Sunday 3 January 2016

குழந்தைகளும் அழகிய கேள்விகளும்


 குழந்தைகளே அழகு ,அதுவும் அவர்கள்  படு சாமர்த்தியமாகக் கேட்கும் கேள்விகள்  இருக்கிறதே அது ரொம்பவே அழகு .
 நான் வாக்கிங் போகும்  பார்க் நடுவே குழந்தைகள் விளையாடுவார்கள் , அம்மாக்கள் பொதுவாக வாக்கிங் போவார்கள் .
 ஒரு குழந்தை  யு கேஜிஅல்லது ஒன்றாவது படிக்கும்
 அது பாட்டுக்கு விளையாடிக் கொண்டே இருந்தது. .அந்தக் குழந்தையை அதன் அம்மா வா வா நாழியாகிறது பனி வேறு பெய்ய ஆரம்பித்து விடும் . உடம்புக்கு ஆகாது சளி பிடிக்கும் .
 அப்ப பனி பெஞ்சா ஸ்கூல் லீவு விடுவாங்களா ?

  மழைக்கு வெய்யிலுக்கு மட்டும் தான் லீவு விடுவாங்க .பனிக்கெல்லாம் லீவு விடமாட்டாங்க   என்றாள் அம்மா.
 ரமணன் அங்கிள் டிவிலே பனி ரொம்பப் பெய்யும்ன்னு  சொன்னாக்க தான் லீவு விடுவாங்களா? -இதுகுழந்தை
 பக்கத்தில் இருந்தவர்கள் எல்லோருமே சிரித்துவிட்டோம் .
எப்ப ஸ்கூல் லீவு விடணும்ன்னு தீர்மானிக்கிற அடிஷனல் வேலையை குழந்தைகள் ரமணனுக்கு எந்த கவர்மெண்ட் ஆர்டரும் இல்லாமல் வழங்கிய  மாதிரியாகத் தோணியது . குழந்தைகளின் உலகத்தில்  G .O  தேவை இல்லை போலும்

2016 எலெக்ஷனில் ரமணன் வேட்பாளராக நின்று ஸ்கூல் போகும் குழந்தைகளுக்கு மட்டுமே அந்தத் தொகுதியில் வாக்குரிமை  என்று வைத்தால் நிச்சயம் வெற்றி அவருக்குக்கே !

6 comments:

  1. உண்மைதான் சகோதரியாரே

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி."பூரி" ப்பான புத்தாண்டாக அமைய நல் வாழ்த்துக்கள்

      Delete
  3. ஹஹஹ் ஆமாம் சகோ! குழந்தைகளுக்கு "கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு" என்றுதான் எப்பவுமே! குழந்தைகள் எப்பவுமே ஸ்வீட்தான்!!

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி

    ReplyDelete