இந்தி கற்றுக் கொள்வது அவசியமா இல்லையா என்பது பற்றி இன்னும் நிறையப் பேர் விவாதிக்கின்றார்கள் .
என்னைக் கேட்டால் "கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை ." என்பேன் .
நான் கற்க ஆரம்பித்த பொது என் வயது 7. என் அப்பாவிற்கு ஹிந்தி ஓரளவு படிக்கத் தெரியும் .ரயில்வேயில் வேலையில் இருந்தார் .ஆனால் வேலை பார்த்தது எல்லாமே தமிழ் நாட்டில் தான் . ஹிந்தி பேசத் தெரியாது . பேசினாலும் புரியாது.
தனக்கு ஆண் பிள்ளைகள் இல்லை என்பதால் மற்ற உறவினர்கள் எங்கள் வீட்டை லேடிஸ் ஹாஸ்டல் அது இது என்று கேலி பேசியதால் எங்களை அவர்களை விடவும் கல்வியில் சிறக்க வைக்க வேண்டும் என்கிற ஒரு ஆர்வத்தில் என்பதை விட ஒரு வ கொலைவெறியில் எங்களை நன்கு படிக்க வைத்தார்.
என் அக்காக்கள் ஹிந்தி படித்ததால் நானும் படிக்க ஆசைப் பட்டேன் .அப்பொழு ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் மிகத் தீவிரமாக இருந்த நேரமும் கூட .
எனக்கு ஹிந்திப் பாடல்கள் மீது ஒரு சொல்லொணாக் காதல் .
என் சகோதரிகளை விடவும் ஹிந்தி குறைந்த அளவே படித்திருந்தாலும் அவர்களை விட நன்றாக ஹிந்தியில் பேசும் திறமை எனக்கு உண்டு. (உபயம் ,ஹிந்திப் பாடல்கள் )
இது எனக்கு வட இந்தியாவில் வேலை பார்த்த போது ரொம்பவே உதவியாக இருந்தது.ஒரு 12 வருடம் வேறு வேறு இடங்களில் வேலை பார்த்த போதும் கஸ்டமர்களிடம் பேசும்போதும் சாமான்கள் வாங்கும் போதும் எனக்குப் பிரச்னை வந்ததில்லை .
சமீபத்தில் ஷீரடி ,அஜந்தா எல்லோரா போன்ற இடங்கள் சென்ற போதும் எனக்கு பிரச்னை என்பது துளியும் கிடையாது .
அது மட்டுமல்ல எனக்குத் தெலுங்கும் ஆந்திராவில் இருந்த காரணத்தினால் வரும் . அங்கு இருந்தபோது கொஞ்சம் படிக்கக் கூட முடியும் . இப்போது நன்கு பேசுவேன் . ஆனால் படிக்க வரவில்லை .
மேலும் எந்த மொழியும் கற்க வேண்டும் என்று தோன்றினால் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர ஆராய்ச்சி பண்ணும் வேலை நான் செய்வதில்லை.
நான் 40 வயதிற்குப் பின் பேங்க் வேலையை விட்டு வேறே எதுவும் செய்யத் தெரியாமல் ஜப்பானிய மொழி படிக்க ஆரம்பித்த போது என்னை யாரும் ஊக்கப் படுத் தாதது மட்டுமல்ல ,
இது எதுக்கு இந்த வயசிலே போயும் போயும்...... அந்த ஊர்க்காரன் பாஷையை ...... இங்கே யாரு பேசப் போறாங்க .
சப்ப மூக்கு பாஷைப் படிச்ச நம்ம மூக்கும் சப்பை ஆயிடும் ......என்ற காமெண்ட்கள் தான்.
ஆனால் நான் கிளாஸ் எடுத்த போதுதான் விஷயம் தெரிந்த பெற்றோர்கள் செய்யும் உத்தியைக் கண்டேன்.
அவர்கள் தன் குழந்தைகளை 4வது படிக்கும் போதே ஒரு வெளி நாட்டு மொழியைக் கற்க வைக்கிறார்கள் .
( ஜப்பனீசு, பிரெஞ்சு அல்லது ஜெர்மன் )
அதனால் அவர்கள் 9 வது வரும் முன் அந்த மொழியில் ஒரு குறிப்பிட்ட லெவல் வரை படித்து விட்டுப் பிறகு தன் 10வது 12 வது பாடங்களில் முழு கவனம் செலுத்துகிறார்கள் . எனது 10 வருட அனுபவத்தில் குறைந்தது 10 குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்..
மேலும் சிறு குழந்தைகள் 15 வயது தாண்டியவர்களை விடவும் சீக்கிரம் கிரகித்துக் கொள்கிறார்கள் .வெட்டியாக இந்த மொழி இங்கிலீஷ் மாதிரி இல்லை அது இது என்றெல்லாம் நினைப் பதில்லை . (இந்த comparing syndrome எனக்கும் இருந்தது , )
விளையாட்டாக நான் கற்க ஆரம்பித்தது இன்று எனக்குஇந்த வயதிலும் பெரிய கம்பெனிகளிலிருந்து வேலைக்கான அழைப்புகள் , வேலை ,வருமானம் , தன்னம்பிக்கை ,பொழுதுபோக்கு ,நிறைய நண்பர்கள் ,வெட்டி நினைப்புகளிளிருந்து விடுதலை, என பல வித நன்மைகளைத் தந்துள்ளது.
ஒரு முறை ஏர் ஹோஸ்டஸ் ஒருவர் நான் ஜப்பானிய மொழிப் புத்தகம் படித்ததைப் பார்த்து விட்டு எனக்கு நிறைய சாக்லேட் ,மற்றும் ஏகப் பட்ட ஸ்நாக்ஸ் பாக்கெட்கள் கொடுத்தார்.
யாராவது என்னைப் பார்த்து அட ஜப்பானிய மொழி தெரியுமான்னு கேட்டு என்னைப் பாத்து ஒரு ஆச்சரிய லுக் விடும்போது ஒரு சின்ன கர்வம் உள்ளுக்குள் வருவதை என்னால் உணர முடிகிறது.
( காசா பணமா இல்ல அடுத்தவங்களுக்குத்தான் இதால நஷ்டமா என்ன , பரவாயில்லை என்று உள்ளுக்குள் என்னை நானே என்கரேஜ் பண்ணிக் கொள்வேன் )
என்னைப் பார்த்து இன்ஸ்பயர் ஆகி நிறையப் பேர் படிக்கின்றனர்.
அதில் முக்கியமான ஒருவர் என மாணவனின் தாத்தா . 3 வருடம் முன்பு அவர் வயது 65க்கும் மேலே..
என் மாணவன் ஒருவன் student exchange programme ல் ஜப்பான் சென்றதும் அவனது தாத்தாவிற்கும் ஆசை வந்து பேரனிடம் அடிப்படை களைக் கற்றபின் நெட் மூலம் தானே படித்து மூன்று லெவல்கள் முடித்துள்ளார்.
எனவே எதைக் கற்றாலும் என்றாவது ஒரு நாள் நிச்சயம் கை கொடுக்கும்.
ஒரு மன தைரியத்தைக் கொடுக்கும்.
It is Never Late .

முதலில் தங்களுக்குள் இருக்கும் மொழி கற்றலின் விருப்பத்திற்குப் பாராட்டுகள் பல. நாம் வசிக்கும் அல்லது வேலை செய்யும் இடங்களில் புலங்கப்படும் மொழி அறிதல் மிகவும் அவசியமாகிறது. கற்ற கல்வி என்றும் நற்பலனையே தரும். வட இந்தியாவில் வேலைக்கு செல்லும் தமிழர்களிடமிருக்கும் தயக்கத்தை கண்கூடாகப் பார்த்துள்ளேன். பலமுறை நானும் அதை அனுபவித்துள்ளேன்.
ReplyDeleteஇதுபோன்ற ~சின்ன கர்வம்~ இருப்பது வாழ்வில் ஸ்வாரசியமே!
வருகைக்கு நன்றி . this is just survival mechanism.
Deleteதங்களின் மொழி ஆர்வம் போற்றுதலுக்கு உரியது சகோதரியாரே
ReplyDeleteமொழி ஆர்வம் என்பதை விடவும் பிழைக்கும் நெறிமுறை .
ReplyDeleteநான் டெல்லியில் இருந்தபோது மளிகைக் கடை வைத்திருந்த தமிழர் இந்திப் போராட்டத்தில் சிறு வயதில் ஆர்வமாக இருந்தவராம்.கடையில் வடக்கத்திய வாடிக்கையாளரிடம் ஹிந்தியில் பொளந்து கட்டுவார்.
எந்த எந்த ஊரில் இருக்கிறோமே அதற்குத் தகுந்தார்ப் போல் பார்சி இன மக்கள் வாழ்வது போல் வாழ்ந்து விட்டுப் போகவேண்டும்
உங்கள் பதிவை படித்த பின் எனக்கும் புது மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்து இருக்கிறது. வேலையில் இருந்து வரும் வழியில் ஸ்பானிஷ் கற்றுக் கொள்ள அதற்கான் சிடியை வாங்கி வந்து இருக்கிறேன்.. படிக்க ஆரம்பிக்க வேண்டும்.... உங்கள் பதிவை வேலைக்கு போகும் முன் படித்தேன் ஆனால் அப்பொழுது கருத்து சொல்ல நேரமில்லை.... ஆனால் வேலையில் இருந்து வந்தவுடன் முதலில் கருத்தை இட்டுவிட்டேன்
ReplyDeleteநினைத்தும் முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
Delete頑張って ください 。
இது விஷயமாக இன்னொரு பதிவு போட்டிருக்கிறேன்
விளையாட்டாக நான் கற்க ஆரம்பித்தது இன்று எனக்குஇந்த வயதிலும் பெரிய கம்பெனிகளிலிருந்து வேலைக்கான அழைப்புகள் , வேலை ,வருமானம் , தன்னம்பிக்கை ,பொழுதுபோக்கு ,நிறைய நண்பர்கள் ,வெட்டி நினைப்புகளிளிருந்து விடுதலை, என பல வித நன்மைகளைத் தந்துள்ளது.//
ReplyDeleteமிகச் சரியாகச் சொன்னீர்கள். மொழிகள் பல தெரிந்து வைத்திருப்பதில் தவறே இல்லை. அதனால் நம் தாய்மொழிக்குப் பங்கம் வருமோ என்ற பயமும் தேவையில்லை. பல மொழிகள் தெரிந்து வைத்திருப்பதில் பல வசதிகள் எங்கு போனாலும் பிழைக்க உதவும். மக்களுடன் பழகவும் உதவும். நாம் ஏமாறும் வாய்ப்பும் குறையும். எனக்கும் ஹிந்தி ராஷ்ட்டிரபாஷா வரை படித்ததால் ஓரளவு தெரியும். இந்தியாவைச் சுற்றினாலும் உதவும் அளவிற்கு. மலையாளம் ஓரளவு தெரியும். மொழிகள் தெரிந்து கொண்டால் வருமானத்திற்கும் வழிவகுக்கும் தான். குறிப்பாகப் பெண்களுக்கு. தன்னம்பிக்கையும் கொடுக்கும் வாழ்வில்.
உங்கள் தன்னம்பிக்கை மிகவும் பாராட்டுதலுக்குரியது அருணா. அதை உங்களை நேரில் சந்திக்கும் போதே அறிந்து கொள்ள முடிந்தது. நானும் நெட்டில் இருந்து சில மொழிகளின் வார்த்தைகளைக் கற்றுக் கொண்டு வருகின்றேன் தான். ஆனால் பல சமயங்களில் brain finds it difficult to organize it..
நல்ல பதிவு. பலருக்கும் ஆர்வம் தூண்டும் வகையில் உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள்..
வருகைக்கு நன்றி .
Delete