிருந்தோம்
வீட்டைச் சுத்தம் செய்ய இவ்வளவு நாட்கள் தேவைப் பட்டது .

எங்கள் வீட்டைச் சுற்றி ஒரே வெள்ளம் ... நாங்கள் முதல் மாடியில் இருந்ததினால் வீட்டு உள்ளே இருந்த சாமான்களுக்கு பாதிப்பு இல்லை ,ஆனால் கார் நகர மறுக்கிறது  .

என் மகன்கள் இருவருமே வேறு இடத்தில் இருப்பதால் அவர்கள் ரொம்பவே கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்கள் . ஒரு வழியாக என் இரண்டாவது மகனின் கிளாஸ்மேட் மற்றும் எம் ஓ பி வைஷ்ணவா கல்லூரியில் நான் பார்ட் டயம் ஆசிரியராக இருந்தபோது என் மாணவியுமான ஒரு பெண்
அவள் பெங்களூரில் வேலை பார்க்கிறாள்  அவளை என் மகன் தொடர்பு கொண்டு
பின் அவள் தன் பெற்றோரைப் பார்க்க சனி ஞாயிறு அன்று சென்னை   வந்தபோது எங்கள் வீட்டுக்கும் வந்து காய் கறிகள் எங்கோ ஸ்கூட்டரில் போய் வாங்கி வந்தாள்.

எங்களது கார் முழுகும் வரை  வெள்ளம் .
இப்போது அதை ரிப்பேர் செய்ய 42000/- கேட்கிறார்கள் .


 இத்தனைக்கும் எங்கள் வீடு மேடான இடத்தில் தான் உள்ளது .
இதனாலேயே மக்கள் கூட்டம் எங்கள் தெருவிலேயே சுற்றிக் கொண்டு இருந்தார்கள் . கிட்டத்தட்ட காணும் பொங்கல் விழா அன்று உள்ள கூட்டம் மாதிரியே இருந்தது .அசோக் பில்லர் அருகே என்பதால் கொஞ்ச நாழிகையில் முழங்கால் அளவு தண்ணீர் ....


 சிலர் பாவம் ஒரு வாடகை டாக்சி பிடித்துக் கொண்டு எங்கு போவது என்று தெரியாமால் சுற்றிக் கொண்டு இருந்தனர் . பெரியதும் சிறியதுமாக ரோடின் இரு புறமும்  ஓரத்தில்  சாய்வாக நிறுத்தப் பட்ட நிலையில் நிறைய வாகனங்கள் .... ( in the car slope ) சில ஆண்கள் காரிலேயே இரவைக் கழித்தனர் .. .... மறுநாள்  காலையில் நட்ஸ் அண்டு ஸ்பைசஸ் கடை திறந்தபின் அங்கே பொருட்களை வாங்கிக்கொண்டனர் .

 ஒரு நாள் கழித்துத் தான் வீதியில் ஒரு முப்பது அடி தூரத்துக்கு நடக்க முடிந்தது .  பக்கத்துத் தெருவில் படகில் மக்கள் சென்றுகொண்டிருந்தனர் . எங்கு சென்றுகொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை .


பல கடைகளில் கீழே உள்ள இரண்டு மூன்று தட்டுக்கள் வரையில் இருந்த பொருட்கள்  கெட்டுப் போனதால் வீதியில் வீசப் பட்டன.
முழுக்க நனைந்த  உடையுடன் இளநீர் விற்கும் பெண்மணி என்னைக் கண்டதும் அழுது கொண்டே அம்மா மாத்துப் புடவை இருந்தால் கொடும்மா என்றாள்.
உடம்பு பாவம் நடுங்குகிறது . வீடு எங்கோ பக்கத்தில் ...ஆனால் அவளால் போகமுடியவில்லை . ஒரு நாள் முழுக்க சாப்பிடவே இல்லையாம் இளநீர்கள் வெள்ளத்தில் கொண்டு போகப் பட்டன என்றாள் .எங்கள்  வீட்டில் கரண்டும் இல்லை ,மெழுகு வத்தியும்  கிடையாது . அகல் விளக்கில் தான் சமையல் . பகலிலும் அகல் விளக்கு தேவைப் பட்டது .
 ஒரு பெரிய பிஸ்கட் பாக்கெட் கொடுத்தேன். மாத்துப் புடவை மட்டும் தான் கொடுக்க முடிந்தது
என் பிளவுசு அவளுக்கு சின்னதாக  இருக்கும் .
இல்லம்மா சட்டை இல்லாட்டியும் பரவாயில்லை என்றாள் .
ஒரு வாரமாகக் கடையும் திறக்கவில்லை .
ஏ டிஎம் வேலை செய்யவில்லை .
 பலரும் கிடைத்த பொருளை அதிக விலைக்கு விற்பதைக் காண முடிந்தது.
ஆறு நாட்கள் கரண்டு இல்லை .
நெட் கனெக்ஷன் கிடைக்க இன்னும் இரண்டு நாள் ஆனது .
 பி எஸ் என் எல் வேலை செய்ததால் திருச்சியில் உள்ள  என் உறவினர்களுடன் பேசி என் மகன்களுக்கு மெயில் அனுப்பச் சொன்னேன்
  வெள்ளம் கற்பித்த பாடம் என்று பலரும் பலவிதமாகச் சொல்கிறார்கள் .
எனக்குப் புரிந்ததெல்லாம் இது ஒரு கடினமான பாடம் என்று சொல்வேன் .

 பணம் இருந்தவர்களும் , சிக்கனமாக இருந்து பணத்தைச் சேர்த்து வைத்தவர்களும் கஷ்டப்பட்டார்கள் பணத்தைச் சேர்த்து வைக்காதவர்களும் கஷ்டப்பட்டார்கள் .
மளிகை சாமான்கள் வாங்கி வைத்தவர்களும்  கஷ்டப்பட்டார்கள் . ( கீழ் தளத்தில் இருந்தவர்கள் ).
மளிகை சாமான்கள் வாங்கி வைக்காதவர்களும் கஷ்டப்பட்டார்கள் .. ( முதல் மற்றும் இரணடாவது மாடியில் இருந்தவர்கள் ).

Monday, 30 November 2015

பேரிடர்களும் பிரச்னைகளும்


   இயற்கையால்  மற்றும் மனிதனால்  வரும் பேரிடர்கள்  செய்தித் தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் காட்டும் போது , ஒவ்வொருவரும் தான் எப்படியெல்லாம் துன்பத்திற்கு ஆளானோம் என்று கூறுபவை எல்லாம் முடிந்தவரை உணர்வுகளத் தட்டி எழுப்பும் வகையில்தான் இருக்கின்றன. இது போன்ற ஒரு கால கட்டத்தை நானும் கடந்து வந்த ஞாபகம் எனக்கும் வந்தது.


 ஹைதராபாத்தில் நாங்கள் இருந்த போது எதோ ஒரு கலவரம் .அதனால் கிட்டத்தட்ட ஒரு  மாதம் வரை இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டது.அடிக்கடி கர்ஃ பியு வேறே .கடைகள் சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப் பட்டிருக்கும் 144 உத்தரவு வேறு ,எனவே எங்கும் வெளியே செல்ல முடியாது .  பயங்கர கலவரம் ஸ்கூட்டரில்  பில்லியன் ஆகக் குழந்தைகள் கூடச் செல்லக் கூடாது.
 அப்பார்ட்மெண்ட் பெரியது என்பதால் அவ்வளவாகப் பிரச்னை இல்லை ,என்றாலும்  குழந்தைகள் வேறு முறையே 5 வயது 3 மூன்று வயது  என்பதால் வெளியில் கடைக்குப் போக ஆசைப் படுவார்கள் .


கர்ஃ பியு  உத்தரவு தளர்த்தும் சமயத்தில் மறக்காமல் வெளியே என்னுடன் கூட்டிச் செல்வேன்.அது வேண்டும் இது வேண்டும் என்று அடம் பிடிக்க மாட்டார்கள் ,ஏனெனில்  கடைகளில் வரிசையில் நின்று சாமான்கள் வாங்குவதால் அவர்களுக்கே புரிந்து விட்டது.

அதைவிடப் பெரிய பிரச்சினை என்னவென்றால் பொருட்கள் எல்லாருக்கும் மளிகைக் கடைகளில் குறிப்பிட்ட அளவே தருவார்கள் . எனது இரு மகன்களுமே சப்பாத்திமட்டுமே  சாப்பிடுவார்கள் ,அரிசி சோறு  சுத்தமாக சாப்பிட மாட்டார்கள் . எவ்வளவோ முயற்சி செய்தும் எங்களால் சாப்பிட வைக்க முடியவில்லை . டாக்டர்களும்  குழந்தை எது சாப்பிடுகிறதோ அதை கொடுக்க வேண்டுமே தவிர உங்கள்  எண்ணங்களை அதன் மீது திணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள் .

அதுவும் அப்பொழுதுதான் இருவருக்கும் மஞ்சள் காமாலை வந்து சரியாகி வரும் நேரம் ,பசி இருவருக்கும் எக்கச்சக்கமாக எடுக்கும்.இப்போது போல  கோதுமை மாவு ரெடி மேடாக அப்போது கிடைக்காது .ஒரு கடையில் மட்டும் மாவாக விற்பான் ,அந்தக் கடையில் ஒரு ஆளுக்கு ஒரு கிலோ மட்டுமே.

எங்களது அப்பார்ட்மெண்ட் வாசி ஒரு வயதான தம்பதிகள் ,
அவர்கள் என் கணவரின் ஆபீசில் வேலை பார்ப்பவர் ,ரிட்டயராக ஒரு  வருடம் இருக்கும் தருவாயில்  சென்னையிலிருந்து ஹைதராபாத் மாற்றப்பட்டார் . நாங்கள் தான் வீடு பார்த்தது முதல் பல உதவிகள் செய்தோம். பிறகு அந்த அம்மாவிடம் குழந்தைகளுக்காக வெட்கத்தை விட்டு அந்த ஒரு கிலோ கோதுமை மாவைக் கேட்டு வாங்கி .....அந்த ஒரு மாதம் நாங்களோ வீட்டில் குழந்தைகளைப் பார்த்துகொண்ட பெண்மணியோ ஒரு துண்டு சப்பாத்தி கூட வாயில் போட்டதில்லை . உப்பு கம்மியாக என்று சொன்னதால் பிரச்னை இல்லை.
 பசங்களுக்கு பிடித்த வாழைப் பழம் மற்றும் சீத்தாப் பழம் கறிகாய்கள் சூப்பு சீப்பு எண்ணெய் இத்யாதிகள் ...... இவைகளை வாங்க ,அது இது என ஒரு மணி நேரத்திற்குள் ஷாப்பிங் முடித்து விட்டுப் பின்னரே மூச்சு விட முடியும்.
 இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது .

 டிஸ்கி :
 தொடர்ந்து மொழிபெயர்ப்பு வேலை இருந்ததால்  மற்றவர்களின் பிலாக்குகளையும் படிக்கவோ காமெண்ட் போடவோ முடியவில்லை .

Tuesday, 3 November 2015

சர்ச்சைகள்


 மனிதனின் பிரதான குணங்களில் ஒன்று எதை எடுத்தாலும் அல்லது யார் எது சொன்னாலும் அதை முழுவதும் கேட்காமலேயே உடனே ஒரு மாற்றுக் கருத்து ஒன்று சொல்வது . விமரிசனங்கள்/ மறுத்துப் பேசுதல்  =அறிவுடைமை என்ற ஒரு எண்ணம் நம் எல்லோருக்கும் இருக்கிறது..
இதே போல் leggings விஷயத்திலும் இப்படித்தான் ஒரு நாலு அல்லது ஐந்து வருடமாக அணிந்து வரப்படும் உடையைப் பற்றி அந்த டயத்தில் பேச வேறு ஹாட் டாபிக் இல்லததனாலேயோ என்னவோ தெரியாது , கார சாரமாக விவாதிக்கப்பட்டது  அப்புறம் அடுத்த டாபிக் வந்ததும் லெக்கிங்க்ஸ் மறக்கப் பட்டுவிட்டது.



இங்கே மேட்டர் இப்படி ஓடிகிட்டு இருக்கும் போது பூனைக்குக்  கிமோனோ உடை ( ஜப்பானிய பாரம்பரிய உடை )அணிவித்து மகிழும் மக்களும் இருக்கிறாகள் .

 இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் யாரும் இது பற்றி விவாதிக்கவில்லை..
 யாரும் பூனைக்கு எதிராகப் போராட்டம் நடத்தவில்லை .
 பூனை மனிதரின் உடையை எப்படி அணியலாம் அன்று ஒட்டி வெட்டி தொலைக் காட்சியில் விவாதம் நடத்தப் படவில்லை 
ஹாய்....  சுகோயி  ( சூப்பர்  )என்று காண கச்சிதமாக மேட்டர் முடிக்கப் பட்டது